ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை! பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இணைத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வவிசாரணை இன்று ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்திற்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://athavannews.com/2023/1324176
-
- 2 replies
- 685 views
-
-
பாதுகாப்பு சம்பவம் ஒன்றை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இந்தியாவிற்கான விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலையம் (ஐவிஎஸ் கொழும்பு) காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, விசா விண்ணப்பங்கள் தொடர்பில் திகதிகளை பெற்றிருந்த விண்ணப்பதாரிகள் மீண்டும் புதிய திகதிகளை பெற்றுக்கொள்வதற்காக ஐவிஎஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளவேண்டும். அவசர விசா அல்லது தூதரக தேவைகள் உடையவர்கள் தொலைபேசி மூலம் இந்திய உயர்ஸ்தானிகரலாயத்தை தொடர்புகொள்ள முடியும். இதேவேளை, கொழும்பில் அமைந்துள்ள இந்திய வீசா நிறுவனத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலையத்தில் காணப்பட்ட மடிக்கணனி உள்…
-
- 0 replies
- 316 views
-
-
மன்னாரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ்வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் பல முக்கிய அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பக்தர்கள் நீராடும் பாலாவி குளத்தில் முதலைகள் இருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதால் இக்குளத்தை பரிசோதனை செய்து, பக்தர்கள் அச்சமின்றி நீராட வழிவகுக்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு இலாகா பகுதியினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலய மண்ட…
-
- 0 replies
- 309 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) பணம் இல்லை என தெரிவித்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்த தேர்தலும் இடம்பெறாது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கக்கூடாது என சுதந்திர மக்கள் கூட்டணியின் செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்திருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேரதலை பிற்போடுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. என்றாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது தேர்தல் செலவுக்கு பணம் வழங்குவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 415 views
-
-
மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் : வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக விஜயம் சென்ற டக்ளஸ் உறுதி Published By: Vishnu 15 Feb, 2023 | 12:24 PM வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம், எனவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்க…
-
- 1 reply
- 681 views
-
-
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி அடங்கிய குழுவினர் இலங்கைக்கு !! அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. https://athavannews.com/2023/1324134
-
- 2 replies
- 478 views
- 1 follower
-
-
அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு! மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -(3) http://www.samakalam.com/அம்…
-
- 8 replies
- 810 views
-
-
”13 தொடர்பில் நல்ல செய்தி வெகுவிரைவில் வெளியாகும்”: அண்ணாமலை இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல நல்ல செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 13 ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமரின் தனிப்பட்ட ஆர்வத்துடன் கூடிய பொறுப்பான திட்டமிடலால் மட்டுமே, இலங்…
-
- 0 replies
- 626 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை இரத்து செய்வோம் – தேசிய மக்கள் சக்தி 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் தமது அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக அக்கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். பொது மக்களுடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கு எந்தவிதமான நிதிச் சிக்கல்களும் இல்லாத இந்த நிலையில் அ…
-
- 0 replies
- 308 views
-
-
இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் மிலிந்த மொராகொட Published By: RAJEEBAN 15 FEB, 2023 | 09:32 AM சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிற்கு எடுத்துரைத்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 2021 நவம்பர் முதல் இந்திய நிதியமைச்சரை தொடர்ச்சியாக சந்தித்து வரும் மிலிந்த மொராகொட அந்த சந்திப்பின் ஒருபகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தியா இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிக்காக மீ…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா ஆகியன கூட்டிணைந்து நடாத்தவுள்ள கடன்கள் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்பு Published By: VISHNU 14 FEB, 2023 | 02:27 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இந்தியா என்பன கூட்டிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தவுள்ள கடன்கள் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளது. நிகழ்நிலை முறைமையில் நடைபெறவுள்ள இந்த வட்டமேசை மாநாட்டில் தற்போது கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற மற்றும் ஜி-20 அமைப்பின் பொதுச்செயற்திட்டத்தின்கீழ் அதற்கான தீர்வினைக் கோரியிருக்கின்ற இலங்கைக்கு மேலதிகமாக எதியோப்பியா, ஸாம்பியா, கானா, சூரிநேம் மற…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
தடையற்ற சுகாதார சேவைக்காக 38 மில்லியனை வழங்கும் ஜப்பான் Published By: DIGITAL DESK 5 14 FEB, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) சுகாதார சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 38 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்தி இலங்கையில் சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் விநியோகத் தொகுதியை மேம்படுத்துவதற்காக ஜப்பான், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிதி வழங்கப்படவுள்ளது. தற்போது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் பொருளாதார மற்று…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆள முடியாது - பந்துல Published By: VISHNU 14 FEB, 2023 | 12:59 PM (எம்.மனோசித்ரா) கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்டுவதற்கே முயற்சிக்கின்றோம். சீனா அதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறன்றி நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகைய…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக 10 கிலோ அரிசி ; அரசாங்கம் அறிவிப்பு Published By: T. SARANYA 14 FEB, 2023 | 12:52 PM (எம்.மனோசித்ரா) குறைந்த வருமானம் பெறும் , உணவு பாதுகாப்பற்ற நிலைமையிலுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற போத…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
க.விஜயரெத்தினம் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க மட்டக்களப்பு - தொப்பிகலயில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியிலேயே இந்த சட்டவிரோத மின்வேலி இடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். எனி…
-
- 0 replies
- 824 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் இல்லாவிடின் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத…
-
- 0 replies
- 195 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு !!! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. https://athavannews.com/2023/1324067
-
- 3 replies
- 842 views
-
-
கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்! Published By: DIGITAL DESK 5 14 FEB, 2023 | 09:37 AM இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேன்கொண்டிருந்தார். கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்…
-
- 0 replies
- 683 views
- 1 follower
-
-
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி உறுதியளிக்கவில்லை – சாகர காரியவசம் 13 ஆவது திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே முழுமையான ஆதரவு வழங்குவோம் என்பதனால் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியால் தனித்து எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார். அதற்கு மூன்றில…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பிணை! தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ, சரோஜா, பந்துல மற்றும் அஜித் ஆகிய 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 23 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 04 பிரதிவாதிகளுக்கு எதி…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை செய்யப்படவுள்ளன. https://athavannews.com/2023/1324055
-
- 0 replies
- 278 views
-
-
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்டார் எனக் கூறப்படும் இளைஞர் மற்றும் பெண் ஆகியோரை ட்ரோன் , நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரினுக்கு (40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இன்று (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படும் முஹமட் ஹனீபா அர்சாத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை அளவிடம் இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் …
-
- 4 replies
- 839 views
-
-
மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது. …
-
- 0 replies
- 502 views
-
-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை வாழ் பெற்றோர்கள், சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கல்முனை மாநகர மேயர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகு…
-
- 0 replies
- 253 views
-
-
நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாடு முழுவதும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் மரக்கறிகளை அறுவடை செய்தனர். அதன்படி இராணுவப் பண்ணைகளில் இரு…
-
- 9 replies
- 617 views
-