ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வாய் பேச்சினால் மட்டும்தான் விடுதலைபுலிகளை அடக்கமுடியும் = இன்டியா. Dialogue key to tackling LTTE menace: India http://timesofindia.indiatimes.com/India/D...how/2676223.cms
-
- 0 replies
- 3.6k views
-
-
புலிகளுக்கு தாலாட்டு பாடும் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா கண்டனம் 1/4/2008 7:22:45 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு தாலாட்டுப் பாடும் முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இன்று முன்தினம் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த உரையின்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நக்சலைட் தீவிரவாதிகள் , தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் புகுந்து வருகிறார்கள். தீவிரவாதிகளும் தமிழகத்தை தான் தலைமையிடமாக மாற்ற முயற்சிக்கிறார்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை பரப்புவதே இலங்கை அரசாங்கத்தின் வாடிக்கையாகி விட்டது வைகோ 1/3/2008 9:10:37 PM வீரகேசரி இணையம் - பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா என்ற விவகாரம் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் செய்தியில் துளியும் உண்மையில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் தமிழர்களுக்கு விரோதமாக பொய்யான செய்திகளை பரப்பி வருவதே இலங்கை அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது எனத்தெரிவித்த அவர் இலங்கை சுதந்திர தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணையை கட்…
-
- 15 replies
- 2.9k views
-
-
அமைச்சர் போகொல்லாகம -ரொஷான் நாகலிங்கம்- சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்ந்திருக்கும் என்றும் ஆனால், அதன் பாத்திரம் (ROLE) மீள வடிவமைக்கப்படுமென அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்திருப்பதானது நோர்வேயின் அனுசரணைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது என்று அர்த்தப்படாது என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் நோர்வேயின் பங்களிப்பு ஒரு கட்டமைப்புக்குள் உட்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அது வேறுபட்ட பங்களிப்பை…
-
- 1 reply
- 1.7k views
-
-
Posted on : 2008-01-05 சர்வதேசத்தையே உதாசீனப்படுத்தும் பௌத்த சிங்கள மேலாண்மைவாதம் பேரழிவுகளில் சிக்கி அவலப்பட்டு, அல்லலுற்றுத் தவிக்கும் இலங்கைத் தீவின் மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நப்பாசையுடன் காத்திருந்தனர். ஆனால் முழு அளவில் போர் வெடிப்பதற்கு வழி திறந்து விடப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்புடனேயே தை மகள் வந்திருக்கிறாள். தைப்பொங்கலின் போது புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கும். அடுத்த நாள் ஆவினத்துக்கும் அதே பொங்கல். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இம்முறை அதற்கு அடுத்தநாள் தொடக்கம் வேறு பொங்கலும் காத்திருக்கிறது. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தொடக்கம் இலங்கையில் பொங்கப் போவது போர்ப் பொங்கல். அது தினசரி தொடரப் போகின்றது என்பது பெரும்பாலும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு யூனியன் பிளேஸில் நேற்றுமாலை குண்டுப் புரளி கொழும்பு யூனியன் பிளேஸ், யுப்லிஹோலுக்கும், "ஜெய்ஹில்டன்' ஐந்து நட்சத்திர விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமாலை நின்ற வான் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலொன்றையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன. அந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் யூனியன் பிளேஸ் பிரதான வீதியைத் தடை செய்து, குறித்த வானை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தனர். அந்த வானுக்குள் குண்டு எதுவும் காணப்படவில்லை. அத்தகைய தகவல் வெறும் குண்டுப்புரளி எனத் தெரியவந்தது. இந்தக் குண்டுப் புரளியினால் அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதனால் மாலையில் தமது கடமைகளை…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியமை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் இப்படிக் கூறுகிறார் ரவூப் ஹக்கீம் [saturday January 05 2008 05:52:27 AM GMT] [யாழினி] போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் விலகிக் கொள்வது என்பது சர்வதேச சமூகத்தின் மத்தியில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துகின்ற விடயமாக மாறிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம். போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிக் கொள்வது தொடர்பாக "பி.பி.ஸி" செய்திச் சேவைக்குப் பல முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்திருந்தனர். அதன்போ…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிறீலங்கா அரசின் போர்நிறுத்த ஒப்பந்த இரத்துக்கு நூர்டிக் நாடுகள் விசனம் [saturday January 05 2008 05:46:03 AM GMT] [யாழினி] நோர்வே,சுவீடன்,டென்மார்க்,பி
-
- 1 reply
- 1.1k views
-
-
பயங்கரவாத அரசின் ஏவல் நாய்களினால் கொன்றொழிக்கப்பட்ட அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களுடன் அவரது வெள்ளவத்தை இல்லத்திலிருந்து கொழும்பு கனத்தை பொது மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.. இவ்வூர்வலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பல மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்களும் அவரது உடலம் தாங்கிய பேழையுடன ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்து. வெட்கம் போன்ற பாதாதைகளைத் தாங்கியவண்ணமும். இன்னும் சிலர் தமது வாய்களைக் கருப்புத் துணியால் கட்டியபடியும் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் ஊர்வலம் அமரர் ரவிராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவிற்குக் கொண்டுவருவதாயுள்ளது. கனத்தை பொது மயனத்திலும் பெ…
-
- 4 replies
- 3.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதனை தான் எதிர்ப்பதாக சிறிலங்காவின் ஆளும் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.9k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா ஏன் முறிக்கிறது? -எரிமலை- சிறிலங்கா அமைச்சரவையில் ஏகமனதாக எடுக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவது என்ற தீர்மானமானது சிறிலங்காவிற்கான நோர்வேத் தூதுவர் தூர காற்றமிற்கு இரவு 8.30 மணியளவில் அமைச்சரவையில் பங்குபற்றிய ஒருவரால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியானது நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் பேச்சுவார்த்தைக்கான நோர்வே அனுசரணையாளர் குழுத்தலைவருமான எரிக் சொல்கெய்மிற்கு உடனடியாகவே அறிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்கள்; இந்த விடயத்தினை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. சிறிலங்கா அமைச்சரவை இன்று மாலை நடாத்திய கூட்டத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்ள முடிவ…
-
- 5 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக விலகிக்கொண்டது கவலை தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீன் மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ். காரைநகரிலிருந்து யாழ். நகர் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை காலை பயணிகளுடன் சென்ற தனியார் சிற்றூந்து பொன்னாலைக் கடலுக்கு பாய்ந்ததால் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
தென் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பும் இந்தியா [04 - January - 2008] விடுதலைப் புலிகளின் தரைவழி, வான்மார்க்க தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய ஆயுதப் படைகள் தென்பிராந்தியக் குடாவில் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இந்த வருட முற்பகுதியில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக யூ.பி.ஐ. செய்தி சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. `இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தரைவழியிலும் வான்மார்க்கமாகவும் தாக்குதல்களை முன்னெடுத்ததால் அச்சுறுத்தல் உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது. அதனால் அடுத்தவருட முற்பகுதியில் தெற்குக் குடாவில் தொடர்ச்சியாக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்தியா…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவமளிக்கும், ஒற்றையாட்சியை பின்பற்றும் நாடாக விளங்க வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. குறிப்பிட்ட குழுவினால் விரைந்து முன்வைக்கப்படவுள்ள யோசனைகளில் இந்த விடயமே வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இலங்கை ஒரு சமஷ்டி நாடாக மாற்றம் பெற வேண்டும் என்ற தமிழா தரப்புக் கோரிக்கைளை ஏற்றுக் கொள்வதில்லை என் அனைத்துக் கட்சி பிரதிநிதகள் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாக விளங்கும். பிளவுபடாத இணைக்கப்பட்டட ஒன்றிலொன்று தங்கியிருக்கும் கட்டமைப்புகளை கொண்டிருக்கும் அதே வேளை, அதிகாரம் கொழும்பிற்கும் மாகாணங்களுக்கும் இடையிலும் மாகாணங்களுக்கும் உள்ளேயும் பகிரப்படும்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளி 04-01-2008 18:58 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவரீதியிலான தீர்வா? இந்தியா சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, சிறீலங்காவின் தேசிய பிரச்னைக்கு இராணுவரீதியில் தீர்வைக் காண முடியாது என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணவ் முகர்ஜி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு அதிகாரத்தை பராதீனப்படுத்துவதற்கும், பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கும் இந்தியா தனது ஒத்துழைப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதிபர் மகிந்த ராஜபக்சவால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை மிக விரைவில் முன் வைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரணவ் …
-
- 4 replies
- 1.9k views
-
-
ஒப்பந்தம் முடிவுற்றாலும் ஓமந்தை பாதை ஊடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவிப்பு 1/4/2008 9:10:50 PM வீரகேசரி இணையம் - போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதும் ஓமந்தையூடான வன்னிக்கான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பதில் பேச்சாளர் தெரிவித்தார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த பதில் பேச்சாளர், ஓமந்தையூடாக வன்னிக்கான போக்குவரத்து வழமைபோல இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக, இரு தரப்பும் எமது பணிப்பாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர். பணியாளர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும் போது மாத்திரமே ஐ…
-
- 1 reply
- 976 views
-
-
வியாழன் 03-01-2008 23:06 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள். சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர…
-
- 3 replies
- 2.5k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் காயம்- 2 பேரின் நிலை கவலைக்கிடம் [Friday January 04 2008 03:46:17 PM GMT] [யாழினி] முல்லைத்தீவு அளம்பில் உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் செறிவாக நடத்திய குண்டுவீச்சில் 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அளம்பில் பகுதி உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் 4 குண்டுகளை வீசின. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை காலை வெளிநாட்டிலிருந்து கொழும்பு திரும்பிய மேலக மக்கள் முன்னணியின், தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றிரவே மீண்டும் வெளிநாடு பயணமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் விளக்கத்திற்குப் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா விலகியமை குறித்த எரிக் சொல்ஹெய்மின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் குரல்கள் நிறுத்தப்படுகின்றன - புலித்தேவன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அரசியல்வாதிகளின் குரல்களை சிறீலங்கா அரசாங்கம் நிறுத்தி வருகின்றது என விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலையை அடுத்தே இவர் இக்கருத்தினை நேற்று தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினையைத் தீர்பதற்கான அனைத்து வழிகளையும் மூடி கொலைக்கலாச்சாரத்தையும் முன்னேடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒரு பயங்ககரவாத நடவடிக்கையாக அமைந்துள்ளது என புலித்தேவன் மேலும் தெரிவித்துள்ளார். h…
-
- 0 replies
- 881 views
-
-
Tiger ambush kills STF officer, 2 bodyguards in Ampaa'rai [TamilNet, Friday, 04 January 2008, 12:41 GMT] Liberation Tigers of Tamileelam officials in Ampaa'rai said a Sri Lankan Special Task Force officer and his two bodyguards were killed in an ambush on their vehicle 15 km west of Poththuvil in Ampaa'rai Friday around 3:00 p.m. Two STF personnel were also wounded in the ambush, according to P. Kaviyarasan, LTTE's political head in Ampaa'rai district. அம்பாறை மாவட்டத்தில் 15 கி.மீ மேற்காக உள்ள பொத்துவில் என்ற இடத்தில் கண்னிவெடி தாக்குதலில் எஸ்.ரி.எவ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது இரு மெய்பாதுகாலாளிகள் கொல்லப்பட இரு எஸ்.ரி.எவ் காயமும் அடைத்துள்ளார்கள். இச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜ.நாவின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நியமிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம் 1/4/2008 1:51:47 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை கண்காணிப்பு குழுவினை நிறுவ வேண்டுமென நியுயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எனவே நோர்வே போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இலங்கையிலிருந்து வெளியேறுவர் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் மனித உரிமை மீறல்கள் , துஷ்பிரயோகங்களை கண்காணிப்பு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவ் நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது . …
-
- 3 replies
- 1.1k views
-
-
உடனடியாக புலிகளை தடைசெய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை [04 - January - 2008] [Font Size - A - A - A] * திட்டமிட்டபடி தீர்வு முயற்சி முன்னெடுப்பு; அமைச்சர் யாப்பா -எம்.ஏ.எம்.நிலாம்- போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக்கொள்வதால் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு எந்தவிதமான தடையும் ஏற்படப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்யும் முடிவேதுவும் உடனடியாக மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்குக் கிடையாதெனவும் சுட்டிக்காட்டியது. சர்வகட்சி மாநாடு தெரிவிக்கும் சிபாரிசுகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அரசு அறிவித்தது. அமைச்சரைவைத் தீர்மானங்களை அறிவிக்கும் …
-
- 1 reply
- 981 views
-