Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாணயக்கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானம் இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR) 15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate – SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வ…

  2. இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு! இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர்…

    • 1 reply
    • 240 views
  3. அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க ஒருபோதும் இடமளியேன் – ஜனாதிபதி Published By: T. SARANYA 03 MAR, 2023 | 04:22 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியலமைப்பை வெறும் காகித ஏடுகளாக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்களின் வாக்களிப்பு மூலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் ஒன்றை மாற்றியமைக்க முடியும். ஆனால் வீதி போராட்டங்களில் ஆட்சி மாற்றம் என்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளினாலும் நாடு அராஜக நிலைகளை எதிர்கொள்ளும். எனவே நாட்டின் அரசியலமைப்பை போன்று பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செல்பட வேண்டும். பொருளாதாரத்…

  4. பாராளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் : ஜனாதிபதி Published By: VISHNU 03 MAR, 2023 | 11:56 AM பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதை விடுத்து வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, விமானப்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/149598

  5. புலனாய்வு தகவல் பரிமாற்றம் மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் - கம்மன்பில Published By: DIGITAL DESK 5 03 MAR, 2023 | 04:43 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நான்கு கடும் நிபந்தனைகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் பகிரங்கமாக முன்னெடுக்கப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். …

  6. கனடா வேலை வாய்ப்பு, விசா மோசடி தொடர்பில் பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் வதிவிட விசாக்களை பெற்று தருவதாக உறுதியளித்து நபர்களிடமிருந்து 5 – 20 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு பணம் செலுத்திய 25 பேரிடம் முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு எதிராக இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதா…

  7. பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/2432…

  8. வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல் Published By: DIGITAL DESK 5 03 MAR, 2023 | 10:06 AM யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், வடக்கில் பல்வேறு அமைப்புகள், சிவில் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். இதன்போது வடக்கின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்தத்திற்…

  9. இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார். உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். "2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர்.…

  10. யாழில் 11 சந்தை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை (தராசுகள்) பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று புதன்கிழமை பண்ணை மீன் சந்தை, நாவாந்துறை மீன் சந்தை, காக்கைதீவு மீன் சந்தை மற்றும் சின்னக்கடை மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளையில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 …

  11. சாரதிகளுக்கான விஷேட அறிவித்தல்! மேல் மாகாணத்திற்குள் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட புதிய திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் பிரிவிற்கும் அமுலாகும் வகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனத்தை செலுத்துதல், 18 வயதிற்கு குறைந்தவர்கள் வாகனத்தை செலுத்துதல், வாகன வருமானவரிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வானத்தை செலுத்துதல், வீதி விதிமுறைகளை மீறுதல், சுற்றுவட்டங்களுக்கு அருகில் இழைக்கும் தவறுகள், வீதி வெள்ளைக்கோடு வீதி மாறுமிடத்தில் மேற்கொள்ளும் தவறுகள், ஒழுங்கைகள் மாறுமிடத்தில் இழைக்கும் தவற…

  12. இலங்கையில் வரி அதிகரிப்பு - நியாயப்படுத்துகின்றது சர்வதேச நாணயநிதியம் Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 11:34 AM இலங்கையில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள புதிய வரிகளை சர்வதேச நாணயநிதியம் நியாயப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு பல காரணங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியம் வரிகள் மூலம் அரசாங்கத்தினால் தனது செலவீனங்களை சமாளிக்க முடியாததும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளது. உரிய வரிகள் மூலம் மாத்திரம் அரசாங்கத்தினால் தனது செலவீனங்களிற்கான நிதியை பெற்றுக்கொள்ளமுடியும் என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான வதி விடப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். IMF’s Senior Mission Chief for Sri Lanka P…

  13. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம் ! Published By: Digital Desk 5 03 Mar, 2023 | 10:29 AM கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபரி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (3) அதிகாலை 5 மணி முதல் அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை பக்தர்களை கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ளன. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி இடம்பெறுகிற…

  14. கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 5 03 Mar, 2023 | 12:03 PM கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது, நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்…

  15. பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது! நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஜெனீவாவில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் …

  16. சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்! சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்ப…

  17. வெளிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்! வேலைவாய்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, 2023 ஜனவரி மாதத்தில் 24ஆயிரத்து 236 இலங்கையர்க…

  18. யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்! யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது நியமனம் குறித்த …

  19. அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தடையெனில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க தீர்மானம் - அரசாங்கம் Published By: T. SARANYA 02 MAR, 2023 | 03:53 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தடையாக இருக்குமானால், தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த ம…

  20. புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி பிரபாகரணை இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் மேலும்…

  21. மண்ணெண்ணெய் விலை குறைப்பு இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாவாகும் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/242625

  22. இன்று முதல் இலவச எரிபொருள் கிடைக்கும் ! விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் தீவின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று (02) கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன்படி, இன்று முதல் அனைத்து விவசாயிகளும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை இலவசமாக இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என …

  23. யாழில் புற்றுநோயால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததுடன் , இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தையொன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/242965

  24. நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் -துரைராசா ரவிகரன் சிறப்பு செவ்வி March 2, 2023 குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி… கேள்வி-முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பில், நில அபகரிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து இருந்தீர்கள்? இது குறித்து கருத்து கூற முடியுமா? பதில்- குருந்துார் மலையை அண்மித்த பகுதியில் நில அளவை திணைக்களமும் பிரதேச சபை செயலகமும் …

  25. தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு 02 MAR, 2023 | 09:15 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், அவர்கள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான விடயங்களை, தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக அவர்களிடம் கோரும் போது அவற்றை அவர்கள் வழங்க வேண்டும். இந்த சட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் முக்கியத்துவமான தீர்ப்பொன்றை நேற்று முன்தினம் வழங்கியது. பாராளுமன்று உறுப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.