ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மட்டு, படுவான்கரையில் 21 புதிய படை முகாம்கள் மட்டக்களப்பு படுவான்கரையை அண்மையில் ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படையினர், அங்குள்ள பொதுமக்களின் காணிகளை அபகரித்து படை முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்தப் பிரதேசங்களில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவ்வாறான முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேபோன்ற ஆக்கிரமிப்பு கடந்த காலங்களிலும் நிகழ்ந்து முகாம்கள் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், இதனால் மக்களிற்குப் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனக் கூறினார். பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்மராட்சியில் வியாழன் இரவும் மினி சூறாவளி; பெரும் சேதங்கள் தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழன் இரவும் மினி சூறாவளி வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. பனை மரம் ஒன்று வீட்டின் மீது வீழ்ந்ததில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். பெரும்மளவு பயன்தரு மரங்கள் முறிந்து நாசமாகின. பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 8.15 மணி தொடக்கம் 9.15 மணி வரை இடைவிடாது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் திடீரென மினி சூறாவளி வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மட்டுவில் தெற்குப் பகுதியில் பனை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் அதே இடத்தைச் சேர்ந்த பத்மநாதன் கமலேஸ்வரி (வயது 48) என்பவருக்கு விலா எலும்பு முறிந…
-
- 1 reply
- 983 views
-
-
வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் படுகாயமடைந்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுக்கு வேட்டையாடச் சென்றவர்கள் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும், உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர் பான விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர் உதயன்
-
- 0 replies
- 738 views
-
-
இலங்கைக்கான உதவிகளை உலகநாடுகள் பிரிட்டனைப் பின்பற்றி முடக்க வேண்டும்! ஆசிய மனித உரிமைகள் மையம் வலியுறுத்து புதுடில்லி, மே 5 திட்டமிட்ட வகையில் மனித உரிமை களை மோசமாக மீறிவரும் இலங்கை அரசை சரியான வழிக்குக் கொண்டுவரு வதற்காக, அந்நாட்டுக்கான உதவிகளை பிரிட்டனைப் பின்பற்றி உலக நாடுகள் அனைத்தும் முடக்கவேண்டும். புதுடில்லியை யைமாகக் கொண்டி யங்கும் மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் இவ்வாறு கோரியிருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர் பான அடிப்படை நிலைமைகளை நிறைவு செய்யத் தவறியமைக்காக இலங்கைக்கான உதவிகளை முடக்குவதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கின்றது. மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பான இலங்கை அரசின் செயற்பாட்டில் அதிருப்தியுற்று, அதனடிப்படை யில் பிரிட்டன் எடுத்த…
-
- 0 replies
- 734 views
-
-
மனித உரிமைகளைப் பேணத் தவறியதால் இலங்கைக்குக் கிடைத்த முதல் தண்டனை பிரிட்டன் நிதி முடக்கம் கொழும்பு, மே 5 ""இலங்கைத் தமிழர்களினதும் ஏனைய இன மக்களின தும் அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு மீறிவரு வதன் காரணமாகவே பிரிட்டன் இலங்கைக்கான அதன் நிதி உதவியை முடக்கியுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைக்காக சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு வழங்கவிருக்கும் தண்டனையின் முதல் கட்டமே இந்த நிதி உதவி முடக்கம்.'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான நிதியுதவியை பிரிட்டன் முடக்கியமை தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள் ளன என்பதையும் இலங்கை அரசே…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி திருவனந்தபுரம், மே 2 தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய மண்ணை தளமாக பாவிக்க எந்த பயங்கர அமைப்புக்கும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி கூறினார். விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளக் கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கரையோரங்களில் பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதியில் கூடுதலான …
-
- 23 replies
- 4.4k views
-
-
இலங்கையின் அராஜகங்கள் சர்வதேச மட்டத்தில் அம்பலம் தென்னிலங்கையிலும், அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் வகைதொகையின்றி இடம்பெறும் மனிதப் படுகொலைகள், கேட்டுக் கேள்வியின்றி நடைபெறும் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அரசுத் தரப்பில் ஒட்டிக்கொண்டிருந்தபோதிலும் மனச்சாட்சி காரணமாக, இந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியோர் மேலிட அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால் அமுக்கி வாசிக்க வேண்டியவர்களுமானார்கள். இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய வேறு சிலரோ மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். ரவிராஜ் எம். பி. போன்றோர்…
-
- 1 reply
- 873 views
-
-
புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க? விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார். குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது; தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் …
-
- 24 replies
- 5.4k views
-
-
கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா. சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது. வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார். -Puthinam-
-
- 7 replies
- 2.5k views
-
-
கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 17:28 ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகளை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று கொழும்பு ஊடகம் யோசனை தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரை: பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் தொடர்பாக படையினர் ஆராய்ந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் மூன்றாவது வெற்றிகரமான தாக்குதலையும் நடத்தி முடித்துவிட்டனர். விடுதலைப் புலிகளின் ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Zlin-143 அல்லது செஸ்னா வகை வானூர்திகள் மிகவும் முக்கியம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப…
-
- 3 replies
- 1.6k views
-
-
மீனவர்களைக் கடத்தியது புலிகள் தான் அடித்து கூறுகிறார் கருணாநிதி http://thatstamil.oneindia.in/news/2007/05/04/karuna.html புலனாய்வுப் பிரிவினர் விரித்த வலையில் கருணாநிதி ரொம்ப சுலபமாக விழுந்துவிட்டார்.சில வேளையில் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு கடத்தியிருக்கலாம்.அங்கு அகப்பட்ட 6 பேரும் ஒட்டுக் குழுவாகவும் இருக்கலாம்.மீனவர்களுக்கே மீன் கொடுக்கிறார்களாம்.
-
- 3 replies
- 1.1k views
-
-
மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க. [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான்…
-
- 8 replies
- 2.1k views
-
-
பத்திரிகை அறிக்கை இலங்கைத் தீவில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனப் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது. இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.7k views
-
-
கடும் மழை காரணமாக கொழும்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்பு. பிரதி மேயர் இராஜேந்திரன் தகவல் கொழும்பிலும் அதனையண்டிய பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மாநகரசபையை அண்டிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கிம்புலாகல, ரெட்பானா, கொட்டாஞ்சேனை, வனாத்தமுல்லை, மாளிகாவத்தை, கதிரான, களனி ஆகிய பகுதிகளிலேயே வெள்ள அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கொழும்பில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 16 பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வெசாக் பண்டிகைக்கென கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணங்க…
-
- 8 replies
- 2k views
-
-
யாழ். குடாவிற்கான பாதைகள் முன்நிபந்தனைகள் இன்றி திறக்கப்பட வேண்டும்: பிரித்தானியா சிறிலங்காவில் தோன்றியுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்ததில் ஜெனீவாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது தொடர்பாகவும் அது தனது கவலையை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் அணிசேரா நாடுகளின் அமைச்சர் ஹிம் ஹாவல் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவில் மீண்டும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பிரித்…
-
- 14 replies
- 2.8k views
-
-
வெள்ளி 04-05-2007 07:07 மணி தமிழீழம் [தாயகன்] எரிக் சூல்கைய்ம் - ரணில் பெல்ஜியத்தில் சந்திப்பு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கையுமும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிறசல்சில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னரே திட்டமிடப்படாத நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை. சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றி இருவரும் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், பேசப்பட்ட விடயங்களின் விபரங்களை வெளியிட அவை மறுத்துள்ளன. pathivu
-
- 3 replies
- 1.4k views
-
-
பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது வீரகேசரி நாளேடு ஜே.வி.பி. தெரிவிப்பு; யோசனையையும் நிராகரிக்கவேண்டும் என்கிறது பிரித்தானியா தனது வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும். இலங்கை விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிரித்தானியா தற்போது உலக நாடுகளை ஆட்சிசெய்யும் நாடல்ல. உலக நாடுகளில் அந்த நாடும் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை மண்டியிடச்செய்யும் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் இலங்கைக்கான அக்கறையை நாங்கள் நோக்குகின்றோம். எமது நாட்டின் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா …
-
- 3 replies
- 2k views
-
-
வவுனியாவில் இராணுவ முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 2 சடலங்கள் மீட்பு. வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இந்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். இதில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களும் இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 5 replies
- 2.1k views
-
-
சு.கவுக்கு தமிழரின் நன்றி! தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனை என்ற பெயரில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த திட்டம் தமிழர் தரப்பை மட்டுமல்ல, இலங்கை விவகாரத்தை ஆழ உற்றுநோக்கும் பக்கச்சார்பற்ற பார்வையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் கூட அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இராஜதந்திர வட்டாரங்கள் இவ்விவ காரம் குறித்து வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள் இதனையே உணர்த்துகின்றன. நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்த நிலை யில் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் கட்டுமட்டில்லாமல் இடம்பெற அனுமதித்த சூழலில் சுமார் ஒருவருட காலம் இழுத்தடித்த பின்னர் "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' ஒன்றுக்குமே உதவாத, உருப் படியற்ற ஒரு திட்டத்தை தீர்வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
Colombo in dark following airstrike alarm [TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT] Power supply was cut off in Colombo at 1:15 a.m. when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air. Details are not available at the moment. Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020 கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாவும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மை நிலை தெரியவில்லை.
-
- 70 replies
- 22.1k views
-
-
சிவஒளி எழுதும் கனவு மெய்ப்படும் காலம் கடந்த பெப்ரவரி 4ம் திகதி, காலை 8.45 மணியளவில் வெள்ளவத்தையில் காலி வீதியால் நடந்துகொண்டிருந்தேன். காதைப்பிளக்கும் வானுர்திகளின் சத்தம் வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தது. அப்போதுதான் புரிந்தது சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக கிபிர், மிக் விமானங்கள் இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அந்தக் கணப்பொழுதில் சில எண்ணங்கள் என் மனதில் துளிர்விட்டன. இந்த விமானங்கள்தானே படுவான்கரையில், முன்னர் மூதூர் கிழக்கில், வள்ளிபுனம் செஞ்சோலையில், படகுத்துறையிலென பல்வேறு இடங்களிலும் குண்டுகளை வீசி எங்கள் உறவுகளை கொன்றுகுவிக்கின்றன. இவை மீது இடி கூட விழாதா என எண்ணி எண்ணி ஏங்கினேன். ஏன்னைப் போன்றவர்களின் ஆதங்கம் வற்றாப்பளை தாய்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச சிறப்பு நிபுணர் குழு சிறீலங்கா பயணம் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்காணிப்பதற்கான சர்வதேச சிறப்பு நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் பிரதிநிதிகள் இம்மாத நடுப்பகுதியில் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். முக்கிய மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்காக, சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிக் கண்காணிப்பதற்காகவே, இந்த நிபுணர்கள் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் படுகொலை தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்களைப் …
-
- 1 reply
- 892 views
-
-
சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிப்படுத்தும் உண்மைகள் இலங்கையின் அரை நூற்றாண்டு காலத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரை வேக்காட்டுத்திட்டம் ஒன்றை யோசனை ஒன்றை முன்வைத்திருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ""சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் மற்றோர் அங்கமே இந்த யோசனை. பரிசீலனைக்குக்கூடத் தமிழர்கள் தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது அது'' என அடியோடு அதனை நிராகரித்து இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் முதல் வீ.ஆனந்தசங்கரி வரை…
-
- 1 reply
- 1k views
-
-
குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்: சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வா…
-
- 6 replies
- 1.7k views
-
-
வெள்ளி 04-05-2007 01:08 மணி தமிழீழம் [மயூரன்] சந்திரிக்காவின் சிறப்புச் சலுகைகளை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை உச்ச நீதிமன்றம் பறித்துள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சிறீலங்காவின் தலைமை நீதியாளர் சரத் நந்தன சில்வா சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் அதிபராக பதவி வகித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட 36 அரசாங்க வாகனங்களும் நியமிக்கப்பட்ட பணியாளர்களையும் மீளப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்க செலவில் மீளநிர்மாணம் செய்யப்பட்ட அதிபர் மாளிகையில் சந்திரிக்கா குமாரதுங்க தங்கியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த …
-
- 2 replies
- 1.2k views
-