ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
செவ்வாய் 08-01-2008 15:34 மணி தமிழீழம் [தாயகன்] மருதானையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம் கொழும்பு மருதானையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மருதானை தொழில்நுட்ப சந்தியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இது பாதாள உலகக்குழு மோதலாக இருப்பலாம் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்களினால் பூநகரிப் பிரதேச நடமாடும் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 941 views
-
-
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபீக் ரஜாப்டீன் பதவி பிரமாணம் 1/8/2008 1:27:39 PM வீரகேசரி இணையம் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் பாராளும்னற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின், இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று காலை கூடியபோது சபீக் ரஜாப்டீன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொண்டதன் பின்னர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
Posted on : 2008-01-08 வலைப்பொறி விரித்தமையை ஒப்புக்கொள்கின்றார் ரணில் ""சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், விக்கிரமசிங்க அரசு விரித்துவைத்த அரசு வலைப்பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. அதேவேளை, சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டோம்.' நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் பற்றிய தமது மதிப்பாய்வின் முடிவிலே இவ்வாறு குறிப்ப…
-
- 8 replies
- 3.8k views
-
-
06.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....e599c2a9c9d0bbd
-
- 2 replies
- 1.9k views
-
-
கம்பகா மாவட்டத்தில் உள்ள யா-எலப் பகுதியில் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவின் அமைச்சர் டி.எம் தசநாயக்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.எம் தசநாயக்க தனது தொடரணியில் சென்றவேளை இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்போது அமைச்சருக்கும் சிறிய காயமேற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. செய்தி ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்
-
- 34 replies
- 8.3k views
-
-
கொழும்பு கொம்பனித் தெருவில் கடந்த வாரம் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கு முன்னா அப்பகுதியில் நடமாடித் திரிந்த சந்தேத்துக்குரிய பெண் ஒருவர் தொடர்பாக பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மேற்படி கிளைமோர் தாக்குதலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்று குறித்து பொலிஸார் துருவி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 39 பேரிடம் இதுவரை வாக்கு மூலம் பெறப்பட்டது என்றும் மூன்று பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர விpசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நன்றி சுடர் ஒளி
-
- 1 reply
- 2.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயற்பட துணை இராணுவக் குழுக்கள் முயற்சித்த போதும் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து அங்குள்ள துணை இராணுவக்குழுக்கள் இரண்டாகப் பிளந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைக்கான பாதையை சாள்ஸ் போட்டுச் சென்றுள்ளான் - ச.பொட்டு விடுதலைப் பேராட்ட வரலாற்றில் பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர் கேணல் சாள்ஸ் என தமிழீழ புலனாய்வுப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது... சாள்ஸ் இன்று எம்மை விட்டு மறைந்துவிட்டார் நிலையில் தமிழீழத்திற்கான வரலாற்றிலே, சாள்ஸ் எவ்வாறு நினைவு கூரப்படுவார். அல்லது எவ்வாறு நினைவு கூரப்படுவதற்கு பொருத்தமானவனாவான், தமிழீழம் எவ்வாறு அவனை நினைவு கொள்ளும் என்ற எண்ணம், கேள்வி என்முன்னே எழுந்து நிற்கிறது. எனது மனதில் எ…
-
- 2 replies
- 2.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....677c739ee173448 புத்தாண்டும் போராண்டும் - அவசிய அறிக்கை 16 04.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 2k views
-
-
மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ் |ஆக்கம்: வா.கி.குமார் திங்கள், 07 ஜனவரி 2008 17:15 இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்
-
- 17 replies
- 7.4k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் ஒப்பந்தங்களும் முடிவுகளும் நடைமுறையில் இல்லாத போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசுவிலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைமும் ஐ.நா அதிபர் பாங்கிமூன் ஐயாவும் கவலைப்படுகின்றனர். மேலும் சில நாடுகள் வருத்தத்தை தெரிவித்துள்ளன. இந்த நிலைமையானது தமிழர்கள் அதிகளவு கொல்லப்படும் போது தெரிவிக்கும் கவலைகளுக்கு ஒப்பானது. கவலை தெரிவிப்பது, கண்டனம் செய்வது, நடவடிக்கை எடுப்பது என்ற ஒழுங்கில் இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான புரிந்துணர்வு கவலைகளை பரிமாறுவதிலேயே தான் இன்னமும் உள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகாமலேயே யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியவண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான …
-
- 3 replies
- 4.9k views
-
-
படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வு மட்டக்களப்பிலிருந்து சிறீலங்காப் படையினர் வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாக மட்டக்களப்பு குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்காச் சிறப்பு அதிரடிப்படையினர் வட பகுதி நோக்கி நகர்த்தப்படுகின்றனர். இதனால் மட்டக்களப்பில் உள்ள பாதுகாப்பு சிவில் அலுவலகர்கள் மற்றும் சாதாரண காவல்துறையினருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைகள் வழங்கப்பட்டு, சிறப்பு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ள தோற்றப்பாட்டை சிறீலங்கா படையினர் ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழுவின் நடமாட்டங்களும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்…
-
- 5 replies
- 2k views
-
-
திங்கள் 07-01-2008 20:03 மணி தமிழீழம் [தாயகன்] யாழ், மணலாறு, வவுனியாவில் நேரடி மோதல்கள் யாழ் முகமாலை, வவுனியா நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 அளவில் முகமாலையிலும், 8.00 மணியளவில் நாவற்குளத்திலும் இரு தரப்பிற்கும் இடையில் திடீர் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இதேவேளை, மணலாற்றிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
தொடர் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்குவதே சிறிலங்காப் படையினரின் உத்தி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். முகமாலை முன்னரங்க நிலைகள் ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து படையினரை அவர்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 918 views
-
-
மன்னார் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் சாள்சின் வித்துடல் இன்று தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் ஆகியோர் விடை கொடுக்க முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
02.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....85ca5b5690ee529
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்தம் வகிக்க மலேசியா தயார் [07 - January - 2008] ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய மலேசியா தயாராகின்றது. ஏற்கனவே, பொஸ்னியா ஹரசக்கொவின்னா, முன்னாள் யூகோசிலாவியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் செய்த நீண்ட கால அனுபவம் மலேசியாவுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் ஓர் சில நாடுகளின் பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறியதையடுத்து, உயிரிழப்புகள் பாரிய அளவில் அதிகரிக்கல…
-
- 8 replies
- 2.5k views
-
-
போர் நிறுத்தத்தை நிராகரித்து அரசு சர்வதேச வெறுப்பைத் தேடியுள்ளது கடுமையாகக் கண்டிக்கிறது ஐ.தே.க போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பொறுப்பை ஒருதலைப்பட்சமாகத் தனது தோளில் போட்டுக்கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு எஞ்சியிருப்பது சர்வதேச வெறுப்பாகும். இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசின் முடிவை கடும் விசனத்துடன் கண்டித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஐ.தே.கட்சி நேற்று விடுத்த விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 3.7k views
-
-
சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு -விதுரன்- போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும் ஆபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக…
-
- 0 replies
- 2.6k views
-