ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் - ஜனாதிபதி Published By: Rajeeban 27 Mar, 2023 | 09:17 AM அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும் சீனாவுடனான ஈடுபாடுகள் குறித்தும்இலங்கை அமெரிக்காவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவார்ட் பல்கலைகழகத்துடனான மெய்நிகர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்தும் என்ற அச்சத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். துறைமுகம் சீனாவிற்…
-
- 0 replies
- 663 views
-
-
வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை – சர்வதேச நாணய நிதியம் அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது. வரி சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328615
-
- 0 replies
- 304 views
-
-
600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த முயற்சி; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த இடமளிக்கப் போவதில்லை - இ.பெ.கூ சேவை சங்கம் Published By: NANTHINI 26 MAR, 2023 | 04:46 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். துறைமுகம், மின்சாரம் மற்றும…
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல் “இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்கு…
-
- 12 replies
- 1.1k views
-
-
வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை March 25, 2023 சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் , இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றன…
-
- 20 replies
- 1.2k views
-
-
100-150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவு, ஆடைப் பொருட்கள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அதேவேளை தொழில்கள், விவசாய உபகரணங்கள், குளியலறை சாதனங்கள…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய துறைத் தலைவர் நியமனம் Published By: NANTHINI 26 MAR, 2023 | 06:12 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின்போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில், ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்க…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
அரச சம்பளத் தொகையில் பெரும்பகுதி இராணுவத்திற்கே செல்கிறது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) பெரும்பகுதி பொலிஸ் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு செலவிடப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க மாத்திரம் 33,940 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேர…
-
- 1 reply
- 560 views
-
-
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக பொலிஸ் பிணையில்லா வழக்குகளை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் தலைமையக கட்டளைத் தளபதிகள், நிலையத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள கட்டளைத் தளபதிகளை அழைத்து வாய்மொழியாக அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் அந்த சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் தலைமையகம் மற்றும் நிலையத் …
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் – அமைச்சர் நளின் வலியுறுத்தல் அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜா எல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த கால பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. எனினும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும். அதனூடாக மக்களின் வருவாயை அதிகரித்து நாட்டின் பொருளாதா…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் அம்பலமாகிறது பிள்ளையானின் படுகொலைகள் மற்றும் ஊழல்கள் - பழிவாங்கப்படும் அரச அதிகாரிகள்! Vhg மார்ச் 25, 2023 தேர்தல் விதிமுறைகளை மீறி சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்தனமடு ஆற்றுப்பகுதியை கடப்பதற்கான வள்ளம் ஒன்றினை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் மூவரும் பிள்ளையானுக்கு ஆதரவாக செயல்படும் அரச அதிகாரிகள் இருவருமாகச் சென்று நேற்றைய தினம் கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 768 views
-
-
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் மற்றும் இனங்காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டது. ஐக்க…
-
- 0 replies
- 567 views
-
-
வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - சம்பிக்க ரணவக்க Published By: DIGITAL DESK 5 25 MAR, 2023 | 08:10 PM சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன் அறவீட்டை குறைந்த மட்டத்தில் இரத்து செய்ய நேரிடும். இதனால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் வங்கி வைப்பாளர்கள் ஏதாவதொரு வழியில் பாதிக்கப்படுவார்கள், ஆகவே நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதையிட்டு பட்டாசு வெடித்து, கொண்டாடுவது அவசியமற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவி…
-
- 0 replies
- 642 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது முறிந்து விழுந்த மரம் : மயிரிழையில் தப்பிய தாய்மார் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 11:05 AM வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர். நேற்று (24) மாலை வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ம…
-
- 2 replies
- 320 views
- 1 follower
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:18 PM அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர். அனைத்துப் பல்கலைக்கழக மா…
-
- 1 reply
- 726 views
- 1 follower
-
-
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி: நிபந்தனைகள் என்ன? இலங்கை விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா தோல்வி அடையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் முதலாவது தவணை தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் தெரிவித்தார். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற…
-
- 2 replies
- 372 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து ரூ.10 இலட்சம் பொருட்கள் திருட்டு யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையிலிருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் நீண்டகாலமாக களவாடப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள் சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள், கட்டுக்கட்டாக காணாமல் போயுள்ளன. இதனை அறிந்துகொண்ட நிர்வாகம் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/246129
-
- 2 replies
- 736 views
- 1 follower
-
-
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/246142
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
வலுசக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:45 PM (எம்.மனோசித்ரா) மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து வெளியேறுங்கள் – ஆளுநர் உத்தரவு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த…
-
- 0 replies
- 709 views
-
-
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்! டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகளிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான துரித இரத்தப் பரிசோதனைக்குரிய உச்சபட்ச கட்டணம் 1200 ரூபாவாகும். எனினும், இதற்காக 3000 ரூபாய் வரை கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முழுமையான இரத்த பரிசோதனைக்கான …
-
- 0 replies
- 350 views
-
-
சித்தார்த்தனை இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் – சஜித் எச்சரிக்கை! சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தர்மலிங…
-
- 0 replies
- 208 views
-
-
இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள் உணவுபாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் - செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் Published By: Rajeeban 25 Mar, 2023 | 12:25 PM இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் ஓரளவு அல்லது மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. போதுமான வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் தற்போதைய நிலை 2023 இல் மோசமடையும் எனவும் செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதாரநெருக்கடியின் தாக்கம் தொ…
-
- 0 replies
- 138 views
-