Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் * பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் இலங்கையில் உள்ள அரசியல் நிலை காரணமாக பிரித்தானிய நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களைத் திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதியுள்ள அவசர கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இலங்கையின் போர்ச் சூழல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் அகதிகள் அந்தஸ்து கோரி காத்திருக்கின்றார்கள். யுத்த சூழலினால் பாதிக்கப்…

  2. ஞாயிறு 29-07-2007 00:35 மணி தமிழீழம் [மோகன்] மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் மோதல் மன்னார் விடத்தல்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடற்சமர் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் விடத்தல்தீவு கடற்பரப்பில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் இரு படகுகளைத் தாக்கியழித்து 6 கடற்புலிகளைக் கொன்றுள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. pathivu

  3. வேண்டவே வேண்டாம் யுத்தம்: முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்து [சனிக்கிழமை, 28 யூலை 2007, 15:14 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தீவில் யுத்தம் வேண்டமே வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள வார ஏடான "ராவய"வுக்கு மூவரும் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் ஹரி குணதிலக்க: முழு உலகும், எமது நாட்டின் பெரும்பான்மையினரும் இந்தப் பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றுதான் கூறுகின்றனர். எனினும் எமது நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சிறு பிரிவினர் இந்தப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனக் கூறுகி…

  4. தென்தமிழீழத்தில் அமெரிக்காவின் சிறப்பு கடல் அதிரடிப்படை அதிகாரிகள் குழு சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தென் தமிழீழதிற்கு அமெரிக்காவின் உயர்மட்ட படை அதிகாரிகள் குழு விஜயம் செய்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புக் கடல் அதிரடிப் படையைச் சேர்ந்த நான்கு படை அதிகாரிகளே தென் தமிழீழம் சென்றுள்ளனர். இக்குழுவுக்கு கேணல் தர அதிகாரி தலைமை வகிக்கின்றார். ஆக்கிரமிக்கப்பட்ட தென்தமிழீழப் பகுதிகளுக்குச் சென்ற இவர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளைச் சந்தித்ததுடன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு இராணுவ உயர்வலயப் பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். சம்பூர், மூதூர், சேருவில, ஈச்சிலம்பற்று, வாகரை, படுவான்கரை, கொக்கட்டிச் சோலை, வவுணதீவு ஆகிய இடங்களுக்குச…

    • 4 replies
    • 1.8k views
  5. போர் அறிவியலும் தமிழ்த் தேசிய ஊடகங்களும்: குடும்பிமலை இழப்பையும் மாமனிதர் சிவராமையும் முன்வைத்து சில வரைபுகள் -பரணி கிருஸ்ணரஜனி- '......கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு, தரவை, வாகரை, சம்பூர், சேனைய+ர் பகுதி திருமலை வடக்கில் பேராரு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்காப் படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்ற வகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்ப…

    • 0 replies
    • 1.2k views
  6. யேர்மனியை விமர்சிப்பதா? மோசடிப் பேர்வழிகள் அமைச்சர்களா? 50 வாக்குகள்கூட வாங்க இயலாத டக்ளசை வைத்து தீர்வா?: கொதிக்கிறார் அமைச்சர் அனுரா [சனிக்கிழமை, 28 யூலை 2007, 20:29 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் அரசியல் நிலைமைகள் குறித்தும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்தும் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சரான அனுரா பண்டாராநாயக்க மிகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஓன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: இரண்டு பிரதான கட்சிகளின் ஐக்கியம் இல்லாமல் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளிடையேயான ஒப்பந்தத்தை பாழடித்தது ஒரு தேசியக் குற்றமாகும். 50 வாக்குகள் கூட வாங…

  7. வீரச்சாவடைந்த சிறுத்தைப் படையணி மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டனர் வன்னியில் விடுதலைப் புலிகளின் விசேட படையணியான சிறுத்தைப் படையணியின் மாவீரர்கள் இன்று நினைவு கூரப்பட்டுள்ளனர். மணலாறு கொக்குத்தொடுவாயில் 1995ம் ஆண்டு யூலை 28ம் நாள் தாக்குல் ஒன்றில் வீரச்சாவடைந்த 57 பெண் சிறுத்தப்படை மாவீர்களின் வீரச்சாவடைந்தனர். சிறுத்தைப் படையணியின் 57 பெண் மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் தமிழர் வன்னியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து சிறுத்தைப் படையணி மாவீரர்களும் நினைவு கூரப்பட்டுள்ளனர். pathivu

  8. 'கிழக்கின் உதயம்' கொண்டாடுமாறு பாடசாலைகளை பலவந்தப்படுத்தியதற்கு திருச்சபைகள் கண்டனம் அண்மையில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வினை கொண்டாடுமாறு பாடசாலைகளை அரசாங்கம் பலவந்தப்படுத்தியமையை கத்தோலிக்க திருச்சபைகள் கண்டித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு யுத்த வெறியூட்டி எதிரிகளை கொல்லும் மனோ பாவத்தையே இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுத்தும் என கிறிஸ்தவ ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கம் கொண்டுள்ள போரியல் திட்டங்களை பாடசாலை மட்டத்தில் விஸ்தரிப்பதே அரசாங்கம் கிழக்கின் உதயம் வெற்றி விழாவை பாடசாலைகளில் நடத்துமாறு பணித்தமைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  9. மிகின் லங்கா என்னும் மகிந்த குடும்பத்தின் நிறுவணம் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் கடத்தி சம்பாதித்த பணத்திலும் நாட்டில் கொள்ளை அடிச்ச பணத்திலும் தென் மாகாணம் வீரவில என்னும் இடத்தில் விமான நிலையம் மற்றும் கடத்தொகுதியை கட்ட முன்மொழிந்த திட்டத்தின் வரை படங்கள்.

  10. சனி 28-07-2007 00:31 மணி தமிழீழம் [மயூரன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ரணில் கைச்சாத்திட்டது சட்டவிரோதமானது - பிரதம நீதியரசர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் பிரதமர் தன்னிச்சையாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் பிரதம நீதியரசர் இன்று அறிவித்துள்ளார். ஜே.வி.பி ஜாதிக ஹெல உருமய மற்றும் சிங்கள தேசிய சங்கம்…

  11. வாட்டும் வறுமை...தாயகம் திரும்பத் துடிக்கும் இலங்கை அகதிகள்! தஞ்சம் தேடி வந்த தமிழகத்தில் வறுமையும், நிம்மதியின்மையுமே கிடைத்ததால் மீண்டும் தாயகம் திரும்பும் மன நிலைக்கு இலங்கை அகதிகள் வந்துள்ளனர். இலங்கையில் கடும் போர் மூண்டதையடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் 117 அகதிகள் முகாம்களில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இம் முகாம்களில் மட்டும் 19,478 குடும்பங்களைச் சேர்ந்த 74,072 பேர் வசிக்கின்றனர். இவர்கல் தவிர தனியாகவும் 7,785 குடும்பங்களை சேர்ந்த 22,089 பேர் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். மொத்தம் 96,162 அகதிகள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டம் கடையநல்லூ…

  12. மகிந்தவின் தேயிலைப் பரிசை உதாசீனம் செய்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயருக்கு பரிசாகக் கையளித்த தேயிலையை அவர் ஊதாசீனம் செய்து உத்தியோக இல்லத்தில் விட்டுச் சென்றுள்ளார். 140 பிரித்தானியப் பவுண்டுகளுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களை பிரித்தானிய அமைச்சர்கள் பரிசாகப் பெற்றால், பதவி விலகும்போது அவற்றை அவர்களே கொள்வனவு செய்ய வேண்டும், அல்லது பொதுச்சொத்தாக விட்டுச்செல்ல வேண்டும். ரொனி பிளேயர் விட்டுச்சென்ற பொருட்களில் அமெரிக்க ஆளுநரும், பிரபல ஹொலிவூட் நடிகருமான சுவாசெனீக்கர், குவைத் மன்னர் வழங்கிய நாணயம், சிறீலங்கா அதிபர் கொடுத்த தேயிலைப் பொதி என்பன அடங்குகின்றன. -பதிவு

  13. ஆட்சிக் கதிரையை கைப்பற்ற, தக்கவைக்க.... [28 - July - 2007] * இதுவொரு அதிகாரப் போட்டி மட்டுமே -காலகண்டன்- கொழும்பில் நேற்று முன்தினம் ரணில், மங்கள தலைமையிலான அரசியல் கூட்டணி `மக்கள் அலை' என்னும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தின. பல ஆயிரக் கணக்கானோர் கலந்த இப் பேரணியும் கூட்டமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) க்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கி இருப்பதாகவே அவதானிக்க முடிகிறது. அதேவேளை, இம்மக்கள் அலைப்பேரணி ஒன்றரை வருடகால மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மிகப் பெரும் எதிர்ப்பு நடவடிக்கையாக அமைந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது. "நாடு அழிகிறது - தடுக்க முன…

  14. பயங்கரவாதத்தை முறியடிக்க பயங்கரவாதத்தையே பயன்படுத்துவது முட்டாள்தனம் [28 - July - 2007] -எம்.ஏ.எம். நிலாம்- * சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீர கூறுகிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அன்று 90 சதவீதமானோர் மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை. நானும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் சந்திரிகா பண்டாரநாயக்காவை இணங்கவைக்க இரவு பகல் பாராது பாடுபட்டோம். மகிந்த பசுத்தோல் போர்த்திய புலியென்பதை காலம் கடந்தே நாம் புரிந்துகொள்ள நேரிட்டதென முன்னாள் அமைச்சரும் சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் பிரதான அமைப்பாளருமான மங்கள சமரவீர நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்ற "மக்கள் பேரலை" பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார். …

  15. அரசாங்கம் பதவிவிலக வேண்டும் என்பதே மக்கள் வெள்ளம் பறைசாற்றியுள்ளது வீரகேசரி நாளேடு மங்களவுடன் இணைந்து ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம் என்கிறார் ரவிகருணாநாயக்க தூரநோக்கற்று செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதையே கொழும்பில் ஒன்று கூடிய மக்கள் வெள்ளம் பறைசாற்றியுள்ளது. தமது அபிலாஷைகளை இந்த அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என்பதனை மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தை ஜனநாயக வழிமுறையில் வீழ்த்தி, பாரா…

  16. சனி 28-07-2007 04:31 மணி தமிழீழம் [சிறீதரன்] திலக் கருணாரட்ண ஐதேக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார் சிறீலங்காவின் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் திலக் கருணாரட்ண தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பல காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளதாக எதிர்கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஜாதிககெல உறுமிய தொடர்பில் கூறிய கருத்துக்களும், சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றனவும் பதவிவிலகும் காரணங்களுள் அடங்குவதாக தெரியவருகிறது. அண்மையில் சிறீலங்கா இராணுவம் தொப்பிக்கலவில் பெற்ற வெற்…

  17. Posted on : 2007-07-28 யுத்தத் தீவிரக் கொள்கை நீடித்துத் தாக்குப் பிடிக்குமா? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்த் தீவிரத்தை முன் னிலைப்படுத்துவதன் மூலம், தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகளைத் தமக்கு ஆத ரவாக வளைத்துப் போடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தந்திரோபாயம் நீண்ட காலத்துக்குப் பயன்தரப் போவ தில்லை என்பது போலவே தோற்றுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலை வடக்குக் கிழக்கைத் தள மாகக் கொண்ட தமிழர் தாயகம் ஒட்டுமொத்தமாகப் புறக் கணித்த பின்னணியில், தமிழர் விரோத இனவாதம் அத்தேர் தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அவ ருக்கு வாய்ப்பளித்தது என்னவோ உண்மைதான். ஆனால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சிங்களப் பேரெ ழுச்சி என்ற இனவாத மாயைமூலம் தென…

  18. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் பதிவியிலிருந்து சந்திரிகாவை நீக்கும் நோக்கமில்லை - அனுர பிரியதர்சன யாப்பா [Friday July 27 2007 09:28:40 PM GMT] [யாழ் வாணன்] ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகர் பதிவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கான நோக்கம் எதுவும் கட்சியிடம் இல்லை. என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சுதந்திர கட்சி ஆலோசகர் பத…

  19. கிழக்கில் மக்கள் மீது கட்டுப்பாடு கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பில்லை சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. [Friday July 27 2007 09:29:58 PM GMT] [யாழ் வாணன்] கிழக்கில் மக்கள் மீது கட்டுபாடுகள் விதிக்கப்படுவதாகவும் தகவல்களை வெளியிடவும் கருத்துக்களை தெரிவிக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும் சுதந்திர ஊடக இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளிலும் ஜனநாயக முறைப்படி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த அமைப்பு கோரியுள்ளது. இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மகாணத்தில் சமீபத்தில் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்…

  20. செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை விசாரணைகள் நிறைவு: காவல்துறையினர். இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர். கோட்டை தொடரூந்து நிலையத்தின் முன்பாக வைத்து கடத்திச் செல்லப்பட்ட செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரும் குருவிட்ட பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹெகல…

  21. ஐ.நா பொது சபை கூட்டத்தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு வீரகேசரி நாளேடு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கு உபதலைமையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நியூயோர்க்கில் 2007 யூலை 24 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாட்டு பொதுச் சபையின் 105 ஆவது மகா சபைக்கூட்டத்தில் இலங்கை ஓர் உபதலைமை நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது, இத் தெரிவானது 2007 செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடங்கவுள்ள பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத் தொடருக்காகும். இலங்கை இப் பதவியை 15 வருடங்களுக்கு முன் அதாவது 1992 இல் நடைபெற்ற பொதுச் சபையின் நாற்பத்தேழாவது கூட்டத் தொடரில் வகித்தது ஆகும்.பொ…

  22. பிரபாகரனின் தேவையை ஈடுசெய்வதற்கு ரணில், மங்கள, ஸ்ரீபதி இணைந்து முயற்சி வீரகேசரி நாளேடு கிழக்கை கைப்பற்றிய இராணுவம் வடக்கிற்கு நகர்வதற்கு தயாராகின்ற போது ஐக்கிய தேசிய கட்சியும் இதர குழுக்களும் தெற்கில் மாற்று சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன என்று பிரதி கல்வியமைச்சர் நிர்மல கொத்தலாவல குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் இணைந்து பிரபாகரனின் தேவைகளை ஈடு செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு…

    • 1 reply
    • 1.1k views
  23. கொழும்பில் ரணில் மற்றும் மங்கள சமர வீர தலைமையில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் இலட்சம் (100,000) மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மகிந்தவனின் கிழக்கின் உதயம் வெற்றி முழக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளதானது மகிந்தவனின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமன்றி பேரணியாளர்கள்.. மகிந்தவை படத்தில் உள்ளது போல சித்தரித்துள்ளதானது.. சிங்கள அரசியல் என்பது பிரபாகரன் என்ற கதாநாயகன் இல்லாமல் நடக்காது என்பதை கோடிகாட்டி நிற்கிறது. படம் தமிழ் நெற். Thousands march against Rajapaksa govt. in Colombo [TamilNet, Thursday, 26 July 2007, 09:25 GMT] Around 100,000 people marched in Colombo Thursday in the first main rally jointly organised by S…

    • 1 reply
    • 1.2k views
  24. சனி 28-07-2007 00:26 மணி தமிழீழம் [மயூரன்] அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகள் யார் என்பதில் துணை ஆயுதக்குழுகளிடையே போட்டி அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகள் யார் என்பதில் துணை ஆயுதக் குழுக்களிடையில் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக ஆளும் தரப்புடன் நெருக்கமான உறவுகளை பேணி அமைச்சு பதவிகளை வகித்து வரும் ஈ.பி.டி.பியை தற்போதைய அரசாங்கம் ஓரம்கட்டி வருவதாகவும் மற்று மெடாரு துணை ஆயுதக் குழுவான கருணா குழுவிற்கு சார்பாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்தில் செயல்படும் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்களை அரசாங்கம் களைய வேண்டும் என்றும் கருணா…

  25. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைக்கு 54.6 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கை வருகை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பில் தீர்வுத் திட்டம் முன்வைத்தமை, விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆகியனவை நடந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் கூறியுள்ளது. …

    • 3 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.