ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமைதி நடவடிக்கைக்கு சிங்களவர்களில் 16.6 விழுக்காட்டினர் மட்டும் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 992 views
-
-
பிலியந்தல குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள நபரிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் மேலும் 13 சிங்கள புலி உறுப்பினர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவருக்கு தலா............. தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/13.html
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுணியா துட்டுவேவா பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு அதிரடிப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை வழமையான வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நடத்தப்பட்ட தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டதாக வவுணியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 997 views
-
-
மஹிந்த அரசின் அமைச்சர் மேவின் சில்வா அரலங்கன்வில என்னுமிடத்தில் வீதி விபத்தில் காயமடைந்துள்ளார். அவ்விபத்தில் அவருடன் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 11 replies
- 1.9k views
-
-
மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய வான்தளத்துக்கு வானூர்திகள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மே தினம் அதாவது தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகின்றது. உழைக்கும் மக்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இன, மத, மொழி, நாடு போன்ற சகல வேறுபாடுகளையும் கடந்ததாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை ஓங்கிப் பறைசாற்றும் எழுச்சி தினமாக இந்நாள் கருதப்படுகின்றது. இவ்வளவு சிறப்பு மிக்க இந்நாள் நமது நாட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவரத்தான் செய்கின்றது. .......... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9176.html
-
- 0 replies
- 801 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் என்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். பிரியங்கா சந்திப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினி (வயது 37) வேலூர் பெண்கள் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வேலூர் ஜெயிலில் நளினியை ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்து பேசினார். மிக, மிக ரகசியமாக நடந்து முடிந்த இந்த சந்திப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐகோர்ட்டில் மனு இந்தநிலையில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ்காந்தி கொ…
-
- 0 replies
- 736 views
-
-
பிலியன்தலை குண்டு வெடிப்புக்கு காரணமான மூவர் கைது Wednesday, 30 April 2008 அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முடியாமையால் பஸ்ஸுக்கு குண்டு வைக்க நேர்ந்தது என கைதானவர் போலீஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். பிலியன்தலை பஸ்ஸை ரிமோட் கொண்ரோல் வழி வெடிக்க வைத்தவருடன் மற்றும் இருவர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவர் இரத்தினபுரியில் வசித்து வந்தவர் என்றும் பிலியன்தலையில் வேலை செய்தார் என்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து மாதாந்த வருமானமாக 50 ஆயிரம் ரூபாய் பெற்று வந்ததார் என்றும் போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைதானவர்களிமிருந்து பெற்ற தகவல்கள் மூலம் இன்னும் 13 பேரைத் போலீஸார் தேடி வருகின்றனர். http://www.ajeevan.ch/content/view/232…
-
- 0 replies
- 915 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல் விசாரணைகளை கண்காணித்த சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவில் பிளவு Wednesday, 30 April 2008 இலங்கையில் இடம்பெற்ற கடும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜனாதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்தியாவின் முன்னாள் நீதியரசர் என் கே பகவதி, இலங்கை ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பிய கடிதமே இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த குழு முழுமையாக முறிந்துள்ளதையும் அது காட்டுவதாக ஐ ஏ என் எஸ் செய்திசேவை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 31 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறிய சர…
-
- 2 replies
- 1.3k views
-
-
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
மைக்ரோ துப்பாக்கி வைத்திருந்த யு.என்.டி.பி. பணியாளர் கைது Wednesday, 30 April 2008 உலக உணவுத் திட்டத்தின் கீழான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட பணியாளர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை வவுனியாவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஈரற்பெரிய குளம் சோதனைச் சாவடியில் வைத்து படையினரால் சோதனையிடப்பட்ட போது கைது செய்யப்பட்ட இவரிடம் 'மைக்ரோ பிஸ்டல்' ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பைச் சேர்ந்த தியாகராஜா பிரபாகரன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கிளிநொச்சியிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டப் பணிமனையில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணம் செய்து க…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னார் மோதல் ஒன்றில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 5 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 988 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியுள்ளார் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 852 views
-
-
கப்டன் சிலம்பரசன் என்று அழைக்கப்படும் பாடகர் குட்டிக்கண்ணனின் வித்துடல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
முகமாலை மோதல்களின் போது வான்படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படாமை புரியாத புதிராகக் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விமானப்படையினரை மோதல்களின் இணைத்துக் கொள்ளாமை ஒரு துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மணலாறு பாதுகாப்பு முன்னரங்குப் பகுதியின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் மேற்கொண்ட போது வழமைபோல் விமானப்படையினர் தாமதமாகவே செயற்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதலைப் புலிகளிடம் காணப்படும் விமானங்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் குறித…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜேவீபியிலிருந்து மூன்றாவது குழுவொன்றும் வெளியேற்றம்? ஜேவீபீ விமல் வீரவங்ச 10 பேரோடு வெளியேறியதைத் தொடர்ந்து நடுநிலையானவர்கள் என அழைக்கப்படும் மற்றொரு குழுவும் வெளியேற இருக்கிறது. தவிரவும் முன்னர் பிரிந்த இரு குழுவினரதும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் இக் குழு ஏனையோருக்கு சார்பாக இருக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஜேவீபியின் ஒரு குழுவினர் ஜனநாயக வழியிலும் மற்றொரு குழுவினர் ஆயுத புரட்சியொன்றிலும் நம்பிக்கை கொண்ட இரு வெவ்வேறு துருவங்களாக நிழல் யுத்தமொன்றில் ஈடுபட்டு நிற்கின்றனர். ஆயுத பயிற்சிகளை கூட ஒரு குழுவினர் வெவ்வேறு இடங்களில் நடத்தியுள்ளனர். அதில் ஒன்று சிலாபம் பகுதியில் நிமல் எனும் ஒருவரது இறால் பதனிடும் மையத்தில் கருணாவிடமிருந்து பிர…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகள் பயன்படுத்தும் கட்டடத் தொகுதி மீது இன்று காலை விமானத் தாக்குதல் Monday, 28 April 2008 இரணமடு பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதைக்கு அருகில் காட்டுப் பிரதேசத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டத் தொகுதியொன்றின் மீது இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் என்றூ விஜேசூரிய தெரிவித்தார். இன்று காலை; 9.15 மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அறிய முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.ajeevan.ch/content/view/2252/1/
-
- 19 replies
- 2.9k views
-
-
யுத்த இழப்புகள் குறித்த விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை இராணுவ மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து, இராணுவத் தரப்பு அல்லது அரசு வெளியிடும் தகவல்கள் சர்வதேச கண் காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்தியாவின் எழுத்தாளர் பீ.ராம் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதியுள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் திகதி முகமாலையில் இடம் பெற்ற மோதல்கள் காரணமாக இராணுவ தரப்பில் 43 படையினர் கொல்லப்பட்டு 33 படையினர் காயமடைந்ததாக சீஎன்என் தொலைக் காட்சிக்கு இராணு தரப்பில் தெரிவித்தனர். பிரான்ஸ் ஊடகங்கள் படை இழப்புகள் 100க்கும் அதிகம் என குறிப்பிட்டது. இலங்கை போலீஸ் கணக்கெடுப்பின் பிரகாரம் 150 என தெரிய வந்திருந்தது. மோதல்களில் கொல்லப்படுவோர் தொடர்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச அணுவாயுதக் கொள்கைகளுக்கு அமைவாகவும், சர்வதேச அணுசக்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழும் ஈரானினால் மேற்கொள்ளப்படும் அணுவளச் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி முஹமட் அஹமட் நஜாட்டின் இலங்கை விஜயம் தொடர்பாக இரண்டு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பலம் பொருந்திய நாடுகள் தமது அணுவாயுதங்களை அழிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை கண்டிப்பதாகவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இரு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின் பௌதீக ஒரும…
-
- 0 replies
- 655 views
-
-
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிராசார நடவடிக்கைகளின் போது முஸ்லிம் கடும்போக்கு மற்றும் முஸ்லிம் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். லங்கா டிசெண்ட் இணையதளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கிண்ணியா, மூதூர் மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் பெருவாரியாக இவ்வாறான பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குற்றஞ்…
-
- 0 replies
- 677 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் ச…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 675 views
-
-
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற படுகொலைகளின் சூத்திரதாரி கொக்குவிலில் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 934 views
-
-
புதிய கட்சியைத் தொடங்கினால் விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினர் உரிமை பறிக்கப்படும் என்று ஜே.வி.பி. எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உருவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டுகிறது........................ தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9123.html
-
- 1 reply
- 1k views
-