ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
கடத்தல்களில் ஈடுபடும் புலனாய்வுப் பிரிவினர் பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது: கோத்தபாய உத்தரவு. கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு மகிந்தவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் நடைபெறும் கடத்தல்கள் மற்றும் கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற சந்தேகத்தின் போரில் சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வு அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வ…
-
- 0 replies
- 885 views
-
-
வர்த்தகர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டியவரை பொதுமக்கள் பிடித்துப் பொலிஸில் ஒப்படைத்தனர்! அவரைத் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வலி.மேற்குப் பகுதியில் வர்த்தகர் களிடம் கப்பம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப் படைக்கப்பட்டார். அவர் நேற்று நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அராலி வடக்கு, வட்டுக்கோட்டை யைச் சேர்ந்த நாகமுத்தன் நடராஜ சிவம் என்ற குடும்பஸ்தரே கைது செய் யப்பட்டவர் ஆவார். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி வர்த்தகர்களிடம் கப்பம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் சம்பந்தப் பட்டவர் பொதுமக்களால் பிடிக்கப் பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டது. மல்லாகம் நீதிவான் திருமதி …
-
- 1 reply
- 1.1k views
-
-
காரைதீவு படைமுகாமிலுள்ள அதிரடிப்படை சிப்பாய் மீது சூடு சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட காரைதீவு விசேட அதிரடிப்படை முகா மைச் சேர்ந்த கே.பி.என்.விஜேய சிங்க (வயது 27) என்ற படைச்சிப்பாய் நேற்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். முகாமின் பின்புறத்தில் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்தபோது இவரது நெஞ் சில் சூடு விழுந்துள்ளது எனக் கூறப்படு கின்றது. ஆபத்தான நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் போகவே அங்கு அவர் மரணமானார். இச்செய்தி அச்சுக்குப்போகும்வரை இறந்தவரின் நெஞ்சின்மீது எவ்வாறு எங் கிருந்து துப்பாக்கிச்சூடு விழுந்தது என் பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -உதயன் - …
-
- 0 replies
- 743 views
-
-
10 வருடங்களாக தேடப்பட்டு வந்த இலங்கை கடத்தல் மன்னன் கைது வீரகேசரி நாளேடு 15 ஆயிரம் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்தவர் கடந்த 10 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் ஜெயரத்தினம் என்பவர் மண்டபம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் அகதிகளை தோணி மூலம் ஏற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல்காரர்களை பிடிக்க இராமேஸ்வரம் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். பொருட்கள் கடத்தப்படுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையை சேர்ந்த ஜெயரத்தினம் என்ற ஒரு கடத்தல் புள்ளி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த 1997ஆம் ஆண…
-
- 0 replies
- 1.6k views
-
-
பேச்சுக்கு அழைக்க இப்போது ஆர்வமில்லை அரசின் அமைச்சர் அறிவிப்பு ""தொப்பிகல பகுதியைக் கைப்பற்றி, கிழக்கு முழுவதையும் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, வரலாற்றில் என்றுமில்லாத வகை யில் வெற்றியின் உச்சியில் நிற்கும் அரசு, புலிகளு டன் உடனடியாகப் பேச்சு நடத்தும் நிலையில் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். ""புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலோ அல்லது புலிகளைப் பேச்சு மேசைக்கு அழைப்ப திலோ அரசுக்குத் தற்போதைக்கு ஆர்வம் இல்லை. ""கைப்பற்றப்பட்ட கிழக்கை அபிவி ருத்தி செய்து, அப்பகுதி மக்கள் நிம்மதி யாக வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதில்தான் அரசு தீவிரமாகவும் சிரத்தையாகவுமுள்ளது. கிழக…
-
- 1 reply
- 939 views
-
-
சாட்சிகளைப் பாதுகாத்தால்தான் உண்மைகள் அம்பலத்துக்கு வரும் படுகொலைகள் உட்பட குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதும், அந்த ஆணைக் குழு வின் விசாரணைகளைக் கண்காணிக்க சர்வதேசப் பிரமுகர் களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட் டிருப்பதும் நமக்குத் தெரிந்த விடயங்கள். இந்த விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கப்படுத்தப்பட்ட இரு அறிக்கைகள் மூலம் சர்வதேசக் கண்காணிப்புக் குழு குறை கூறியிருப்பது, பரவ லாக இடம்பெறும் மனித உரிமை மீறல் விடயங்களைச் சமா ளிப்பதற்கு இலங்கை அரசுத் தலைமை எடுத்துவரும் நட வடிக்கைகளுக்கு விழுந்த அடி என்றே கொள்ளலாம். சர்வதேசக் கண்காணிப்புக் குழு சுட்டிக…
-
- 0 replies
- 778 views
-
-
அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்நாடு-வெளிநாடுகளில் சதி: மகிந்த ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சதித் திட்டம் தீட்டப்படுவதாக மகிந்தவின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது: ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் சில சக்திகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சூழ்ச்சி செய்து வருகின்றன. ஆட்கடத்தல், கப்பம் பெறல் ஆகியன உள்நாட்டு சதிகள். முஸ்லிம்கள் கடத்தப்படுவது சம்பந்தமாக மகிந்தவிடம் நாம் முறைப்பாடு செய்த போது அதற்காக அவர் துரிதமாகச் செயற்பட்டு தமது பாதுகாப்புப் பிரிவினர் மூலம் அவற்றைத் தடுத்து நிறுத்த …
-
- 1 reply
- 882 views
-
-
சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதா ? அல்லது மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் கைகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. பேச்சுவார் த்தைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு புலிகளின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கமும் விடுதலை புலிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இரகசிய உடன்படிக்கையொன்றை செய்துகொண்டனர் என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இது வெறுமனே அரசியல் இலாபம் நோக்கி செய்யப்படும் பிரசாரமாகும். எனவே இ…
-
- 5 replies
- 2.2k views
-
-
கொட்டாஞ்சேனையில் தமிழ் இளைஞர் கடத்தல் வீரகேசரி நாளேடு கொட்டாஞ்சேனை புதுச்செட்டி தெருவில் வைத்து தமிழ் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் கொட்டாஞ்சேனை பொலிசில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை கின்னியப்புகாமி மாவத்தையிலுள்ள சிகையலங்கரிப்பு நிலையத்திலிருந்து அருகிலுள்ள ஹோட்டலுக்கு தேனீர் பருகிவிட்டு வருவதாக கூறிவிட்டு கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்ற யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த கதிரவேலு சக்தி வேலு (வயது 23) என்ற—இளைஞரே கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வானில் வந்தோரே இவரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவர் கடந்த ஆறு மாதத…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் பாரிய தாக்குதல்களை நடத்துவோம்: சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவிப்பு. சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விவரம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன. உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக…
-
- 2 replies
- 2.3k views
-
-
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர். வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் …
-
- 39 replies
- 9.3k views
-
-
காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்- இன்று கதவடைப்பு [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று இரவு நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு முஸ்லிமகள் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு இன்று வியாழக்கிழமை முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கடையடைப்பை மேற்கொள்ளுமாறு அரசியல்வாதிகளோ பொதுமக்களோ அழைப்பு விடுக்கவில்லை என்றும் முஸ்லிம் ஆயுதக்குழு ஒன்றே இந்த கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. காத்தான்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு 8.15 மணிக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 16:40 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவம் அக்கட்சியின் உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. 3 ரெலோ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள ரெலோ தலைமை அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்தனர். ரெலொ அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறைகளையும் சல்லடை போட்டுத் தேடிய அக்குழுவினர் மூடிய அறை ஒன்றை திறக்குமாறு அங்கு நின்றவர்களிடம் கூறினர். அதற்கு அலுவல…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் வான்படையினருக்கு அமெரிக்க வான்படையினர் பயிற்சி. சிறிலங்காவின் இரண்டு வான்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வான்படையின் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதில் முக்கிமான விடயம் என்னவென்றால் முதன்முறையாக சிறிலங்கா வான்படையின் பெண் அதிகாரி ஒருவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விலுதானி ஜட்டவர என்ற சிறிலங்கா விமாப்படை பெண் அதிகாரி ஒருவரும், சதமர விஜயசிங்க என்ற விமானப்படை அதிகாரிக்குமே இந்த ஐந்துவருட பயிற்சிகள் அமெரிக்கா கொலராடோவில் உள்ள அமெரிக்க வான்படை அக்கடமியல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
கிழக்கில் போர் உத்திகள் மாற்றப்பட்டுள்ளன இனி என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் - இளந்திரையன் கிழக்கில் பல வாரங்களுக்கு முன்னரே கொரில்லா போர்முறைக்கு எங்களுடைய போர் உத்தியை மாற்றிவிட்டோம் எனவே, எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என் பதைப் பொறுத்திருந்துபாருங்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அரச படையினர் தொப்பிகலவை கைப் பற்றியது தொடர்பாக நேற்றுப்பி.பி.ஸிக்கு கருத்துக் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு, கிழக்கில் நடத்துகின்ற போர் முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறுகின்றது. ஆனால், அது உண்மை அல்ல ஏன் என்றால் எங்களுக்…
-
- 7 replies
- 2.5k views
-
-
கட்டுநாயக்காவில் விமானப்படையினது உத்தரவை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கி பிரயோகம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு கட்டு நாயக்க நீர் கொழும்பு பிரதான வீதியிலுள்ள விமானப்படையினரது சோதனைச்சாவடியில் அனுமதியை மீறிச் சென்ற வேன்னொன்றினை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்று அதிகாலை இடம் பெற்ற இத் துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். விமானப்படையினரது உத்தரவினை மீறி அவ் வேன் கடக்க முற்பட்ட வேளை பாதுகாப்பு படையின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார் இது தொடர்பா விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்
-
- 1 reply
- 1.3k views
-
-
குண்டுப் புரளி: கொழும்பில் அவசரமாக வானூர்தி தரை இறங்கியது. இந்தோனேசியாவின் ஐகார்த்தா நகரில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் வானூர்தி குண்டுப்புரளியால் அவசர, அவசரமாக சிறிலங்காவின் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது. வானூர்தி தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகள் வெளியேறிய பின்னர் வானூர்தியை பிரத்தியேக இடத்துக்கு நகர்த்தினர். அதன் பின்னர் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வானூர்திக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் வானூர்தியில் சந்தேகத்திற்கு இடமான எந்தப் பொருளும் இல்லை என்று குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அறிவித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: "சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை" [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 12:53 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க... கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன். மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார். 1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார். "தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இர…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிஓட்டம் இலங்கையில் இடம்பெற்று வந்த ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிசென்றுளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு இன்ரபோலின் உதவியை கோரவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அதியட்சகர் ஜெயந்த விக்கரமரட்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார். தாங்கள் இதுவரை ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொட்படைய 12 பேரை கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 7 பேர் சிங்களவர்கள் என்றும் 5 பெர் முஸ்லீம்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்கடத்தல் சம்பவங்களின் முக்கிய நபர்கள் கைது செய்ய…
-
- 4 replies
- 1.7k views
-
-
மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களிலேயே வாழந்துவருகின்றனர் - மனிதநேய அமைப்பு ஸ்ரீலங்கா அரச படைகள் கிழக்கு மகாணாத்தில் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களிலேயே வாழந்து வருவதாக மனிதநேய அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 11800 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் மட்டக்களப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா அரசாங்கம் கிழக்கு மகாணாத்தை முழுஐமயாக கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க படைகள் கிழக்கில் தமது பூரண கட…
-
- 0 replies
- 792 views
-
-
குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகனம் தொடர்பில் தொடரும் சர்சைகள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிகு குண்டுகள் பொருத்தப்பட்ட குளிரூட்டி வாகம் தொடர்பில் சர்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக கருணா குழுவில் இருந்து வெளியேறி தனியான துணை இராணுவக் குழுவாக செயல்பட்டு வரும் பிள்ளையார் தரப்பினால் தகவல் வழங்கப்பட்டே குறிப்பிட்ட வாகனம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஸ்ரீலங்கா கடற்படையும் இதனை உறுதிப்படுத்தியிருந்ததாகவம
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பு புறக்கோட்டை பொலிசாரால் இரண்டு தமிழ் யுவதிகள் கைது கொழும்பு புறக்கோட்டை பொலிசாரால் இரண்டு தமிழ் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் இரு யுவதிகளும் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியை சேர்ந்தவர்கள் என்று தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே செட்டியர் வீதியில் வைத்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. - பதிவு
-
- 0 replies
- 977 views
-
-
கண்துடைப்பு நாடகம் [12 - July - 2007] எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு தனது அமைச்சு அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும பணிப்புரைகளை வழங்கியிருப்பதாக நேற்றைய தினம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் செய்தியொன்றைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் போது விமானங்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும்; கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் போன்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் அவற்றை நடத்த வேண்டும் என்று அமைச்சர் அழகப்பெரும அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 1.1k views
-
-
வீடுகளில் வைத்துக் கடத்தப்பட்ட மாணவர்கள் மூவர் 69 நாள்களின் பின்னர் நேற்று விடுவிக்கப்பட்டனர் குடாநாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி இரவு ஊரடங்கு அமுலில் இருந்த வேளை அவர்களது வீடுகளில் வைத்து ஆயுத தாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் விடப்பட்டனர் என்று அறியவந் தது. யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியின் உயர் தர வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி பயி லும் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த குகராஜன் கண்ணன் (வயது 19), யாழ்.இந்துக் கல்லூரி யில் கலைப்பிரிவு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் யாழ்.பிறவுண் வீதியைச் சேர்ந்த நாகராசா வேணுகானன் (வயது 19), யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி ப…
-
- 0 replies
- 990 views
-