Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன் 06-06-2007 14:21 மணி தமிழீழம் [மயூரன்] யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று கொழும்பை வந்தடைந்த இவர் மாலை .430 மணியளவில் யப்பானியத் தூதுவராலயத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறில் அதிகளவு தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதியுதவியை யப்பான் வழங்குவதால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த யப்பான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பு…

    • 0 replies
    • 723 views
  2. புதன்கிழமை, 6 யூன் 2007, 11:15 ஈழம்] [ப.தயாளினி] தப்பொவ காட்டுப் பகுதியில் சிறிலங்கா ஊர்க்காவல் படையின் புதிய பிரிவினரான நந்திமித்ர அணியினரால் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பொவ கருவல்கஸ்வெப் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு இப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத மரக்கடத்தில் ஈடுபட்டோருக்கும் நந்திமித்ர அணியினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அதன் பேச்சாளர் தெரிவித்தார். கல்கிரியகம மக்கள் பாதுகாப்புக்கான பயிற்சிக் கல்லூரியில் அண்மையில் நந்திமித்ர அணியினர் பயிற்சி நிறைவு செய்தனர். சிறப்பு அதிரடிப்படையினருக்குரிய அனைத்துப் பயிற்சிகளும் இந்த அணியினருக்கும் அளிக்கப்பட்டனர். …

    • 1 reply
    • 897 views
  3. புதன்கிழமை, 6 யூன் 2007, 10:53 ஈழம்] [சி.கனகரத்தினம்] செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை தொடர்பாக ஸ்கொர்ட்லாந்து யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மகிந்தவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தினர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னடி, செஞ்சிலுவைச் சங்க இயக்குநர் உள்ளிட்டோர் மகிந்தவை சந்தித்தனர். இருப்பினும் சிறிலங்காவிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் விலகுவது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் விக்னடி தெரிவித்தார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்கள் ப…

    • 2 replies
    • 1k views
  4. ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் ஏன் உக்ரேய்னில் மட்டும் வாங்க வேண்டும்?: ஐ.தே.க. [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:27 ஈழம்] [செ.விசுவநாதன்] ஆயுதங்களை அமெரிக்காவிடம் வாங்காமல் உக்ரேய்னில் மட்டுமே ஏன் வாங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலகத்தின் உதவியைக் கோர வேண்டும். அமெரிக்காவுடன் அரசாங்கம் தற்போது இரகசியமான முறையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டமைக்காக முன்னர் எம்மை விமர்சித்தவர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தது அமெரிக்காதான் என சந்தேகப்படுக…

    • 6 replies
    • 1.2k views
  5. பசில் ராஜபக்ச, லலித் வீரதுங்க உள்ளிட்டோரை கைது செய்ய ரணில் வலியுறுத்தல் [புதன்கிழமை, 6 யூன் 2007, 11:04 ஈழம்] [செ.விசுவநாதன்] புலிகளுடன் இரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முக்கிய புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக கருதப்படும் எமில் காந்தனுடன் தொடர்பு வைத்திருந்ததாக வானூர்தி சேவைகளின் முன்னாள் தலைவர் ரிரான் அலெஸ் கடந்த கைது புதன்கிழமை செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடத்தில் ரிரான் அலெஸ் தாக்…

  6. புல்மோட்டை இல்மனைற் வளத்துக்காக ஜப்பான் புலிகளுக்கு நிதியுதவி செய்தது [06 - June - 2007] உலகத்தில் மிகச் சிறந்த தரத்திலான இல்மனைற் கனிய வளம் ஷ்ரீலங்காவிலேயே உள்ளது. இந்த இல்மனைற் வளங்கள் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை பிரதேசத்திலேயே காணப்படுகின்றன. இந்த இல்மனைற் மூலம் றுரயில் சர்கோன் எனப்படும் முக்கியமான இரசாயனக் கனியப்பொருள் பெறப்படுவதுடன் இல்மனைற் கனியப்பொருள் ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றின் வெளித்தகடுகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன், யுத்த டாங்கிகளின் உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கும் இல்மனைற் பயன்படுகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இல்மனைற் கனியப்பொருளை ஜப்பான் ஷ்ரீலங்காவிடமிருந்து கொள்வனவு செய்து வ…

    • 5 replies
    • 2.4k views
  7. பலவீனமான நிலையில் அரசு புலிகளை பேச்சுக்கு அழைப்பு [06 - June - 2007] * சாடுகிறது ஐ.தே.க. கே.பி.மோகன் விடுதலைப் புலிகளை பலவீனமாக்கிய பின்னரே அவர்களுடனான பேச்சுகளை நடத்த முடியுமென கூறிய அரசு இன்று படையினரை பலிகொடுத்து அரசியல் ரீதியாகவும் பலவீனமடைந்த நிலையில் மீண்டும் பேச்சுக்கு வருமாறு புலிகளை அழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டினார். கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; புலிகள் பலவீனமானவர்கள், அவர்கள் படையினர் மத்தியில் புறமுதுகு காட…

  8. `சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளும் தீர்வே இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்' [06 - June - 2007] * வாசுதேவ நாணயக்கார "தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தினை சமர்ப்பித்து, யுத்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது, காலத்தின் அவசியத் தேவையாகும்" என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பதுளை நூலக சேவை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதியமைச்சர் டிலான் பெரேராவின் அரசியல் பிரவேசத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவினையொட்டி, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு மேலும் கூறியதாவது; "இந்நாட்டிற்கு பெரும் அழிவினை ஏற்ப…

  9. ஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டுக்கு தமிழ் பிரதிநிதிகளை அழைக்கவில்லையென கவலை [06 - June - 2007] கடல்கோள் அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதி நிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ, முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக் குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விட…

  10. அன்றாட நிகழ்வாகிவிட்ட ஆட்கடத்தல்கள், படுகொலைகள் [06 - June - 2007] ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள் இலங்கையின் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. சட்டம், ஒழுங்கு செவ்வனே கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற விரக்தி, வேதனையுடனும் எந்தநேரமும் என்னமும் நடக்கலாம் என்ற பீதியுடனுமே மக்கள் நாட்களை கழிக்க வேண்டியவர்களாக உள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளும் சமூகப்பணியாளர்களும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை செவ்வனே அமுல்படுத்தும் தன்மை குறித்து …

  11. கருணா அணி அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி நிஷாந்தி தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் நின்று அரசுடன் இணைந்து மக்களுக்கு பணியாற்றவுள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் கருணா அம்மன் தெரிவித்துள்ளதாக ஆங்கிழ நாளிதழான டெய்லி மிரர செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு வன்முறைகள் என்பவற்றை கைவிட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வந்துள்ளதாக அதன் அம்பாறை மாவட்ட தலைவர் ஐ.பாரதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கே மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் அவை இராணுவ தீர்வின் மூலம் முடிவிற்கு கொண்டுவர முடியாது ஜனநாயக ரீதியாகவே தீர்க்கப்படவேண்டும் நாம் ஆயுதங்களை நமது பாதுகாப்பிற்ககவே …

  12. புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் அதிகாரிகள் சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை கொழும்பு யுனிசெஃப் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. - விடுதலைப் புலிகளிடம் உள்ள வயது குறைந்தோர் தொடர்பான விபரங்கள் - சிறார்களுக்கான யுனிசெஃப் திட்டங்கள் - வான்குண்டுத் தாக்குதல்களின் போது பாடசாலைகளுக்குச் செல்லும் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சிறிலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல்களினால் பாடசாலைகளின் வழமை நிலை பாதிக்கப்படுவது குறித்து தமிழீழ கல்விக் கழகத்தி…

  13. சிறிலங்காவின் செலுத்தப்படாத கடன் தொகை ரூ 34.7 பில்லியன்: விமல் வீரவன்ச சிறிலங்காவின் செலுத்தப்படாமல் உள்ள கடன் தொகை ரூ 34.7 பில்லியன் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் வாழ்க்கைச் செலவீனத்தைக் கட்டுப்படுத்த மகிந்த அரசாங்கம் தவறிவிட்டது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன. 1977 இல் 5 வீதமாக இருந்த பணவீக்க வீதம் இப்போது 20 வீதமாக உள்ளது. பண மதிப்பு வீழ்ச்சியடையும்போது அரசாங்கத்தின் கடன் தொகை அதிகரிக்கும். தற்போது 34.7 பில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படாமல் உள்ளது. அரசாங்கத்தின் வருவாயில்…

  14. Posted on : Wed Jun 6 8:38:54 EEST 2007 நாம் சுதந்திரமாகக் கற்பதற்கு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை சுதந்திரமாக நாம் கற்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். அதற்குரிய அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் அரசுக்கு வழங்கி, எமது உரிமைக்குரல் நசுக்கப்படுவதை நிறுத்த உதவ வேண்டும். இவ்வாறு தமிழீழ மாணவர் எழுச்சி நாள் குறித்து விடுத்த அறிக்கை ஒன்றில் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ்.மாவட்டப் பிரிவு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்து உயிர் நீத்த யாழ்.இந்து அன்னையின் தவப்புதல்வன் பொன்.சிவகுமாரனை நினைவுக…

  15. Date: 2007-06-06 இந்தியாவைத் திருப்திப்படுத்துகின்ற இராஜதந்திரம் கொழும்பிடம் இல்லை தேர்தல் காலத்தில் ஆதரவு தர முன்வரும் தரப்புகளை எல்லாம் வளைத்துப் போடுவதற்காக, அத்தரப்புகள் முன்வைக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றிச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வது போல தலையாட்டி, கையெழுத்திட்டு செப்படி வித்தை காட்டுவது வேறு. உலகளாவிய ரீதியிலான சர்வதேச அரசியலைக் கையாள்வது வேறு. அதிகாரத்துக்கு வருவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்னர், பழைய வாக்குறுதிகளைக் காற்றோடு பறக்கவிடும் விட்டேத்திப் போக்கு, சர்வதேச அரசியலைக் கையாள உதவப் போவதில்லை என்பது இலங்கையின் அரசுத் தலைவருக்கு இப்போது மெ…

    • 2 replies
    • 1.1k views
  16. தமிழகத்தில் ஈழத்தமிழரின் அவலவாழ்வு விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்). தென்தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்புறத்தில் இருக்கிறது இந்த முகாம். இங்கு வாழும் குழந்தைகள் பலருக்கு இலங்கை தமிழ் பேச வருவதில்லை. தங்களது நாட்டின் நிலை கூட தெரிகிறதா என்பது சந்தேகமே. ஈழத்தின் பேச்சுத்தமிழை மட்டுமல்ல, கலாச்சார அடையாளங்களும் வளரும் குழந்தைகள் அறியாமலே வளர்கிறார்கள். 2006ல் ஓர் அந்திப்பொழுதில் நாம் முகாமிற்குள் செல்லத்துவங்கும் போதே முகாமின் நிலை நமது கண்களுக்கு தெரிகிறது. மண்சுவர்,தென்னை ஓலைகளால் வே…

  17. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு. சிறிலங்கா அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் ரட்நாயக்க பேசியதாவது: சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மேலதிகமான யுத்த தளபாடங்களை சிறிலங்காவுக்கு அது வழங்க உள்ளது. இராணுவ உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்குத்தான் இது வழிவகுக்கும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் இது தொடர்பிலான ஒரு ஒப்பந்…

  18. தமிழீழத் தேசியத் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்சநேரம் பதிவு http://www.yarl.com/videoclips/view_video....46c9077ebb5e35c

  19. புறக்கோட்டை லொட்ஜ்களில் 25 தமிழர்கள் கைது: 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில். கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த 25 தமிழர்கள் புறக்கோட்டை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாம் லொட்ஜ்களில் தங்கியிருந்தமைக்கான உரிய காரணத்தை கூறாததன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதமான் உத்தரவிட்டுள்ளார். -Tamilwin-

  20. தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலைக்கு த. தே. கூட்டமைப்பு கண்டனம். சுனாமி வேலைத் திட்டம் தொடர்பாக கருத்தரங்கு ஒன்றிற்காக கொழும்பிற்கு வந்து கருத்தரங்கு முடிவடைந்து மட்டக்களப்பு செல்வதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணியாளர்கள் ஆறு பேரில் இரண்டு பேர் கடந்த 01-06-2007 அன்று இராணுவ புலனாய்வுத் துறையினர் என்று சந்தேகிக்கப்படுவோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் இரத்தினபுரி பகுதியில் அவர்களது உடல்கள் வீசப்பட்டுள்ளன. செ. கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 05-06-2007 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலைக்கு கண்டனம் : த. தே. கூட்டமைப்பு கொழும்ப…

  21. தேர்தல் சீர்திருத்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு: கட்சிகள் பலத்த எதிர்ப்பு சிறீலங்காவில் தேர்தல் சீர் திருத்தங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை நேற்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்த அறிக்கையை பாராளுமன்ற தெரிவிக்குழுவின் தலைவர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார். 1. சீர்திருத்த அறி்க்கையில் தொகுதிவாரி முறையில் 140 பேர் வாக்கெடுப்பு பிரிவில் இருந்து தெரிவு செய்யப்படுவர். 2. 70 பேர் மாவட்ட விகிதாரசார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். 3. 15 பேர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர். (இதி்ல் 5 பேர் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்) ஏற்கனவே கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எதுவ…

  22. கொழும்பிலிருந்து சென்ற தொடரூந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக சூரியன் எப் எம் தெரிவிக்கிறது மேலதிக செய்திகள் வெகுவிரைவில்

    • 3 replies
    • 1.5k views
  23. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதே கடத்தல்களுக்கான காரணம்: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் படுகொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என்பன நாளாந்த நடவடிக்கையாக தோற்றம் பெற்றுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு அற்றுப்போனதே இதற்கான காரணம் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது. மக்கள் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துபவர்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இது மக்களின் வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது தொடர்பாகவும் யாருக்கும் நிச்சயமில்லாத தன்மை தோன்றியுள்ளது. இந்த மோசமான நிலமை மக்களின் நாளாந்த வ…

  24. பாக்குநீரிணையில் கடற்படை வலுவை இந்தியா அதிகரித்தது வெளிச்சக்திகளின் அச்சுறுத்தலை சமாளிப்பது என்ற போர்வையில் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள வங்காளா விரிகுடாவில் தனது கடற்படைப் பலத்தை அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கடற்படையினரின் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 'தாஷ' நடவடிக்கை என்ற பெயரில் இந்திய கடற்படையினர் தமது கடற்படை நடவடிக்கைகளை பாக்கு நீரிணையில் முடுக்கி விட்டுள்ளனர். இந்த திட்டத்தில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளின் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பிராந்திய கடற்படை கட்டளை மையத்தின் குக்றி வகையான ஏவுகணை கப்பல்கள் இரண்டும் மேலதிகமாக பாக்கு நீரிணைப் பகுதியில் சுற்றுக…

  25. ஆழிப்பேரலை உதவிகளை தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆழிப்பேரலை கட்டுமானப்பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிதியை அனைத்துலக அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளதாக முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, விசன் போன்றன உட்பட முன்னணி அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆழிப்பேரலை மீள்கட்டுமான உதவியாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கையில் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பிரசல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.