ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
"ஆள்பிடிக்கும்" வேலையில் மகிந்த தீவிரம். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவாக மேலதிக உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட தலைவர் வஜிர அபேயவர்த்தனவை தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்ச விளக்கம் கேட்டுள்ளார். மேலும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. தலைவர் ரவி கருணாநாயக்கவையும் மகிந்த ராஜபக்ச தொடர்ப…
-
- 0 replies
- 883 views
-
-
வடக்கு வலிந்த தாக்குதல்களை நிறுத்த மகிந்த முடிவு? வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்களை இடை நிறுத்தம் செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்குவது குறித்து நோர்வே அனுசரணையாளர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அணுகியிருப்பதாகவும் மகிந்தவின் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "கிழக்கு பிரதேசத்தின் புவியியல் அமைப்புக்கும் வடபகுதி அமைப்புக்கும் முற்றான வேறுபாடு உள்ளதாகவும் அப்பகுதியில் எதுவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதில்ல என்றும் சிறிலங்கா இராணுவத் தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது. அமைதி முயற்சிகளைத் தொடங்கும் வகையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள…
-
- 0 replies
- 960 views
-
-
சனி 21-07-2007 17:00 மணி தமிழீழம் [மயூரன்] பாலியல் துன்புறுத்தலுக்கு அஞ்சி பெண் நஞ்சருந்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாம் வட்டாரம் கொக்கட்டிச்சோலைப்பகுதியில் 44 அகவையுடைய பெண் ஒருவரை விசாரணைக்காக தனியாக இராணுவத்தினர் அழைத்ததையிட்டு அப்பெண் இராணுவத்தினர் பாலியல்துன்புறுத்தலுக்கு உட்படுத்துவர் என அஞ்சி நஞ்சருந்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது நஞ்சருந்தியவர் பொன்னம்பலம் புவனேஸ்வரி எனத்தெரிவருகிறது. பதிவு
-
- 2 replies
- 1.9k views
-
-
வியாழன் 19-07-2007 13:15 மணி தமிழீழம் [மயூரன்] ''கிழக்கின் உதயம்'' வெற்றி நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் தொடங்கின '' கிழக்கின் உதயம் '' வெற்றி விழா சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8.45 மணியளவில் மகிந்த ராஜபக்ச முப்படைகளின் அணிவகுப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலைல மாணவர்கள் தேசிய கீத்தைப் பாட மகிந்த ராஜபக்ச தேசியக் கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த படையினருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதும் கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றி நிகழ்வில் சிறீலங்கா அதிபரிடம் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றியதற்ககான சாசனத்தை முப்படைத் தளபதிகளும் கையளித்தனர். …
-
- 24 replies
- 3.2k views
-
-
புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது: குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன. 1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார். குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர்.…
-
- 3 replies
- 1.9k views
-
-
Posted on : Sat Jul 21 8:38:46 EEST 2007 புலிகளுடன் ஒப்பந்தம் செய்து குற்றமிழைத்தது இலங்கை! மனம் புழுங்குகின்றார் ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான பிரதேசம் ஒன்றைத் தாரைவார்த்து, உடன்படிக்கையொன்றைச் செய்ததன் மூலம் குற்றமிழைத்துள்ளது இலங்கை. அத்தகைய குற்றத்தை இழைத்த ஒரே நாடு இலங்கையைத் தவிர வேறெங்கும் இருக்க முடியாது. இவ்வாறு கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மஹரகம, தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 17ஆவது சம்மேளனம் தொடர்பாகத் தாம் அனுப்பி வைத்த ஆசிச் செய்தியிலேயே ஜனாதிபதி இப்படிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஜனாதிபதி அந்தச் செய்தியில் கூறியிருப்பதாவது: எமது வீரதீரமிக்க பாதுகாப்புப் படையினரால் மிலேச…
-
- 1 reply
- 2k views
-
-
உலக வலைபதிவாளர் சங்கம் தமிழீழ தேசத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது.இவ் ஒன்றிய இணையத்தின் பதிவாளர்களில் ஒருவராக நமது கள உறவான தூயா இருப்பது குறிப்பிடதக்கது http://worldub.blogspot.com/ இதில் வலது கரை கடைசியில் இந்ந்திய தேசியக்கொடிக்கு கீழே எமது தேசத்தின் கொடி பறக்கின்றது \ மேலதிக தகவல்களுக்கு http://thooya.blogspot.com/
-
- 9 replies
- 3.3k views
-
-
-
கடைசித் தமிழன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கஜேந்திரன் சூளுரை கௌரவமான வாழ்வு: இன்றேல் கொளரவமான சாவு என்கிறார். "தமிழன் ஒரு போதும் சிங்களவர்களுக்கு அடிபணியமாட்டான். கடைசி தமிழன் இருக்கும் வரை இந்த யுத்தம் நடந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் கௌரவமாகவெ செத்து விடுவோம். எம்மை இந்தச் சிங்களக் காடையர்கள் அடக்க முடியாது." இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம் பற்ற தொப்பிகல கைப்பற்றப்ட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயம் த.தே.கூட்டமைப்பின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் சூளுரைத்தார். அவர் அங்கு மேலும் கூறியவையாவது : சிங்களக் காடையர்கள் கிழக்கைப் பிடித்து அங்கு தம…
-
- 1 reply
- 1.5k views
-
-
`எனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஊழல் பெருச்சாளிகளின் வெற்றி' [21 - July - 2007] `எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாலும் என்னை பதவியிலிருந்து துரத்த முடியாது' கொழும்பு மாநகரசபையில் தனக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பிரதிமேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு; 13.07.2007 ஆம் திகதி கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்ற தலைப்பின் கீழ் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் செய்திகள் வெளியாகியது சகலரும் அறிந்ததே. இச் செய்திகளில் மா…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : 2007-07-21 அம்பலமாகிறது அணுகுமுறை தொப்பிகலவைக் கைப்பற்றி, கிழக்கை முழுதாக மீட்டுவிட்டோம் என்ற வீரச் செருக்கோடு நேற்று முன் தினம் நாட்டு மக்களின் முன் மார்தட்டிப் பேசினார் இலங் கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை விடயத் தில் தமது அரசு என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது என்பதைத் துலாம்பரமாக அவர் வெளிப்படுத்தி யிருக்கின்றார். அவரது வார்த்தைகளுக்கு இடையில் வாசகங் களுக்கு மத்தியில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அவரது கருத்தியல் நிலைப்பாட் டையும் சிந்தனைப் போக்கையும் துல்லியமாக உணர்ந்து அறிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண…
-
- 2 replies
- 2.3k views
-
-
சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்' [21 - July - 2007] ஏ.ரஜீவன், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான பொது இணக்கப்பாட்டை எட்டாவிட்டால் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்தால் நாடு மறக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். கொழும்பில் சுதந்திரசதுக்கத்தில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மோதல் போக்கு தென்பட்டதாகவும் நாட்டின் தலைவர் ஒருவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனங்கள், தொழிற்துறையின் சங்கம், கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
மினிமுகாம் மீது தாக்குதல் பத்துப்படையினர் பலி. மன்னார் நீலச்சேனைப் பகுதியில் இன்று அதிகாலை 3.00மணியளவில் சிறிலங்காப் படையினரின் மினிமுகாம் ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். இத் தாக்குதலில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நான்குக்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன் முழுவிபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை - சங்கதி
-
- 5 replies
- 3.3k views
-
-
"கிழக்கின் உதயம்" தமிழ்மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டம்: த.தே.கூ. அரியநேத்திரன் கண்டனம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மக்களை இடம்பெயர்த்தி விட்டு தமிழ் மக்களின் துன்பத்தில் இனவெறி கொண்டாட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கொண்டாடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் மீளக் குடியமர்த்திவிட்டதாக கூறி "கிழக்கின் உதயம்" நிகழ்வைக் கொண்டாடிவிடுகின்ற செய்தியானது அப்பிரதேச மக்களின் மனதைப் பாதிக்கின்ற செயலாக அமைகின்றது. உண்மையில் மட்டக்களப்பு படுவ…
-
- 0 replies
- 993 views
-
-
வன்னியில் போர் மேகம் தயாராகிறது - ரொய்ட்டர் வீரகேசரி இணையத்தளம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இளைஞர்கள் பலவந்தமாக படைகளில் இணைக்கப்படுவதால் இளைஞர்கள் ஒளிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களிடம் அப்பிரதேசவாசிகள் பலர் உரையாடியுள்ளனர் . அமெரிக்கா , பிரித்தானியா , ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யபட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு குடும்பத்தில் ஒருவரை வழங்க வேண்டுமென புலிகள் வலியுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார். உங்கள் குடும்பத்தில் விடுதலைப்புலி போராளிகள் யாரும் இல்லை எனவே நீ கட்டாயமாக அமைப்பில் இணை…
-
- 4 replies
- 2.9k views
-
-
மங்களவுக்கு "ஆசீர்வாதம்": சந்திரிகா [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 20:43 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மக்கள் பிரிவை உருவாக்கி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் மங்கள சமரவீரவுக்கு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமரதுங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள சந்திரிகா, மங்களவுக்கு அனுப்பிய கடிததத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசப்பற்றுள்ளவர்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வைக்க முடியும் என்பது எனது நீண்டகால கருத்தாகும். என்னுடைய ஆட்சிக்காலத்தில் சிறுபான்மைக் கட்சிகளினதும் ஆதரவைப்பெற்று பெருமளவு வெற்றி கண்டிருந்தேன். அப்போது கூட ஐக்கிய தேசியக் கட்சியை …
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்.பல்கலை துணைவேந்தர் நியமனம்; மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு சிபார்சு யாழ்.பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு நேற்றுக் கூடி ஆராய்ந்தது. பல்கலைக்கழக பேரவை சிபார்சு செய்த மூவரின் பெயர்களை அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், வரிசைக் கிரமப்படி ஜனாதிபதிக்கு அனுப்புவது என மானிய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. பதில் துணைவேந்தர் பேராசிரியர் இ.குமாரவடிவேல், பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி, சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசி ரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு நேற்று மானிய ஆணைக்குழுவால் அனுப்பப்பட்டுள் ளன. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி துணைவேந்தராக விரைவில் நியமனம் செய்வா…
-
- 1 reply
- 1.7k views
-
-
மூன்று மொழிகளில் புதிய பத்திரிகைகள் வெளியிடப்போவதாக ஐ.தே.க அறிவிப்பு. சிறீலங்காவில் ஊடகத்துறை, அரசினால் அடக்கப்பட்டுவரும் நிலையில், மூன்று மொழிகளில் புதிய பத்திரிகைகள் வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிங்கள மொழிப் பத்திரிகை "குஞ்சநாத" என்ற பெயரிலும், தமிழ்ப் பத்திரிகை "நம் தேஸம்" என்ற பெயரிலும், ஆங்கிலப் பத்திரிகை "த ஜேர்னல்" என்ற பெயரிலும் வெளிவர இருப்பதாகக் கூறினார். பத்திரிகை ஆரம்பிப்பதற்கான பதிவுகளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட நீதியாளர் அனுரசிறீ ராஜசங்க முன்னிலையில் நேற்று மேற்கொண்டிருந்தார். -Pathivu-
-
- 0 replies
- 976 views
-
-
கொழும்பில் சிங்களவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மூவர் கொண்ட வெள்ளை சிற்றூந்துக் குழுவினரால் சிங்கள இனத்தவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஜோர்ஜ் ஆர். டி. சில்வா வீதியைச் சேர்ந்த றங்கா இந்திக பெரேரா என்பவரே நேற்று மாலை 4.50 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக றங்கா இந்திக பெரேராவின் மனைவி கிறிஸ்ரீனா பெரேரா கொட்டாஞ்சேனை காவல்துறை நிலையத்தில் நேற்று மாலை முறையிட்டுள்ளார். -Pathivu-
-
- 1 reply
- 1.1k views
-
-
"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்] மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடு…
-
- 3 replies
- 2k views
-
-
தேர்தலில் வெற்றி பெற்றால் ரணில் பிரதமர்;மங்கள உதவிப்பிரதமர் இனப்பிரச்சினைக்கு 9 மாத காலத்திற்குள் தீர்வு காண இணக்கப்பாடு ஐ.தே.க. - சு.க. (மக்கள் பிரிவு) உடன்படிக்கை கைச்சாத்து -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- இன நெருக்கடிக்கு பிளவு படுத்தப்படாத நாட்டிற்குள் அதிகாரப் பரவலாக்கல் மூலம் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை 9 மாத காலத்திற்குள் முன்வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் உடன்பாடு கண்டுள்ளன. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சு.க. மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் நேற்று வியாழக்கிழமை விரிவான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். இலங்கை வாழ் …
-
- 2 replies
- 1.9k views
-
-
பணிக்காலம் முடிந்தும் நீடிப்பா? ஓய்வா? என தவிக்கும் 7 மேஜர் ஜெனரல்கள் [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:20 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் 7 மேஜர் ஜெனரல்கள் தங்களது மேலதிக பணிக்காலம் முடிந்த பின்னரும் தொடர்ந்து உயர்நிலைப் பொறுப்புகளிலே நீடித்து வருகின்றனர். மேஜர் ஜெனரல்களான என். ரணசிங்க- இராணுவப் பயிற்சிக் கல்லூரி கட்டளையதிகாரி உபுல் பெரேரா- மாஸ்டர் ஜெனரல் நிமல் ஜயசூர்ய- வெலிஓயா பிரதேச கட்டளைத் தளபதி சனத் கருணாரட்ண- பனாகொட 2 ஆம் பிரதேச கட்டளையதிகாரி அசோக தொரதெனிய- இராணுவ மாஸ்ரர் ஜெனரல் எல்.பி. அலுவிகார- அட்ஜண்ட் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய- கிழக்கு கட்டளைத் தளபதி ஆகியோர் கடந்த ஏப்ரல் 31 ஆம் நாள்…
-
- 1 reply
- 948 views
-
-
சனி 21-07-2007 01:13 மணி தமிழீழம் [தாயகன்] தமிழீழத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு உதவுவதாக ஜப்பான் அறிவிப்பு தமிழீழப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 32 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக, ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நிதி வழங்கப்பட இருக்கின்றது. டென்மார்க்கின் டெனிஸ், த ஹலோ ட்றஸ்ட், மக், நோர்வேயின் என்.பி.ஏ, சுவிஸின் எப்.எஸ்.டி போன்ற தொண்டர் அமைப்புக்களே ஜப்பானின் இந்த நிதியுதவியினைப் பெறவுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் கொழும்பிற்கான ஜப்பான் தூதுவர் கியோசி அறாகியும், சிறீலங்கா அரச அ…
-
- 0 replies
- 829 views
-
-
வெள்ளி 20-07-2007 14:55 மணி தமிழீழம் [சிறீதரன்] புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைத்து பேச்சுக்கு இழுக்கும் மேற்குலகின் திட்டம் மிகவும் கடினமானது - புலனாய்வு இணைத்தளம் மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களை பணிய வைத்து மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அமைதி பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தலாம் என்று கருதுவதாகவும் புலனாய்வு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதன் வெளிப்பாடே என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
குடும்பிமலைக் களிம்பு -சேனாதி- ஒப்பீட்டளவில் விடுதலைப் புலிகளின் செறிவான கட்டமைப்புக்கள் இல்லாத கிழக்கிலே தன் படைகளைப் பரவலாக விரித்து வைத்திருக்கிறது சிறிலங்கா. அதைப் பாரிய படையச் சாதனையாக் காட்டும் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அதே நேரம், வடக்கையும் கைப்பற்றுவோம் என்று தன் நப்பாசையை வெளியிட்டிருக்கிறார் மகிந்தர். அரச படையினரினதும் விடுதலைப் புலிகளினதும் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் சார்ந்து அடிக்கடி கைமாறும் இடங்கள் கிழக்கில் பல உள்ளன. அவ்வாறான சம்பவம் ஒன்று இம்முறை மட்டும் ஊதிப்; பெருப்பிக்கப்படுவதன் பின்னணியும் அதைத் தொடர்ந்து கொழும்பு செய்யவிருக்கின்ற நகர்வுகளும் ஆய்வுக்குரியவை. சமர்க்கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது பெரும்பாலான …
-
- 0 replies
- 1.2k views
-