ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பென்சேகாவின் உலங்குவானூர்தி பலாலியில் தரையிறங்கும் நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சரத் பொன்சேகாவின் பயணம் தாமதமாகியதுடன் தாக்குதலின் பின்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தனது பயணத்தை கைவிட்டுள்ளதாகவும் படைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாய…
-
- 5 replies
- 1.8k views
-
-
சமஷ்டிமுறையை தவிர வேறு எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் : த.தே.கூ Written by Ravanan - Aug 21, 2007 at 08:43 PM இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சமஷ்டிமுறையிலான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கவிருக்கும் யோசனைத் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வைத் தவிர வேறு எந்த ஒரு தீர்வுத்தி;ட்டத்தையும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 910 views
-
-
செவ்வாய் 21-08-2007 22:47 மணி தமிழீழம் [மயூரன்] இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியாளர் பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு அனைத்துலக சுயாதீன குழுவின் தலைவரும் முன்னாள் இந்திய பிரதம நீதியாளருமான பி.என். பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அனைத்துல சுயாதீனக் குழு தொடர்பான விடயங்களே ஆராயப்பட்டன. சுயாதீனக் குழுவுக்கு சிறீலங்கா அரசாங்கம் சலக ஒத்துழைப்புகளையும் வழங்கும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். pathivu
-
- 0 replies
- 910 views
-
-
நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்சப்படுகின்றன : ரணில் Written by Ravanan - Aug 21, 2007 at 08:23 PM மக்களின் இறைமை, ஊடக சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம் முதல் பாரிய மற்றும் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எமது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களின் இறைமை மீறப்படுவதனை பார்த்துக்கொண்டு இனியும் மௌனமாக இருக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்ச…
-
- 0 replies
- 733 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 19:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்த சிறிலங்கா நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை எதிரணியினர் கடுமையாக கிண்டலடித்தனர். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தீர்வை முன்வைக்க மகிந்த அரசாங்கம் முனைவதாக ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதைத் தொடர்ந்து இந்த விவாதம் சூடு பிடித்தது. விமல் வீரவன்சவின் கருத்துக்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டொ புள்ளே பதிலளிக்கையில் "தீர்வு திட்டம் ஒற்றையாட்சியின் கீழேயே முன்வைக்கப்படும் அதில் மாற்றமில்லை" என்றார். இதனையடுத்து உருவான சூடான வாய்த்தர்க்கங்களுக்கு மத்தியில் "அதிகாரப்பரவலாக்கலை சி…
-
- 2 replies
- 1.5k views
-
-
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து தாம் இன்று விலகியதாக ஐ.தே.கட்சி இன்று அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தப்பட் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்கா அறிவித்தார். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரனையின் செயற்பாடுகளைப் பற்றி கெல உறுமையவின் பாரளுமன்ற அமைச்சர் சம்பிக்க குறை கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜானா
-
- 0 replies
- 716 views
-
-
பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இலங்கையில் தொடர் கதை [21 - August - 2007] வ. திருநாவுக்கரசு * கடும் போக்காளர்களுக்கு வளைந்து கொடுக்காமல் ஆளுங்கட்சி செயற்படுவதே அவசியத்தேவை "எனது செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் மக்கள் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக எனது ஆலோசகர்கள் பேச்சை நம்பி விட்டேன்"- முஷாரப். மனிதாபிமான பணியாளர்கட்கு இலங்கை உலகிலேயே மிகப் பயங்கரமான நாடுகளில் ஒன்று என ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் சேர். ஜோன் ஹோம்ஸ் அண்மைய இலங்கை விஜயத்தின் போது தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், பின்னர் பொதுக் கூட்டமொன…
-
- 0 replies
- 771 views
-
-
இராமேஸ்வரம் மீனவர் மீது துவக்கு சூடு [21 - August - 2007] இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் மீன்களையும் கொள்ளையடித்து சென்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் அட்டையை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆம் திகதி முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டுவிட்டு சனிக்கிழமை மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவ்வாறு 775 விசைப் படகுகள் மீன்துறையினரின்…
-
- 0 replies
- 961 views
-
-
தாண்யடி கிராமத்தின் பெயரை சிங்களத்துக்கு மாற்றியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 17:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை தாண்டியடி கிராமத்தின் பெயரை சிறிலங்கா அரசாங்கம் சிங்களப் பெயராக மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இரானுவத்தினரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து வருகிறது. கடந்த 28.07.07 அன்று இலுப்படிச்சேனை வீதிக்கு ராஜபத்திரன மாவத்தை என்று பெயர் சூட்டப்பட்டது. தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச மக்களை நேற்று திங்கட்கிழமை ஒன்று கூட்டிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாண்டியடிப் …
-
- 4 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 21-08-2007 15:29 மணி தமிழீழம் கோபி விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்சில் சிறீலங்காப் படையினர் பலர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா மற்றும் தம்பனைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோட்டார் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலர் காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த படையினரில் ஒருவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை சிறீலங்காப் தேசிய பாதுகாப்பு ஊடக மையமும் உறுதி செய்துள்ளது. நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....576a8fd4c9ec699
-
- 3 replies
- 2.9k views
-
-
குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை படையினர் அவசர, அவசரமாக பல்குழல் வெடிகணை செலுத்திகளை யாழ். முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு நகர்த்தி இந்த செறிவான வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். பலாலியிலிருந்து இன்று காலை இரண்டு பல்குழல் வெடிகணை செலுத்திகள் யாழ். முற்றவெளியில் பொது மைதானத்துக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்தியுள்ளனர். வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து அதனைப் பின்னகர்த்துவதும் அதன் பின்னர் முன…
-
- 5 replies
- 2.2k views
-
-
பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் மீது புலிகள் கடும் எறிகணை வீச்சு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 21, 2007 - 06:06 AM - GMT ] யாழ். குடாவில் உள்ள படையினரின் மூலத்தளங்களான பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பகுதிகளில் உள்ள படைத்தளங்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று காலை 9.30 மணிமுதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதலை தாம் நடத்துவதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 5 replies
- 3.3k views
-
-
மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு விசனம் யுத்தத்தால் இலங்கைக்குள் இடம் பெயர்துள்ள ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் அவல வாழ்வில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதே தருணத்தில் முன்னைய வதிவிடங்களுக்குச் செல்லுமாறு தமது விருப்பத்துக்கு மாறாக இம்மக்கள் நிர்ப்பந்திக்கபட்டு வருகின்றனர். இவ்வாறு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளளது இந்த அகதிகள் உள்நாட்டுக்குள் இம் பெயர்ந்த நபர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளளார்க
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா தடுத்து நிறுத்தவேண்டும் * தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது -பி.ரவிவர்மன் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தை தனித்தனியாக பிரித்து கிழக்கு மாகாணத்தில் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர சாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்திக் கோரப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ், முஸ்லிம்களை பொலிஸ் புலனாய்வு பிரிவில் இணைக்க செங்கலடியில் நேர்முக பரீட்சை - நியமனம் பெற்றதும் யாழ்பாணத்தின் யுத்த முனையில் வேலை. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் இழைஞர்களை இனைத்து காவல்துறை நிர்வாக சேவையினை மேலும் உளவுத்துறை தொடர்பில் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் விதத்தில் காவல் திணைக்களம் நடவடிக்கைகள் பலவற்றினை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்புப் பிரதேச உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் பொருட்டு தமிழ் - முஸ்லிம் காவல் உத்தியோகத்தர்களை புதிதாக உளவுத்துறைப் பிரிவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளை காவல் சேவையில் சேர்த்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 21-08-2007 03:10 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் ஆட்டிலெறி பரிமாற்றம் விடுதலைப்புலிகளும் சிறீலங்கா படையினரும் திங்கட்கிழமை மாலை கடுமையான ஆட்டிலெறி எறிகணைப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் கோப்பாய் பகுதியில் இருந்து பூநகரி, முகமாலை பகுதிநோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகள் உசன், மிருசுவில் தென்மராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. இதனையடுத்து கோப்பாய் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரியவருகிறது. இருதரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வ…
-
- 2 replies
- 1.7k views
-
-
நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போ…
-
- 8 replies
- 2k views
-
-
திங்கள் 20-08-2007 20:50 மணி தமிழீழம் மயூரன் தாய்லாந்திருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்காப் படையினரால் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்கா விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா குற்றத் தடுப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவேவேளை இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஸ்தாபனத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த போதும் இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பபதாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
மகிந்தவின் பிரத்தியேக செய்தியுடன் வன்னி செல்கிறார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்: கொழும்பு இணையத்தளம் [திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007, 18:57 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஜெகத் அபயசிங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்க வன்னிக்கு இன்று செல்வதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஜெகத் அபயசிங்க, அனுராதபுரத்தில் உள்ள தமது கிளை அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்றுள்ளதாகவும், ஆனால் அவர் அங்கிருந்து வவுனியா செல்வாரா என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மகேஸ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார் …
-
- 1 reply
- 1.5k views
-
-
புதிய உலக ஒழுங்கில் பூர்விக தேசிய இன விடுதலை -சி.இதயச்சந்திரன்- இலங்கை விவகாரத்தில் தலையிடும் நாடுகள் அனைத்தும், தமிழ் மக்களை தேசிய சிறுபான்மையினமாக அரசு கூறுவது போன்று கருதுவதே தற்போதைய சிக்கல் நிலைமைக்கு பெருந்தடையாகவுள்ளது. தேசிய இனம் (Nation) என்கிற வரையறைக்குள் தமிழ் மக்களை உள்ளடக்கினால் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு விடுமென்ற அச்சமே 'சிறுபான்மையினர்" என்ற சொல்லாடலை பயன்படுத்தத் தூண்டுகிறது. தேசிய இனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பொதுப்பண்புகளான தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரே மொழி, கலாசாரம், தொன்மை போன்றவை தமிழ் மக்களிடம் அமைந்திருந்தும் இறையாண்மை என்கிற ஆக்கிரமிப்புச் சிறைக்குள் அவர்களை அடைத்தலே பிராந்திய …
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை 20 ஓகஸ்ட் 2007 16:33 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் வவுனியாவில் சிறிலங்கா ஊர்காவற் படையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் சுமதிபுரப் பகுதியில் உள்ள வீதித்தடையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இந்த வீதித்தடையில் நின்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ஊர்காவற் படையினர் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படையினரின் ஆக்கிரமிப்பு சிங்களக் குடியேற்றப்பகுதியில் ஜீப்பில் ஆயுதங்களுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி வீதித்தடையை நெருங்கியதும் ஊர்காவற் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 20-08-2007 16:23 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் இன்று காலை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டெனிஸ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதில் கொல்லப்பட்டவர் புளியங்கூடல் தெற்க்கைச் சேர்ந்த சிவசாமி சிறிதரன் (வயது 31) மற்றும் படுகாயம் அடைந்தவர். அதே இடத்தைச் சேர்ந்த அ.யூகிட்டன் (வயது 21) என்பவாராவார். காலை 7.00 மணியளவில் இவர்கள் உந்துறுளியில் யாழ்ப்பாணம் பண்னைப் பாலம் ஊடாக கடமைக்கு வந்த வேளையில் இவர்களை இரண்டு இலக்கமற்ற உந்துறுளிகளில் இராணுவப் புலனாய்வாளர்களுடன் ஈ.பி.டி.பி ஒட்…
-
- 4 replies
- 1.1k views
-
-
புலிகளுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம் என்கிறார் கோதாபய ராஜபக்ஷ `எந்தவிதமான கலாசாரமும் தெரியாதவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பாக கற்க வேண்டிய தேவை தமக்கில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 4, 5 மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் இருந்துவிட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன, அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாதுள்ளதென கூறும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை' என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி சேவையான `தெரண'வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது; "எமது நாட்டில் ஒரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளினால்…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-