ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
சிறிலங்கா- அவுஸ்திரேலியா இடையே புதிய வான் போக்குவரத்து ஒப்பந்தம் [வியாழக்கிழமை, 26 யூலை 2007, 16:08 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே புதிய வான் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1950 ஆம் ஆண்டு வான் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயணிகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை எந்த வகை வானூர்தி மூலமும் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ண், பிறிஸ்பேர்ன், பேர்த் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் எந்தவிதக் கட்டுபாடுமின்றி எடுத்துச் செல்ல இந்த ஒப்…
-
- 1 reply
- 997 views
-
-
முன்னுக்குப்பின் முறன்படும் மகிந்த ராஜபக்ச Written by Seran - Jul 26, 2007 at 04:59 PM போர் நிறுத்த உடன்படிக்கையை பாதுகாத்து அதனைச்சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது என அரசாங்கத்தின் சமாதானச்செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ராஜிவ் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இவரது கூற்று ஒரு வாரம் முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபகச போர் நிறுத்த உடன்படிக்கை ஒரு அறிவீனமான செயல்பாடு. இதனை எந்த ஒரு புத்திசாலியும் இவ்வாறான உடன்படிக்கையைச் செய்து கொள்ள மாட்டார். என ரணில் விக்கிரம சிங்கவையும் கடுமையாகச் சாடியுள்ளார். இந்நிலையில் சமாதானச் செயலர் அது ஒரு சிறந்த உடன்படிக்கை அதனைப் பாதுகாக்க அரசாங்கம் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத
-
- 1 reply
- 1.4k views
-
-
தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை இலங்கையில் தொடரும் மோதல் நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளி யிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான பணிப்பாளர் லூயிஸ் மைக்கேல் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றியுள்ள வன்முறைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் பொதுமக்களை உபாதைகளுக்கு உட்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 21 மில்லியன் டொலர் நிதி உதவியிளை வழங்குவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.3k views
-
-
குழந்தை கடத்தல்: டச்சு தம்பதி கைது [வியாழக்கிழமை, 26 யூலை 2007, 21:23 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவிலிருந்து பிறந்து இரண்டு வாரமே ஆன குழந்தை ஒன்றை போலி ஆவணங்கள் மூலம் கடத்த முயற்சித்ததாக டச்சு தம்பதியினரை சிறிலங்கா சிறார் பாதுகாப்பு சபையினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். பெருவலவில் அக்குழந்தையின் போலி பிறப்புச் சான்றிதழுடன் அத்தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். சிறிலங்காவில் நீண்டகாலமாக இத்தகைய குழந்தைகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிறிலங்கா சிறார் பாதுகாப்பு சபையின் தலைவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்துள்ளார். புதினம்
-
- 1 reply
- 961 views
-
-
முத்தையன்கட்டில் சிறீலங்கா வான்படையினர் வான்வெளித் தாக்குதல்கள் சிறீலங்கா வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்கள் இன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வான் வெளித் தாக்குதலை நடத்தியுள்ளன. இரு தடவைகள் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிகையொலி யுத்த விமானங்கள் வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளன. முதலாவது தாக்குதல் இன்று காலை 9.10 மணிக்கும் இரண்டாவது தாக்குதல் மதியம் 12.10 மணிக்கும் குண்டுகளை வீசியுள்ளன. இன்றை வான்வெளித் தாக்குதல்கள் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டில் உள்ள புலிகளின் பயிற்சி முகாமை தாங்கள் தாக்கியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 920 views
-
-
பூநகரி பகுதியில் நேற்று விமானத்தாக்குதல். சிறிலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான கிபீர் விரவு விமானங்கள் நேற்று புதன்கிழமையில் பூநகரி மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. குறிக்கப்பட்ட குண்டுதாக்குதலின் சேத விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை இதேவேளை மண்டைத்தீவு மற்றும் முன்னரங்க பகுதிகளில் இருந்து படையினர் ஆட்லறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். -Tamilwin-
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் குவியும் விடுதலைப் புலிகளின் படையணிகள்: கொழும்பு வார ஏடு [புதன்கிழமை, 25 யூலை 2007, 14:26 ஈழம்] [பி.கெளரி] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணிக்கொண்டு இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் தாக்குதலுக்கு தயாராகுவதாகவும், அவர்களின் படையணிகள் மன்னாரில் குவிக்கப்படுவதாகவும் கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.07.07) வெளிவந்த "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: கடந்த வெள்ளிக்கிழமை 1,000 தொடக்கம் 1,200 வரையிலான விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒன்று கூடியிருந்தனர். இருபுறமும் உள்ள அவர்களது முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்கு அவர்கள் நகர்த்தப்படனர். ப…
-
- 5 replies
- 2.9k views
-
-
அரசாங்கத்தை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள்: அனுரா பண்டாரநாயக்க. தற்போதைய அரசாங்கத்தை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள் என ஸ்ரீலங்காவின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். கடவத்தையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நாட்டில் வாழ்கை செலவு 45 சதவீதமாக உயர்ந்துள்ளது மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் தவறுகளை திருத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறினால் விரைவில் இந்த அரசாங்கத்தை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்துள்ளார். தொப்பிகலையை கைப்பற்றியதாக இராணுவத்தினர் அறிவித…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமீர் அலி கூறுகிறார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மிகத்துரிதமாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற சீரிய குறிக்கோளோடு மகிந்த ராஜபக்ஸ செயற்பட்டு வருகிறார். அவருடைய 'மஹிந்த சிந்தனைய" வேலைத்திட்டம் மூலம் வரண்டு போய்க்கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை வசந்தம் வீசும் பூமியாக மாற்ற முடியும். இவ்வாறு தெரிவிக்கின்றார் அனர்த்த நிவாரண சேவைகள்அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான் குடியில் பலவேறு அபிவிருத்தித்திட்ங்;கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த வேலைகளின் ஆரம்ப நிகழவுகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். நன்றி : சுடர் ஒளி
-
- 1 reply
- 1.2k views
-
-
மூதூர் கிழக்கு பாதுகாப்பு வலயத்துக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு. மூதூர் கிழக்குப் பகுதியை அரசு அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகனடனப்படுத்திமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வடக்கு -கிழக்கிப் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தக் கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பனால் நேற்று வடக்கு. கிழக்கு முற்றாக முடங்கிப் போயிருந்தது. த.தே.கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த ஹர்த்தால் நடவடிக்கை வடக்குப் பிரதெசங்களான யாழ், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் ஆகிய மாவட்டங்களில் முழு அளவில் அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. போக்குவரத்துச் சேவைகளும் இடம் பெற வில்லை.…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் பூசாவில் கொட்டாஞ்சேனையில் வைத்து நீல நிறவானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட தமது மகன் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவிப்பதற்கு உதவுமாறு பெற்றோர் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் கோரியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் கொழும்புக் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொட்டாஞ்சேனை சிவானந்தா வீதியில் வசித்து வந்த ராஜரட்ணம் இலங்கேஸ்வரன் (வயது 34) என்பவரே கடந்த மே மாதம் 6 ஆம் திகதி நீலவானில் வந்த நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 1k views
-
-
ஜே.வி.பி மாணவர் அணியின் மோதலால் களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது. ஜே.வி.பியின் மாணவர் அணிக்கும், விஞ்ஞானபீட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால், களினி பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. இரண்டு மாணவர் அணிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பௌத்த மாணவ பிக்குகளும், ஏனைய சில மாணவர்களும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஞ்ஞானபீட மாணவர் அணித் தலைவர் சாலிய, கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் இரண்டாம் திகதி நீதிமன்றில் முன்னிறுத்தப்பட இருக்கின்றார். பல்கலைக்கழக துணை வேந்தரும், காவல்துறையினரும் எடுத்த முடிவிற்கு அமைவாக பல்கலைக்கழகம் மூடப்பட்டதாகவும், மீண்டும் எப்பொழுது திறக்கப்படும் என்பது இதுவரை …
-
- 0 replies
- 958 views
-
-
ஜ வியாழக்கிழமைஇ 26 யூலை 2007 ஸ ஜ நசார் ஸ லக்கி அல்கமவை கொலை செய்த கருணாமீது வழக்குதாக்கல் செய்ய அல்கமவின் மனைவி முடிவு செய்துள்ளதாக இராணுவ யு.என்.பி வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த தாக்குதல் கருணாவால் செய்யபட்டிருந்ததுடன் குறித்த கொலையில் காரணமாக கருணா வர்த்தகமானி அறிவித்தல் கொடுத்து தேடப்படும் நபராக இருந்து வந்தார். கிழக்கில் நடந்த பல கொலைகளில் முன்னர் இவர் சம்மந்தபட்டவர் எனவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபோது பல்வேறு பட்ட நடவடிக்கைகளை தானே முன்னின்று நடாத்தியதாக வீரப்பிரதாபம் கூறியிருந்தமை தற்போது அவருக்கே வினையாகி போயுள்ளது எனவும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல்களை ஜ.தே.கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதுடன் இந்த சட்டநடவடிக்கைக்கு பக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடிய ஒரு பள்ளிக்கூடம் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தை இலங்கை அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதைக் கண்டித்து இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு மற்றும் பணிப் புறக்கணிப்பு ஆகியன மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கான அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது. வடக்கே யாழ் மாவட்டத்தில் காலையில் கடைகள் பூட்டப்பட்டிருநத போதிலும், பின்னர் படையினர் கேட்டதற்கு இணங்க சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனி…
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியா உறுதியற்ற நிலைப்பாடு - ஏ.கே.வர்மா இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா உறுதியற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெற்காசிய ஆய்வுக் குழுவின் ஆய்வாளரான ஏ.கே. வர்மா இலங்கையின் தற்போதைய நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவானது போன்ற தோற்றப்பாட்டை இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்படுத்த முனைந்துள்ள போதிலும் பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டும் முகமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தோழமை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலையீடுகளை தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் முரண்படாத கொ…
-
- 1 reply
- 947 views
-
-
கருணா குழுவின் அட்டகாசத்தின் மத்தியிலும் மட்டக்களப்பில் முழுமையான பணிப் புறக்கணிப்பு கடையடைப்பு - ஜெயானந்தமூர்த்தி மூதூர் பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தமையைக் கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பில் வடகிழக்கில் இன்று பூரண கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் துணை ஆயுதக் குழுவின் அட்டகாசம் ஆங்காங்கே காணப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்” மூதூர் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் அப்பிரதேசத்து மக்கள…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஆனைக்கோட்டையில் அனைத்துலக தொண்டு நிறுவனப் பணியாளர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் அனைத்துலக தொண்டு நிறுவனமொன்றில் பணியாற்றும் உள்ளுர் பணியாளர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 854 views
-
-
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் நிதி உதவி: ஐரோப்பிய ஒன்றியம் [புதன்கிழமை, 25 யூலை 2007, 20:53 ஈழம்] [ப.தயாளினி] இலங்கை இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டோருக்கு 25 மில்லியன் டொலர் மனிதாபிமான நிதி உதவி வழங்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்ரியத்தின் நிதி ஆணையாளர் லூய்ஸ் மைக்கேல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இனப்பிரச்சினையால் அனைத்துலக மனிதாபிமான விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழும் அகதிகள் உட்பட அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இ…
-
- 1 reply
- 863 views
-
-
புதன் 25-07-2007 14:43 மணி தமிழீழம் [மயூரன்] குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகின…
-
- 4 replies
- 2k views
-
-
கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின்…
-
- 5 replies
- 1.6k views
-
-
புதன் 25-07-2007 14:38 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் க…
-
- 6 replies
- 2.8k views
-
-
புலிகளோடு மோதுகின்ற மஹிந்தவிற்கு ரணில்,மங்கள, ஸ்ரீபதி ஒரு பொருட்டல்ல வீரகேசரி நாளேடு உலகத்திலுள்ள பயங்கரவாத இயக்கங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள புலிகளுடன் மோதிக்கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவை சேர்ந்தவர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு பொருட்டல்ல என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு இலட்சம் பேரை அணிதிரட்டுவதாக ஐ.தே.க சூளுரைத்துள்ளது .ஒரு இலட்சம் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன் 25-07-2007 14:34 மணி தமிழீழம் [மயூரன்] பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை - சூரியாராட்சி நாளை கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராட்சி தெரிவித்துள்ளார். இதன் ஒரு அம்சமாக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்பினுள் ஊடுருவியிருப்பதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பேரணியில் மக்கள் கலந்து கொள்வதை தடுப்பதற்காகவே அரசாங்கம் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராட்சி மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா புலனாய்வு…
-
- 1 reply
- 1.2k views
-
-
அடிமைப்படுத்தி அடக்கி ஒழிக்கவென ஆட்சி நடத்திவரும் சிங்கள் ஆட்சியாளர்களிடம் இருந்து கிடைக்கும் அநீதியான செயல்களில் ஒன்றுதான் இந்த யூலைக் கலவரம். ஏன கருணாரட்னம் அடிகளார் தெரிவித்துள்ளார். தற்போது 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் பொன் விழாவையும் 1983 ஆம் ஆண்டு நடந்தேறிய. கலவரத்தின் வெள்ளி விழாவையும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணா – ஜிகாத் குழு மோதல் புலிகள் அமைப்பில் இருக்கும்போது, அம்பாறைப் பகுதிகளில் முஸ்லீம்களுக் கொதிராகத் தீவிரமாகவும், மோசமாகவும் நடந்துகொண்டவர் கருணா. பிரபாகரன் முஸ்லீம்களைச் சமாளித்துப் போவோம் எனப் பலதடவை கூறி, கேணல் கிட்டு மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்தபோதும் கருணா விடவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லீம்களைத் துரத்தியடித்தவர் கருணாதான். கருணாவின் இந்தச் செயல்களை மீட்டிய முஸ்லீம் தலைவர் ஒருவர், கருணாவுக்குப் புலியில் இருக்கும்போதே சிங்கள அரசு, இராணுவத் தொடர்பு இருந்ததோ? என ஆச்சரியப்பட்டுள்ளார். கருணாவின் இந்தமாதிரியான செற்பாடுகளுக்குப் பின்னரே யாழ்ப்பாண முஸ்லீம்களையும் வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் வந்துள்ளனர் போலுள்ளது எனவும் அவர் கருத்துக் கூறினார்…
-
- 0 replies
- 2.8k views
-