Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்…

  2. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் 23 Sep, 2025 | 03:50 PM போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்ற…

  3. 23 Sep, 2025 | 02:26 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வியெழுப்புகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சி…

  4. Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 04:12 PM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருள் பொதியுடன் “கிரீன் சேனல்” வழியாக வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (23) காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணொருவரும், இந்தியாவின் சென்னையில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தப் பொதியை தாய்லாந்து - பெங்கொக்கில் வாங்கி, இந்தியாவின் புது டெல்லிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து இன்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் AI-27…

  5. 23 Sep, 2025 | 04:22 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இந்த நபர் நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் வாள்வெட்டுச் சம்பவங்கள் ; நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது | Virakesari.lk

  6. 3 Sep, 2025 | 05:20 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடங்கு மாகாண ஆளுநருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இத்திட்…

  7. 23 Sep, 2025 | 06:09 PM பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் "திலீபன் வழியில் வருகிறோம்" என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்படுகிறது. இந்த பவனி இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் பருத்தித்துறை நகர்ப் பகுதியை வந்தடைந்துள்ளது. தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக பவனி செல்லும் நிலையில், பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றைய தின…

  8. Published By: Vishnu 23 Sep, 2025 | 07:03 PM கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுவன் எப்.எம். அய்னா ஹம்தி பஸ்லிம், வைத்தியர்களின் அலட்சியத்தால் இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக அமைதி போராட்டம் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிறுவனின் உறவினர்கள், சிறுவர் உரிமை அமைப்புகள் மற்றும் பல பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர். (படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்) கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கான நீதி கோரி அமைதி போராட்டம் | Virakesari.lk

  9. அருண ஜயசேகர பிரதி அமைச்சர் தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறே, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்றாலும், அது அவ்வாறு நடக்காமையினால், ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட…

  10. பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா! கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள்…

  11. முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை! முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், நீதிபதி யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார். தீர்ப்பை வழங்கும்போது, ஹர்ஷ இலுக்பிட்டிய தனது செயல்கள் மூலம் நீதித்துறைக்கு எதிராக கடுமையான அவமதிப்புச் செயலைச் செய்துள்ளதாக நீதிபதி கோடகொட கூறினார். நாட்…

  12. எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: அபராதத்தை செலுத்த மறுக்கும் கப்பல் நிறுவனம்! சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்று, நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்குக் காரணமானதற்காக இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க ‍டொலர் இழப்பீட்டை செலுத்த மறுப்பதாக இன்று (23) அறிவித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் ஒரு பிரத்யேக நேர்காணலில், பணம் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் “ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கும்” என்றும் நம்புவதாகக் கூறினார். அத்துடன், கசிவுகளை அகற்றவும், கடல் அடிப்பகுதி மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்யவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழ…

  13. 22 Sep, 2025 | 04:07 PM (இராஜதுரை ஹஷான்) முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார திங்கட்கிழமை (22) இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை இலஞ்சம…

  14. 22 Sep, 2025 | 04:43 PM திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனி…

  15. 22 Sep, 2025 | 04:33 PM வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்…

  16. 22 Sep, 2025 | 02:14 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (22) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ச.பவானந்தராஜா, பனை அபிவிருத்தி சபை தலைவர் ஆர்.ரவீந்திரன், பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/225744

  17. 22 Sep, 2025 | 05:30 PM (இராஜதுரை ஹஷான்) சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டு வந்த 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் தேசிய …

  18. 22 Sep, 2025 | 01:50 PM (எம்.மனோசித்ரா) இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22) நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இவ்விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 'மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை' என்ற கருப்ப…

  19. Published By: Vishnu 22 Sep, 2025 | 05:35 AM இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியலை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் மாநில அமைச்சர்கள், 29 முன்னாள் தூதர்கள் மற்றும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத முன்னாள் அமைச்சர் முன்னாள் மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். முன்னாள் ஆளுநர்கள் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலகா, செந்தில் தொண்டமான், நவீன் திசாந…

  20. Published By: Vishnu 22 Sep, 2025 | 05:11 AM அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்த…

  21. Published By: Vishnu 22 Sep, 2025 | 01:53 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2021.12.20 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, 2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற 08 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திசை;சாட்டி சின்னத்தில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42,31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகள…

  22. 22 Sep, 2025 | 11:43 AM நாட்டு மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார். கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவத…

  23. காலி, உனவட்டுன ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலா ஹோட்டலில் விருந்தில் இருந்த 2 இலங்கையர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது. சுற்றுலா பயணிகள் இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்கள் ஒரு காரில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களின் தடுத்து, பின்னர் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட ஜெர்மன் பிரஜைகள் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு சந்தே…

  24. Published By: Digital Desk 1 21 Sep, 2025 | 03:35 PM இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துநர்களாக பெண்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அந்தவகையில், அவர்களுக்கு விமானப் பணிப்பெண்களின் சீருடைக்கு போன்ற சீருடை வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பஸ்களில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். https://www.virakesari.lk/article/225667

  25. 21 Sep, 2025 | 01:39 PM யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/225662

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.