ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை: ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கண்டனம். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு பணியாளர்கள் இருவர் கொழும்பில் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி-மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலை பற்றிய விசாரணை உடனடியாக உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், பான்-கி-மூன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அழைப்பு விடுத்திருக்கின்றார். கொல்லப்பட்ட பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ள பான்-கி-மூன், பொதுமக்கள், மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு பற்றிய தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம்…
-
- 2 replies
- 821 views
-
-
முன்னாள் அதிபர் சந்திரிக்காவிற்கு பாதுகாப்பு - 69 ஊழியர்கள் மீண்டும் நியமனம். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பிற்காக அதிகாரி ஒருவர் உட்பட, 69 காவல்துறையினர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், முன்னாள் அதிபரின் அலுவலக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் சிறீலங்காவிற்கு செல்ல இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சல வாரங்களுக்கு முன்னர் …
-
- 6 replies
- 1.4k views
-
-
திங்கள் 04-06௨007 20:48 மணி தமிழீழம் [சிறீதரன்] கல்லுடைக்கும் தொழிலாளர்கள் விரட்டியடிப்பு யாழ்ப்பாணம் மட்டுவில் சரசாலைப் பகுதிகளில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட சுமார் இரண்டாயிரம் வரையான தொழிலாளர்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள் கடந்த இரண்டு நாட்களுக்குத் தென்மராட்சிப் பகுதிக்குச் சென்று கல்லுடைக்கும் தொழிலில் ஈடபட்டு வந்த சுன்னாகம், சூராவத்தை, மயிலணி, அராலி மற்றும் சரசாலை மட்டுவில் பகுதித் தொழிலாளர்கள் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளையில் இந்த இடத்திற்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து அந்தப் பகுதியில் கல்லுடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனக் கூறி விரட்டியடித்து உள்ளார்கள் . யாழ…
-
- 0 replies
- 914 views
-
-
செவ்வாய் 05-06-2007 05:04 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை கருணா ஒட்டுக் குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களைக் கடத்திக் கொலை செய்திருப்பதாகஇ விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றிக் கருத்துக்கூறிய சப்ரகமுவ மாகாண காவல்துறை பொறுப்பதிகாரி சரத் பெரேராஇ கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கருணா குழுவுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கின்றார். இதேவேளைஇ செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவரும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபோது அவர்களுடன் உடனிருந்த ஏனைய நான்கு பணியாளர்களிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மவுன்ற் லவின…
-
- 9 replies
- 1.7k views
-
-
செவ்வாய் 05-06-2007 03:12 மணி தமிழீழம் [மயூரன்] காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவால் புனரமைப்பு : பாக்குநீரிணையில் கூட்டுரோந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இந்திய அரசாங்கம் யாழ்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் பாக்கு நீரிணையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையான வசதிகளுடன் யாழ்குடாநாட்டுக்கான விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் இந்தியாவில் இருந்து கூட விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம தெரிவிக்கையில் இந்தியா சிறீலங்காவின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
03.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....24c7d2583be6925
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கள் 04-06-2007 22:32 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா சமாதானச் செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்? சிறீலங்காவின் சமாதான செயலகத்திற்கு விரைவில் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக, அரசை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் ஒம்பூட்ஸ்மனும், பொதுச் செயலாளருமான சாம் விஜயசிங்கவின் புதல்வரும், சிறீலங்கா தராண்மைவாதக் கட்சியின் தலைவருமான ரஜீவ விஜயசிங்கவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட இருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. தற்போதைய பணிப்பாளரான பாலித கோகன்ன, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறீலங்கா சமாதான செயலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
திங்கள் 04-06-2007 18:24 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவு தேவை - றோஹித போகொல்லாகம விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவைக் கோரிவரும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தமது அரசு வெளியேறாது என முரண்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள வர்த்தகர்களையும், அரசையும் சிறீலங்காவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகின்ற போகொல்லாகம, றொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். விடுதலைப் புலிகளை பேச்சு மேசையில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை வரவேற்பத…
-
- 2 replies
- 1.2k views
-
-
மூடப்படும் கதவுகளும் நெடுந்தீவு அதிர்வுகளும் -சி.இதயச்சந்திரன்- மேற்குலகானது, இலங்கைக்கான ஒரு கதவை மூடியபடி, இன்னொரு வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆயினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை சகல வழிகளையும் அடைத்தவாறு, கதவைத் தட்டும்படி கேட்கிறது. அதாவது தடைகள், அழுத்தங்களூடாக பயங்கரவாத கோட்பாட்டுக் கதவுகளை நிர்மாணித்து விடுதலைப் புலிகளின் சர்வதேசத்திற்கான பாதைகளை மூடியுள்ளது. இவையனைத்தும் சர்வதேச மத்தியஸ்த சமாதான பேச்சுவார்த்தை காலத்திலேயே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரட்டை வேடம் போல் தோற்றமளிக்கும் ஒரு வழிப்பாதையாகவே இதனைக் கருத வேண்டும். ஆனாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களை சமன் செய்ய பிரித்தானியா, ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான தேர்தல் தந்திரோபாயமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கேட்டார் [04 - June - 2007] [Font Size - A - A - A] *பயங்கரவாத விசாரணை பிரிவிடம் டிரான் அலெஸ் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுடன் தற்போதைய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாடு குறித்து தகவல்களை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு தெரிவித்துள்ள முன்னாள் விமான நிலைய சிவில் விமானத் துறை தலைவர் டிரான் அலெஸ் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான ஜனாதிபதி தேர்தல் தந்திரோபாயமொன்றை உருவாக்குமாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். டிரான் அலெஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நவலோஹா மருத்துவமனையில் வைத்து இதனைத்…
-
- 0 replies
- 2k views
-
-
``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும். அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும். இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல…
-
- 7 replies
- 2.5k views
-
-
கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் …
-
- 4 replies
- 2.1k views
-
-
நாராயணனின் நாவசைப்பும் தென்னிலங்கை சலசலப்பும் [04 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஆயுத உதவிகள் உட்பட தேவைகளுக்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவையே நாடி வரவேண்டுமெனவும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் செல்லக்கூடாது என்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்தவாரம் சென்னையில் வைத்து தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைமை, சுயாதிபத்தியம் உள்ள நாடொன்று தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உலகின் எந்தவொரு நாட்டையும் அணுகமுடியும். அவ்வாறான நிலைமையில் சர்வாதிகாரப் போக்குடன் எங்களிடம் தான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று இந்தியா எப்படிக் கூற முடியும் என்று அரசாங்கத்திலுள்ள முக்கியமா…
-
- 0 replies
- 935 views
-
-
சாவகச்சேரியில் தபால் அதிபர் சுட்டுக்கொலை. யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தபால் அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி வங்களாவடி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட இவர், சுப்பிரமணியம் சாந்தீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது, நேற்று மாலை 6.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவரின் சடலம் இன்று மதியம் 12.00 மணிவரை சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகவும், தபால் அதிபர் மிருசுவிலில் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவுடனான , இலங்கை அரசின் ஒப்பந்தம் மு.சுப்பிரமணியம் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத தளபாடங்களை வாங்குவதற்க்கு இந்தியா சென்றிருந்த பாதுக்கப்பு செயலாளர் 3 நாளாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய போதும் சாதகாமான பதில் கிடக்காதையடுத்து சீனாவிடம் சிறிலங்கா அரசு ஆயுத கொள்வனவு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் படி சிறிலங்கா அரசுக்கு சீனா அயுதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் மென்ரக விமானத்தாக்குதல் நிலைகுலைந்து போயுள்ள இலங்கை, இந்தியாவின் உதவி மறுக்கப்பட்டதையடுத்தும், மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பினை மீறி சீனாவுடன் ஒப்பந்ததினை மேற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 04-06-2007 16:37 மணி தமிழீழம் [தாயகன்] நல்லூரில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழ் நல்லூரில் இன்று மதியம் 12.45 அளவில் மூன்று இளைஞர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நல்லூர் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள், அவர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா. சிங்கள ஆட்சியாளர்களால் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்ற எண்ணம் வடகிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதோடு "பிரிவினையே" இதற்கு தீர்வென்ற முடிவிற்கு வந்துள்ளனர் எனத்தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த நிலையில் கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இது மேலும், அவர்களை பிரிவினையென்ற தீர்மானத்திற்குள் தள்ளிவிடுமென்றும் தெரிவித்தார். கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள சுமித்ரையோ மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் சமகால அரசிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை [04 - June - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா இந்தியாவை பின்பற்றி வடக்கு, கிழக்கு மாகாணத்தை அங்குள்ள சிங்கள சிறுபான்மை மக்களும் சகல உரிமைகளோடு வாழக்கூடிய விதத்தில் தனிமொழி மாநிலமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படை தேவையென்பதை பெரும்பான்மையினக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : Mon Jun 4 7:16:01 EEST 2007 3 வாரங்களுக்குள் வந்து மீளக்குடியமருங்கள் இல்லையேல் உங்கள் காணி உரிமை ரத்தாகும்! இடம்பெயர்ந்த பன்குளம் மக்களுக்கு எச்சரிக்கை மூன்று வாரங்களுக்குள் வந்து மீளக் குடியமருங்கள். இல்லையேல் உங்களது காணி உரிமைகள் ரத்துச்செய்யப்பட்டு அவை வேறு ஆள்களுக்குச் சொந்தமாக வழங்கப்படும். இவ்வாறு பன்குளத்தைச் சொந்த இட மாகக் கொண்டு இப்போது திருகோண மலை நகரில் உள்ள நலன்புரி நிலையங் களில் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கும் பணிப்புரை மொறவேவ(பன்குளம்) பிரதேச செயலரினால் நேற்று விடுக்கப்பட்டது. பன்குளம்(மொறவேவ) பிரதேசத்தில் வாழ்ந்த 200 தமிழ்க்குடும்பங்கள் அண் மைக் கால இராணுவ நடவடிக்கைகளால் இட…
-
- 0 replies
- 1.1k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் தேவை அரசுக்கில்லை: ரோகித்த போகொல்லாகம. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில்இடம்பெறுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு புலிகள் இணங்கினால் அதனை எந்தநேரமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழர்கள் தகுந்த காரணங்களுடன் தான் கொழும்பிலே வாழுகின்றார்கள் என்பதை அரசாங்கமும், பொலிஸாரும் புரிந்துகொள்ள வேண்டும் : மனோகணேசன் Written by Ellalan - Jun 04, 2007 at 11:19 AM கொழும்பில் தகுந்த காரண மில்லாமல் நடமாடும் பிற மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற பொலிஸ் மா அதிபரின் கருத்து தவறானதாகும். வடகிழக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெறுகின்றது. அதே போல் மலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்த காரணங்களால்தான் வடகிழக்கையும், மலையகத்தையும் சார்ந்த தமிழர்கள் பாதுகாப்பையும், தொழில் வாய்ப்புகளையும் தேடி கொழும்பிற்கு வருகின்றார்கள். இங்கே எந்த ஒரு தமிழரும் காரணமில்லாமல் பொழுது போக்குவதாக நான் நினைக்கவி…
-
- 0 replies
- 863 views
-
-
Date: 2007-06-04 பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம் பேரினவாத மேலாண்மைப் போக்கில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசின் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்த வார இறுதியில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வெளி யிட்டிருக்கின்றார். ""யுத்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வந்து, இங்கு சுமார் ஆறு மாதங் களுக்கு மேலாக வேலையின்றி அலைந்து திரியும் மக்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இத்தகையோர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுவர். இதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை நாங்களே (பொலி ஸாரே) வழங்குவோம்'' இப்படிக் கூறியிருக்கின்றார் பொலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரஸ்லஸ் கூட்டத்துக்கு உயர் மட்டக்குழுவை அனுப்ப சிறிலங்கா தயக்கம் பிரஸ்லஸ்சில் நாளை செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்தி விவகாரக் குழுவின் ஆரம்ப கூட்டத்தொடருக்கு கீழ் மட்டத்திலான குழு ஒன்றையே சிறிலங்கா அரசாங்கம் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுயாதீனமான மனித உரிமைக் குழுக்கள் தமது பிரதிநிதித்துவத்தை வகிப்பதற்கு அனுமதிக்கும் நோக்கத்துடனேயே அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக உயர் வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. மனித உரிமைகள் அமைப்புக்களையும், வெளிநாடுகளில் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களையும் அபிவிருத்தி விவகாரங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதிநிதித்…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களில் இருந்து கடும் எறிகணை வீச்சுத்தாக்குதல் சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கில் பலாலி, வடமராட்சி, தென்மராட்சி இராணுவ முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி மாலை 5.30 மணிமுதல் 10 மணிவரை கடும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து பெருமளவு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரை வடக்கு கடற்கரையோர பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்கு சென்ற பொதுமக்களை சிறீலங்கா படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரது கடும் ஆட்டிலறி எறிகணைத்தாக்குதலையடுத்து நாகர்கோவில், தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் பதற்றம் நிலவுவதா…
-
- 1 reply
- 1.6k views
-
-
வேப்பமடு அகதி முகாமில் தாக்குதல் : நால்வர் படுகாயம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிற்றூர்தியில் சென்ற 10 பேர் கொண்ட குழுவினர் புத்தளம், மன்னார் வீதியிலுள்ள வேப்பமடு அகதிமுகாமினுள் புகுந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோக தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது. தனிப்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 794 views
-