ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஸ்ரீலங்கன் விமான நிலையத்தின் விமானிகள் பலர் ஒரே தடவையில் சுகயீன விடுமுறை எடுத்துக் கொண்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமால் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படாமையினால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கன் விமான நிலையத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்ற போது விமானிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த எந…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வானூர்தி [வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 06:02 பி.ப ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகருக்கு மேலாக, திடீரென வானூர்தி ஒன்று பறந்ததைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து ஓடினர். கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர் தொடர்மாடிக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த பணியாளர்கள் சிலர், வானூர்தி ஒன்று பறந்து செல்வதை அவதானித்தனர். அப்பகுதியில் வானூர்தி எதுவும் அந்நேரத்தில் பறப்பதில்லை என்பதால் பதற்றமடைந்த பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு அறிவித்ததால் அங்கு பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. பின்னர் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான வானூர்திதான் அது என்று தெரிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களின் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக பஃவ்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்த வரையில்- மத்திய அரசின் கொள்கைதான் நம்முடைய கொள்கை- அவர்கள் எதனைச் சொல்கிறார்களோ அதனை நாம் பின்பற்றுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 609 views
-
-
வீரகேசரி இணையம் - புறக்கோட்டை ஆட்டுப்பட்டித் தெருவில் இன்று மாலை 11 கிலோ எடை கொண்ட கிளேமோர் ஒன்றை ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் மீட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்தது
-
- 0 replies
- 902 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கடந்த வார முற்பகுதியில் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் உள்ளடக்கப்பட்ட முக்கிய செய்தி ஒன்றை நாம் எமது வாசகர்களாகிய உங்களுக்கு கடந்த வாரம் வழங்கி இருந்தது ஞாபகம் இருக்கும்! . அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு யாழ். போர் முன்னரங்குகளில் பூதாரமாக வெடித்து பிசுபிசுத்துப்போன மும்முனைச் சமரை ஆய்வுக்குட்படுத்துவோம் . தளபதி சரத் பொன் சேகா அன்று வழங்கி இருந்த அந்த செய்தி : இம் மாத முற்பகுதியில் கம்பஹா வெலிவேரிய பகுதியில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலுடன் சர்வதேச சமூகம் ஜனாதிபதியையும், பிரதமரையும் மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 586 views
-
-
இவ் ஆண்டு இறுதிக்குள் வன்னி கைப்பற்றபடும் கெஹெலிய சபதம் வீரகேசரி இணையம் 4/25/2008 2:58:13 PM - வட போர்முனையில் புலிகளுடன் போரிடுவது சவால் நிறைந்ததாக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் வன்னியை கைப்பற்றி விடுவோம் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல புதிய அறிவிப்பை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
-
- 0 replies
- 727 views
-
-
புலிகளின் விமான ஓடு பாதை மீது விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/25/2008 6:21:33 PM - இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடு பாதை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரான் - சிறிலங்கா இடையே அணுசக்தி தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை உயரதிகாரியான உதயசிறி காரியவசம் மறைமுக உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 652 views
-
-
ஏ.பி.சி. நிறுவனத்தின் ஹிரு வானொலிச் சேவைக்கு சொந்தமான அனைத்து பண்பலைகளையும் ‘தாருன்யட்ட ஹெடக்’ அமைப்பிற்கு வழங்க, லத்திரனியல் பரிமாற்று ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள்.................................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6403.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் சென்னை அண்ணா சர்வதேச வானூர்தி நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை (போர்டிங் பார்ஸ்) கைமாற்றிக்கொண்ட மூன்று இலங்கையர்களை இந்திய குடிவரவு அதிகாரிகள் புதன் கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். யோகராசா வசந்தராசன், மற்றும் அச்சுதன்பிள்ளை பாலசந்திரன் இவர்கள் இருவரும் ஒரேநேரத்தில் கனடாவின் டொரண்டோ மற்றும் மலேசியா நோக்கி பயணமாக இருந்ததாகவும் முன்னதாக இவர்கள் இருவரும் தமக்கிடையில் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டைகளை கைமாற்றி கொண்டுள்ளதாகவும் இந்திய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சுதபிளளையின் கடவூட்சீட்டையும் போர்டிங் பாசையும் பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள்,அவரிடம் யோகராசா வசந்தராசன் என்ற பெயரில் கடவூச்சீட்டை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குத் தேர்தல்களில் வெற்றி பெற்றுக்கொள்ளவே அரசாங்கம் முகமாலையில் திடீர் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் கிழக்குத் தேர்தல்களை வெற்றிகொள்ள அமைத்த வியூகமாகவே இந்த யுத்த நடவடிக்கை நோக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்குத் தேர்தல்களில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி என இரகசிய தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் இராணுவ வீரர்களை பலிக்கடாக்களாக்கி தேர்தலை வெற்றி கொள்ள அராசங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.net/video/video_001.html மீண்டும் பேரிடி - முகமாலைச் சமர் விசேட பதிவு குறிப்பு: இவ் ஒளிப்பதிவு முழுமையாக இல்லை என்பதையும், அத்துடன் இம்முகவரி ஒர் தற்காலிக முகவரி என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
-
- 6 replies
- 3.7k views
-
-
Posted on : Fri Apr 25 9:15:00 2008 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல அமெரிக்க உதவிச் செயலர் கருத்து இலங்கையின் மனித உரிமை மற்றும் இனப்பிரச்சினை என்பனவற்றுக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்காசியாவின் அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொன் கெம்ப் தெரிவித்துள்ளார். டொன் கெம்பின் விஜயம் குறித்து அமெ ரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மூன்று நாள்கள் இலங்கையில் தங்கி யிருந்த டொன் கெம்ப், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நீதியமைச்சின் செய லாளர் சுகத் கம்லத் ஆகியோரைச் சந…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்குத் தேர்தலை இந்திய அரசு தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் தொல், திருமாவளவன் வீரகேசரி நாளேடு 4/25/2008 9:46:03 AM - இலங்கையில், ஈழதேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிராந்தியதில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக் காட்ட வேண்டும் என தமிழக விடுதலைச் சிறுத்தைகள் அணியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ் வேண்டுகோள் சென்னையில் நேற்று வியாழக்கிழமை தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 862 views
-
-
வடபோர்முனையில் படுகாயமடைந்து கொழும்பு ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படையினரை இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி. அதிருப்திக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
இராணுத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புபகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத்தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப் போவதாக சூளுரைத்திருந்தது. புதன் கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத்தையே காணமுடிகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள…
-
- 1 reply
- 2k views
-
-
மடு தேவாலயச் சுற்றாடலை போரற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்துமாறு சர்வமத அமைப்பு விடுதலைப் புலிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து நேற்று வியாழக்கிழமை நண்பகலுடன் மடு தேவாலய வளாகப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் விலகியுள்ளனர். மடு தேவாலயப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையை அடுத்து தேவாலயத்திலிருந்து அண்மையில் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையிலும் அப்பகுதியில் படை நடவடிக்கை தொடர்வதையடுத்து, மடுதேவாலய சுற்றாடலில் சகலவிதபோர் நடவடிக்கையையும் தவிர்த்து அதனைப் பாதுகாக்குமாறு மன்னாரைச் சேர்ந்த சர்வமத அமைப்பு இலங்கை அரசிடமும் விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தது. வன்னிக்…
-
- 0 replies
- 2.3k views
-
-
Posted on : Fri Apr 25 9:15:00 2008 புலிகளுக்காக வேவு பார்த்தாராம்; வெள்ளவத்தையில் பெண் கைது கொழும்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வேவு பார்த்து அது பற்றிய தகவல்களைப் புலிகளுக்கு வழங்கினார் எனக் கூறப்படும் தமிழ்ப்பெண் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வெள்ளவத்தை பெர்னாண்டோ வீதியில் சிங்களவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே இப் பெண்ணைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் அவர் நீண்ட காலமாகத் தங்கியிருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பணத்தைத் தாராளமாகச் செலவிடும் போக்கு என்பனவற்றை நீண்ட காலமாகக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்கள இணையம் ஒன்றில் புலிகள் இறந்த இராணுவத்தின் பிணங்கள் போல நடித்து படம் எடுத்து போட்டிருப்பதாக உளருகின்றாங்கள் செம காமடி http://elakiri.com/forum/showthread.php?t=76290
-
- 5 replies
- 2.2k views
-
-
முன்னாள் ராணுவத் தளபதிகள் இருவருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் நுழையும் அனுமதி மறுப்பு..... முன்னாள் சிறிலங்கா ராணுவத் தளபதியும், 2000 இல் புலிகளின் யாழ் நோக்கிய பாய்ச்சலின்போது ராணுவத்தின் எதிர்த்தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருமான ஜானக பெரேரா மற்றும் சிறிலங்காவின் விசேட படைகளின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறிலங்காவின் அனைத்து ராணுவ முகாம்களுக்கும் செல்வதற்கான தடை விதிக்கப் பட்டிருக்கு. இலங்கை தேசியப் பாதுகாப்பமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட சுற்று நிருபம் ஒன்றில் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசுத்தலைமையும், ராணுவத் தலைமையும் போரை நடத்தி வரும் விதம் , போரில் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை என்று மிகைப்படு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - மடு தேவாலயப் பகுதியில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருப்பதனால் மடு தேவாலயத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்இமடு பிரதேசத்திற்குத் தெற்காக 600 மீற்றருக்கு அப்பாலும், வடக்கிற்கும் கிழக்கிற்கும் தலா இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் படையினர் நிலை கொண்டுள்ளனர். மேற்கில் மடு தேவாலயம் இருப்பதனால் படையினர் அந்தப் பகுதியில் நிலைகொள்ளவில்லை. இதேவேளை, வவுனியா, வெலிஓயா, முகமாலை, மன்னார் ஆகிய பகுதிகளிலும் படைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
முகமாலை, கிளாலி மோதல்களின் போது கொல்லப்பட்ட 143 இராணுவப் படைவீரர்களது சடலங்கள் கொழும்பில் உள்ள மூன்று மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.,......... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/143.html
-
- 5 replies
- 1.9k views
-
-
முகமாலை கிளாலியில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவம் தொடர்பாக சில ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களைப் போன்று அரசாங்கப் படையினர் பின்வாங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு முகமாலை, கிளாலி பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் 43 இராணுவ படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 160 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். மோதல்கள் இடம்பெற்ற வேளையில் 38 படைவீரர்கள் காணாமல் போயிருந்ததா…
-
- 3 replies
- 2.3k views
-