ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
பிள்ளையான் தரப்பினர் பிரம்புகளை கொண்டு மாடுகளை மேய்ப்பவர்கள் அல்ல, அதனை விட நவீன ஆயுதங்களை கொண்டுள்ளவர்கள் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்து ஆயுதங்களை கொண்டுள்ளனர். இவர்கள் பிற்பகல் 4 மணியின் பின்னர் அரசாங்கம் வழங்கியுள்ள உழவு இயந்திரங்களில் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிததார். இதனால் பிள்ளையான் குழுவினர் பிரம்புகளை கூட வைத்திருக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுவது பாலர் பாடசாலை உற்சவத்தை போன்றது. எனவும் அவர் கூறினார். அரசாங்க அமைச்சர…
-
- 0 replies
- 1.4k views
-
-
மிஹின் லங்கா விமான சேவையினால் வாடகைக்கு அமர்த்த விமானங்களை விமான உரிமையாளர்கள் திரும்பிப் பெற்றுக்கொண்டுள்ளமையினால் மிஹின் லங்கா விமான நிலையத்தின் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மிஹின் லங்கா விமான சேவையில் பயணச் சீட்டுப் பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூலம் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல்கேரிய நிறுவனமொன்றிடமிருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஏ-321 ரக விமானத்தை உரிய முறையில் பணம் செலுத்தாத காரணத்தால் குறித்த நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் 19 வருடங்கள் பழைமையான இரண்டு விமானங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிவில…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. எ.எம்.தசநாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி, ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் சீதா வித்தானாராச்சி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பயங்கரவாதம் மற்றும் அனர்த்தங்களில் உயிரிழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாவே இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 1k views
-
-
பிலியந்தலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபருக்கு, லண்டனிலிருந்தே அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றமை, விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான விபரங்கள் லண்டனிலிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் தலைவர் ஒருவர் மீதான தாக்குதல் தொடர்பான விபரங்களும் லண்டனிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக காவற்துறையினர் கூறுகின்றனர். இதேவேளை, பிலியந்தலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரது சகோதரர் காவற்துறை உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளுப்பிட்டி மோட்டார் வாகன காவற்துறைப் பிரிவில் கடமையாற்…
-
- 1 reply
- 2k views
-
-
வட போர்முனையான முகமாலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
04.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_008.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முகமாலை இழப்புக்களை ஓப்புக்கொள்ளும் கோத்தாபாய Monday, 05 May 2008 முகமாலைப் பகுதியில் அண்மையில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சமரில் சிறிலங்கா படையினருக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேட்டி நிகழ்ச்சி ஒன்றிலேயே இதனை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். முகமாலைச் சமரில் நூற்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட கோத்தாபாய ராஜபக்ஷ, நீண்ட காலத்துக்குப் பின்னப் படையினருக்கு இவ்வாறான பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார். படையினருக்கு இவ்வாறான தோல்வி ஏற்பட்டிருக்கின்ற போதிலும், தம்முடைய தற்போதைய இராணுவ உபாயங்களை மாற்றிக்கொள்ளப் ப…
-
- 1 reply
- 2.1k views
-
-
மன்னார் கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல். மூன்று படையினர் பலி உடல் மீட்பு. - இளந்திரையன் மன்னார் குகந்தபிட்டி பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் காவல் நிலை மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கடற்புலிகள் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார். இத் தாக்குதலில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய படையினர் தப்பியோடினர். மற்றும் ஆயுதங்களும் பலவும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்: ஆர்பிஜி புறப்ளர் - 02 ஆர்பிஜி செலுத்தி - 01 ஆர்பிஜி எறிகணைகள் - 06 ஏ.கே. எல்எம்ஜி - 01 ஏ.கே. எல்எம்ஜிக்குரிய றம் மகசின் - 05 புல்…
-
- 2 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் அந்த இயக்கம் அதன் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும் கடல்மார்க்கங்களின் மேற்கொண்டு விட்ட நிலையில் கடந்த காலங்களில் அதன் தாக்குதல்களை வான் பரப்பிலும் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக வான்புலிகள் எனப்படும் விமானப் படையணியையும் புலிகள் இயக்கம் உருவாக்கியது. இதைத் தொடாந்து சிறியரக விமானிகள் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையம் சார்ந்த விமானப்படைமுகாம், யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம், மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும் பொருளாதரா மத்திய நி…
-
- 4 replies
- 2.5k views
-
-
அரசின் நிர்வாக சீர்கேட்டால் நெருக்கடியில சிக்கியுள்ள சிங்கள மக்களின் மனோ நிலையை சீர்செய்யவும் தென்னிலங்கையில் கொதிப்படைந்துள்ள மக்களின் அரசுக்கெதிரான கிளாச்சியை தடுப்பதற்காகவுமே தமிழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யபட்டு பழி வாங்கப்படுகின்றனர், என இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் கைது செய்வதை கண்டித்த இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமில ஜயநெத்தி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலமாக கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யபட்டு பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும், சிறைக் கூடங்களிலும் தடுத்து வைக்கபட்டுள்ளனர். இவ்வாறான நட…
-
- 1 reply
- 1.1k views
-
-
கருணாவை விடுதலை செய்வதற்கு பிரித்தானிய அரசு தீர்மானம் பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்து சிறை வைக்கபட்டுள்ள த.வி.பு.இயக்க்தின் முன்னாள் தலைவன் கருணாவை எதிhவரும் சில நாட்களுக்குள் அந்நாட்டு அரசாங்கம் விடுதலை செய்ய தீர்மானித்துள்ளது. கடந்த சில காலமாகவே சிறைவாசம் அனுபவித்து வரும் அவரது நன்னடத்தை???? குறித்து முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுததுககொண்ட அந்நாட்டு நீதிமன்று அவரை வெகுவிரைவில் விடுதலை செய்யும் என்று எதிhபார்க்கப்படுகிறது. அவர் போலிக்கடவுச் சீட்டின் மூலம் பிரத்தானியாவுக்கு பயணித்ததான குற்றசாட்டின் பேரில் அந்நாட்டு பொலிஸாரல் கைது செய்யபட்டு கடந்த 9 மாதங்களாக சிறை வைக்கபட்டிருந்தமை குறிப்படடத்தக்கது. (04-05-08 லங்காதீப) நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 3.1k views
-
-
வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சரத் பொன்சேகா நேற்று ஞாயிறு பாகிஸ்தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஆறு நாள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இராணுவத்தளபதி, அங்கு பாக். ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பையும் சந்திக்கவுள்ளார். வடக்கே நடைபெறும் மோதல்களையடுத்து பாகிஸ்தானிடமிருந்து இலங்கைப் படையினர் அவசர இராணுவ உதவிகளைக் கோரியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுக்களும் அவசரமாகத் தேவைப்படுவதாக அண்மையில் இலங்கை இராணுவம் பாகிஸ்தானிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையிலேயே, பொன்சேகா நேற்று பாகிஸ்தானுக்கான ஆறு நாள் பயணத்தை ஆரம்பித்திருந்தார். பர்வேஷ் முஷாரப்பை விட முப்படைத்தளபதிகளையும் சிரேஷ்ட …
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் திருகோணமலையை சேர்ந்த 28 வயதான அபா தனுஸ்க்க 19 வயதான அமர சஞ்சீவ 20 வயதான நுவான் 20 வயதான சனத் தர்ஸன் மற்றும் 26 வயதான ரூவான் பிரியந்த ஆகியோரே மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மாதம் 24-ஆம் திகதி திருகோணமலையில் இருந்து ஒரு சிறிய விசைப்படகில்; கடலில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். புறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. வங்கக்கடலில் வீசிய நர்கீஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த காற்றில், அவர்களது படகில் இருந்த இயந்திரம் திடீரென கழன்று கடலுக்குள் விழுந்துள்ளது இதனால் படகு செயலிழந்து நடுக்கடலில் தத்தளிதத நிலையில் செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் வயர்லஸ் கருவி (ஹை பிரீக்வன்சி செட்); உதவியுடன் இலங்கையில் உள்ளவர்களிடம் தொ…
-
- 0 replies
- 692 views
-
-
வான்புலிகள் தோற்றுவித்த புதிய அச்சுறுத்தல் - வேல்ஸிலிருந்து அருஷ் உலக சந்தையில் அதிகரித்துவரும் விலை உயர்வுகளில் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அடுத்த நிலையில் அரிசியின் விலை உயர்ந்து வருவது மூன்றாம் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்றது. இந்த விலை உயர்வு மேற்கத்தைய நாடுகளைவிட அரிசி உணவு வகையில் அதிகம் தங்கியுள்ள ஆசிய நாடுகளையே அதிகம் பாதித்துள்ளது. அரிசியை குறைந்தளவில் நுகர்ந்துவரும் பிரித்தானியாவிலும் அதன் விலை கடந்த வாரம் இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிரியல் எரிபெருட்களுக்கான பயிர்ச்செய்கை, வறட்சி என்பன அரிசி உற்பத்தியை அதிகம் பாதித்துள்ள காரணிகள். இந்தக் காரணிகளால் குறைவடைந்துள்ள அரிசி உற்பத்தி ஆண்டுக்கான உலகின் தேவையாகிய 430 மில்ல…
-
- 3 replies
- 2.6k views
-
-
பரவலாக இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் பலி! 35 பேர் படுகாயம் நேற்று சனிக்கிழமை வடக்கில் பரவலாக இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முகமாலை, மன்னார், புளியங்குளம், பாலம்பிட்டி, மடு வடக்கு, யோதவாவி கிழக்கின் செட்டியார்க்கட்டையடம்பன், அடம்பன், மணலாறு ஜனகபுரம் வடக்கு, ஆண்டான்குளம் மற்றும் கிரிஇப்பன்வௌ போன்ற பகுதிகளிலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
-
- 0 replies
- 979 views
-
-
இரத்மலானையிலும் மினுவாங்கொடையிலும் 65 தமிழர்கள் இன்று காலை கைது Sunday, 04 May 2008 கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான தேடுதல் நடவடிக்கைகளின் போது 65 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 659 views
-
-
கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி அம்பாறையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் வீரகேசரி இணையம் 5/4/2008 11:40:01 PM - கிழக்கு மாகாணம் மீண்டும் ஆயுதக் குழுவிடம் செல்வதை தடுத்து நிறுத்தி கிழக்கு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து களத்தில் குதித்துள்ளனர். தேர்தலில் கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று மாலை அம்பாறை நகரில் நடைபெற்றபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தயா கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்…
-
- 2 replies
- 745 views
-
-
இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்? - வைகோ வீரகேசரி இணையம் 5/4/2008 11:43:48 PM - இலங்கைத் தமிழருக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப விடாது தடுத்து நிறுத்தியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்து தமிழக முதலமைச்சர் பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார். மேதினத்தை முன்னிட்டு ஆவடியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய வைகோ மேலும் தெரி…
-
- 0 replies
- 834 views
-
-
ஞாயிறு 04-05-2008 21:51 மணி தமிழீழம் [மயூரன்] பேரூந்து விபத்து இருவர் பலி! ஆத்திரமடைந்த மக்கள் பேரூந்தை தீயிட்டனர் சிலாபம் வீதியில் இன்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பேரூந்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 907 views
-
-
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள் மக்கள் விடுதலை முன்னணியினுள் (ஜே.வி.பி.) கடுமையான உள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. ஜே.வி.பி. இலங்கையில் சிங்கள இனவாதத்துடன் மக்கள் வாத வாய்வீச்சுக்களையும் கலவையாக்கி செயற்படுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாகும். இந்த பிளவில் தனிப்பட்ட அவதூறுகள், அமைப்பு ரீதியான சூழ்ச்சித் திட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளும் ஆதிக்கம் செலுத்தும் அதேவேளை, இந்த பதற்ற நிலைமை முழுத் தீவையும் ஆட்டிப்படைக்கும் ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையே பிரதிபலிக்கின்றது. ஏப்ரல் 8 அன்று, ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் வி…
-
- 0 replies
- 654 views
-
-
சிங்கள அரசு விரிக்கும் மாய வலையில் நாம் சிக்குவோமாயின் நாம் சின்னாபின்னமாகி சீரழிந்து போவது உறுதி. - ஈழவேந்தன் [ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2008, 11:23.18 AM GMT +05:30 ] எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி கிழ்க்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலை கிழ்க்கின் விடியல் என்றும் கிழ்க்கின் உதயம் என்றும் மயக்கும் சொற்களை மகிந்த அரசு கையான்டூ தமிழ் மக்களையும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் திசை திருப்ப முயல்கிறது. 1987 ஜுல்ய் 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றபட்டது. இவ் ஒப்பந்ததில் குற்றம் குறைகள் முறண்பாடுகல் நிறைய உண்டு.எனினும் இவ்வொப்பந்ததில் தெம்பு தருகின்ற ஒரு பகுதி அதன் முன்னுரை ஆகும்.இவ் முன்னுரையில் வடக்கும் கிழக்கும் ஈழம் வாழ் தமிழ் மக்களின் தாயகம் எ…
-
- 0 replies
- 832 views
-
-
கிழக்குத் தேர்தல் கண்காணிப்புக்கு ஆசியாவிலிருந்து 18 கண்காணிப்பாளர்கள் வருகை Sunday, 04 May 2008 மே 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் வருகை தரவிருப்பதாக தேர்தல் செயலக ஆலோசகர் எஸ்.மெதவேவ தெரிவித்தார். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆளும் கட்சிக்குச் சார்பான முறையில் அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் கேட்கப்பட்ட போது, இது தொடர்பாக தேர்தல் திணைக்களத்தால் எதுவும் செய்ய முடியாது எனவும், அதற்கு சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளையில், புதன்கிழமை…
-
- 1 reply
- 590 views
-
-
ஞாயிறு 04-05-2008 21:47 மணி தமிழீழம் [மயூரன்] இளவரசர் ரிட்சாட் கொழும்பை வந்தடைந்துள்ளார் இங்கிலாந்து அரச பரப்பரையைச் சேர்ந்த இளவரசர் ரிட்சாட் மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று கொழும்பை வந்தடைந்துள்ள இவர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ரிட்சாட் இரண்டாம் எலிசப் மாகாராணியின் உடன்பிறவா சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 5 replies
- 1.4k views
-
-
இருதின போன்ற பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறுவதாக ஜனாதிபதி சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றிரவு தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வாரம் (இன்றைய ஞாயிறு இருதின) வெளியான இருதின இதழ் முகமாலை தோல்வி தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரை காட்டி கொடுத்த இராணுவ தளபதி என பிரதான செய்தியை வெளியிட்டது. இதன் மூலம் இந்த பத்திரிகை மக்களை வேண்டுமென்றே தவறான வழியில் ஈட்டுச் செல்ல பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார். இந்த பத்திரிகைகளை தான் தேசிய பத்திரிகைகள் என கூறுவதில்லை எனவும் அவ்வாறானவற்றை தாம் வாசிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாதுகாப்புக்கு விரிவான திட்டம் Sunday, 04 May 2008 கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், பாதுகாப்புக்கான திட்டமொன்று வகுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவின் ஆலோசனையுடனேயே இந்தப் பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட அடிப்படையிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர், விஷேட அதிரடிப்படையினர், ஆயுதப் படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஏனைய மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்…
-
- 1 reply
- 723 views
-