Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு - கிழக்கு படுகொலைகள்: ஐ.நா. கவலை வடக்கு - கிழக்கில் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்துள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஜூன் மாத நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்தில் 277 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதம் 141 பேரும் ஏப்ரல் மாதம் 187 பேரும் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் திருகோணமலை கிளிநொச்சி அம்பாறை மற்றும் மன்னார் பகுதிகளில் தொடர்ச்சியான வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. வவுனியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை 11 இலிருந்து 73 ஆகவும் யாழ்ப்பாணத்தில் 28 இலிருந்து 51 ஆகவும் மட்டக்களப…

  2. சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை சரியானதே - சிறீலங்கா உச்ச நீதிமன்றம் சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகள் அதியுயர் வலயமாக அறிவிக்கப்பட்டமை செல்லுபடியானது என சிறீலங்கா உச்ச நீதிமன்று அறிவித்துள்ளது. மூதூர் மற்றும் சம்பூர் பகுதிகள் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் அதியுயர் வலயமாக சிறீலங்காப் படைகளால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கிசோதி சரணவணமுத்து அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறீலங்கா உச்ச நீதிமன்றின் தலைமை நீதியாளர் சரத் டி சில்வா தலைமையிலான குழுவினர் சம்பூர் மற்றும் ம…

  3. கிழக்கில் 48 மணி நேரத்தில் புலிகள்- சிறிலங்கா இராணுவம் இடையே 7 மோதல்கள்: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கிழக்குப் பிரதேசத்தை முற்றாக சிறிலங்கா கைப்பற்றி விட்டதாகக் கூறிக்கொள்ளும் நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் அப்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே 7 மோதல்கள் நடைபெற்றுள்ளன. கல்லாறுப் பிரதேசத்துக்கு தெற்கே சித்தாறுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது. மாவிலாறு காட்டுப் பகுதியில் நடைபெற்ற இம்மோதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இம்மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒரு…

    • 1 reply
    • 1k views
  4. கிழக்கில் மக்களுடன் புலிகள் உள்ளதால் ஆயுதங்களை கீழே போட முடியாது: கருணா குழு கிழக்குப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் அங்கு உள்ளதால் எம்மால் ஆயுதங்களைக் கீழே போட முடியாது என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: குடும்பிமலை பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியதாகக் கூறினாலும் கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத கருணா குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது: ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் …

    • 1 reply
    • 1.2k views
  5. தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும்போது ரணிலுக்கு ரமேஷ் தொலைபேசியூடாக அறிவித்தாரா? வீரகேசரி நாளேடு அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வாகன அனுமதிப்பத்திரங்க ளை ஜாதிக ஹெல உறுமய விற் பனை செய்துள்ளது என்ற பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இரண்டரை கோடி ரூபõ நஷடஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்ககைள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். வாகன அனுமதி பத்திரங்களை ஜாதிக ஹெல உறுமய விற்பனை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டா…

    • 2 replies
    • 1.7k views
  6. கிழக்கு தேர்தல்கள் தொடர்பாக நாளை விவாதம் கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட உள்ளது. உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பிலான சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பிற்பகலில் அரை நாள் விவாதம் நடைபெற உள்ளது. வழமையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும். ஆனால் "கிழக்கின் உதயம்" நிகழ்வுகளையொட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட முன்வடிவின் மூலமாக கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளின் தற்போதைய அனைத்து நியமனங்…

  7. சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் 4 முறை கிழக்கு இருந்துள்ளது: த.தே.கூ. சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை கிழக்குப் பிரதேசம் இருந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக குடும்பிமலை வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக்குகிறது. இந்தப் பிரதேசம் ஏற்கெனவே பலமுறை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. அப்பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் அல்ல. கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் வகையில் பிரதான வெற்றியும் அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை இதே பிரதேசம் அரசாங்கத்தின் கட்டுப்பா…

  8. மீசாலையில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களிற்கும் படையினருக்கும் இடையே 10 நிமிடநேரம் துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது. இதில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களில் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக தமிழ்நெட் தெரிவிக்கிறது. SLA, armed group exchange fire in Meesaalai [TamilNet, Tuesday, 17 July 2007, 20:56 GMT] Sri Lanka Army (SLA) road patrol squad and a group of unidentified armed men exchanged fire near Arasadi junction along Dutch Road at Meesaalai in Thenmaraadchi Tuesday around 6:00 p.m., sources in Jaffna said. The fire fight lasted for more than ten minutes. Two men, including one youth from the armed group were killed, accordi…

  9. ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது: வைகோ. ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் எற்படுத்தியுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகா தனது கடுமையான கண்டனத்தை இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தல் இந்திய கடற்படையும் ஸ்ரீலங்கா கடற்படையும் தொலைத் தொடர்பு பரிவாத்தனை ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கூட்டாக மேற்கொள்ள தீர்மானித…

  10. புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனியரசு இலக்கை அடைய உள்ளதாக பரப்புரை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இது. தங்களது பயங்கரவாதத்தாலும் வன்முறைகளாலும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் ஒடுக்கி வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கியதோடு ம…

  11. தொப்பிகல வெற்றிக் கொண்டாட்டம் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கை [17 - July - 2007] * போரில் வெற்றியீட்டிய அசோக சக்கரவர்த்தி பின்னர் போரையே வெறுத்தவராக, பௌத்த தர்மத்தை பரப்புவதற்குத் தலைப்பட்டார். அதன் பொருட்டு அவர் மகிந்த, சங்கமித்த இருவரையும் இலங்கைக்கே அனுப்பிவைத்தார். இன்று இலங்கையில் பௌத்தம் முதன்மையானது. அதற்கு அதி உயர் ஸ்தானம் வழங்கப்படவேண்டும் என அல்லும் பகலும் அலட்டித் திரிபவர்கள்தான் நடைமுறையில் அந்த அற்புதமான தத்துவத்தினை மிதித்து வருகின்றனர். யுத்த வியாபாரிகளாக விளங்குகின்றனர். * பாடசாலைகள் தோறும் மாணவர்களுக்கு பாற்சோறும் தேநீரும் பரிமாறப்பட வேண்டுமென அதிபர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்தின் மத்தியிலும் கூட சமாதானத்தை …

  12. காதலி மறுத்தமையினாலேயே அரசாங்கம் வேறொரு பெண்ணை மணக்கும் நிலை ஏற்பட்டது வீரகேசரி நாளேடு காதலியான ஜே.வி.பி. கல்யாணம் முடிக்க மறுத்தமையினாலேயே வேறொரு பெண்ணை மணம் முடி க்க வேண்டிய நிலை அரசாங்கத்து க்கு ஏற்பட்டது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் நேற்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச காதலி மறுத்தமைக்காக வீதியில் அலையும் விபச்சாரிகளை அரசாங்கம் திருமணம் செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். காதலன், காதலி, விபச்சாரி விவகாரம் காரணமாக சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே. மு. லொக்குபண்டார தலைமையி…

  13. கந்தளாய் மோதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 19:17 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டம் கந்தளாய் சித்தாறுப் பகுதியில் இன்று காலை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க அப்பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை நடைபெறுவதாகவும் கூறினார். குடும்பிமலையில் இருந்து வெளியேறும் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். puthinam

  14. மூதூர் மற்றும் சம்பூர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலையமாக இலங்கை அரசு அறிவித்தது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. அந்தப் பகுதிகள் யாரிடமிருந்தும் யாராலும் கைப்பற்றப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் அல்ல என்று தலைமை நீதிபதி சரத் டி சில்வா அவர்கள் தலைமையிலான நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை சட்ட விரோதமனது அல்ல எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் மீதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். http://www.bbc.co.uk/tamil/news/story/…

  15. கிழக்கை தொகுதிகளாக பிரித்து அமைச்சர்களிடம் கையளிக்க ஏற்பாடு [ வீரகேசரி ] - [ Jஉல் 17, 2007 04:00 GMT ] புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாணம் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: . 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதற்கு …

    • 0 replies
    • 899 views
  16. ஜேர்மனி தூதுவருடனான சந்திப்பு: ரணில் விளக்கம் [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 16:01 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவருடனான சந்திப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளார். ரணிலுக்கும் ஜேர்மனி தூதுவருக்கும் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றதாகவும் அதனையடுத்து சிறிலங்காவுக்கான நிதி உதவியை ஜேர்மனி இரத்து செய்தது என்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாவது: தற்போதைய ஜேர்மனியின் சிறிலங்காவுக்கான தூதுவர் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களின் கூட்டமைப்புத் தலைவர். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் கலந்து…

  17. சிறீலங்கா அரசாங்க ஊடகப் பேச்சாளர் யார் என்பதில் முரண்பாடுகள் நீடிப்பு சிறீலங்கா அரசாங்கதின் ஊடகப் பேச்சாளர் யார் என்பது தொடர்பான முரண்பாடுகள் தொடர்கின்றன. அண்மையில் ஜேர்மனிய தூதுவருக்கு எதிராக தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ஜெராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருந்தார். எனினும் தமது அரசாங்கம் ஜேர்மனிய தூதுவருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே என்று சிறீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹி போகொல்லா…

  18. பாலித்த கோகன்ன தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தான் பயணம் சிறீலங்கா வெளிவிகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தலைமையிலான உயர் மட்ட குழு ஒன்று இன்று பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்து குறித்தும் இந்த குழுவினர் பாகிஸ்தானிய அரசாங்க தரப்புடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்த விடயங்களை அதிகரிப்பதற்கான முயற்சியே வெளிவிவாகர அமைச்சு செயலாளரின் பாகிஸ்தானிய விஜயத்தின் முக்கிய நோக்கம் என பாகிஸ்தான் வெளிவிவாகர அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு

  19. சட்டத்துறையின் முக்கிய பிரமுகர்கள் குறித்து புலனாய்வுத் துறையினரால் விசாரணைகள் ஆரம்பம் ஸ்ரீலங்காவின் சட்டத்துறையின் முக்கிய பிரமுகர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான நிமால் திஸநாயக்கா,ராஜா பெர்னாண்டோ,நிமால் காமினி அமரதுங்க,அன்டுரு சோமவன்ச,ஜகத் பாலபட்டபென்டி,ஸ்ரீரானி திலகவர்தன ஆகியோர் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தவாறனது என்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதை தடை செய்வது குறித்தும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகள் ஸ்ரீலங்கா அரசாங…

  20. கொழும்பில் சிறிலங்கா வான்படையின் திடீர் பயிற்சி சிறிலங்கா வான்படை இன்று காலை கொழும்பில் பாரியளவிலான பயிற்சியில் ஈடுப்பட்டனர். கொழும்புத் துறைமுகத்தில் இருந்து போர்க்கலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 19ஆம் நாள் நடைபெற உள்ள குடும்பிமலை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை பயிற்சி இது என சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வான்படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. - புதினம்

  21. கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம் கிழக்கு மாகாணத்தை முற்றாக புலி களின் பிடியிலிருந்து விடுவித்தமை தொடர் பான அரசின் வெற்றி விழா நாளை மறு தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும். அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுப்பார். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் கரு ஜயசூரிய இத்தகவ லைத் தெரிவித்தார். மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் அபிவிருத்திக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். நேற்று கொழும்பில் அரச தக…

  22. பண்ணைக் கடலில் மிதந்த பொதியில் ஆயுதங்கள்! பண்ணைக் கடல் பகுதியில் மிதந்துகொண் டிருந்த மர்மப் பொதியொன்றிலிருந்து படை யினர் ஒரு தொகை ஆயுதப் பொருள்களை மீட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணி யளவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மப் பொதியினுள் நிலக்கண்ணி வெடிகள் 03, 40 மில்லிமீற்றர் அளவுடைய கைக் குண்டு வகைகள் 06, ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 73, ரி56 ரகத் துப்பாக்கி 01, மின்சாரம் ஏற்றும் பற்றரிவகைகள் 32, 13 மீற்றர் நீளமான வயர்ச்சுருள்கள், "றிமோல்ட் கொண்ட்றோல்' கருவி 01 மற்றும் அடை யாள அட்டைகள் போன்றவை காணப் பட்டன என்று படையினர் தெரிவித்தனர். -உதயன்

  23. யுத்த அவலம் நீங்க முன்னர் தேர்தல் என்ற அபத்த நாடகமா? தொப்பிகல காட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டி, கிழக்கு மாகாணத்தை முழுதாக விடுவித்து விட்டதாக மார்தட்டுகின்றது மஹிந்தரின் அரசு. "தேசத்தை மீட்டமை' பற்றிய பிரகடனம் அடங்கிய வெற்றிப்பட்டயத்தை நாளை மறுதினம் கொழும்பில் பெரும் எடுப்பில் நடைபெறும் கொண்டாட்டத் திரு விழாவில் வைத்து, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பீரங்கி வேட்டுகள் தீர்த்து வரவேற்பு அளிக்கப்படவிருக் கின்றது. அதேசமயம் சுமார் எண்ணூறு படையினர் பங்குகொள்ளும் அணி வகுப்பு மரியாதையையும் இந்த "வீர…

  24. பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு இலங்கை இனப்பிரச்சினையை நியாயமான வழியில் தீர்த்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து அதனைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டுமாறு அரசிடம் எடுத்துரைக்கவும் அந்த நாடுகள் தயாராக உள்ளன. இதுவரை எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் உயர் ராஜ தந் திரிகளையும் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு வட்டாரங்களில் இருந்து இது அறியவந்தது. யுத்தத்தைத் தவிர்த்து அமைதிப் பேச்சு மூலம் இலங்கைப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதைய…

  25. வவுனியாவில் சூட்டுக் காயங்களுடன் நான்கு ஆண்களின் சடலங்கள் மீட்பு தவசிக்குளம் பிரதேசத்தில் வீதியோரத்தில் கண்டுபிடிப்பு கண்கள் கட்டப்பட்டு கைகள் பிணைக் கப்பட்ட நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் மீட்கப்படும் அவலம் வவுனியாவில் மீண்டும் தொடங்கியிருக்கி றது. வவுனியா தவசிக்குளம் பகுதியில் வீதி யோரத்தில் நான்கு ஆண்களின் சடலங் கள் கண்கள் மூடிக்கட்டப்பட்டு, கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்றுக்காலை கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. இந்தச் சடலங்கள் நான்கும் வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களு டையவை அல்ல என்று பொலிஸார் பூர் வாங்க விசாரணைகளின் பின்னர் உறுதிப் படுத்தியிருக்கின்றனர். எனினும் நேற்றுப் பிற்பகல்வரை அவை அடையாளம் காணப் படவில்லை. இந்த நப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.