ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142811 topics in this forum
-
சிறிலங்கா வான் படையினரால் 02.11.07 அன்று குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் படுகொலையினைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_12.html
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
வெள்ளி 16-11-2007 11:34 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னி முறிகண்டிப்பகுதியில் பகுதியில் வான்வழித்தாக்குதல் இன்று காலை 6.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் வன்னி முறிகண்டிப்பகுதியில் மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பில் ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.5k views
-
-
'பிரபாகரன் தனது உரையில் தமிழீழப் பிரகடனம் பற்றி அறிவிப்பார் என்றும் அதை சர்வதேச சமூகம் ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது', என அவர் மேலும் கூறினார். நாடாளுமனறின் நேற்று இடம் பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சரத் ரணவக்க, இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு :- புலிகள் தொடர்ந்தும் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கான பாரிய தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடலாம். தமிழ்ச்செல்வனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழீழத்தை உடனடியாக நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கு கூறுகின்றனர். இங்கு உரை நிகழ்த்திய மாவைசேனாதிராஜாவும் அதையே வலியுறுத்தினர். ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
வியாழன் 15-11-2007 18:22 மணி தமிழீழம் [தாயகன்] மகேஸ்வரனும் கட்சி தாவுவார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனும் மகிந்த அரசுடன் இணைந்துகொள்ள இரு;பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுடன், மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்றூப் ஆகியோரும் அரசுடன் இணைந்துகொள்வார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் மூவரும் இன்று சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். pathivu.com
-
- 11 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் இன்று பொதுமக்களிடம் கையெழுத்து சேகரித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரார்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது! -நக்கீரன் (கனடா)- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார். உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0ed65aaa29c04b1
-
- 1 reply
- 2.2k views
-
-
தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் குடும்பத்தாருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் தேசத்துரோகிகள் என்று தமிழகத்தின் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" (16.11.07) இல் அளிக்கப்பட்டுள்ள பதில்: தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னுதாரணம் காட்டி இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலும் தன்னாதிக்க ஆட்சி உலகில் அதிசயமல்ல! சிதறுண்ட யூகோசிலாவியா இலங்கைக்கு உணர்த்தும் பாடம் ஏறத்தாழ இரண்டு லட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் கொண்டிருந்த ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. பெல்கிரேட் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த யூகோசிலாவியாவே அந்த நாடு. பல்லின மொழிகளையும் மதங்களையும் கொண்டிருந்த யூகோசிலாவியா ஒரு சோசலிசக் குடிரசாக விளங்கியது. அமெரிக்காவின் சூழ்ச்சியினால் தங்களுக்குள் வேறுபட்டு ஐந்து நாடுகளாகி 2006ஆம் ஆண்டு ஆறாவது நாடும் உருவெடுத்துவிட்டது. மேலும் ஏழு,எட்டு என்ற நிலையில் பிரிவினையை எதிர்நோக்கியுள்ளது. பல லட்சம் மக்கள் இப்பிரிவினையின்போது கொல்…
-
- 0 replies
- 2k views
-
-
"ஒரு கருவூலம் கருகிவிட்டது" என்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தமிழகக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 999 views
-
-
விதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் திராவிடர் இயக்க இதழான "அறிவுக்கொடி" தலையங்கம் எழுதியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
'தமிழ்ச்செல்வனைக் கொன்றது போல பிரபாகரனைக் கொன்றொழித்தாலும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டடம் தடையின்றித் தொடரும். தமிழ் மக்கனின் இந்தப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. இது தமிழர்களை அழிவிலிருந்து மீட்கும் விடுதலைப் போராட்டம். இப்போராட்டம் ஒரு போதும் ஓயாது. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் :- மஹிந்த தனது வரவு செலவுத் திட்ட உரையின் முதல் பகுதியிலேயே பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லையென கூறிப்பிட்டுள்ளார். எல்லாப் போரட்டங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 753 views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, "ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.5k views
-
-
தெற்கு சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க விரும்பவில்லைஆளும் தரப்புக்கு மாறிய மஹிந்த ரட்ணதிலக எம்.பி. கூறுகிறார் தெற்கில் பிறந்த சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க நான் விரும்பவில்லை. வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் வெற்றிபெறும் என அரசு தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக தெரிவித்தார்.புலிகளின் 20 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 10 அமைச்சர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலைசெய்வதற்கும் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும…
-
- 2 replies
- 1.2k views
-
-
வியாழன் 15-11-2007 22:21 மணி தமிழீழம் [தாயகன்] பல கோடியா? அமைச்சுப் பதவியா? - தென்னிலங்கையில் பேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் அரசும், எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு பேரம்பேசி வருகின்றன. இதனடிப்படையில் அரசுக்கு கட்சி தாவும் ஒருவருக்கு அமைச்சுப் பதவியும், எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நபருக்கு ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரையும் வழங்கப்பட இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நாடாளுமள்ற உறுப்பினருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் ஒழுங்குசெய்து கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் இடம்பெற இருப்பதால், கட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வணக்கம், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறப்படவேண்டிய ஈழத்தமிழரின் சமகாலப் பிரச்சனைகள் யாழ் இணையத்தில் கருத்துப்படங்களாக வெளிவந்துகொண்டு இருப்பது யாவரும் அறிந்ததே. இந்தக் கருத்துப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்ககூடிய தரத்தை உடையனவாக காணப்படுகின்றன. எனவே, இவற்றின் முக்கியத்துவம் கருதி அண்மைக்காலங்களில் யாழில் வந்த கருத்துப்படங்களை தொகுத்து எமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு கூறத்தக்கவகையில் ஒரு சிறிய காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுத்திரையில் பார்க்க: http://www.youtube.com/watch?v=YFHZ8PfJzC8 கருத்துப்படங்கள் எண்ணக்கரு: யாழ் செய்திக்குழுமம் ஓவியம்: ஓவியர் மூனா. கருத்துப்படங்களை வரைய அருமையான எண்ணக்கருக்களை கொடுக்கும் யாழ் செய்திக்க…
-
- 10 replies
- 4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஐவரைக் காணவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டமாவடி 3 எல்லை வீதியைச் சேர்ந்த அபூபக்கர் இல்யாஸ் (30 வயது) ஓட்டமாவடி எல்லை குறுக்கு வீதியைச் சேர்ந்த அபூபக்கர் நௌபர் (27 வயது), பிறைந்துறைச் சேனை ஹுதாபள்ளி வீதியைச் சேர்ந்த முகம்மது அலியார், முகம்மது றிஸ்வான் (22 வயது), ஓட்டமாவடி 3 முத்தவன் போடி வீதியைச் சேர்ந்த இல்யாஸ் அப்துல் காதர் (18 வயது) மற்றும் ஓட்டமாவடி 2 நெல்லுக்கடை வீதியைச் சேர்ந்த இஸ்ஸதீன் சப்றாஸ் (21 வயது) ஆகிய ஐந்து இளைஞர்களுமே காணாமல் போயுள்ளனர். இவர்கள் ஐந்து பேரு…
-
- 0 replies
- 858 views
-
-
வரலாற்று நாயகன் சு.ப.தமிழ்ச்செல்வன் -கவிஞர் யுகபாரதி வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள்? காலமே அவர்களை வரலாற்று நாயகர்களாக உருவாக்குகிறதா இல்லை காலத்தின் தேவை கருதி வரலாறாக நாயகர்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்களா என்பது எளிதாக கணித்து விடை காண முடியாப் பெரும் புதிர். நாமறிந்த வரலாற்று நாயகர்கள் எல்லோரும் புனிதர்களாக பூசைக்கு உரியவர்களாக மதிக்கப்படும் அதே நேரத்தில், அவர்களுடைய மறைக்கப்பட்ட வரலாறாக கூறப்படும் மிக மோசமான பகுதியும் நம்மால் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், அவர்கள் நாயகர்களாக அறியப்படுவதே இவ்வாதங்களினால்தான் என்பது வேறு விஷயம். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து வீர சாகசம் புரிந்ததாக ஒருவரை சுட்டுகிற அதே ஏடு, அவரது கோழைத்தனத்தையும், …
-
- 0 replies
- 2k views
-
-
கடத்தப்பட்ட தமிழ் யுவதி கத்தியால் குத்தி கொலை வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி ஜீவாபுரம் பிரதேச வீடொன்றில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி ஜீவாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமேகம் சண்முகப் பிரியா (16 வயது) என்றழைக்கப்படும் தமிழ் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.இவரின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் நேற்றுக்காலை 7.00 மணியளவில் சந்திவெளி ஜின்னாபுரம் பாலையடித்தோனா புகையிரத வீதிக்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இவரின் நெஞ்சு மற்றும் கழுத்து என்பனவற்றில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் த…
-
- 2 replies
- 2.1k views
-
-
வியாழன் 15-11-2007 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்திய பாதுகாப்புத்துறை முகாமத்துவக் கல்லூரியின் உயர் நிலைக் குழு சிறீலங்கா பயணம் இந்திய பாதுகாப்புத்துறை முகாமத்துவக் கல்லூரியின் உயர் நிலைக் குழு சிறீலங்கா பயணம் செய்துள்ளது. இக்குழு நேற்று புதன்கிழமை கொழும்பை சென்றடைந்துள்ளது. தரை, கடல், வான் படைகளைச் சேர்ந்த 18 அதிகாரிகள் இந்த உயர்மட்ட குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் இந்தியக் கடற்படையின் கொமடோர் C.P.சிறீவஸ்தாவ மற்றும் மூத்த தரைப்படைப் பயிற்சி ஆசிரியர் தளபதி கேணல் P.K கஞ்சூ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்களை சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். pathivu.com
-
- 2 replies
- 1k views
-