Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எம்.கே.நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலையே சிறிலங்கா நடத்துகிறது: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 6 யூன் 2007, 20:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலைத்தான் நடத்துகிறோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: மூத்த சகோதரர் போன்றது இந்தியா. சீனா, பாகிஸ்தானிடன் ஆயுதம் வாங்க வேண்டாம் என்று இளைய சகோதரரிடம் சொல்வதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு. இளைய சகோதரருக்கு மூத்த சகோதரர் உதவாவிட்டால் இதர உறவு நிலை சகோதரர்களிடம் (பாகிஸ்தான், சீனா) செல்வோம். சிறிலங்காவுக்கு இந்தியா இராணு…

  2. வியாழன் 07-06-2007 05:25 மணி தமிழீழம் [தாயகன்] இராணுவ நடவடிக்கையால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு உகந்தது அல்ல எனவும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜிய தலைநகர் பிறசல்சில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக்குழு மாநட்டில் இந்தக் கருத்துக்கள் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுனாமி மீள் கட்டுமானப் பணிகள் மற்றும் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானப் பணிகளும் என இரண்டு கட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. நன்றி பதிவு.

  3. தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். "புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு: உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் …

  4. இலங்கையில் இயற்கை அழிவை விட நிர்வாக சீரழிவுகளே அதிகமுள்ளன : ஜரோப்பிய நடாளுமன்றம். இலங்கையில் இயற்கைச் சீரழிவை விட நிர்வாக நடைமுறைச்சிக்கலே அதிகம் காணப்படுகின்றன என நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் பகிரங்க விசாரணைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பிரஸெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டடத்தில் பகிரங்க விசாரணைக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. இதில் குறிப்பாக இலங்கை இந்தோனேசிய நாடுகளில் ஆழிப்பேரலை அனர்த் தத்திற்குப் பின்னரான மீள் கட்டமைப்பு, மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் குறித்து பொது விசாரணைகள் ஆரம்பமாகின. ஆழிப்பேரலைக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு குறித்த விவாதம் முதலில் நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பில் …

  5. படைத்துறை உதவி, கூட்டுக் கடற்கண்காணிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு சிறீலங்காவிற்கான இந்தியாவின் படைத்துறை உதவி, மற்றும் இந்திய - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டுக் கடற்கண்காணிப்பு திட்டம் என்பவற்றிற்கு, பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி இணைந்த கடற்கண்காணிப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், சிறீலங்கா அரசிற்கு தேவையான படைத்துறை உதவிகளை தமது அரசு செய்யும் எனவும் எம்.கே. நாராயணன் கூறியிருந்தார். இந…

  6. ஜப்பானும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் - சிறீலங்கா அரசு ஜப்பான் அரசும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக விரைவில் தடை செய்து, நிதி முடக்கத்தை மேற்கொள்ளும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜப்பான் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய இருந்ததாகக் கூறினார். ஆனால் விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானப்பேச்சை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதால், ஜப்பான் அரசின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டதாகவும், கெஹெலிய ரம்புக்வெல விளக்கமளித்திருக்கின்றார். தற்பொழுது சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப…

  7. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம் அமெரிக்காவின் இரட்டை வேடம்! மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் எனவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது. நார்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்ரலில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.…

  8. ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் [செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர். பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் …

  9. தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....56240b2ff0100bd

  10. பிரச்சினைக்கான இறுதி தீர்வு யோசனை இரண்டு மாதங்களுக்குள் வெளியிடலாம் வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பொதுவான இறுதித் தீர்வு யோசனை இன்னும் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 13 அரசியல் கட்சிகள் இதுவரை தமது தீர்வு யோசனைகளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளன என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜே.வி.பி. மட்டுமே இதுவரை தீர்வு யோசனையை சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் நாட்டை ஆட்சி செய்கின்ற பிரதான இரண்டு கட்சிகளும் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளதால் பொதுவான இறுதித் தீர்வை வெளியிடுவதில் சிக்கல்கள் எற்படாது என்றும் அவர் கூறினார்.…

  11. வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதுள்ள தேர்தல் முறைமை தடையாகவுள்ளது வீரகேசரி நாளேடு பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து அறியப்படவேண்டும். இதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம். தற்போதுள்ள தேர்தல் முறைமையை விட, புதிய தேர்தல் முறைமையில் உள்ள அனுகூலங்கள், சிறப்புகள் மற்றும் நன்மைகள் தொடர்பில் மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயகக் குழுவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமையினால் ஊழல், மோசடிகள் அதிகம் இடம்பெறுவதாகவும் வலுவான அரசாங்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற…

  12. ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும். சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார். புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன், "இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகினால் அது குறித்து பரிசீலித்து மு…

    • 2 replies
    • 1.1k views
  13. புதன்கிழமை, 6 யூன் 2007, 11:15 ஈழம்] [ப.தயாளினி] தப்பொவ காட்டுப் பகுதியில் சிறிலங்கா ஊர்க்காவல் படையின் புதிய பிரிவினரான நந்திமித்ர அணியினரால் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பொவ கருவல்கஸ்வெப் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு இப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத மரக்கடத்தில் ஈடுபட்டோருக்கும் நந்திமித்ர அணியினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அதன் பேச்சாளர் தெரிவித்தார். கல்கிரியகம மக்கள் பாதுகாப்புக்கான பயிற்சிக் கல்லூரியில் அண்மையில் நந்திமித்ர அணியினர் பயிற்சி நிறைவு செய்தனர். சிறப்பு அதிரடிப்படையினருக்குரிய அனைத்துப் பயிற்சிகளும் இந்த அணியினருக்கும் அளிக்கப்பட்டனர். …

    • 1 reply
    • 889 views
  14. ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் ஏன் உக்ரேய்னில் மட்டும் வாங்க வேண்டும்?: ஐ.தே.க. [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:27 ஈழம்] [செ.விசுவநாதன்] ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் உக்ரேய்னில் மட்டுமே ஏன் வாங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலகத்தின் உதவியைக் கோர வேண்டும். அமெரிக்காவுடன் அரசாங்கம் தற்போது இரகசியமான முறையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டமைக்காக முன்னர் எம்மை விமர்சித்தவர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தது அமெரிக்காதான் என சந்தேகப்படுக…

    • 6 replies
    • 1.2k views
  15. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி. வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை 8.50 மணியளவில் கால்ரோந்து அணி மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. தாக்குதலையடுத்து அப்பகுதிகள் யாவும் முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தியபோது தாக்குதலை நடத்திய தாக்குதலாளிகள் யாரும் பிடிபடவில்லை என்பது இங்கே குறிப்பிடக்கூடியதாகும். -Pathivu-

  16. இந்தியா இலங்கைக்கு இரண்டு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியுள்ளது. சிறீலங்காவுக்கு இரு எம்.ஜ 17 ரக உலங்கு வானூர்திகளை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்விரு உலங்கு வானூர்த்திகளும் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொலன்னாவை எண்ணெய் மற்றும் எரிவாயுக் குதங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலை அடுத்து இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்ட இவ்விரு உலங்கு வானூர்திகளையும் சிறீலங்காப் விமானப் படையினர் பயன்படுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதேநேரம் மிக இரகசியமான முறையில் இந்தியா இலங்கைக்கான ஆயுத தளபாடங்களையும் விமானமூலம் இறக்கி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஏ.எம் 32 ரக விமானங்கள் ஆயுத தளபாடங்களுடன் பல தடவகைள்…

  17. புல்மோட்டை இல்மனைற் வளத்துக்காக ஜப்பான் புலிகளுக்கு நிதியுதவி செய்தது [06 - June - 2007] உலகத்தில் மிகச் சிறந்த தரத்திலான இல்மனைற் கனிய வளம் ஷ்ரீலங்காவிலேயே உள்ளது. இந்த இல்மனைற் வளங்கள் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை பிரதேசத்திலேயே காணப்படுகின்றன. இந்த இல்மனைற் மூலம் றுரயில் சர்கோன் எனப்படும் முக்கியமான இரசாயனக் கனியப்பொருள் பெறப்படுவதுடன் இல்மனைற் கனியப்பொருள் ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றின் வெளித்தகடுகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன், யுத்த டாங்கிகளின் உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கும் இல்மனைற் பயன்படுகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இல்மனைற் கனியப்பொருளை ஜப்பான் ஷ்ரீலங்காவிடமிருந்து கொள்வனவு செய்து வ…

    • 5 replies
    • 2.3k views
  18. புதன்கிழமை, 6 யூன் 2007, 10:53 ஈழம்] [சி.கனகரத்தினம்] செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக ஸ்கொர்ட்லாந்து யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மகிந்தவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தினர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னடி, செஞ்சிலுவைச் சங்க இயக்குநர் உள்ளிட்டோர் மகிந்தவை சந்தித்தனர். இருப்பினும் சிறிலங்காவிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் விலகுவது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் விக்னடி தெரிவித்தார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்கள் ப…

    • 2 replies
    • 1k views
  19. Written by Ellalan - Jun 06, 2007 at 02:04 PM சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடன் நேற்று கொழும்பு வந்தடைந்த ஜப்பானிய விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி வன்னிக்குச் செல்லமாட்டார் என்று அறியப்படுகிறது. தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் புனர்வாழ்வுப்பணிகள் ஆகியன தொடர்பாக ஜனாதிபதி மற்றும் தரப்புகளை அகாஷி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கின்றார். மட்டக்களப்புக்கு செல்லும் அவர் அங்கு இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வார். வடக்கில் வன்னியில் இப்போதும் நிலவும் பாதுகாப்பு நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு அவர் கிளிநொச்சி செல்லமாட்டார் என்று அவரே கூறியதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்…

  20. கொழும்பிலிருந்து சென்ற தொடரூந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக சூரியன் எப் எம் தெரிவிக்கிறது மேலதிக செய்திகள் வெகுவிரைவில்

    • 3 replies
    • 1.5k views
  21. புதன் 06-06-2007 14:21 மணி தமிழீழம் [மயூரன்] யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று கொழும்பை வந்தடைந்த இவர் மாலை .430 மணியளவில் யப்பானியத் தூதுவராலயத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறில் அதிகளவு தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதியுதவியை யப்பான் வழங்குவதால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த யப்பான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பு…

    • 0 replies
    • 715 views
  22. Date: 2007-06-06 இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்ற இராஜதந்திரம் கொழும்பிடம் இல்லை தேர்தல் காலத்தில் ஆதரவு தர முன்வரும் தரப்புகளை எல்லாம் வளைத்துப் போடுவதற்காக, அத்தரப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றிச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வது போல தலையாட்டி, கையெழுத்திட்டு செப்படி வித்தை காட்டுவது வேறு. உலகளாவிய ரீதியிலான சர்வதேச அரசியலைக் கையாள்வது வேறு. அதிகாரத்துக்கு வருவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்னர், பழைய வாக்குறுதிகளைக் காற்றோடு பறக்கவிடும் விட்டேத்திப் போக்கு, சர்வதேச அரசியலைக் கையாள உதவப் போவதில்லை என்பது இலங்கையின் அரசுத் தலைவருக்கு இப்போது மெ…

    • 2 replies
    • 1.1k views
  23. பசில் ராஜபக்ச, லலித் வீரதுங்க உள்ளிட்டோரை கைது செய்ய ரணில் வலியுறுத்தல் [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:04 ஈழம்] [செ.விசுவநாதன்] புலிகளுடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக கருதப்படும் எமில் காந்தனுடன் தொடர்பு வைத்திருந்ததாக வானூர்தி சேவைகளின் முன்னாள் தலைவர் ரிரான் அலெஸ் கடந்த கைது புதன்கிழமை செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடத்தில் ரிரான் அலெஸ் தாக்…

  24. அன்றாட நிகழ்வாகிவிட்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள் [06 - June - 2007] ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள் இலங்கையின் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சட்டம், ஒழுங்கு செவ்வனே கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற விரக்தி, வேதனையுடனும் எந்தநேரமும் என்னமும் நடக்கலாம் என்ற பீதியுடனுமே மக்கள் நாட்களை கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளும் சமூகப்பணியாளர்களும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை செவ்வனே அமுல்படுத்தும் தன்மை குறித்து …

  25. பலவீனமான நிலையில் அரசு புலிகளை பேச்சுக்கு அழைப்பு [06 - June - 2007] * சாடுகிறது ஐ.தே.க. கே.பி.மோகன் விடுதலைப் புலிகளை பலவீனமாக்கிய பின்னரே அவர்களுடனான பேச்சுகளை நடத்த முடியுமென கூறிய அரசு இன்று படையினரை பலிகொடுத்து அரசியல் ரீதியாகவும் பலவீனமடைந்த நிலையில் மீண்டும் பேச்சுக்கு வருமாறு புலிகளை அழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டினார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; புலிகள் பலவீனமானவர்கள், அவர்கள் படையினர் மத்தியில் புறமுதுகு காட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.