Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தகப் பைகள் சோதனையிட்ட பின்பே பாடசாலையினுள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 11.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ருந்த மணலாறு மற்றும் பதவியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமைய பாடசாலை தொடக்க வேளையில் பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் புத்தகப் பைகள் பாடசாலை மாணவர்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்பே மாணவர்கள் வகுப்பறையினுள் செல்ல அனுமதியளிக்கும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் இன்று முதல் பாடசாலைகளில் கட…

    • 0 replies
    • 1.1k views
  2. அக்ரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி! அதிரடிப்படை அதிகாரி படுகாயம் அம்பாறை அக்கரைப்பற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதோடு சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் சிறீலங்காப் படையினரின் உந்துறுளி அணியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது வீதியால் சென்ற இளைஞன் கொல்லப்பட்டதோடு, அதிரடிப்படை அதிகாரி படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  3. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 24 replies
    • 4.9k views
  4. முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேசங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விமான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் மல்ரிபரல் பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களால் புலிகளின் பல்வேறு முகாம்கள் முற்றிலும் நாசமாக்கப்பட்டதுடன் பெருந்தொகையான புலிகள் இயக்கத்தினரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பியோடிய புலிகளில் ஒரு பகுதியினர் வன்னிக்குச் சென்றனர். அதேவேளை, வன்னிக்குத் தப்பிச்செல்ல முடியாத புலிகள் இயக்கத்தினர் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள எல்லைப்பிரதேசங்களிலுள்ள காடுகளுக்குத் தப்பியோடினர். இவ்வாறே பின்னர் மன்னார்ப் பிரதேசங்களிலுள்ள புலிகள் இயக்க முகாம்கள் …

  5. யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…

    • 7 replies
    • 1.6k views
  6. மன்னாரில் கடந்த சனவரி மாதத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 127 சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளதாகவும் 363 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனவரி மாதத்தில் மட்டும் மன்னாரில் முள்ளிக்குளம், விளாத்திக்குளம், தம்பனை கட்டுக்கரை, அடம்பன், பரப்புக்கணடல், திருக்கேதீஸ்வரம் ஆகிய களமுனைகளுடாக முன்னேற முயன்ற படைத்தரப்பினர் மீதான விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலில் இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த படைத்தரப்பு இழப்புக்களை சிறிலங்காவின் 57ஆம், 58 ஆம் படையணிகளே சந்தித்துள்ளன. sankathi

  7. விடுதலை புலிகளை இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபடவேண்டும் மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . இந்தியா ருடே பத்திரிகையின் ஆசிரியருடனான நேர்காணல் ஒன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான செய்தி வெளியிட்டுள்ளது இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீதான குற்றச்சாட்டுகள் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களிற்கான தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் . அதே வேளை விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வைத்து சமாதான பேச்சுகளில் ஈடுபடதயாரயின் அரசாங்கமும் விடுதலை புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் . விடுதலை புலிகள் ஆயுதங்கள் கீழே வைக்காவிடின் அரசாங்கமும் வ…

  8. திங்கள் 11-02-2008 10:04 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா, மன்னாரில் இருவெறு கிளைமோர் தாக்குதல்கள் இன்று காலை வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது உதவி காவல்துறை பரிசோதகர் (சப் இன்ஸ்பெற்றர்) மற்றும் ஒரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. பதிவு

    • 2 replies
    • 1.6k views
  9. ஐ.நா. பாதுகாப்புச் சபை 21ஆம் திகதி கூடுகின்றது இலங்கை நிலைபற்றி ஆராய்வு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் செயற்குழு எதிர்வரும் 21ஆம் திகதி நியூயோர்க்கில் கூடுகின்றது. இதன்போது இலங்கையின் தற்போதையை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஆயுத மோதலில் சிக்கியுள்ள சிறுவர்கள் குறித்து மேற்கொள்ளபட்ட நடவடிக்கைகள் பற்றி இதன்போது ஆராயப்படவுள்ளது. இலங்கை நிலைவரம் குறித்த விவாதம் ஆரம்பமாகும் வேளை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் உரையாற்றவுள்ளார். சட்டமா அதிபர் மற்றும் சொலிசிஸ்டர் ஜெனரல் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது ஐக்கிய நாடுகளின் இலங்கை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்க…

  10. ஜெனிவாவிலும், நியூயோர்க்கிலும் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடி கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது தலைமையிலான அரசுடன் மேற்குலக நாடுகள் சுமுகமான உறவைப் பேணு கின்றன என்றும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத் தைக் கையாளும் விடயம் தொடர்பாக இலங்கை அரச நிர்வாகத்தின் மீது மேற்குலகுக்கு பெரிய அதிருப்தி ஏதும் இல்லை என்ற சாரப்படவும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் பரிசீல னைக்கும் உரியது. எது, எப்படியென்றாலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி, அரசு தனது படைகளையும் அவற்றின் கீழ் ஒட்டுக்குழுக்களாகச் செயற்படும் துணைப் படைகளையும் இயக்கும் விதம் குறித்த விடயம் சர்வதேச மட்டத்தில் பெரும் சிரத்…

  11. இன்று காலை கொட்டாஞ்சேனையில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. வானொன்றில் சென்ற குழுவினரே இப்படுகொலையைப் புரிந்ததாக சிறீ லங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆதாரம்: Daily Mirror Man shot in Kotahena An unidentified man was shot dead in Kotahena early this morning. Police say a group travelling in a van carried out the crime.

  12. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------

  13. படைத்துறை வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற அரசியல் போராட்டங்களையும், அதனை அடக்கிய இராணுவ ஆட்சியாளர்களின் வன்முறைகளையும் தொடர்ந்து அனைத்துலக சமூகம் மியான்மார் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முயன்று வந்தன. அதன் முதற்கட்டமாக மியான்மார் நாட்டிற்கான படைத்துறை விநியோகங்களை நிறுத்திக் கொள்வது என்பது அவர்களின் தீர்மானமாக இருந்தது. மியான்மாருக்கான பிரதான ஆயுத விநியோகஸ்தராக சீனாவே இருக்கின்ற போதும் இராணுவ அரசின் மீது தமது செல்வாக்கை செலுத்தும் நோக்குடன் ஏனைய ஆசிய நாடுகளும் மியான்மாருக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுண்டு. அவற்றில் இந்தியாவும் பிரதான பங்கு வகிக்கின்றது. எனினும் கடந்த வருடம் ம…

    • 2 replies
    • 1.9k views
  14. பாலைக்குழியில் குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் பலி மன்னார் மாவட்டம் பாலைக்குழி பகுதியில் சனிக்கிழமை விடுதலை புலிகள் குறிசூட்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது சிறீலங்கா படையினர் தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

    • 2 replies
    • 1.2k views
  15. மன்னாரில் பொறிவெடியில் சிக்கி 16 படையினருக்கு மேல் அவயங்கள் இழந்தனர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பண்டிவிரிச்சான். முள்ளிக்குளம் மற்றும் விளாத்திக்குளம் மன்னார் முன்னரங்கநிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னகர முற்பட்ட படையினர் பொறிவெடிக்குள் சிக்கி தமது கால்களை இழந்துள்ளனர். இவ்வாறு பொறிவெடிக்குள் அகப்பட்டு 16 க்கு மேற்பட்ட படையினர் தமது அவயவங்களை இழந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் சிறீலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் படையணியினை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 1.1k views
  16. இடம்பெயர்ந்த மக்களை அல்லைப்பிட்டிப் பகுதியில் மீளக்குடியமர்த்துவது ஆபத்தானது என தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  17. இலங்கை முழுவதும் தற்போது பரவியுள்ள போரினால் தென்னிலங்கையில் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு கவலை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 10 replies
    • 1.3k views
  18. கட்டுநாயக்க விமான நிலைய காப்பரணில் விமானப்படை வீரர் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம் 10.02.2008 / நிருபர் எல்லாளன் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் அதி பாதுகாப்பு வலயப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீதியில் அமைந்துள்ள நிலக்காப்பரணில் கடமையாற்றிய விமானப்படை வீரரின் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கிச்சூட்டில் விமான நிலையத்தில் இயங்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இவர் கடமை முடிந்து அவ்வீதியால் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சன்னம் காலில் பட்டதால் காயமடைந்து நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி ரவை ந…

  19. இலங்கையின் மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் கடும் மோதல் இலங்கையின் வடக்கில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக படைவட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும் மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமது எதிர் தாக்குதல்களின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் இந்த மோதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பக்கசார்பற்ற தரப்புக்களில் இருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை. மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேச…

  20. தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதி சர்வதேசத்துக்கு இரட்டை வேடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2/10/2008 10:27:22 PM வீரகேசரி நாளேடு - தமிழர் விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குமேல் அழுத்தங்களை கொடுக்காது என்ற காரணத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியில் எதிர்ப்பும் உள்ளுக்குள் உறவும் என இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசின் மீதான சர்வதேசத்தின் அழுத்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குறையொன்று இருப்பதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த செவ்…

  21. புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார் 2/10/2008 10:26:45 PM வீரகேசரி நாளேடு - புலிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது ஒன்றரை மாவட்டத்துக்குள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். புலித்தீவிரவாதிகள் தமது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அவை அரசின் முக்கிய பிரமுகர்களை இலக்குவைப்பதா அல்லது பொதுமக்களை இலக்குவைப்பதா? என்ற பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகள் பலவீனமடையும்போது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான …

    • 2 replies
    • 1.2k views
  22. ஞாயிறு 10-02-2008 21:22 மணி தமிழீழம் [முகிலன்] வெடிகுண்டு தகவலையடுத்து கொழும்பு - பதுளை தொடருந்து சேவைகளை நிறுத்தம் கொழும்பு - பதுளைக்கான தொடருந்துப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் அமைந்துள்ள தலவாக்கலை தொடருந்து பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் அநாமதேய நபர் காவல்துறைத் தலையகத்திற்கு வழங்கிய தகவயடுத்தே இப்போக்குவரத்துகள் மறு அறிவிததல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது சிறீலங்காப் படையினரும், காவல்துறையினரும் தலவாக்கலையில் தொடருந்து பாதையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  23. தேசிய நிகழ்வுகள் இடம்பெறும் பொழுதும் அவசர நிலைமைகள் ஏற்படும்போதும் மக்களிடையே தேவையற்ற பீதி உருவாக்கப்படுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட காலப்பகுதியில் குறுஞ்செய்தி சேவையை (SMS) இடைநிறுத்துமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தொலைபேசிச் சேவை வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது. முக்கிய நேர அனாவசியமான மற்றும் தவறான எஸ்.எம்.எஸ்.களின் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றமும் பீதியும் உருவாக்கப்படுவதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தமது இந்த அறிவிப்பு குறித்து தொலைபேசி சேவை வழங்குனர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் இதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த நான்காம் திகதி…

  24. ­­­இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­ன­ரால் மீ­ன­வர் ­ஒ­ரு­வர் ­­சுட்­டு கொல்­லப்­பட்­ட­தை ­தொ­டர்ந்­து ­பு­துக்கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­நேற்­று ­மீ­ன­வர் ­சி­லர் ­க­ட­லுக்­கு ­மீன் ­பி­டிக்­க ­சென்­றி­ருந்­த ­போ­து இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­­னர் ­தாக்­கு­தல் ­ந­டத்­­தி­னர். இ­தில் ­தங்­க ­பாண்­டி­யன் ­என்­ற ­மீ­ன­வர் ­சுட்­டுக்கொல்­லப்­பட்­டார் . இ­ந்­த ­சம்­ப­வத்தால் பு­துக்­கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­­மே­லும் ­­ ­இ­றந்­த ­­மீ­ன­வர் ­கு­டும்­பத்­துக்­கு மு­தல்வர் ­க­ரு­ணா­நி­தி ­ஒ­ரு ­லட்­சம் ­ரூ­பாய் ­உ­த­வித்­தொ­கை ­வ­ழங்­கி­னார். ஆதாரம் தினமலர்

  25. இலங்கையில் அதிகரித்துள்ள தாக்குதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு - சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களானது பொது மக்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் சர்வதேச செஞ்சிவைச் சங்கம் கூறுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அதிகரித்த மோதல்களினால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தாம் அதிக கரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.