ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஜனாபதியின் மெய் பாதுகாவலர் ஒருவரின் நடை முறையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புலனாய்வு துறையினர் கண் வைத்த போதே இந்த முயற்சி தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரி திடீர் பணக்காரராகி ....................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_809.html
-
- 4 replies
- 2.8k views
-
-
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு [04 - May - 2008] கனடாவில் இருந்து புலத்தவன் கிழக்கினைப் பிடித்து கேக் துண்டுகளைப் பரிமாறி வெற்றிக் கழிப்பில் மிதந்த இலங்கை அரசு, இதோ வடக்கினைப் பிடித்து கிளிநொச்சியில் கொடியேற்றுகின்றோம் என்ற வீறாப்புடன் வன்னிமீதான தனது போரைத் தொடக்கி நொந்து போயுள்ளது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் தென்முனைக் களமான மணலாறு தொடக்கம் மன்னார் வரையான மிக நீண்ட களத்தினையுருவாக்கி அங்கே 59, 56, 57, 58 என நான்கு டிவிசன்களைப் படை நடவடிக்கைக்காக நிறுத்தி வைத்துள்ள அதேவேளை, வன்னிக்கு வடக்கே, அதாவது யாழ்ப்பாணத்தில் 51, 52, 53, 57 ஆகிய டிவிசன்களை நடவடிக்கைக்காகப் பயன்படுத்திக் கொண்டு வன்னியைப் பிடிக்கின்ற போரை நடாத்தி வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை வாலிபர் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, மே 4, 2008 திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த 21 வயது இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கே.செந்தில்நாதன். கடந்த 1990ம் ஆண்டு இங்கு வந்தார். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விரைந்து வந்து செந்தில்நாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். http:/…
-
- 0 replies
- 965 views
-
-
ஐ.தே.க அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல் வீரகேசரி இணையம் 5/4/2008 10:11:42 AM - ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பிரதான வேட்பாளருமான தயா கமகே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயங்களிற்குள்ளான தயா கமகே சிகிச்சைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 786 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் இயங்கும் மிஹின் எயார் வானூர்தி, காலவரையன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் எயார் ஏற்கனவே சுமார் பில்லியன் ரூபா அளவில் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினையை அடுத்து, குறித்த வானூர்தி நிறுவனத்தின் தலைவர் சசின் குணவர்த்தன பதவிவிலகியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் பீஜிங் முகாமையாளர் ஜெயசீலன் அழைக்கப்பட்டு தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதேவேளை 19 வருடங்கள் பழமைவாய்ந்த வானுர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சேவையை மேற்கொள்ள மிஹின் எயார் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இலங்கை வானுர்தி சட்டத்தின்படி 19 வருடங்கள் பழமை வாய்ந்த வானூர்தியை பதிவு செய்யமுடியாது என்பதால் அந்த…
-
- 0 replies
- 970 views
-
-
இலங்கை அரசினால் பஸ்களிலும் கிராமங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கையாகவே கடந்த வருடம் மேற்கொண்ட பல தாக்குதல்கள் அமைதிருக்கின்றன எனத் தெரிகின்றது என்று அமெ. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்தவதற்காகா இலங்கை அரசு ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாத நிலைமை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமெரிக்காப் பிரஜைகளையோ சொத்துகளையோ இலக்கு வைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப…
-
- 7 replies
- 2.7k views
-
-
02-05-2008 அன்று BBC சிங்கள சேவைக்கு ஈ.பி.டி.பி. டக்ளஸ் அளித்த பேட்டி. டக்ளஸ்: இலங்கை இந்திய ஒப்பந்தம் இது வரை வடக்கு கிழக்கில் அமுல் படுத்தப்படவில்லை. இதை நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றேன் யாருமே செவிமடுக்கவில்லை.இப்போதுதான
-
- 7 replies
- 2k views
-
-
இன்றைய (02ம்திகதி) தினமின பத்திரிகையில் அரச கூலிக்குழுத்தலைவன் பிள்ளையான் அளித்த பேட்டி : புலிகளின் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டை நாம் முற்றும் முழுதுமாய் எதிர்க்கின்றோம். இக் கொள்கையின் மீது போரடும் உலகின் அதி பயங்கரவாத இயக்கத்திற்கு எனது கட்சி வெளிப்படையாகவே சவால் விடுகின்றது. என கிழக்கின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் அரச கூலிப்படைத் தலைவனான பிள்ளையான் தினமின சிங்களப் பத்திரிகைக்களித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளான். மஹிந்தவிற்கு இனபிரச்சனை தீர்ப்பதற்கான உண்மையான எண்ணம் இருப்பதாலும் 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்தும் காரியத்தில் அவர் முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளர். அது கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கிற்கும் அது ஒரு முன்னுதாரனமாக…
-
- 13 replies
- 2.8k views
-
-
மனித உரிமை விசாரணைகள் தொடர்பாக கண்காணிப்பதற்காக அழைக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு குறித்து அண்மைக்காலமாக அரசாங்கம் கடும் விமர்சனங்களை ................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8727.html
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்க அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
வன்னிக்களமுனையான மணலாறிலும், மன்னாரிலும் மற்றும் திருகோணமலை, கெப்பிற்றிக்கொல்லாவவிலும் இடம்பெற்ற முறியடிப்புத் தாக்குதல்களிலும், கிளைமோர் மற்றும் மிதிவெடிச் சம்பவங்களிலும் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
வட மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவரை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
உலகில் உள்ள போராளிகள் இடையே தமிழீழ விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள் என்றும், முகமாலையில் அவர்கள் எப்போதும் மிகப்பலத்துடன் உள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் படையினரும், காவல்துறையினரும் மேற்கொண்ட சிறப்புத் தேடுதலில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு பேருந்துகளில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html
-
- 6 replies
- 2.9k views
-
-
கிண்ணியாவில் கொலை: திருகோணமலை மாவட்டம் கிண்ணியாப் பகுதியில் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இனம்தெரியாதவர்களால் சுடப்பட்ட இவர் கிண்ணியாப் பகுதியின் தபால் விநியோகஸ்த்தர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வெலி ஓயாவில் கிளைமோர் தாக்கு! கெப்பிட்டிகொல்லேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் காட்டு புளியங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு அதிரப்படை சிப்பாயும், சிவில் பாதுகாப்பு சிப்பாயுமே காயமடைந்துள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த போதே குண்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித…
-
- 0 replies
- 1.5k views
-
-
இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகாவை பதவி கவிழ்க்க இராணுவ மேஜர் ஒருவர் சூழ்ச்சி செய்வதாக ஜே.வி.பி.யினால் வெளியிடப்படும் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முன்நகர்வுகளைச் செயலிழக்கச் செய்து இராணுவப் படைத்தளபதி லெப்டிணன் ஜெனரல் சரத் பொன்சேகாவை பதவி நீக்குவதற்கு இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக.............................................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6615.html
-
- 0 replies
- 2.1k views
-
-
வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கில் மகிந்த அரசு நடத்த உள்ள தேர்தலையொட்டி சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைகள் இடையே உள்மோதல் தீவிரமடைந்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 954 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_007.html
-
- 0 replies
- 1.3k views
-
-
-
பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி உள்ளவர்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் Friday, 02 May 2008 பிலியன்தலை பஸ் குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் லோரன்ஸ் டேவிட்ராஜ் பிரகாஸ் அல்லது அப்பன் விசாரனைகளின் போது கொழும்பை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு சம்பந்தப்பட்டவர் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பிலயன்தலை போலீசார் தெரிவித்துள்ளனர். இரத்தமலானை, கல்கிஸ்ஸை , மீன் கடை , மற்றும் வவுனியா குண்டு வெடிப்புகளுக்கும் மேஜர் ஜெனரல் பராமீ குலதுங்கவின் கொலைக்கும் லோரன்ஸ்தான் ( அப்பன்) காரணம் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். லோரன்ஸ் டேவிட்ராஜ் அல்லது அப்பனின் 800914221 எனும் அடையாள அட்டையில் திருகோணமலை பிறப்பி…
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கையே பிராந்தியத்தின் இறுதி நோயாளி என்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் "த கார்டியன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் அரசியல் பொருளாதாரத்துறைகளில் இந்தியவின் அதிகரித்த பங்களிப்பை இலங்கையில் உள்ள அனைத்துச் சமூகத்தினரும் விரும்பும் அதேவேளை, விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுகளில் இந்தியா பங்கெடுக்கக் கூடாது என்பதையே தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் விரும்புகின்றனர். இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் புலனாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்குத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளபட்ட கருத்துக் கணிப்பில் 47.8 வீதமான சிங்கள் மக்கள், விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சில் இந்தியா கலந்து கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே வேளை, இதற்கு 62.9 வீதமான இலங்கைத் தமிழர்களும், 61.1 வீதம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 765 views
-