ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
ஈரானுடனான புதிய நட்புறவு இலங்கைக்குத் தெம்பு தருமா? அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தை வரவேற்பதற்காக இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்துவரும் இச்சமயத்தில் ஈரானிய அதிபரின் இந்த விஜயம் அமெரிக்காவிற்குப் பெரும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் அதிபரை இலங்கைக்கு அழைத்துப் பெரும் வரவேற்பு அளித்து, அந்நாட்டுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்வதை வெளிப்படுத்திக் கொள்ள இலங்கை முயல்கின்றது. ஆனால் இந்த வரவேற்பு ஏற்பாடு அமெரிக்காவையும் மேற்குலகையும் கடும் விசனத்துக்குள்ளும் சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஈரான் தொடர்பில் இலங்கை அரசு கடைப்பிடித்த…
-
- 1 reply
- 629 views
-
-
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களை கொண்டு வரும் சூழச்சியில் சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டதாக இலங்கை சட்டமா அதிபர் குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவின் பார்வையாளர் பணியில் இருந்து சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் விலகியமையானது அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியே என சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். தாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் செயற்படுத்த தவறியமையால் தமது பணிகள் பாதிக்கப்பட்டதாக சர்வதேச சுயாதீன அறங்கூறுனர் குழு அண்மையில் அறிவித்தனர். அத்துடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை தொடர்பான கண்காணிப்பு குழு சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்ல…
-
- 0 replies
- 678 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கி ரவைகள் துப்பாக்கியொன்று டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் லக்பிமவிற்குத் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட க்ளைமோக் குண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டரைக் கிலோ எடையுடையதெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்ட போது குறித்த இராணுவ வீரர் வீட்டில் இருக்கவில்லை எனவும் அரவது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 587 views
-
-
இலங்கைக்கு எதிராக வைகோ தெரிவிக்கும் கருத்துகள் குறித்து இந்தியா கவனம் செலத்தாத நிலையில், அது குறித்து இலங்கை பொருட்படுத்தவேயில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித தெரிவித்தார். எதிர்வரும் மே 7ம் திகதி ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் எனக்கும் நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்நிலையில்; வைகோ ஐ.நா.செயலாளரை சந்திப்பது எமக்கு பிரதானமானதல்ல. அவர் இலங்கைக்கு எதிராக நீண்ட காலமாக சத்தமிட்டு வருகிறார்.அவரின் கூற்றுகள் குறித்து இந்தியாவே அவதானம் செலுத்தாத நிலையில், அரசு என்றவகையில் நாம் அதனைப் பொருட்படுத்தவேயில்லை. இலங்கையுடன் மிகச் சிறந்த உறவை இந்தியா வேணிவருகிறது. புலிகளிடமிருந்து விலகிச் செயற்பட்ட கருணா குறித்து அரசு ஆர்வம் செலுத்…
-
- 0 replies
- 793 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளையும் உறுதியுரைகளையும் தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து யுத்தத்தையும் இனப்பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று டென்மார்க் ராஜதந்திரிகளிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் கோரியுள்ளார். டென்மார்க் வெளிவிவகார அமைச்சரின் விசேட பிரதிநிதியும் மனித உரிமைகள் தொடர்பான டென்மார்க் அரசின் தூதுவருமான ஹன்ஸ் குருனட்இ டென்மார்க் உதவி தூதுவர் டெனி அனான் ஆகியோரை மனோ கணேசன் எம்.பி. நேற்று மாலை சந்தித்து பேசினார். கொழும்பிலுள்ள டென்மார்க் தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து மேலக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத…
-
- 0 replies
- 621 views
-
-
முன்னாள் இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட இரு முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படை முகாம்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டள்ளது. இராணுவத் தலைமையகம் நேற்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவும் கேணல் ஜெயவி பெர்னாண்டோவும் அண்மைக் காலமாக வடக்கில் இடம் பெறும் படை நடவடிக்கைகள் தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருவதையடுத்தே, இவ்விருவரும் இராணுவ முகமகளுக்குள் நுழைவதற்கு இராணுவ தலைமையகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கும், கேணல் ஜெயவி சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கும் வழங்கிய பேட்டி, படைத்தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்ப…
-
- 0 replies
- 932 views
-
-
டெய்லி மிறர் இக்பால் அத்தாஸின் கருத்துப்படி 100 மேல் பலியாகியுள்ளதை இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. இது புலிகளால் கைப்பற்றபட்ட சடலங்களையோ அல்லது போர்களத்தில் பரவிக்கிடக்கும் சடலங்களை உள்ளடக்கவில்லை. இராணுவத்தால் மீட்கப்பட்ட சடலங்களே 100. எல்லாவற்iறையும் கூட்டிப்பார்த்தால் 200 தாண்டும் போல கிடக்கு! இக்பால் அத்தாஸ் சீ. என். என் இற்கு கொடுத்த தகவலை முழமையாக படிக்க.. Tigers feint kills 100 Sri Lanka troops -From Iqbal Athas
-
- 6 replies
- 3.3k views
-
-
முகமாலை சமர்க்களம் - யாழ். வடபோர் முனையான முகமாலைக் களமுனையில் இன்று சிறிலங்காப் படைத்தரப்பினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர முறியடிப்புச் சமரில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.yarl.com/videoclips/view_video....fa09a282e0d496f
-
- 0 replies
- 2.7k views
-
-
வடபோர்முனை சமரில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 08:20 PM - GMT ] வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி மீதான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின்போது பெருமளவு போராயுதங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். அவற்றின் விபரங்கள் வருமாறு: ரி-56-2ரக துப்பாக்கிகள் - 42 ரி-56-1ரக துப்பாக்கிகள் - 03 ரி-56 இலகு ரக இயந்திர துப்பாக்கி(எல்.எம்.ஜி) - 05 பி.கே. நடுத்தர இயந்திரத் துப்பாக்ககிகள் - 02 ஆர்.பி.ஜி உந்துகணைகள் - 05 40 மி.மீ. கிரனைட் லோஞ்சர்ஸ் - 03 கவச எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 07 மனித எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 21 ஆர்.பி.ஜி புரப்ளர்ஸ் - 26 தலைக்கவசங்கள் - 12 …
-
- 2 replies
- 2.4k views
-
-
22.04.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....bd2504188127765
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையத்திற்குள் சிறிலங்கா காவல்துறையினர் அத்துமீறிப் புகுந்து கடும் தேடுதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
வடக்கை நோக்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்துகொள்வதற்கு பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 2ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும்இ இந்தக் காலப்பகுதியில் மீண்டும் இணைந்துகொள்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதலாம் திகதியிலிருந்து இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில் மீண்டும் இணைந்துகொள்ளமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் வர்த்தக நலன் தொடர்பிலான முக்கிய பதவியில் முன்னாள் ஊடகவியலாளரான பந்துல ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
ளன்க மப் சென்னை: இலங்கையில் போராளி குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நேபாளத்தில் கிடைத்ததைப் போன்ற வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் அமைதி திரும்ப, அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட சமாதான பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசசபையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினர்கள். விவாதத்தில் கலந்…
-
- 14 replies
- 2.9k views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் விவகாரங்களுக்கான அமெரிக்க அரசின் உயர்நிலைப் பிரதிதிகள் சிறிலங்கா சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று நடந்த சண்டையில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தின் படம். படம் 1..... படம் 2...... படம் 3.......... படம் 4.......... படம் 5............. படம் 6 ........ படம் 7.......... படம் 8.......... அடி பறவாய் இல்லை போல....
-
- 20 replies
- 7k views
-
-
விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதே வை.கோ.வின் நோக்கம் - இலங்கை அரசாங்கம் Wednesday, 23 April 2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வை.கோ. கோரியிருப்பது புலிகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே என இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் உணவுப் பொருட்கள் இல்லை எனக்கூறி 60 நாட்கள் யுத்த நிறுத்தத்தை முன்னெடுக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசியல்வாதி வை.கோ. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிடம் கோரியுள்ளார். வை.கோவிற்கு தேவையான வகையில் இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளாது எனவும், இலங்கையின் …
-
- 2 replies
- 1.8k views
-
-
களமுனைப்போராளிகளுக்கு உலருணவு வழங்குவதில் புலம்பெயர்ந்த மக்களும் ஆர்வம்! 23.04.2008 / நிருபர் எல்லாளன் தாயகத்தில் களமுனைகளில் போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு தாயகத்தின் பலபகுதிகளிலுமுள்ள பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து கையளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் திரு.அருளன் என்பவர் களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்குவதற்கான உதவியினை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் தனது வழமையான போராட்டப் பங்களிப்புக்களுக்கப்பால் இவ்வுலருணவுக்கான உதவியினை வழங்கியுள்ளார். தாயகத்தில் பொதுமக்கள் உலருணவுகளைச் சேகரித்து சிங்களப்படைகளினது கடுமையான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியிலும் களமுனைகளுக்கு நேரடியா…
-
- 4 replies
- 2k views
-
-
வடபோர் முனையில் மோதல். 23.04.2008 / நிருபர் எல்லாளன் வடபோர் முனை - சிறிலங்காப் படையினர் பல்வேறு முனைகளிலிருந்து பல்குழல் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை முயற்சியொன்றை மேற்கொண்டனர். இந்த முன்னேற்ற முயற்சி இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முன்னேற்றத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்துவருகின்றனர். இதேவேளை சிறிலங்காப் படையினர் வடபோர்முனை ஊடாக முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டுள்ளதாக படைத்தரப்பு தெரித்துள்ளது. இம் முன்நகர்வுத் தாக்குதலில் சிறிலங்காப் படையினரின் கவசப்பிரிவு கொமாண்டோக்கள், 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படையினருக்கு ஆதரவாக பின்தளங…
-
- 38 replies
- 7.6k views
-
-
புதன் 23-04-2008 04:01 மணி தமிழீழம் [மயூரன்] பொரலஸ்கமுவவில் கைக்குண்டுத் தாக்குதல் இருவர் காயம் பொரலஸ்கமுவ பெப்பிலியான பகுதியில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை உந்துறுளியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 796 views
-
-
http://www.tamilnaatham.com/audio/2008/apr...ath20080421.mp3
-
- 0 replies
- 964 views
-
-
http://www.vakthaa.tv/play.php?vid=587
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். வட போர்முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை பாரிய எடுப்பில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம்மும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று சந்திப்பினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 838 views
-
-
மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினர் வரப்போகின்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அப்படி வாக்களிக்க ப்படாவிட்டால் கொல்லப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவினர் அங்குள்ள உதைபந்தாட்ட கழக இளைஞர்களை அழைத்து நடக்கப்போகின்ற தேர்தலில் நீங்கள் எந்த சின்னத்தில் வாக்களிக்கின்றீர்கள் என நாங்கள் வாக்குச்சீட்டுக்களிலிருந்த
-
- 0 replies
- 1.1k views
-