Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் திருகோணமலையை சேர்ந்த 28 வயதான அபா தனுஸ்க்க 19 வயதான அமர சஞ்சீவ 20 வயதான நுவான் 20 வயதான சனத் தர்ஸன் மற்றும் 26 வயதான ரூவான் பிரியந்த ஆகியோரே மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மாதம் 24-ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஒரு சிறிய விசைப்படகில்; கடலில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. வங்கக்கடலில் வீசிய நர்கீஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றில், அவர்களது படகில் இருந்த இயந்திரம் திடீரென கழன்று கடலுக்குள் விழுந்துள்ளது இதனால் படகு செயலிழந்து நடுக்கடலில் தத்தளிதத நிலையில் செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் வயர்லஸ் கருவி (ஹை பிரீக்வன்சி செட்); உதவியுடன் இலங்கையில் உள்ளவர்களிடம் தொ…

    • 0 replies
    • 685 views
  2. கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி அம்பாறையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் வீரகேசரி இணையம் 5/4/2008 11:40:01 PM - கிழக்கு மாகாணம் மீண்டும் ஆயுதக் குழுவிடம் செல்வதை தடுத்து நிறுத்தி கிழக்கு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து களத்தில் குதித்துள்ளனர். தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று மாலை அம்பாறை நகரில் நடைபெற்றபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தயா கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்…

    • 2 replies
    • 739 views
  3. பரவலாக இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் பலி! 35 பேர் படுகாயம் நேற்று சனிக்கிழமை வடக்கில் பரவலாக இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முகமாலை, மன்னார், புளியங்குளம், பாலம்பிட்டி, மடு வடக்கு, யோதவாவி கிழக்கின் செட்டியார்க்கட்டையடம்பன், அடம்பன், மணலாறு ஜனகபுரம் வடக்கு, ஆண்டான்குளம் மற்றும் கிரிஇப்பன்வௌ போன்ற பகுதிகளிலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

  4. இரத்மலானையிலும் மினுவாங்கொடையிலும் 65 தமிழர்கள் இன்று காலை கைது Sunday, 04 May 2008 கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான தேடுதல் நடவடிக்கைகளின் போது 65 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள

  5. இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்? - வைகோ வீரகேசரி இணையம் 5/4/2008 11:43:48 PM - இலங்கைத் தமிழருக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப விடாது தடுத்து நிறுத்தியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்து தமிழக முதலமைச்சர் பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார். மேதினத்தை முன்னிட்டு ஆவடியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய வைகோ மேலும் தெரி…

  6. ஞாயிறு 04-05-2008 21:47 மணி தமிழீழம் [மயூரன்] இளவரசர் ரிட்சாட் கொழும்பை வந்தடைந்துள்ளார் இங்கிலாந்து அரச பரப்பரையைச் சேர்ந்த இளவரசர் ரிட்சாட் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று கொழும்பை வந்தடைந்துள்ள இவர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ரிட்சாட் இரண்டாம் எலிசப் மாகாராணியின் உடன்பிறவா சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  7. மட்டகளப்பு கிராம மக்களின் வாக்கு சீட்டுகளை பறிக்கிறது ஒரு குழு - பெப்பரல் நிறுவனம் Sunday, 04 May 2008 மட்டக்களப்பு கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆயுதங்களோடு செல்லும் ஒரு குழுவினர் அங்குள்ள மக்களிடமிருந்து தேர்தல் வாக்கு அட்டைகளை எடுத்துச் சென்றிருப்பதாக பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2412/1/

    • 7 replies
    • 1.2k views
  8. ஞாயிறு 04-05-2008 21:51 மணி தமிழீழம் [மயூரன்] பேரூந்து விபத்து இருவர் பலி! ஆத்திரமடைந்த மக்கள் பேரூந்தை தீயிட்டனர் சிலாபம் வீதியில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூந்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள் மக்கள் விடுதலை முன்னணியினுள் (ஜே.வி.பி.) கடுமையான உள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. ஜே.வி.பி. இலங்கையில் சிங்கள இனவாதத்துடன் மக்கள் வாத வாய்வீச்சுக்களையும் கலவையாக்கி செயற்படுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாகும். இந்த பிளவில் தனிப்பட்ட அவதூறுகள், அமைப்பு ரீதியான சூழ்ச்சித் திட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளும் ஆதிக்கம் செலுத்தும் அதேவேளை, இந்த பதற்ற நிலைமை முழுத் தீவையும் ஆட்டிப்படைக்கும் ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையே பிரதிபலிக்கின்றது. ஏப்ரல் 8 அன்று, ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் வி…

    • 0 replies
    • 649 views
  10. சிங்கள அரசு விரிக்கும் மாய வலையில் நாம் சிக்குவோமாயின் நாம் சின்னாபின்னமாகி சீரழிந்து போவது உறுதி. - ஈழவேந்தன் [ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2008, 11:23.18 AM GMT +05:30 ] எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி கிழ்க்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலை கிழ்க்கின் விடியல் என்றும் கிழ்க்கின் உதயம் என்றும் மயக்கும் சொற்களை மகிந்த அரசு கையான்டூ தமிழ் மக்களையும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் திசை திருப்ப முயல்கிறது. 1987 ஜுல்ய் 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றபட்டது. இவ் ஒப்பந்ததில் குற்றம் குறைகள் முறண்பாடுகல் நிறைய உண்டு.எனினும் இவ்வொப்பந்ததில் தெம்பு தருகின்ற ஒரு பகுதி அதன் முன்னுரை ஆகும்.இவ் முன்னுரையில் வடக்கும் கிழக்கும் ஈழம் வாழ் தமிழ் மக்களின் தாயகம் எ…

    • 0 replies
    • 827 views
  11. யுத்தத்தை முடிவுக்கு விதிக்கப்படும் காலக்கெடு முட்டாள்தனமாக நகைச்சுவை – முன்னாள் இராணுவத் தளபதி Sunday, 04 May 2008 யுத்தத்தை குறித்த காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது ஒரு முட்டாள்தனமாக நகைச்சுவை என முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க குறிப்பிட்டுள்ளதாக இருதின செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குப் பிரச்சினையை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் மட்டும் தீர்க்க முடியாதெனவும், அதற்கு தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளாக ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இராணுவப் படையில் உயர் பதவிகளை வகி…

    • 3 replies
    • 1.3k views
  12. கிழக்குத் தேர்தல் கண்காணிப்புக்கு ஆசியாவிலிருந்து 18 கண்காணிப்பாளர்கள் வருகை Sunday, 04 May 2008 மே 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் வருகை தரவிருப்பதாக தேர்தல் செயலக ஆலோசகர் எஸ்.மெதவேவ தெரிவித்தார். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆளும் கட்சிக்குச் சார்பான முறையில் அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் கேட்கப்பட்ட போது, இது தொடர்பாக தேர்தல் திணைக்களத்தால் எதுவும் செய்ய முடியாது எனவும், அதற்கு சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளையில், புதன்கிழமை…

    • 1 reply
    • 587 views
  13. தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாதுகாப்புக்கு விரிவான திட்டம் Sunday, 04 May 2008 கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புக்கான திட்டமொன்று வகுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவின் ஆலோசனையுடனேயே இந்தப் பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர், விஷேட அதிரடிப்படையினர், ஆயுதப் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்…

    • 1 reply
    • 717 views
  14. இருதின போன்ற பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறுவதாக ஜனாதிபதி சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றிரவு தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வாரம் (இன்றைய ஞாயிறு இருதின) வெளியான இருதின இதழ் முகமாலை தோல்வி தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரை காட்டி கொடுத்த இராணுவ தளபதி என பிரதான செய்தியை வெளியிட்டது. இதன் மூலம் இந்த பத்திரிகை மக்களை வேண்டுமென்றே தவறான வழியில் ஈட்டுச் செல்ல பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார். இந்த பத்திரிகைகளை தான் தேசிய பத்திரிகைகள் என கூறுவதில்லை எனவும் அவ்வாறானவற்றை தாம் வாசிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 1.3k views
  15. அமைச்சர் ஜி எல் பீரிஸூக்கும் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லகமவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியகட்சியி;ல் இருந்து அரசாங்க கட்சிக்கு மாறிய அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என் கே நாராயணன் ஆகியோரை சந்திப்பதற்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும் இதனை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆட்சேபித்துள்ளார் தமக்கு தெரியாமல் இவ்வாறான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவது முரனானது என தனது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறித்த சந்திப்புகளை ரத்துச்செய்துள்ளது. http://isoorya.blogspot.com/ http:/…

    • 2 replies
    • 1.3k views
  16. கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.எம்.இஸ்மையிலை சிலர் தாக்க முயன்றுள்ளனர். தாக்குதல் நடத்த சென்றவர்களை கலைக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த இரண்டு காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி இந்த காவல்துறையினர் இருவரையும் இடமாற்றம் செய்துள்ளதாக சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துளளார். http://isoorya.blogspot.com/

  17. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் பதவிக்கு இந்திய அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான வைகோவை நியமிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த மதியுரைஞர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால் அப்பதவிக்கு உகந்தவர் வைகோ என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறந்த உதவியாளராக விளங்கி வரும் வைகோவை அப்பதிவியில் நியமிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக மேற்படி தகவல் பிரிவு தெரவிக்கின்றனது. அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வைகோ கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமரைச் சந்தித்து விடுதலைப்புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை …

  18. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டதற்காக கத்தோலிக் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 735 views
  19. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான 170,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான மொத்த வாக்காளர் அட்டைகளில் 20 வீதமான வாக்காளர் அட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படாதிருப்பதாக

    • 1 reply
    • 724 views
  20. இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ""முதல்வருக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய…

    • 4 replies
    • 1.2k views
  21. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  22. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைக் கோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நிகழ்வு நேற்று முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 641 views
  23. ஐந்தாவது தடவையும் புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பௌத்த உரிமைகள் கேந்திர மையமான பிலியந்தலையில் வெடித்த குண்டு காரணமாக அந்தப் பிரதேசம் வாரம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது. கடந்த 25ஆம் திகதி நகரில் வெடித்த குண்டின் ஓசைகள் இன்னும் நகர மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் நோக்கில் பேரூந்தில் ஏறிய மாணவர்களும், வேலை முடிந்து வீடு நோக்கி சென்ற பெரியவர்களும் இந்த குண்டில் சிக்கிக் கொண்டனர். இதன்போது பாடசாலை புத்தக பைகளும், வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களின் பைகளும் வீதியில் சிதறிக்கிடந்தன. சிலரின் கையடக்க தொலைபேசிகள் இடைவிடாது ஒலித்து கொண்டிருந்தன. உறவினர் நண்பர்களை தேடியவர்கள் இ…

    • 0 replies
    • 1.2k views
  24. வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 2 மாதங்களில் தரையிறக்கி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  25. புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி [04 - May - 2008] -விதுரன் - அரசும் படைத்தரப்பும் நினைத்ததற்கும் மாறாகவே வடக்கே களநிலையுள்ளது. விடுதலைப்புலிகள் பலமாகவேயுள்ளனர். புலிகளின் திட்டமிடலும் பதில் தாக்குதல்களும் படையினரின் தாக்குதல் திட்டங்களை தவிடுபொடியாக்குகின்றன. இதனால், புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் படைத்தரப்புள்ளது. வடக்கே புலிகளுக்கெதிரான படைநடவடிக்கை வெற்றிகரமாக நடப்பது போன்றும் அங்கு தினமும் புலிகள் பெருமளவில் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் படையினருக்கு மிகமிகக் குறைந்தளவு இழப்புக்களே ஏற்படுவது போல் தென்பகுதி மக்களை நம்பவைக்க அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. எனி…

    • 3 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.