ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
மஹிந்தவின் வரவு - செலவுத் திட்டத்தை முகமாலை வரவு செலவுத் திட்டம் என்று வர்ணிக்கிறார் ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா. வரவு செலவத் திட்ட உரையை மஹிந்த நாடாளுமன்றத்தில்; ஆற்றிக் கொண்டிருக்கும் அதே வேளை முகமாலையில் இராணுவத்தினா படை நடவடிக்கையை மேற்கொண்டனர். "வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய சூட்டோடு முகமாலையையும் கைப்பற்றி விட்டோம் என்று போஸ்டர்களையும் அடித்து தயாராக வைத்திருந்தினர். ஆனால் விடயம் தலைகீழாகப் போய்விட்டது. 150 படையினர் காயம் அடைந்துள்ளனர். பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது. 'உங்களுடைய அரசியல் சுயநலதத்திற்காக படையிரை வைத்து சூதாட்டம் நடத்த வேண்டாம்.' இப்படி எச்சரிக்கை வெளியிட்டார் அவர். வரவு - செலவு…
-
- 1 reply
- 1.5k views
-
-
வெள்ளி 09-11-2007 17:42 மணி தமிழீழம் [தாயகன்] பிரெஞ்சு புலனாய்வுத்துறை கொழும்பு செல்லுகின்றது பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அடுத்த வாரம் கொழும்பு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கும், அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தக்குழு கொழும்பு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெறும் இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு புலனாய்வுத்துறைகளும் நெருங்கிய தொடர்பைப் பேண முடியுமென இரண்டு தரப்பும் கருதுவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் பெயர் குறிப்பிட விருமம்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை ஆதாரம்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
சனி 10-11-2007 02:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பவள் கவசவாகன விபத்தில் 14 படையினர் காயம் வவுனியா பெரியதம்பனை பகுதியில் பவள் கவசவாகனத்தில் பயணித்த படையினர் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது 14 படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினர் அநுராதபுர வைத்தியசாலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசியல் இலாபத்துக்காக முகமாலையில் படை நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாகவும் ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
வேனில் பொருத்திய குண்டுவெடித்ததில் வேன் வெடித்து சிதறியது வீரகேசரி இணையம் வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் கராஜ் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்று இன்று காலை 3.30 மணியளவில் வெடித்து சிதறியுள்ளது. வானில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்தமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நிறமாற்றம் செய்வதற்காக வான் கராஜ் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 1 reply
- 2.6k views
-
-
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்கக் கூட்டம் தென்னாபிரிக்காவில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ்செல்வன் அண்ணாவை நினைவு கூர்ந்து என்னுமொரு பாடல்! இசை : பாஸ்கரன் (மன்மதன் பிராண்ஸ்) பாடியவர்கள் :வாகீசன் & விக்கி பாடல்வரிகள்: சிவா
-
- 9 replies
- 2.2k views
-
-
சென்னையில் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் நாள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க ஊர்வலம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 816 views
-
-
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதரண தரத்தில் பத்துப் பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்ற தவராசா தவக்குமரன் என்ற மாணவருக்கு யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சுவிஸ் கிளையால் மேம்பாட்டு நிதி வழங்கப்படடுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 916 views
-
-
திஸ்ஸராமகமவில் மேலும் இரு சடலங்கள் மீட்பு [ த.இன்பன் ] - [ நவம்பர் 08, 2007 - 09:05 AM - GMT ] சிறிலங்காவின் திஸ்ஸராமகம காட்டுப்பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. ரன்மினிதென்னவிலிருந்து ஆறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒசுவின்ன காட்டுப்பகுதியிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் வீரகென பகுதியைச் சேர்ந்த அபயவர்த்தன(55) மற்றும் பத்மசிறி(54) ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை அப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தமது தேடுதல் நடவடிக்கை…
-
- 12 replies
- 2.4k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகள் மீதான வான் குண்டுத்தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மற்றொரு போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
நோயை விடுத்து நோவுக்கு மருந்து செய்யும் மருத்துவர்கள் 09.11.2007 நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டு மானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாக பூண்டோடு ஒழித்துக்கட்ட வேண்டும் எனச் சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதைத் தவிர தமது அரசுக்கு வேறு மார்க்கமில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். தமது அரசின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் நேற்று முன்தினம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறியிருக்கின்றார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கால் நூற்றாண் டாக இந்தப் பயங்கரவாதம் நாட்டைச் சீரழித்து வருகின் றது என்றும் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி என்ப வற்றில் பலத்த பின்னடைவு…
-
- 1 reply
- 1.1k views
-
-
" எயா ஹொந்த மினிகெக் " (அவர் ஒரு நல்ல மனிதர்)" தமிழ் செல்வன் குறித்து அப்துல் ஜப்பார் தமிழகத்தில் ஏனைய ஊடகங்கள் செய்திகளைத் தருமுன்பே "முத்தமிழ்" குழுமத்தில் படித்து விட்டேன். நான் தொட்டது கணினியா மின்சாரமா என்றொரு பேரதிர்ச்சி. நினைவுகள் பின்னோக்கி நீங்கின. 2002 ஏப்ரல் 10ம் தேதி வன்னியில் தலைவர் பிரபாகரனுடனும் தத்துவாசிரியர் அந்தன் பாலசிங்கதுடனும் உலக ஊடகவியலாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து ஏழேமுக்கலுக்கு முடிந்தது. செய்திகளை உடனே அனுப்பும் வசதிகள் அங்கில்லாததால் பெரும்பாலானோர் புறப்பட்டுச்சென்று விட்டனர். அதில் என்னை தங்களுடன் அங்கு அழைத்துச் சென்ற இலங்கை தினகரன் குழுவும் அடக்கம். மறுநாள் காலை கொழும்பு புறப்படு…
-
- 12 replies
- 5k views
-
-
பதவியாவில் கிளைமோர் தாக்குதல் - 2 படையினர் பலி [ த.இன்பன் ] - [ நவம்பர் 09, 2007 - 06:01 AM - GMT ] மணலாறு பதவியாப் பகுதியில் இன்று காலை சிறிலங்காவின் ஊர்காவல் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டனர். இரவு காவல் நடவடிக்கையை முடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்த ஊர்காவல் படையினரை இலக்கு வைத்து காலை 7.00 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது இரு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67
-
- 0 replies
- 1.1k views
-
-
கட்டுநாயக்கவில் சந்தேகத்தில் தமிழர் பொலிசாரால் கைது வீரகேசரி நாளேடு கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிசார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் தமிழர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்களவர் போல நடமாடிக்கொண்டு கட்டுநாயக்கவில் முக்கிய இடங்களின் தகவல்களை சேகரித்து வந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சிலாபத்தை சேர்ந்தவர் என்றும் தொழில் நிமித்தமாக கட்டுநாயக்கவிற்கு வருகைதந்துள்ளதாக பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 1.2k views
-
-
வல்லரசுகளின் மௌனம் இலங்கை அரசின் போரை அங்கீகரிப்பதற்குச் சமமானதாகும் [09 - November - 2007] -சரத் குமார- விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான சு.ப.தமிழ்ச்செல்வன் கடந்த வெள்ளிக்கிழமை காலை வடக்கில் புலிகளின் கோட்டையான கிளிநொச்சிக்கு அருகில் இலங்கை விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டார். " மிகவும் நம்பத்தகுந்த தகவலை" அடிப்படையாகக் கொண்டு நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் விபரித்த இந்தத் தாக்குதலில் புலிகளின் மேலும் ஐந்து சிரேஷ்ட அலுவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்ச்செல்வன் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டமை , 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக இலங்கை அரசாங்கம் கூறிக்கொள்வதும் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்திற்கு பேச…
-
- 0 replies
- 1k views
-
-
09.10.2007 விசேட அதிரடிப்படை முகாம் மீது தாக்குதல். அம்பாறை சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் விசேட அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலில் படுகாயமடைந்த விசேட அதிரடிப்படையினரை உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. நன்றி சங்கதி.
-
- 0 replies
- 2.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....e2fe5614f42ba98
-
- 0 replies
- 1.2k views
-
-
தீபாவளி தினமன்று, திட்டமிட்ட முறையில் பிந்துனுவேவ தடுப்புமுகாமில் சிங்களக் காடையர்களால் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முகாம் அமைவிடம் தடுத்து வைக்கப்பட்ட சிலர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டவர் மரணவீடு காயப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட முகாம் கொலைப் பங்காளிகள் மேலதிக செய்தி: பண்டாரவளையில் சிறீலங்கா காவல்துறையினராலும், சிங்கள காடையர்களாலும் படுகொலை செய்யப்பட்ட 27 தமிழர்கள் வெண்புறா அமைப்பினால் நினைவில் கொள்ளப்பட்டனர்.தென்கிழக்கு லண்டன் கிறீனிச் பகுதியிலுள்ள கிறீனிச் பல்கலைக்கழகத்தின் 300 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட புனித போல் (St. Paul), புனித பீற்றர் (St. Peter) தேவாலய…
-
- 21 replies
- 3.3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் பரமு சிவா ஆற்றிய உருக்கமான உரை
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ்நாட்டின் கோவையில் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் நாள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளுக்கான வீரவணக்க அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 811 views
-
-
நவீன போரியல் தத்துவங்களும் புலிகளின் எல்லாளன் தாக்குதலும் -அருஸ் (வேல்ஸ்)- அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் அலைகள் இன்னும் ஓயவில்லை. அநுராதபுர வான்படைத்தளம் அமைந்துள்ள பகுதி ஓர் இறுக்கமான இராணுவக் கோட்டையாக விளங்கியபோதும் அதில் ஏற்பட்ட சேதங்களும், பொருளாதார இழப்புக்கள் தொடர்பான கணிப்புக்களும் ஊடகங்களை விரைவாக எட்டிவிட்டன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
'தமிழ் (ஈழத்தின்) செல்வன்' - சபேசன் சிறிலங்கா வான் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும், லெப்டினன்ட் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் வாகைக் குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்த மாபெரும் சோகச் செய்தி கேட்டுத் தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும், சமாதான விரும்பிகளும் ஆற்றொண்ணாத் துயரில் மூழ்கியுள்ளார்கள். 'தமிழ் உலகமே ஆழமாக நேசித்த ஓர் அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கின்றது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும், ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து, …
-
- 0 replies
- 999 views
-
-
வேனில் எழுதிய - ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் "அடுத்த கட்டம்" மகிந்த அரசாங்கம் போரை தனது நிகழ்ச்சி நிரலுக்கமைய நகர்த்திச்செல்ல முடியாது என்பதையும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது தொடர்பான மகிந்த சகோதரர்களின் திட்டம் நிறைவேறாது என்பதையும் விடுதலைப் புலிகளின் அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் தெளிவாக்கியுள்ள போதிலும், மகிந்த சகோதரர்கள் போர்முனைப்பைத் தளர்த்துவதாக இல்லை எனத்தெரிகிறது. வடக்கில் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டு தெற்கில் நம்பிக்கை இழந்து போயுள்ள சிங்கள மக்களின் உளவுரணை சற்று நிமிர்த்தலாம் என்பது அவர்களது தற்போதைய நோக்கம். சிங்கள மக்களின் உளவுரணை நிமிர்த்துவதற்கு அப்பால் அந்த மக்கள் மகிந்த அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலை வந்து விடக்கூடாதென்பது மக…
-
- 0 replies
- 1.9k views
-
-
வியாழன் 08-11-2007 16:33 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி செய்ய வேண்டாம் - அமெரிக்காவிடம் வலியுறுத்தல் சிறீலங்கா அரசு பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதால், அந்தநாட்டிற்கு ஆயுத உதவி அளிக்க வேண்டாம் என நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான கடிதம் ஒன்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் அமெரிக்க அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.4k views
-