ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
-
கிழக்கு மாகாண சபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமது அணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் நியமிக்கப்படுவார் என அவ்வணியின் பேச்சாளரான அசாத் மௌரானா தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பிள்ளையான் அணியின் முக்கிய கூட்டம் ஒன்றிலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தே இத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பிள்ளையான்குழு நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலிலும் ஆளும் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இ…
-
- 6 replies
- 2.8k views
-
-
கடற்புலிகளின் படகு தாக்குதலுக்கு உள்ளானது 3/25/2008 12:48:21 PM வீரகேசரி இணையம் - கடற்புலிகளுக்கும்,கடற்படையி
-
- 4 replies
- 3.9k views
-
-
கிழக்கில் 361 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மட்டகளப்பு மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 10 திகதிநடை பெறவுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக மமட்டகளப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கிறிஸனானந்த லிங்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக மட்டகளப்பிலிருந்து 3.30950 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 94359 பேரும் மட்டகளப்பு தேர்தல் தொகுதியில் 154761 பேரும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியல் 81730 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா் . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1122
-
- 0 replies
- 834 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிலில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 33 replies
- 4.7k views
-
-
மோதரையில் வெடிபொருட்கள் மீட்பு 3/25/2008 12:47:57 PM வீரகேசரி இணையம் - மோதரையில் 2 கிலோகிராம் நிறை உடைய சி4 ரக வெடிமருந்தும் 10 வெடி கருவிகளும் அதனோடு இணைந்த வேறு சில உபகரணங்களும் மோதரை பொலிஸாரால் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன. இன்று காலை மோதரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தீவிர பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்
-
- 1 reply
- 1.5k views
-
-
காமன்கூத்தில் மோதல்; சிங்கள இளைஞன் உயிரிழப்பு; தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் Tuesday, 25 March 2008 தெல்பத்தை தோட்ட மொரகொல்ல பிரிவில் இடம்பெற்ற காமன்கூத்து நிகழ்வில் ஏற்பட்ட மோதலில் சிங்கள இளைஞனொருவர் உயிரிழந்ததையடுத்து, வன்முறைக் கும்பல்களினால் தமிழ் மாணவர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், தமிழ் தோட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1297/1/
-
- 1 reply
- 2.3k views
-
-
தமிழரின் சுயநிர்ய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் [25 - March - 2008] * உலகளாவிய ரீதியில் 47 இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தல் தமிழ்த்தேசிய இனத்தின் தாயகம் சுயாட்சி மற்றும் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகெங்குமுள்ள இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டுமென 47 இடது சாரி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாகவே நேற்று புதிய இடதுசாரி முன்னணியின் பிரமுகர்கள் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் இந்த வேண்டுகோள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த நிறு…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது 3/25/2008 10:39:00 AM வீரகேசரி இணையம் - கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள 325 மீட்டர் நீளமான மேம்பாலம் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. இப்பாலத்தை 61 நாட்களில் நிர்மாணித்தன் மூலம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசாங்கமே நிகழ்த்தியிருந்தது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தில் சுமார் 300 மீட்டர் நீளமான மேம்பாலத்தை அந்நாட்டு அரசாங்கம் 66 நாட்களில் நிர்மாணித்தது. கொழ…
-
- 0 replies
- 871 views
-
-
வாய்ச்சவடால் அறிக்கைகளால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது 25.03.2008 மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும் பன்னாட்டு நிறுவனங்களும் சுமத்திவரும் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் பெருகிக் குவிந்துகொண்டு போக, அவற்றைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பினால் வெள்ளம்போல பாயவிடப்பட்ட ஏமாற்று அறிவித்தல்களும், அத்தியாயங்கள், அத்தியாயங்களாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளும், உச்ச ஸ்தாயியில் முன்னெடுக்கப்பட்ட பிரசார செயற்பாடுகளும் கடைசியில் பயனின்றித் தோற்றுப் போய்விட்டன என்று ஆங்கில வார இதழ் ஒன்று தனது வாராந்த அரசியல் விமர்சனத்தில் அப்பட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
காலை 6.00 மணிக்கு முன்னதாக வீதிகளி உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி அமைச்சர் சம்பிக்க உத்தரவு 3/25/2008 11:37:24 AM வீரகேசரி இணையம் - சூழல் பாதுகாப்பு அமைச்சர், சம்பிக்க ரணவக்க காலை 6.00 முன்னதாக வீதிகளில் போட்டிருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநகரசபை,நகரசபை மற்றும் உள்ளூர் அதிகார சபை அதிகாரிகளை கேட்டுள்ளார். இது குறித்து அமைச்சருக்கு பொதுமக்களால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 986 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு தீவிரவாதி அமைப்புகளுடன் தொடர்பு : இலங்கை பிரதமர் ஜெருசலேம் : விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ, தமிழ் இளைஞர்களுக்கு சிரியா, லெபனான்களில் உள்ள பாலஸ்தீன தீவிரவாத முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.மேலும் விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி அமைப்புகள் மற்றும் தலிபான்களுடனும் தொடர்பிருப்பதாக கூறியுள்ளார் ஆதாரம் தினமலர் அப்படிப் பயிற்சி பெற்ற பயங்கரவாதியொருவர் எங்கள் அமைச்சரவையில் இருக்கிறார்......................
-
- 0 replies
- 1.4k views
-
-
எதிர்வரும் மே மாதத்தில கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்திருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து அரசு இந்தத் தேர்தலை நடத்துகிறதே தவிர அம்மாகாண மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் நோக்கம் எதுவும் இல்லையென்பது தெளிவான விடயமாகும். அத்துடன் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளுக்கு அமையவே இந்த மாகாணசபை செயற்படப் போகிறது. இது பாரிய தவறான அரசியல் தீர்வாகும், இதன் பிரதிபலனாக பிரிவினைவாதம் சகல வழிகளிலும் தோற்கடிக்கப்படுவதற்கு பதிலாக ஒரு வழியில் பிரிவினைவாதத்தைப் போசிப்பதாகவே அமையப் போகிறது. இதே நேரம். அண்மையில் நடைபெற்ற மட்டு. மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிள்ளையான் குழுவினருடன் இணைந்து போட்டியிட்டு மட்டு. மாநகரசபையை அரசு வென்ற…
-
- 0 replies
- 878 views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல்களை ரத்து செய்வதற்கு இந்தியாவை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வாழ்விடமான வடக்கு.கிழக்கு மாகாணங்களை பிரித்தமை இலங்கை இந்தியா உடன்படிக்ககையை மீறிய செயற்பாடெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம். செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு ஞாயிறன்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது : இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அவல நிலையை போக்குவதற்காகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும் கடந்த 1987 ம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்த ராஜீவ் காந்தி, அன்றைய ஜனாதி…
-
- 0 replies
- 844 views
-
-
-
கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி -விதுரன்- வடக்கே கடும் மழைபெய்து வருவதால் கடந்தவாரம் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடும் மழையால் அனைத்து படை நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ள போதும் அங்கு தினமும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. கடும் மழையைத் தொடர்ந்து அங்கு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் தொடர்ச்சியாக கடுமையான ஆட்லறிஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதேபோன்ற நிலையில்தான் வன்னிக் கள முனையில் விடுதலைப் புலிகளுமுள்…
-
- 0 replies
- 654 views
-
-
இலங்கைக்கு உதவும் விடயத்தில் இரட்டை வேடம் போடும் இந்தியா - இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடமிடுவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடந்தவாரம் மத்திய அரசு மீது குற்றச் சாட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். ஒரு புறத்தில் இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகளை வழங்கி, போருக்கு உதவியபடியே மறுபுறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமற்றதெனத் தெரிவித்துவரும் நிலைப்பாடே தமிழக அரசியல்வாதிகள் இத்தகைய கேள்வியை எழுப்பக் காரணமாகும். இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு வார கால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது அவருக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகமான "சௌத்புளொக்'கில் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு உயர்…
-
- 0 replies
- 780 views
-
-
ஈழப்பிரச்சினையை கையிலெடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள்! கலைஞன்- இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள் அது தொடர்பில் கொடுத்து வரும் நெருக்கடிகள், அழுத்தங்களால் இந்திய மத்திய அரசு புதிய சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளால் மத்திய அரசை பாடாய்ப்படுத்தும் இந்த இடது சாரிகள் தற்போது மத்திய அரசுக்கு தீராத தலைவலியாய் இருக்கும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை கையிலெடுத்துள்ளதால் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அடி விழுந்துள்ளது. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக பல சந்தர்ப்பங்கள…
-
- 0 replies
- 909 views
-
-
தமிழ் மக்களை அடக்கி ஆள்வதற்கான ஆயுதமாக உணவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 754 views
-
-
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்பவேண்டும் என்று தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 620 views
-
-
தமிழர் மீதான சிங்களவரின் அடக்குமுறை -- ஒரு பார்வை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும் உலகு எங்கும் உள்ள இடதுசாரி முற்போக்கு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று 47 இடதுசாரி அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவின் கொடிய பேரினவாதியும் அந்நாட்டின் பிரதம மந்திரியுமான ரட்னசிறி விக்கிரமநாயக்கா இஸ்ரேலில் படைத்துறை மற்றும் இராணுவ தொழில்நுட்ப உதவிகள் கேட்டல் உட்பட்ட பேச்சுக்கள் நடத்தச் சென்றுள்ளார்..! படத்தில் ரட்னசிறி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Ehud Olmert. இஸ்ரேல் சிறீலங்கா படையினருக்கு நீண்டகாலமாகவே பயிற்சி மற்றும் உளவுத்தகவல்கள் வழங்குவதுடன் அமெரிக்காவின் அனுமதியோடு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் கடற்படைக் கலங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் சிறீலங்காவின் நெருக்கம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி கொண்டிக்கும் நிலையில் இவ்விஜயம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சிறீலங்கா சிரியாவில் தனது தூதரகத்தை திறந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இக்கரும்புலிகள் சொல்லிச் சென்ற செய்தி:- கடற்கரும்புலி மேஜர் நிரஞ்சினி தனது கருத்தில் எமது அண்ணாவிற்கு தோளோடு தோளாக நின்று எவ்வளவுக்கு தங்களால் இயன்றளவு செய்யமுடியுமோ அவ்வளவுக்கு செய்து அண்ணாவின் காலப்பகுதிக்குள் தமிழீழத்தைப் பெற்றெடுக்கவேண்டும் என்றார். லெப்.கேணல் அன்புமாறன் தனது கருத்தில் எனது அன்பான மக்களுக்கு நீங்கள் இதைப்பார்க்கும் நேரம் நான் உங்களைவிட்டு நீண்டதூரம் வந்திருப்பன். அதாவது நான் வீரச்சாவடைந்திருப்பேன். மக்களுக்கு சொல்லிவிட்டுப் போகவிரும்புவது என்னவென்றால் கரும்புலிகளால் தகர்க்க ஏலாது என்று சொல்லி எதுவுமேயில்லை. கரும்புலிகள் தான் எங்கள் போராட்டப்பாதையில் தடையாக இருந்தவற்றையெல்லாம் தடைகளை நீக்கி தடைக்கற்களை உடைத்தெறிந்து காட்டியுள்ளனர். …
-
- 15 replies
- 5.8k views
-
-
கொழும்பின் பார்வைகளும் கிழக்கின் தேர்தல்களும் 24.03.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு கலந்து கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன், தமிழீழ விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் திரு இளம்பருதி மற்றும் திரு வீரா. http://www.yarl.com/videoclips/view_video....c0ccd295cc484e5
-
- 0 replies
- 1.3k views
-