ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வெள்ளி 13-04-2007 16:59 மணி தமிழீழம் [தாயகன்] 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி சிறீலங்காவிலுள்ள 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 40 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளதாக, கொழும்பிலுள்ள அதன் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஒன்று சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய பதில் தூதர் மத்தியூ தலைமையில் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, கண்டி, அநுராபுரம் மாவட்டங்கள், மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள சிங்கள, முஸ்லீம் அமைப்புகளுக்கே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மூலம் -பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அனைத்துலக விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு "சிறிலங்காவின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்று வரும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் கவலையை தருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம், தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதனை அமெரிக்க ஊக்கப்படுத்துகின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்." கடந்த செவ்வாய்க்கிழமை அமொரிக்காவின் வாசிங்ரனில் அனைத்துலக ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய வெளிவிவகார துணை அமைச்சக தூதுவர் றிச்சர்ட் பெளச்சர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 1k views
-
-
யாழ் மக்களின் அவலங்களைப் போக்க ஏ-9 பாதையை திறக்கவேண்டும். - பேராயர். - பண்டார வன்னியன்Monday, 16 April 2007 10:02 யாழ் குடாநாட்டு மக்களின் வலங்களை நீக்குவதற்கு ஏ-9 வீதியைச் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கைத் திருச்சபையின் கொழும்பு பேராயர் அருள்பணி டுலீப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அவர் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பலநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தும் சோர்வடையாத நிலையில் உற்சாகத்துடன் இருக்கும் சிறப்புத் தன்மையை யாழ் மக்களிடம் கண்டேன். இப்போது பொருட்கள் ஒரளவு கிடைப்பதை அவதானித்தேன். ஆனால் விலைகள் பெரியளவில் வீழ்ச்சியடையவில்லை என்பதை உணர்ந்தேன்…
-
- 0 replies
- 628 views
-
-
இருளில் மூழ்கியது இலங்கை-பரபரப்பு ஏப்ரல் 16, 2007 கொழும்பு: இலங்கையில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாடே இருளில் மூழ்கியது. கோடை காரணமாக நிலவும் வறட்சியால் இலங்கையில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இந் நிலையில் ஓவர்லோட் காரணமாக மின்சார வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. புலிகள்-ராணுவம் போர் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. ஆனால், தொழில்நுட்ப காரணமே இச் சம்பவத்துக்குக் காரணம் என அந் நாட்டு மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் வினியோகம் இன்னும் முழுமையாக சீரடையவில்ைல. http://thatstamil.oneindia.in/news/2007/04/16/lanka.html
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை வெளிநாடுகள் பல மீள்பரிசீலனை செய்யும்? ஜெனிவா, ஏப்.16 தத்தமது நாடுகளில் தற்காலிகமாக அகதி அந்தஸ்த்துடன் வாழும் இலங்கையரைத் திருப்பி அனுப்புவதை மீள் பரிசீலனை செய்யவும், இப்போதைக்குத் தற்காலிகமாக நிறுத்தவும் ஐரோப்பிய நாடுகள் சில உத்தேசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் ஆகிய மனித உரிமை மீறல்கள் உச்சக்கட்டத்தை அடைந்து வருவதால், அகதி அந்தஸ்து கோரிய நிலை யில் தத்தமது நாடுகளில் தற்காலிகமாக வாழ்ந்து வருவோரை, அங்கிருந்து திருப்பி அனுப்பும் திட்டத்தை மேற்கு நாடுகளின் அரசுகள் மறுபரிசீலனை செய்து விரைவில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது விடயத்தில் சுவி…
-
- 1 reply
- 947 views
-
-
சிவாஜிலிங்கம் மீதான விசாரணை கூட்டமைப்பின் வாயை மூடத் திட்டம்? -(அஜாதசத்ரு) மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களை அமைதி வழி மூலம் தீர்வு காண்பதை விடுத்து அதிகாரத்தை கொண்டு அடக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுபட்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. இனநெருக்கடித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள், உட்கட்சி அரசியல் முரண்பாடுகள், எதிரணிக் கட்சிகளுடனான அணுகுமுறைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட அனைத்து பிரதான விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள், அனைத்து தரப்பினராலும் வெறுத்தொதுக்கப்படும் நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 986 views
-
-
காணாமல் போனோர் விவகாரத்தில் களமிறங்கும் பிரதான எதிர்க்கட்சி- (அஜாதசத்ரு) [15 - April - 2007] ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், கப்பம் பெறுதல், படுகொலை போன்ற சம்பவங்கள் நாடுபூராவும் மிக மோசமாக அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பான எந்தவொரு உண்மை நிலைவரத்தையும் எவராவது வெளியிட முன்வந்தால் அல்லது தட்டிக்கேட்க முற்பட்டால் `சவப்பெட்டிகளை' தயாராக வைத்திருங்கள் என்ற கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிரான சுயாதீன மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாத போக்கொன்றையே காணக்கூடியதாகவுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களின் முதலா…
-
- 7 replies
- 1.3k views
-
-
கிழக்கு அகதிகளுக்கு உதவவிடாமல் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நெருக்கடி! நிலைமையை விளக்கி அந்த அமைப்பு அறிக்கை கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெருமளவு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், அந்த அகதிகளுக்கு உதவவிடாமல் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு அரசு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்துவருகின்றது என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. இதுதொடர்பாக நிலை மைகளை விளக்கி அந்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கை வருமாறு: தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன் னைய சேவைகளான, போர்கள் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்த இடப்பெயர்வுக் காலப் பணிகளுடன் ஒப்பிடும்போது கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் 150,000 மக்களைப் பராமரிப்பது ஒரு பெரிய சவா லாக இருக்கமாட்டாது. சிறி…
-
- 0 replies
- 561 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் குழு விரைவில் வன்னி செல்லும்! வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வன்னி செல்லத் திட்டமிட்டுள்ளது. இந்த வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க இக்குழுவைப் பணித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள் வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்திற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜயலத் ஜயவர்த்தன தெ…
-
- 1 reply
- 723 views
-
-
மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச ஆணைக்குழு அவசியம் ` இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றது. இப்போது குரல் எழுப்பியிருப்பவர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப்பிராந்தியங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகாரத் துணை அமைச்சகத் தூதுவர் ரிச்சர்ட் பௌச்சர் ஆவார். இலங்கையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்பதற்கும் விசாரிப்பதற்கும் சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைக்கு அமெரிக்காவின் முழு ஆதரவை ரிச்சர்ட் பௌச்சர் வெளியிட்டிருக்கின்றார். சட்ட ரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக…
-
- 0 replies
- 667 views
-
-
சமரச முயற்சிகளை வற்புறுத்தாமல் விட்டுப் பிடிக்க சர்வதேச சமூகம் முடிவு அரசும் புலிகளும் பட்டுத் தெளிய அனுமதிக்கலாம் எனத் தீர்மானம். சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளில் அதிக முனைப்புடன் ஈடுபடுமாறு இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் விடாது நச்சரித்து வந்த சர்வதேச சமூகம், அக்கோரிக்கை இரு தரப்புகளினதும் காதுகளில் ஏறாது என்பதைக் கண்டுணர்ந்த நிலையில், மேலும் அந்த வற்புறுத்தலைத் தொடர்வது இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. யுத்த முனைப்பில் தீவிரமாக இருக்கும் இரு தரப்புகளையும் மோதவிட்டு, அவை பட்டுத் தெளிந்து, மோதிக் களைத்து வரும் வரை விட்டுப்பிடிப்பது என இராஜதந்திர வட்டாரங்கள் முடிவு செய்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இராஜதந்திர வ…
-
- 2 replies
- 852 views
-
-
நாம் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்தவில்லை: விடுதலைப் புலிகள் அனைத்துலக நாடுகளில் தமது ஒளிபரப்புக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். 'நாம் சட்டபூர்வமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றோம், திருட்டுத்தனமாக அல்ல' என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விடுதரலப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். உலகின் பெரிய வர்த்தக செய்மதி நிறுவனமான இன்ரல்சற்றின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தமது ஒரு செய்மதியை தவறாக பயன்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். யூரோப் ஸ்ரார் - 1 என்ன…
-
- 2 replies
- 2k views
-
-
நாட்டை பிரிக்க சர்வதேச மட்டத்தில் சதி அரசு கவனம் கொள்ளாமை ஆச்சரியம் வீரகேசரி நாளேடு எமது நாட்டை பிரிப்பதற்கும் நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கும் சர்வதேச மட்டத்தில் பாரிய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆனால் சர்வதேசத்தின் இந்த சதித்திட்டம் குறித்து அரசாங்கம் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. இலங்கையில் சர்வதேச கண்காணிப்புகுழுவொன்று செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி. யின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போதைய நிலையில் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை மீறி செயற்படுகின்றது. அந்த வகையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் எம். பி. மார்களை அரசாங…
-
- 0 replies
- 748 views
-
-
சக்தி வாய்ந்த ஆயுதங்கள் சந்தைகளிலே கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை: பழ. நெடுமாறன் தென் கிழக்காசிய சந்தைகளில் பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கிடைக்கும்போது சைக்கிள் பேரிங்குகளை கடத்த வேண்டிய அவசியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடன் வாரமிருமுறை ஏட்டுக்கு பழ. நெடுமாறன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: இராமேஸ்வரம் மீனவர்களையும் குமரி மாவட்ட மீனவர்களையும் கொன்றது இலங்கைக் கடற்படை அல்ல விடுதலைப் புலிகள்தான் என்று கூறப் படுகிறதே? தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தக் கடற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு? மீனவர்கள் தாக்கப்படு…
-
- 0 replies
- 685 views
-
-
''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு'' -ச.சங்கரன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பிற்குள் சென்று கட்டு நாயக்கா விமான நிலையத்தில் துணிகர அதிரடித் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பியமை குறித்த சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை. இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாத மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் வான் படைக்கு எதிரான வான் படை ஏதிர்ப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளின் விமானம் தாக்குதல் நடாத்தி பாதுகப்பாக தளம் திரும்பிய சிறிது நேரத்திலேயே முதலாவது பாதுகப்புச் சபையினை கூட்டி புலிகளின் விமானப் படைக்கு …
-
- 1 reply
- 1.3k views
-
-
புதிய போரியல் பரிணாமங்களும் பாதுகாப்புச் செலவு ஈடு கொடுக்குமா? -அருஸ் தமிழ் மக்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன. இந்த காலப்பகுதியில் போராட்ட வரலாறு பேச்சு போர் பேச்சு போர் என்ற சக்கரத்தில் சுழன்று நான்காவது கட்ட ஈழப்போரின் உக்கிரத்தில் வந்து தொங்கி நிற்கின்றது. அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய இராணுவத்துடனான போரும் உள்ளடங்கியிருந்தது. எனினும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த நான்கு கட்ட ஈழப்போர்களையும் கருதினால் ஒவ்வொரு கட்டத்திலும் போரின் பரிணாமங்களும், களத்தின் தன்மையும் விரிவடைந்தே சென்றுள்ளன. முதலாவது ஈழப்போரில் இலங்கையின் காவல்துற…
-
- 0 replies
- 737 views
-
-
இரணுவ முனைப்புகள் அதிகரித்துள்ளது - ஏ.எஃப்.பி செய்தி சேவை சிறீலங்காவில் இடம்பெறும் இராணுவ முனைப்புகள் காரணமாக அமைதி முயற்சிகள் பயனற்றுப் போயிருப்பதாக, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இராணுவ முனைப்புகள் தணியும்வரை சிறீலங்காவின் அமைதி முயற்சிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு அனைத்துலக சமூகம் தீர்மானித்திருப்பதாகவும் ஏ.எஃப்.பியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகளின் அனுசரணைப் பணியை ஆற்றி வந்த நோர்வேயை, அதன் பணிகளைத் தொடருமாறு இரண்டு தரப்பினரும் அழைக்காத நிலையில், நோர்வேயின் சமாதான முயற்சிகளும் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதான முயற்சிகள் உறங்கு நிலையை அடைந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளி…
-
- 0 replies
- 745 views
-
-
மங்களவுக்கு நேசக்கரம் நீட்டும் மகிந்த [ ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீரவுக்கு மகிந்த ராஜபக்ச நேசக்கரம் நீட்டுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தேசிய புதுவருட நல்லெண்ண முயற்சியாகவும், மீண்டும் தமது நட்பை புதுப்பிக்கும் முயற்சியாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோருக்கு இடையிலான சமரச முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியுள்ள மங்களவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை அனுப்புவதனை நிறுத்தும்படியும், ஆனால் முன்னாள் அமைச்சர் சிறீ…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா அரசுக்கு உதவி செய்யக்கூடாது - நெதர்லாந்து தமிழர் மனித உரிமை அமைப்பு நெதர்லாந்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான தொழிற் கட்சியின் ஏற்பாட்டில் அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஒன்றுகூடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் நெதர்லாந்தின் தமிழர் மனித உரிமை அமைப்பின் தலைவர் இந்திரன் சின்னையா கலந்து கொண்டார். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், சிறீலங்கா அரசுக்கு எதுவித நிதி உதவிகளையும் நெதர்லாந்து அரசாங்கம் செய்யக்கூடாது எனக் கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை நெதர்லாந்தின் அபிவிருத்தி அம…
-
- 0 replies
- 563 views
-
-
யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீ…
-
- 10 replies
- 2.5k views
-
-
கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு -(கலைஞன்) [15 - April - 2007] * ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 1 reply
- 1.1k views
-
-
ஞாயிறு 15-04-2007 15:47 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் 4 புதிய படைமுகாம்களை அமைக்க படையினர் திட்டம். மட்டக்களப்பு பதுளை நெடுஞ்சாலையை மையப்படுத்தி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்ட சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் மக்களின் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டதை யாவரும் அறிந்ததே. தமிழீழ மக்களை மீளக்குடியேறவிடாது அங்கு சிங்கள மயமாக்கும் நவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் தற்பொழுது மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள தாண்டியடி, சோலையகம் அமைந்துள்ள கொக்கட்டிச் சோலை, தேனகம் அமைந்துள்ள கனடியனாறு மற்றும் மணற்பிட்டி போன்ற இடங்களில் பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளில் சிறீலங்காப் படைகள் ஈடுபட்டுள்ளனர். மூலம் - பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி கணபதிப்பிள்ளை நகர் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்குச் சென்ற படையினர், அப்பகுதி வீடு ஒன்றுக்குள் சென்று அவ்வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது, தமது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர்களை நோக்கி படையினர் சரசமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் குழந்தையும் மேலும் இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் இன்று காலை சடலங்களாக ம…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 15-04-2007 15:36 மணி தமிழீழம் [மயூரன்] கரடியனாற்றில் லெப்.கேணல் ஜீவனின் நினைவுச் சிலை படையினரால் அடித்துடைப்பு தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காப் படைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவுத் தூபிகள், நினைவுப் படங்களை அடித்துடைத்து அழித்து வருகின்றனர். இவ்வாறு கரடியனாற்றில் அமைந்துள்ள லெப்.கேணல் ஜீவன் அவர்களின் நினைவுச் சிலையை ஆக்கிரமிப்புப் படைகளால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. மூலம் - பதிவு
-
- 3 replies
- 1.3k views
-
-
நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் தமிழீழத் தேசியதத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப் பட்டுள்ளார். நாவண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவிலேயே தமிழீழத் தேசியத் தலைவரால் இவர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் சுயநலன்கருதாது நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேசசுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களை நாம்இழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்து இந்தக் கலைமாமணியைப் புரிந்து இந்தக் கலைமாமணியை அவரது முதலாவது நினைவாண்டில் இன்று நாம் பெருமையோடு நினைவுகூருகிறோம். இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைகளுக்கே உரித்தான உள்ளம் இருந்தது. வற்றாதகலையுணர…
-
- 1 reply
- 833 views
-