ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித் தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும் தாம் தீர்ப்பளித்ததை மாற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
வெளிநாட்டிலிருந்து வந்த மூன்றுபேரைக் காணோம் சவூதி, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இம்மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்புக்கு வந்த மன்னார் முருங்கனைச் சேர்ந்த 3 தமிழ் இளைஞர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முருங்கன் நகரப்பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜோன்சன் (வயது 22) என்ற இளைஞன் கடந்த முதலாம் திகதி மலேசியாவிலிருந்து வந்தவர் என்றும் முருங்கன், செம்மண் தீவுப் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுரேந்திரன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் கடந்த 2ஆம் திகதி சவூதியிலிருந்து வந்தவர் என்றும் முருங்கன், சுண்டிக்குளிப்பகுதியைச் சேர்ந்த மாதா அடிமை கிறிஸ்தோப்பர் (வயது 34) என்ற குடும்பஸ்தரும் கடந்த 2 ஆம் திகதி சவூதியிலிருந்து வந்தவர் என்றும் அவர்கள…
-
- 0 replies
- 2k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையால் போலியாக கத்தி உரக்கப்பேசுகின்றார். இவ்வாறு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக சபையில் உரையாற்றிய மகேஸ்வரன் தமிழர்கள் கைது விவகாரம் தொடர்பாக இந்த சபையில் பேசினால் அமைச்சர்கள் ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பதிலளிக்கின்றனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பதில் எங்களுக்கு தேவையில்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதை, எங்கள் முறைப்பாட்டை ஜனாதிபதியோ, அமைச்சர்களோ கேட்பதில்லை எ…
-
- 12 replies
- 3.5k views
-
-
இலங்கை அரசு புலிகளைத் தோல்வியடையச் செய்து நசுக்கி வருகின்ற காரணத்தால், சர்வதேச ரீதியில் அரசின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அரசுக்கு எதிராக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய வேளையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது புலிகளின் பயங்கரவாதம் அதிகரித்துக்கொண்டு போகின்றது. நுகேகொடையிலும், கெப்பற்றிக் கொல்லாவையிலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
கொழும்பு, கெப்பிட்டிகொல்லாவ, கிளிநொச்சி என நாட்டில் இடம் பெறும் சகல குண்டு வெடிப்புகளுக்கான பொறுப்பை ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ் சாட்டினார். ஏனெனில், தொடர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் . அரசியல; ரீதியான தீர்வு கூடாது என இவர்களே அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாததில், பாதுகாப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது.: - கொழும்பிலும், கிளிநொச்சியிலும் இடம் பெறும் குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் வைத்தே புலிகளை அரசாங்கம் முற்றாக அழிக்கும்அமைச்சரவையின் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகிறார் வீரகேசரி நாளேடு வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனி÷மலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். போர்நிறுத்த காண்கானிப்புக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அத்துடன், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை விரைவில் முன்வைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும…
-
- 4 replies
- 1.7k views
-
-
கெப்பிட்டிகொல்லாவப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
வரலாறாய் வாழும் தமிழச்செல்வன். அன்பு உறவுகளே, அண்மையில் வீரச்சாவைத் தழுவவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களைப்பற்றி "விடுதலைப்புலிகள்" பத்திரிக்்கையில் வெளியான கட்டுரையின் இணைப்பை இங்கே தந்துள்ளேன். http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-08.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-09.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-10.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-11.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-07.pdf நன்றி மறவன்
-
- 3 replies
- 2.3k views
-
-
தங்களது சாவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று இராணுவத்தினர் தம்மிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல்கள் நடத்துவதைக் கண்டித்து வன்னியில் மருத்துவப் பணியாளர்கள் பாரிய போராட்டத்தை நேற்று நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 792 views
-
-
வெள்ளி 07-12-2007 01:46 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களில், வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் - வவுனியா களமுனைகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், மேஜர் சிவதர்சன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கனகராசா கோபிநாத், கப்டன் புரட்சித்தேவன் என்றழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை சேர்நத் டெனிபாஸ் ஜீவானந்தம் ஆகிய போராளிகள் களப்பலியாகினர். மறுநாள் திங்கட்கிழமை, மன்னார் தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்.கேணல் வரதன் அல்லது சாமி அல்லது றொனி என்றழைக்கப்படும், திரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளி 07-12-2007 01:26 மணி தமிழீழம் [சிறீதரன்] பாடசாலை மாணவியை காணவில்லை : மூவர் மனித உரிமைகள் ஆணையகத்தில் சரண் சங்கானை ஆரம்ப பாடசாலையை சேர்ந்த 10 வயது சிறுமியை செவ்வாய்கிழமை பாடசாலைக்கு சென்றபின் வீடுதிரும்பவில்லை என யாழ் மனிதஉரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல்போன 10 அகவையுடைய சிறுமி பாக்கியராசா பிரதீபா எனவும் நான்காம் வகுப்புபில் சங்கானை இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்றுவருவதாகவும் தெரியவருகிறது. இதேவேளை மூன்று குடும்ப உறுப்பினர்கள் யாழில் பல்வேறுபகுதிகளில் இருந்து சிறீலங்கா படைகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து மனித உரிமைகள் ஆணையகத்தில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. வியாழக்கிழமை மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்தவர்கள் 26…
-
- 0 replies
- 824 views
-
-
வெள்ளி 07-12-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] வற்றாப்பளை மக்கள்குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்அகோர குண்டுத் தாக்குதல்;களில் பயன்தருமரங்களும் பொதுமக்களது மக்கள் குடியிருப்புகளும் அழிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 915 views
-
-
வெள்ளி 07-12-2007 00:39 மணி தமிழீழம் [சிறீதரன்] திருகோணமலை புத்த சிலைக்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவீரம் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து திருகோணமலை பேரூந்து நிலையத்தில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த புத்தர்சிலைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புத்தர்சிலை அமைந்துள்ள வீதி பொதுமக்கள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளதாகவும் இரவுநேரத்தில் மேலதிக காவல்துறையினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 770 views
-
-
தனியரசே முற்றுப்புள்ளி -வேலவன்- 'புலிகளின் குரல்" வானொலி நிறுவனம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலானது ஒரு 'போர்குற்றம்" என எல்லைகளற்ற ஊடக அமைப்புக் கூறியிருக்கின்றது. எவ்வித முன்னெச்சரிக்கையுமற்று இவ்வாறு ஒரு ஊடக நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது இன்று உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையிலுள்ள ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இந்தத் தாக்குதல் குறித்துச் சிறிலங்கா அரசாங்கம் எந்த விளக்கத்தையும் கொடுக்கலாம். அதனைச் சர்வதேசம் மௌனமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எதனைச் சாதிக்க முயன்றார்களோ அதனை அவர்களால் செய்துவிட முடியவில்லை. அதாவது தமிழ்மக்களின் விடுதலைப் போ…
-
- 2 replies
- 1.9k views
-
-
By Ranga Sirilal COLOMBO (Reuters) - Twenty-nine Tamil Tiger rebels and seven soldiers were killed in fighting in Sri Lanka's north on Wednesday, the military said. The clashes, in the northwestern district of Mannar, northern district of Vavuniya and northern Jaffna peninsula, were the latest engagements in a renewed civil war that has seen near daily air raids, bombings and land and sea battles in recent months. "Two confrontations in Mannar killed 13 terrorists and another two different attacks in Vavuniya and Jaffna killed 16 more terrorists," said a spokesman at the Media Centre for National Security. The military said a Tamil Tiger rebel attack o…
-
- 5 replies
- 1.7k views
-
-
வியாழன் 06-12-2007 05:55 மணி தமிழீழம் [சிறீதரன்] மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் போராத்தில் குதிப்பர் - யாழ் மாணவர் ஒன்றியம் அரசு தனது செயற்பாடுகளை தொடர்ந்த தீவிரத்தினைப் பின்பற்றுவார்களானால் ஒட்டு மொத்த மக்களும் உயிரை துச்சமென மதித்து அரசுக்கும் அதன் இயந்திரத்திற்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்வதற்கான காலம் தொலைவில் இருக்கப் போவதில்லை என யாழ் மாவட்ட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று புதன்கிழை விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... 05-12-2007 யாழ் மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் உயிரை வெறுத்து போராத்தைக் குதிக்கும் சூழல் மிக விரைவில் உருவாகும் கட்ட…
-
- 0 replies
- 773 views
-
-
புவி வெப்பமடைவதால் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் [06 - December - 2007 பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதல் அதி பயங்கரமான விடயமென தெரிவித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எதிர்காலத்தில் நீர்கொழும்பு நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட, குழுநிலை விவாவதத்தில் மேலும் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதல் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தைவிட புவி வெப்பமடைதலே அதி பயங்கரமானது. புவி வெப்பமடைதலைத் தடுக்க சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் அவசியமாகும். இவை ஒருபுறமிருக்க அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும். புவி வெப்பமடைதலினால் பல நகரங்கள் கடலில் மூழ்கு…
-
- 6 replies
- 2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரால் நவம்பர் மாதம் மட்டும் 73 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களிடையேயான மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2007-12-06 அப்பாவிகள் என நிரூபிக்கப்படும்வரை தமிழர்கள் இங்கு பயங்கரவாதிகளே! "பிரஜை ஒவ்வொருவரும் அவர் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்பது ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படும்வரை அப்பாவியாகவே கருதப்படவேண்டும்' என்பதுதான் பொதுவான சட்டவிதி; ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமை; இயற்கை நீதி. ஆனால் தலைநகர் கொழும்பிலும் புற நகரங்களிலும் தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் ஆட்கள் கைது செய்யப்படுவதையும், அரசு "பயங்கரவாதிகள்' எனக் குறிப்பிடும் விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை இவ்வாறு கைது செய்யப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும் நோக்கும்போது தமிழர் விவகாரத்தில் மட்டும் மேற்ப…
-
- 1 reply
- 756 views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக கனடா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்த நாட்டிலிருந்து வெளிவரும் "நேசனல் போஸ்ட்" என்ற நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 986 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கும் எண்ணம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க புதினம்
-
- 1 reply
- 1.1k views
-
-
திங்கள் 03-12-2007 19:48 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் குரல் தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ கண்டனம் புலிகளின்குரல் வானொலி சிறீலங்கா வான் படையினரால் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகக் கரைத்துரைத்த யுனெஸ்கோ அமைப்பின் இயக்குனர் கொயிச்சீரோ மட்சூறா, பொதுமக்கள் மீதான சிறீலங்காப் படையினரின் தாக்குதலை மன்னிக்க முடியாது எனவும், புலிகளின்குரல் வானொலி மீதான தாக்குதலையும், அதன் பணியாளர்கள் கொல்லப்பட்டதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 8 replies
- 2.7k views
-