ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கிழக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவினால் பொதுமக்கள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
மட்டக்களப்பு தேத்தாதீவில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குடும்பப்பெண் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
மன்னார் மக்கள் படையினரின் இரும்புக்கரங்கள் கொண்ட கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
தாங்கள் ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே பகிரங்கமாகக் கூறும் போது அரசு மட்டும் பிள்ளையானிடம் ஆயுதங்கள் இல்லையென கூறி வருகிறது. கிழக்கிலிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் அரசாங்கம், ஏன் தற்போது பூனைகளுக்கு பயப்படுகிறதென ஐ.தே.க. ................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_3367.html
-
- 0 replies
- 777 views
-
-
பிள்ளையான் குழுவைச் சார்ந்த சிலர் பாணம பிரதேசத்தில் ஓகந்த தேவலயத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் இரு முகாம்களை அமைத்துள்ளதாக அறியவருகின்றது. நேற்று இரு பேருந்து வண்டிகளிலும் சில சிற்றூர்தி வண்டியிலும் வந்த இவர்கள் முகாமமைப்பதற்குத் தேவையான பொருட்களை வண்டிகளில் எடுத்து வந்துள்ளனர். இம் முகாமமைப்பதற்கு பதினைந்த வயதிற்குக் குறைவான சிறுவர்களை ஈடுபடுத்தியதுடன், பிரதேசத்தில் வாழும் மக்களை முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு நுழையவிடாமல் பிள்ளையானின் ஆயுதக் கும்பல் தடுத்து வருவதாகவும் இரவு வேளைகளில் துப்பாக்கி வெடி ஓசைகள் கேட்பதாகவும் இங்குள்ள காட்டு மிருகங்களை இவர்கள் வேட்டையாடி வருவதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இச் செய்தியை ஜே.வி.பி யின் பா.உ. வசந்த பியதிஸ்ஸ 'லங…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நேற்று புதன்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 608 views
-
-
சிறிலங்காவின் நுவரெலியா மாவட்டம் கொத்மலையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தபோது அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற அனைத்துலக செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவர் அங்கிருந்து சிறிலங்காப் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 734 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கத்துடன் இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும் - பகவதி Thursday, 08 May 2008 தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் இந்தியா இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் தலையிடலாம் என இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் என்.கே.பகவதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த முனைப்புகள் தமிழ்நாட்டின் எண்ணங்களுடன் இணைந்து செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் டெய்லி மிரர் ஆங்கில செய்திதாளுக்கு தொலைபேசி மூலம் அவர் செவ்வியளித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் இணக்கம் இல்லாமல் இந்தியா இலங்கை விடயத்தில் தலையிட்டால்,அது இந்தியாவுக்கு பாரிய பாதகங்களை ஏற்படுத்தும். தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழர்கள் அத்துடன், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-05-08 தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம் இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 1k views
-
-
ரோகித பான் கீமூன் சந்திப்பு! வீரகேசரி இணையம் 5/8/2008 10:33:55 AM - போகொல்லாகம,ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர் பான் கீமூனை சந்தித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இச்சந்திப்பு இருவருக்குமிடையில் நேற்று,நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய வட,கிழக்கு நிலவரங்கள் தொடர்பாகவும், இலங்கையில் ஐ.நாவின் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடபட்டதாகவும், அறிய முடிகிறது. ரோகித பான் கீமூன் சந்திப்பு
-
- 0 replies
- 764 views
-
-
கிழக்கு மாகாணசபைத்தேர்தலுக்காக 28 ஆயிரம் படையினர் [ புதன்கிழமை, 07 மே 2008, 05:46.57 PM GMT +05:30 ] கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் துருப்புகள் பயன்படுத்தப்படவுள்ளன. அண்மைக் காலத்தில் தேர்தல் ஒன்றிற்காக கடமையில் அமர்த்தப்பட்டுள்ள அதிகூடிய பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை இதுவெனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு 28,000 பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன லக்பிமவிற்கு தெரிவித்துள்ளார்.இரகசிய பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த பாதுகாப்பு படையில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உதவிப் பொல…
-
- 0 replies
- 667 views
-
-
மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது 08.05.2008 நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற தவறியிருப்பதால் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங…
-
- 0 replies
- 944 views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் ஏனைய கட்சிகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே அரசு பாரளுமன்றை ஒத்திவைத்திருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. த.தே.கூட்டமைப்பின் யாழ். பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பில் தெரிவிக்கையில் : கிழக்கு மாகாணசபை தேர்தலில் பாரிய மோசடிகளை அரசு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே, நடக்கப் போகின்ற மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றில் குரல் எழுப்புவதை தடுப்பற்கும், தாம் மோசடிகளை செய்வதற்கு வசதியாகவும பாராளுமன்றை ஒத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை தேர்தலில் தாம் படுதோல்வி அடைவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். …
-
- 7 replies
- 1.4k views
-
-
மட்டு மாவட்டத்தில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் என வர்ணிக்கப்படும் பிள்ளையானை ஆதரித்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மட்டு மாவட்டத்தில் உலங்குவானுர்தி மூலம் வீசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட பிள்ளையானை வெல்ல வைப்பதற்காக அரசு மும்மூரமாக பிரசாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனது. அரசு பெரும் பணச் செலவில் பிள்ளையான் படத்துடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானுர்தி மூலம் மட்டக்களப்புக்கு கொண்டு சென்று நேற்று முன்தினமும் நேற்றும் ஆகாயத்திலிருந்து மாவட்டம் முழுவதும வீசியுள்ளனர். எ…
-
- 2 replies
- 1.7k views
-
-
88ஆம் 89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயின் சக உறுப்பினர்களை படையினரிடம் காட்டி கொடுத்த மற்றுமொரு தலைவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் ஜே.வீ.பீயின் மருத்துவ பிரிவின் தலைவர் தம்மிக்க பத்திரண என ஜே.வீ.பீயின் நடுநிலை அணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தம்மிக்க பத்திரண என்ற இந்த வைத்தியரை ........................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6366.html
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள்! - அதிர்ச்சியில் இலங்கை ராணுவம் ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது. சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம் (யீஷீக்ஷீஷ்ணீக்ஷீபீ பீமீயீமீஸீநீமீ றீவீஸீமீ). அதற்குள் இன்னொரு வ…
-
- 4 replies
- 3.2k views
-
-
அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி
-
- 0 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - எமது படைவீரர்களுடன் இணைந்து மிக விரைவில் நாடு முழுவதும் சமாதானத்தையும் மக்களின் நல்வாழ்வுக்குமான வழியையும் ஏற்படுத்துவேன். கிழக்கை மீட்டு அப்பகுதி மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்த பெருமை எமது படையினரையே சாரும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முதல் ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரையான கால எல்லை, படையினருக்கான மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட தேசிய படை நினைவுக் கொடியின் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் கையளிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது நாட்டின் இறைமையையும் சுயாதிபத…
-
- 4 replies
- 1.3k views
-
-
குப்பை லொறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த ரணில் வீரகேசரி இணையம் 5/7/2008 10:55:35 PM - அதியுயர் பாதுகாப்பு வலயமான தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான குப்பை லொறிகளை கண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விரு குப்பை லொறிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்று அங்கு காவல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரித்த ரணில், அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியாவிடின் தன்னிட…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிவனொளிப்பாத மலையில் சந்தேகத்துக்கு இடமான பொருள். கொத்மலையில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணம் Wednesday, 07 May 2008 மலையகத்தின் மஸ்கெலிய நல்லத்தண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவனொளிப்பாத மலையுச்சியில் காணப்பட்ட சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்கச்செய்ததாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பொதியில் வயர்களும் மின்கலங்களும் காணப்பட்டதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார். இந்த மலை சிவனொளிபாத மலை என்ற பெயரில் இந்துக்களின் புனித பிரதேசமாக பேணப்பட்டு வந்தது. சிவன் நடனமாடும் போது இமயமலையில் ஒரு காலையும் சிவனொளிப்பாத நிலையில் ஒரு காலையும் வைத்ததாகவும் அந்த காலின் அச்சு இன்னமும் இருப்பத…
-
- 0 replies
- 1.7k views
-
-
மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மட்டக்களப்புக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் இன்னும் பத்து நிமிடங்கள் பறந்திருந்தால் வானிலேயே வெடித்து சிதறியிருக்கும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். விமானப்படை விமானி ஹெலிகொப்டரை எதுவித ஆபத்துமின்றி சாதூரியமாக தரையிறக்கியமையினால் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் உயிருடன் இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார். ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்…
-
- 0 replies
- 1.8k views
-
-
சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசாங்கம் செல்கின்றது: ரணில் குற்றச்சாட்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. அனைத்தையும் மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். சர்வாதிகார ஆட்சியை நோக்கி அவர்கள் செல்கின்றார்கள் என்பதையே இவை அனைததும் புலப்படுத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அரசாங்கத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்குத் தெரிந்திருக்கவ…
-
- 1 reply
- 791 views
-