ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஞாயிறு 07-10-2007 22:31 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு யுத்த பாதீடு 13,640 கோடி ரூபாக்கள் 2008ம் ஆண்டுக்கான யுத்த பாதீட்டை சிறீலங்கா அரசாங்கம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சிறீலங்காவுக்கான அடுத்தாண்டு பாதீ்ட்டு செலவீனங்கள் 16,640 கோடி ரூபாக்களை ஒதுக்கத் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பெருமெடுப்பிலான போர் நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டே அதிநவீன ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நோக்கோடு இந்த பாதீட்டை சிறீலங்கா மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இந்த வருடம் சிறீலங்கா அரசாங்கத்தினால் 13.940 கோடி ரூபாக்களை ஒதுக்கிய நிலையில் அடுத்தாண்டு பாதீட்டை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction…
-
- 2 replies
- 963 views
-
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளிடம் தகாத முறையில் நடக்க சிறிலங்கா இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 970 views
-
-
சிறிலங்கா அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மற்றும் திலிப் வேதராச்சி ஆகியோர் நேற்று சபாநாயகரிடம் கையளித்தனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 826 views
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் இருந்த தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் காடையர்களும் சிறைக்காவலர்களும் இன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 871 views
-
-
அரசியல் சத்துராதிகளை அடையாளம் கண்டு கொள்வதே முதலாவது தேவை [10 - October - 2007] * அரசியல் வங்குரோத்தே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதன் பிரதான காரணி வ.திருநாவுக்கரசு `இலங்கை இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல. அது தொடர்ந்தும் யுத்தம் நடத்துவதற்குரிய நிலைமைகளையே தோற்றுவிக்கும். சமாதானத்தைப் புழுதியில் எறிவது பொறுப்புணர்ச்சியற்றது இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது ஜேர்மன் தூதுவர், ஜோர்ஜன் வீர்த் கூறினார். சந்திரிகா ஆட்சிக் காலத்திலும் ஒரு தடவை தூதுவர் வீர்த் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்து வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. எனினும், இம்முறை வீர்த் தனது உள்ளக் கிடக்கையை சற்று விரிவாக விளக்கியுள்ளார். அதாவது, "சமாதானம் கொண…
-
- 0 replies
- 914 views
-
-
சிறிலங்காவின் முப்படையினரும் இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு பலம் பெற்றுள்ளனர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 1.9k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 903 views
-
-
Posted on : 2007-10-10 சீலம் போதித்த மதத்தின் பெயரால் நாசம் விளைவிக்கும் நடவடிக்கை ""போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறியுங்கள். கண்காணிப்புக் குழுவினரை நாட்டிலிருந்து விரட்டுங்கள்; வெளியேற்றுங்கள்!'' இவ்வாறு சீறியிருக்கின்றது தேசிய பிக்குகள் முன்னணி. நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராகத் திகழும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பிரமில தேரர், பொதுச் செயலாளர் வண. அத்தனயாலே சமிந்திர தேரர் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது; கோரப்பட்டிருக்கின்றது. யுத்தத்தைத் துறந்து, விரோதத்தை மறந்து, சகோத…
-
- 0 replies
- 781 views
-
-
மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம் மோதலில் வீரச்சாவடைந்த இரு மாவீரர்களின் வித்துடல்கள் நேற்று விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 897 views
-
-
மன்னார் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 768 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு சிறிலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காமையால் பல பணிகள் முடங்கியுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 558 views
-
-
முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவி பிரதேசத்தில் லெப். கேணல் புலேந்திரன் நினைவான முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 707 views
-
-
கருணா வெளிநாட்டு வங்கியில் வைப்பிட்டுள்ளார் என்று கூறப்படும் 80 கோடி ரூபா, தமிழ் வர்ததகர்களைக் கடத்தி அவர்களிடம் கப்பமாக கறக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இந்த யுத்தம் மூலம் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக கொண்டுள்ளன. ஒரு தேசிய இனத்தை இந்த அரசு கொன்றொழிப்பதானலேயே சர்வதேச பிரதிநிதிகள் இங்கு வந்து போகின்றனர். அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். இது வரை 75ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் கொல்லப்படுகின்றனர். நீங்கள் பெரும்பான்மையினர் என்பதற்காக தொட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னாரில் மாந்தை மேற்கு மடுப்பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலத்த இடர்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகள் இடம்பெயர்ந்து இணைப்பு பாடசாலைகளாக இயங்கி வருகின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக 46 குடும்பங்கள் தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 875 views
-
-
கிளிநொச்சி மற்றும் மல்லாவியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
யுத்தம் நடைபெறும் ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் என்பது தவிர்க்க முடியாததுதான் என்று சிறிலங்கா அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 937 views
-
-
கடந்த வாரம் 24 பேரை குடாநாட்டில் காணவில்லை யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் 24 பேர் காணாமல்போயுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் திகதி வடமராட்சி கரணவாய் தெற்குப் பதியைச்சேர்ந்த தியாகராஜா கணேஸ் என்பவரை காணவில்லையென்று மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக நேற்று 3 பேர் யாழ். “மனித உரிமை ஆணைக்குழு அலுவலத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த வாரம் மட்டும் 75 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளனர். -வீரகேசரி
-
- 0 replies
- 664 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலாங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் குடும்பங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் சந்திக்க உள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
வெளிநாட்டு பிணை முறி விற்பனை ஆரம்பிக்கிறது இலங்கை அரசு சர்வதேச ரீதியில் கடன் பத்திர சந்தை நிலைவரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் எத்தகைய நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை சோதிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தனது முதலாவது வெளிநாட்டு பிணைமுறி விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது. பார்கிளேஸ் கப்பிற்றல், எச்.எஸ்.பி.சி. ஹோல்டிங்ஸ், ஜே.பி.மோர்கன் சேஸ் அன்கோ ஆகியவை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் இந்த பிணைமுறிகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவிருப்பதாகவும் பின்னர் விற்பனையை இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் மத்தியவங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யூ கே.விஜயவர்த்தன தெரிவித்திருக்கிறார். திரட்டப்படும் நிதியத்தின் இலக்குக் குறித்த…
-
- 0 replies
- 734 views
-
-
சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் 192 ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ரவிராஜ் எம்.பி.யின் படுகொலை அது தொடர்பில் நடைபெறும் விசாரணைகள் குறித்து ஆராயப்படவுள்ளன. சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் அமர்வு திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. நான்கு தினங்கள் நடைபெறவுள்ள இவ்வமர்வில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவைச் சென்றடைந்தது. இக் குழுவில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன, ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மற்றும் சந்திராணி பண்டார எம்.பி.ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். சர்வதேச பாராள…
-
- 0 replies
- 621 views
-
-
சிறிலங்கா அரசங்க தலைவர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் செப்ரம்பர் 26 இல் ஆற்றிய உரை, பொய் மற்றும் மோசடிகளின் இன்னுமொரு வெளிப்பாடு என்று www.wsws.org என்ற இணைய தளம் சாடியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 818 views
-
-
வடபோர் முனையில் கடந்த வாரம் நிகழ்ந்த மோதல்கள் பற்றிய செய்திகளை கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" வார ஏடு தொகுத்து வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
அழுத்தங்களைத் தவிருங்கள் - சிறீலங்கா அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கடிதம் மக்களின் துயர் துடைக்கும் மனிதாபிமான பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் விஜயத்தின் போது அவரது நிகழ்ச்சி நிரலுக்கு அழுத்தங்களைக் கொடுக்காது, அவரை காணாமல் போனோரின் உறவினர்கள் தத்தமது ஆதங்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்து, இன்னமும் வெளிச்சத்திற்கு வராத மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தப்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு இலங்கையின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்…
-
- 0 replies
- 592 views
-