ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
Posted on : Mon Jun 25 6:49:50 EEST 2007 புலிகளின் குடும்பிமலை ""பெய்ரூட்'' முகாம் எந்நேரமும் எம்வசமாகலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பி மலைப் பிரதேசத்தில் (தொப்பிகலவில்) அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் "பெய் ரூட்'' முகாமை படையினர் அண்மித்துள்ள னர் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பலமான கோட் டையாக விளங்கிய ""பெய் ரூட்'' முகாம் பகுதியை படையினர் எந்த நேரத்திலும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்றும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற் றும் காலநிலை சீரின்மை போன்ற பிரச்சினை கள் இருந்த போதும் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றும் படைத் தரப்பு மேலும் தெரிவித்தது. இராணுவத்தின் கொமாண்டோப் பிரி வைச் சேர்ந்த 50 பேர் கொண்ட அணி விடு தலைப் புலி…
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : 2007-06-25 சர்வதேச அழுத்தப் பொறிக்குள் மெல்ல மெல்ல வீழும் கொழும்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங் கையின் "கீர்த்தி' கொடிகட்டிப் பறப்பது குறித்து இப்பத்தி யில் ஏற்கனவே சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டிருந்தோம். அக் கீர்த்தி மென்மேலும் பரவி வருவதை தற்போதைய செய்தி கள் உறுதிப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸிலில், இலங்கை குறித்து விசேட கவனம் எடுக்க வேண்டும் எனப் பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி ஆராயும் அளவுக்கு நிலைமை உயர்ந்து(?) சென்றிருக்கின்றது. மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ. நாவின் கீழ்நிலை செயலாளர் நாயகம் கடந்த வெள்ளியன்று ஐ. நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, நெருக்கடிகள் நிறைந்த ம…
-
- 0 replies
- 910 views
-
-
தமிழரிடமிருந்து பறி போய்விட்ட திருமலையின் `தனித்தமிழ்ப் பிரதேசங்கள்' - (தேசியன்) எமது நிலம் எமக்கு வேண்டுமென தாயகத்திலும் புலத்திலும் உரிமைக்குரல் எழுப்பிவரும் தமிழ் மக்களுக்கு சவால்விடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் திருகோணமலைத் துறைமுகத்தையடுத்துள்ள தென்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. `தேசிய பாதுகாப்பு' ,உயர் பாதுகாப்பு வலயம்' அதியுயர் பாதுகாப்பு வலயம்' ஆகிய இன்னோரன்ன பெயர்களின் கீழ் வளமிக்க தமிழர் தாயக பிரதேசங்கள் உருக்குலைக்கப்பட்டே வருகின்றன. அந்த வகையில் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு பசிக்கு இறுதியாக இரையாகியுள்ள தமிழர் நிலங்களாக மூதூர் கிழக்கும் சம்பூரும் வந்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மே 30 என திகதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா- சீனா கூட்டுச்சதி: விரைவில் வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் முப்பரிமாண ராடார். வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியி…
-
- 9 replies
- 2k views
-
-
இராணுவத்தின் திட்டமிடல்களால் மரபு வழிச்சமர் மாற்றம் பெறுமா? -அருஸ் (வேல்ஸ்)- இராணுவத்தீர்வே இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்பதுதான் காலம் காலமாக ஆட்சி செய்துவரும் அரசியல் கட்சிகளினதும், அரச தலைவர்களினதும் பிரதான நோக்கமா? என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது பொருளாதாரத்தை பேணுவதற்காகவும், தென்னிலங்கைப் பகுதிகளின் அபிவிருத்திக்கும் என அனைத்துலகத்தின் உதவிகளையும் கடன்களையும் பெறுவதற்காக அவ்வப்போது அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, அனைத்துக்கட்சிக்குழு என்பன தொடர்பான பேச்சுக்கள் அடிபடுவதுண்டு. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவேனும் ஒரு ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் வீதியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டுவருகின்றன
-
- 0 replies
- 803 views
-
-
இரத்தக்களரியை தணிப்பதற்கு இணை தலைமைகளின் கூட்டம் வழியேற்படுத்தும் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் மோதல்களையும் இரத்தக்களரியையும் தணிப்பதற்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் வழியேற்படுத்துமென சமாதான செயற்பாடுகளின் அனுசரணையாளரான நோர்வே தெரிவித்துள்ளது.நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுமென இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.முதல் நாளான இன்று ஆரம்ப நிகழ்வும் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெறுவதோடு தமது செயற்பாடுகளை இணைத்தலைமைகள் மதிப்பீடு செய்யவுள்ளன. இரண்டாம் நாளான நாளை செவ்வாய்க்கிழமை, நாட்டில் அதிகரித்துச் செல்லும் மோ…
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கையின் கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடு செல்ல முனைப்பு. இலங்கையில் இடம்பெறுகின்ற மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்வது என்பது கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெறுகின்ற நிகழ்வுதான். ஆனால் அண்மையில் கிழக்கும் மாகாண மோதல்கள் காரணமாக திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்குப் பகுதியில் இருந்தும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் இருந்து பெரும்பாலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளில் முனைப்பாக ஈடுபட்டு வருவதாக தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கடந்த காலங்களில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு பரவலாக இடம்பெயர்ந்திருக்கின்ற போதிலும், இந்த மூதூர் கிழக்கு மற்றும் படுவான…
-
- 0 replies
- 894 views
-
-
இலங்கைக்கு உணவு, மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதிக்கவேண்டும் ம.தி.மு.க.வின் புதுச்சேரி பொறுப்புக் குழுக் கூட்டம் அமைப்பாளர் நா. மணிமாறன் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.ம.தி.மு.க.வின் புதுச்சேரி பொறுப்புக் குழுக் கூட்டம் அமைப்பாளர் நா. மணிமாறன் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: ஏ9 வீதியை இலங்கை அரசு மூடியுள்ளமையால் 5 இலட்சம் தமிழர்கள் உணவு இன்றி நோய்க்கு மருந்து இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பட்டினிச் சாவைத் தடுக்க இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கப்படவிருக்கும் …
-
- 0 replies
- 803 views
-
-
சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது?: மூத்த ஊடகவியலாளர் சோலை உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை கேள்வி எழுப்பியுள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை: ஈழப் பிரச்னையில் சிங்கள இனவாத ராஜபக்ச அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கெனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது. இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அட…
-
- 0 replies
- 699 views
-
-
முறைகேட்டில் சிக்கிய மூன்று அமைச்சர்கள் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 15:00 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவின் மூன்று அமைச்சர்கள் முறைகேடுகளில் சிக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஐந்து இளைஞர்களை அனுப்பி வைப்பதில் மோசடி செய்ததாக அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மீதான வழக்கு எதிர்வரும் மாதம் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜூன் 13 ஆம் நாளன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜீவன் குமாரதுங்க மற்றும் இருவருக்கு கங்கொடவில நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை மேற்கொள்வதாகவும் கடந்த ஆண்டு ஜீவன் குமாரதுங்க மீது குற்றம்சாட்டப்பட்டது. மாவிலாறு நிவாரண நிதி மோசடி வழக்கில் அமைச்சர் எஸ்.எம். …
-
- 1 reply
- 1.3k views
-
-
கடத்தலில் தொடர்புடைய 5 பேரை கைது செய்ததாக சிறிலங்கா காவல்துறை தகவல் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 21:33 ஈழம்] [சி.கனகரத்தினம்] கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி பணம் பறித்தமை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளோம் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. வடக்கு கொழும்பு காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஜயந்த குணதிலக்க இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: ஜூன் 19 ஆம் நாள் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இரண்டு காவல்துறை குழுவினர் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கடத்தல் குழுவினரை அடையாளம் கண்டனர். அக்குழுவின் தலைவராக செயற்பட்ட வான்படையின் முன்னாள் அதிகாரி தற்போது தடுத்து வைக்க்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 884 views
-
-
மகிந்தவின் வானூர்தியில் தமிழர்களை ஏற்ற மறுத்த சிறிலங்கா ஏயர்லைன்ஸ்: தி.மகேஸ்வரன். ஜெனீவாவிலிருந்து கொழும்புக்கு மகிந்த திரும்பிய வானூர்தியில் தமிழர்களை ஏற்றுவதற்கு சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: ஜெனீவாவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ச சிறிலங்கா திரும்பினார். எனது பயணச் சீட்டு உறுதி செய்யப்படாததால் அந்த வானூர்தியில் நான் பயணிக்கவில்லை. அதன் பின்னரான வானூர்தியில் அனுப்பி வைக்கப்பட்டேன். ஆனால் பல தமிழர்கள் என்னைச் சந்தித்து தங்களை மகிந்தவின் வானூர்தியில் பயணிக்க சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம…
-
- 7 replies
- 2.2k views
-
-
கருணா குழுவிற்குள் புதிய மோதல்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் நடைபெற்று வரும் மோதல்கள் மீண்டும் உச்சக்கட்டத்தை அடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதத்திற்கும் மேலாக திருகோணமலை காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த பிள்ளையான், மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிள்ளையானும் அவரது குழுவினரும் 8 வாகனங்களில் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளனர். இது புதிய மோதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் பிள்ளையானுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்த போதும் மீண்டும் கருண…
-
- 1 reply
- 1.9k views
-
-
அம்பாறையில் சினைப்பர் தாக்குதல்: அதிரடிப்படையினர் இருவர் பலி. அம்பாறை றூபஸ் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். றூபஸ் பகுதி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அரண் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகள் சினைப்பர் தாக்குதலை நடத்தினர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த அரண் மீது விடுதலைப் புலிகள் ஆர்பிஜி தாக்குதலை நடத்தியுள்ளனர். -Puthinam-
-
- 0 replies
- 1.2k views
-
-
அடக்குமுறைக்குப் புறமுதுகு காட்டாத எழுத்துச் சமராடிகள் -சி.இதயச்சந்திரன்- பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி எவ்வாறு நடைபெறுமென்பதை ஸ்ரீலங்காவில் வசிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கிணற்றுத் தவளைபோல் வாழ்வது எப்படியென்பதையும் அங்கு கற்றுக்கொள்ளலாம். ஆசியப் பிராந்தியத்துள், ஜனநாயக முகமூடியணிந்த சர்வாதிகார ஆட்சிகள் பல இருந்தும், ஸ்ரீலங்கா போட்டிருக்கும் புதியரக முகக் கவசங்கள் புதுமையானவை. போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இருக்கும். கடத்தலும், காணாமல் போகடித்தலும் தினமும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக்கும். எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா. இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசயமும் இங்குதான் நிகழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைத்து விதமான உதவிகளையும் வழங்கத் தயாராகிவி்ட்ட டில்லி! -(கலைஞன்) [24 - June - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் புலிகளை அழிக்க இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கத் தயாரென்ற இந்தியாவின் பகிரங்க அறிவிப்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல்கள், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி விலக்கக்கோரும் திராவிடர் கழகத்தின் பொதுக் குழுத் தீர்மானமென கடந்த வாரம் முழுவதும் சூடான விடயங்கள் அரங்கேறியிருந்தமையால் இலங்கையிலும் அதன் பிரதிபலிப்புகள் சில வெளிப்படுத்தப்பட்டன. இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் தாம் வழங்குவோமென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்திய அரசாங…
-
- 2 replies
- 1.4k views
-
-
மூதூர் படுகொலை வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்: அக்சன் பார்ம் [சனிக்கிழமை, 23 யூன் 2007, 18:09 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்சன் பார்ம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 10 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக கந்தளாய் நீதிமன்றில் கடந்த ஜூன் 6 ஆம் நாள் விசாரணை நடைபெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டன. விசாரணைகளை 3 மாதங்களுக்கு ஒர…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கியநாடுகள் பாதுப்புசபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக மனிதநேயப்பணியாளர்களின் பாதுகாப்பின்மை உட்பட பலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சூடான், லெபனான், மத்திய ஆபிரிக்க குடியரசு போன்று மனிதநேயப்பணியாளர்களை கொன்றவர்களை சட்டத்துக்கு முன்நிறுத்ததவறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்து. ஐக்கியநாடுகள் சபையின் 2006 ம் ஆண்டு மனிதநேயப்பணிகளுக்கு பொறுப்பாக ஜோன் கொல்மிஸ் சிறீலங்காவில் 24 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருசம்பவத்தில் மாத்திரம் 17 அக்சன் பாம் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டமையும் இதுதொடர்பில் பாதுகாப்…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசியலில் சந்திரிகா வீரகேசரி நாளேடு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை அரசியலில் தலையிடப்போவதில்லை என தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நான் தெரிவித்த கருத்துக்கு நன்றி தெரிவித்து சந்திரிகா குமாரதுங்க எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசியல் விவகாரங்களில் அவர் இனியொருபோதும் ஈடுபடப்போவதில்லை என்றும் அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில் அவர் குறிப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : Sun Jun 24 10:17:53 EEST 2007 ஸ்ரீல.சு.கட்சியின் மாவட்ட மட்டத் தீர்வை முழுமையாக எதிர்க்கிறார் அமைச்சர் ஜெயராஜ் சமஷ்டி முறையே உகந்தது என்கிறார் அவர் நாட்டைக் கேட்ட வனுக்கு மாவட்டத்தைக் கொடுக்கமுடியாது. இத னால் மாவட்ட மட்டத் திலான ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் யோச னையை முற்றுமுழு தாக எதிர்க்கின்றேன். வீதிகள் அபிவிருத்தி மற்றும் பெருந்தெருக் கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே இப்படிக் கூறினார். முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஏற் பாடு செய்த கூட்டம் ஒன்றில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதா வது: தமிழ் மக்கள் நாடு கேட்டுப் போராடு கிறார்கள். அவர்களுக்குத் தீர்வாக மாவட்ட மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கலைக் கொடுக்க முடியு…
-
- 0 replies
- 808 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் - உளவு நிறுவனங்கள் தொடர்ந்து தலையிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அரங்கேற்றி வரும் நாடகங்களின் சில உண்மைக் காட்சிகளை, ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வழியாக அம்பலப்படுத்தி வருகிறோம். இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் இணைந்து, இந்தியக் கடற்பரப்பில் ‘கூட்டு ரோந்து’ நடத்தும் திட்டத்தை அமுல்படுத்திவிட்டால், ஈழப் போராளிகளின் கடல்வழி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தோடு - இந்திய உளவு நிறுவனங்கள் தமிழகத்தில் முகாமடித்து, தமிழகக் காவல்துறையையும் மிரட்டி, செயல்படத் துவங்கியதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். ஆனால், முற்றிலும் இவர்கள் எதிர்பாராத நிலையில், ஈழப் போராளிகள், வான் வழித் தாக்குதலைத் துவக்கியவுடன், உளவுத் துறை அதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன். ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்: இலங்கையில்…
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழர்களை வெளியேற்றியது கோத்தபாயாதான்": ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது "சண்டே லீடர்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007இ 09:05 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியது மகிந்தவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சதான் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர் வார" ஏடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் கடந்த மே மாதம் 31 ஆம் நாள் நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையும் அதில் பங்கேற்ற இராணுவத் தளபதிகள்இ காவல்துறை அதிகாரிகள் பெயர்ப் பட்டியலையும் "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் வெ…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாது: மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி [சனிக்கிழமை, 23 யூன் 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தினால் கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: யாழ். குடாவில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் உட்பட வாரத்தின் ஏழு நா…
-
- 3 replies
- 2.7k views
-