Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சனி 04-08-2007 02:56 மணி தமிழீழம் [மயூரன்] அரசாங்கம் கிழக்கு வளங்களை கொள்ளையிட முயற்சி - ஐதேக ஸ்ரீலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை கொள்ளையிட முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு நெருக்கடிகள் எதுவுமற்ற சீரான போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள தெற்கு மாகாணத்தை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கம் நெருக்கடி நிலையில் உள்ள கிழக்கினை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கின் அபிவிருத்தி என…

  2. இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு! அமெ.வெளிவிவகாரக் குழுவில் வலியுறுத்தல் இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இவ்வாறு அமெ. வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் சுட்டத்தில் அமெரிக்க மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார். நேற்ற முன் தினம் நடைபெற்ற அமெ. நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங். உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வலியுறுத்தினார். 'இலங்கையில் புதிதாகத் தீவிரப்படுத்தபட்டிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் நூற்றுக் கணக்கானோர் தடுப்பு…

    • 2 replies
    • 1.3k views
  3. அரசு சிறுபான்மை கட்சிகளுடன் நடந்துகொள்ளும் விதம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் கவனம் செலுத்திவருகிறோம். அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்திலிருந்து விலக எடுத்த தீர்மானம் குறித்தும் அதன் பின்னரான சூழ்நிலை தொடர்பிலும் தாம் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதுகுறித்து…

    • 0 replies
    • 822 views
  4. புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு உடன்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உடன்பாடொன்றை எட்டியுள்ளதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களை பாக்கு நீரிணை ஊடாகவே தருவிப்பதால் பாக்கு நீரிணையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கடல் கண்காணிப்புக் கப்பல்கள் அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் பொறி முறைகள் குறித்து அதிகம் அக்கறை கொள்ளவில்லை என்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையே விரும்புவதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவத…

    • 0 replies
    • 1.4k views
  5. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…

  6. இன்று காலை (03-08-2007) 08.30மணியளவில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டதாகவும், ஒரு படையினன் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  7. லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் வித்துடல்கள் விதைப்பு [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 18:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் ஆகியோரின் வீரவணக்கக்கூட்டம் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வித்துடல்கள் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித விதைகுழிகளில் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புடன் விதைக்கப்பட்டன. மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவியவர் லெப். கேணல் நந்தகுமார். வடபோர்முனையில் சிறிலங்கா படையினருடா…

  8. யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார். யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. -புதினம்

    • 20 replies
    • 4.7k views
  9. யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும். மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும்…

  10. வெள்ளி 03-08-2007 19:57 மணி தமிழீழம் [சிறீதரன்] வன்னியில் ஆளில்லா வேவு வானூர்தி நோட்டம் வன்னியில் சிறிலங்கா வான் படையினரின் ஆளில்லா வேவு வானூர்தி இன்று காலை நோட்டமிட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா யுத்த வானூர்திகள் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்த்து மக்கள் மத்தியில் பதற்றநிலை காணப்பட்டுள்ளது. pathivu

  11. முகமூடியிட்ட படையாட்சி -சேனாதி (தாயகம்) அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட விரும்பும் எந்த அரசு சாரா நிறுவனமும் படையினரின் விதிப்புக்களுக்கமையவே செயற்பட முடியும் என்ற சுற்றறிக்கையை தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயுதப்படைக் கட்டமைப்புகளின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கிழக்கு மாகாண ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய. இந்த நகர்வு, இனப்பிரச்சினை குறித்த சிங்கள நிகழ்ச்சி நிரலின் ஒரு பதம் என்றும் தமிழீழத்தின் மீதான கொழும்பின் மூலோபாய வெளிப்பாடுகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரலின் நீட்சியும் கொழும்பு வெளியிட விரும்பாத அதன் உண்மையான மூலோபாயமும் ஆய்விற்குரியவை. கடந்த வருடம் எட்டாம் மாதம் ஏ-9 சாலை மூடப்பட்டதில…

  12. அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம் Written by Ravanan - Aug 03, 2007 at 02:35 PM இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் தன்னுடன் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறி வருகிறார். 18 முஸ்லிம் அமைச்சர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இதனை கௌரவமாக பார்க்க முடியாது. இத்தகைய நிலை உண்மையிலேயே அவமானமாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சுப்பதவிகளுக்காக சமுகத்தையும் கௌரவத்தையும் விற்றுவிட்டுப் போவதற்கு தயாரானவர்கள் இவர்கள் என மற்றைய சமுகம் எம்மை பார்க்கிறது. இத்தகைய நிலை இனிமேலும் நீடிக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். கிண்ணியாவில் செவ்வாய்க்கிழமை மாலை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த…

  13. வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம [வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது: இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்…

  14. பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:53 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் தமிழ் வடிவம்…

  15. இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில் தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும்…

  16. மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…

    • 1 reply
    • 1.4k views
  17. அநுராதபுரம், மதவாச்சி , கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளில் அகதி முகாம்களை அமைக்கும் நிலை வீரகேசரி நாளேடு யுத்த அச்சம் காரணமாக வவுனியாவில் உள்ள 20 சிங்கள கிராமங்களின் மக்கள் படிப்படியாக இடம்பெயர்ந்துவருகின்றனர். விரைவில் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ போன்ற பிரதேசங்களில் அகதி முகாம்களை நிறுவவேண்டிய அபாயம் எற்பட்டுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மூன்று கிராமங்களின் மக்கள் தங்குமிட வசதியின்றியும் உணவின்றியும் தவிக்கின்றனர். அரசாங்கம் கண்ணைமூடிக்கொண்டிருக்கின்ற?ு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் தெரிவித்தார். மூன்று மாதங்களில் பெற்றுத்தருவதாக கூறப்பட்ட கௌரவ சமாதானம் எங்கே என்று அரசாங்க…

  18. கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட புலிகள் மலையக தோட்டப் பகுதிக்குள்ளும் ஊடுருவலாம் [03 - August - 2007] * நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை `கிழக்கிலங்கையில் பல இடங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதையடுத்து அங்குள்ள விடுதலைப் புலிகள் எங்கு சென்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் மலையகத் தோட்டப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவலாம். ஆகையால் இப்பகுதியில் வாழும் தோட்ட கிராம , நகர மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எம்.ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுவரெலியா நகர வர்த்தகர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் உர…

  19. பேச்சுவார்த்தை தோல்விகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? [03 - August - 2007] கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காரத் ஈவான்ஸ் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார். பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) என்ற அரசாங்கசார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் ஈவான்ஸ் இப்போது பணியாற்றுகின்றார். உலகளாவிய ரீதியில் மோதல்களையும் நெருக்கடிகளையும் தடுப்பதற்காக இந்த சர்வதேச நெருக்கடிக் குழு பாடுபடுகின்றது. வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈவான்ஸ் சந்தித்து இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக கல…

  20. Posted on : 2007-08-03 அரச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் விசேட சட்ட விலக்களிப்பு ஏற்பாடுதான் ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்யப்படுதல், கொலை செய்யப்படுதல், அச்சுறுத்திக் கப்பம் அறவிடப்படல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கொழும்பில் மக்கள் கண்காணிப்புக் குழு நடத்திய இரண்டாவது மாநாட்டின் மூலம் இந்த விவகாரத்தின் மோசமான நிலைமையை சர்வதேச மட்டத்திற்கு அம்பலப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்த மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணியில் "அரச பயங்கரவாதமே' மூலகாரணமாக இருக்கின்றது என்பதும் இந்த மாநாடு மூலமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கி

  21. மிதிவெடி அகற்றமுயன்ற படையினர் ஆறு பேர் அது வெடித்ததில் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 02, 2007 - 11:30 AM - GMT ] வெலிகந்தைக்கு அண்மையில் உள்ள பகுதி ஒன்றில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அறுவர் மிதிவெடி ஒன்று வெடித்ததினால் படுகாயமடைந்துள்ளனர். இன்று நண்பகல் 12.00 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் மகாஓயா மற்றும் பொலநறுவை மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். eelatamil.net

  22. எத்தனை பில்லியன் ரூபாக்களை கொடுத்தாலும் பிரபாகரனை விலைக்கு வாங்க முடியாது வீரகேசரி நாளேடு எத்தனை பில்லியன் ரூபாக்களைக் கொடுத்தாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற போராட்டத் தலைவர் ஒருவரை விலைக்கு வாங்க முடியாது. இது அனைத்துத் தரப்பினரும் அறிந்துள்ள விடயம். பணத்திற்கு சோரம் போகும் ஒருவராக பிரபாகரனை கருதவும் முடியாது என்று நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் விலைக்கு வாங்க முடியாமல்போன வேலுப்பிள்ளை பிரபாகரனை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருந்தால், அது தேசியத்திற்கு கௌரவமளிக்கும் செயலாகும் என…

  23. டெல்லி: இந்திய நிறுவனங்கள், இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசநாயகே கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள திசநாயகே, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய நிறுவனங்கள் இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணை உற்பத்தி, சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பிரிவுகளில் அதிக அளவிலான இந்திய முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது. திரிகோணமலையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை இலங்கை அரசு உருவாக்கவுள்ளது. இதற்குத் தேவைய…

  24. வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மக்கள் மருந்து, உணவு இன்றி தவிப்பு வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள மக்கள் மருந்து, உணவு மற்றும் குடிப்பதற்கு தண்ணீ“ர் கூட இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர

    • 0 replies
    • 706 views
  25. வெள்ளி 03-08-2007 02:42 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை அவுஸ்ரேலிய அமைச்சரால் ஆளப்படவில்லை - ஸ்ரீலங்கா அரசாங்கம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தாங்கள் எந்த ஓரு நாட்டிற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தமது நாட்டை அவுஸ்ரேலிய அமைச்சர் ஆட்சி புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவுஸ்ரேலியாவின் முன்னாள் அமைச்சர் கரத் இவான்ஸ் ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கை கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தால் அனைத்துல நாடுகள் அதனை தடுப்பதற்கு முயற்ச்சிக்கும் என்று கூறியிருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்ச் ஜ…

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.