ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வவுனியா மருத்துவர்களுக்கு கருணா குழுவினர் கொலை மிரட்டல் [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:42 ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா பகுதியில் உள்ள மருத்துவர்களை கப்பம் கட்டுமாறு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் விடுத்து வரும் மிரட்டல்களைத் தொடர்ந்து, வவுனியா பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் சட்டப்படி வேலை செய்தல் என்னும் போராட்டத்தை இரு நாட்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தினால் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர், தங்களிடம் பெரும…
-
- 2 replies
- 954 views
-
-
[Thursday April 05 2007 06:28:56 AM GMT] [யாழ் வாணன்] தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கே ஆப்புவைக்க முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாம் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவிதமான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயார். இப்படி அரசுக்கு சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம். நேற்று நாடாளுமன்றம் கூடியபோது சிவாஜிலிங்கம் எம். பி. சிறப்புரிமைப் பிரச் சினை ஒன்றை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது: நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தை யும் தன்கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஜன…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் தற்காலிக நீக்கம் [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:29 ஈழம்] [க.திருக்குமார்] ஐந்து மில்லியன் ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை விடுவித்ததாக சிறிலங்காவின் இரு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மூத்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அதிகாரிகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முறைப்பாடுகளை செய்துள்ளனர். மேலும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அவர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து அதன் முடிவாக அந்த இரு அதிகாரிகளையும் தற்கா…
-
- 0 replies
- 808 views
-
-
இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை ஏப்ரல் 05, 2007 டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
எதிர்பார்க்கப்பட்டவற்றை நிறைவேற்றும் மஹிந்த அரசு ` இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை இராணுவத் திமிர்த்தனத்தோடும், பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கோடும் அணுகி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதன் மூலம் நாட்டை எவ்வாறு குட்டிச்சுவராக்கியுள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் வார்த்தைக்கு வார்த்தை பிய்த்து உதறி அம்பலப்படுத்தி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஒரு புறம் அமைதி வழித் தீர்வு என்று வாயால் கூறிக்கொண்டு, மறுபுறம் இராணுவத் தீர்வை நாடும் மஹிந்த அரசின் இரட்டை வேடம் சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்தரின் இரட்டை வேட தந்திரோபாய அணுகுமுறை தோற்றுப்போகும் நிலையில், இலங்கை இப்போது சர்வதேச …
-
- 0 replies
- 954 views
-
-
[Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma] இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்..... சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இத…
-
- 11 replies
- 2.4k views
-
-
ஊரடங்கு அமுலும் இராணுவ அடக்குமுறையும் - பண்டார வன்னியன் Thursday, 05 April 2007 11:10 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான ஒரேயொரு தரைவழிப் பாதையான ஏ9 பாதையை திட்டமிட்டு மூடி திறந்த வெளிச்சிறைச்சாலையாக குடாநாட்டை வைத்திருக்கும் சிறிலங்காப் படைகளால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லிள் அடங்காதவை. வெள்ளைவான் கடத்தல்கள்,படுகொலைகள் என யாழ.;குடாநாட்டு மக்கள் பாரிய மனித அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர். இராணுவ நலன்களுக்காக அடிக்கடி ஊரடங்கு நேரத்தை மாற்றும் பலாலி சிறிலங்கா படைத்தள அதிகாரிகள் மக்களை சிறைக்கைதிகளை விட மிக மோசமாக மனித நேயமற்று நடாத்துவதாக யாழ்.குடா நாட்டு மக்கள் விசனமடைந்துள்ளனர். இதே போன்றே கடற்றொழிலாளர்களை குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட துரம் கடலுக்க…
-
- 0 replies
- 844 views
-
-
மீண்டும் குண்டு மழை பொழிய குருதிநதி பெருக்கெடுத்து ஓடுகிறது ஈழத்துத் தெருக்களில். வான் புலிகளின் விமானத் தாக்குதல் உலகின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்திருக்க, அதிர்ச்சியுடனும், மிரட்சியுடனும் திகிலடைந்து போயிருக்கிறது இலங்கை ராணுவம். இதன் தொடர்ச்சியாக இராமேஸ்வரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் நவீன ரேடார் கருவிகளை வைத்து இந்திய அரசு இருபத்தி நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் நம்முடைய கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தார். ‘‘இலங்கை ராணுவத்தினர் ஒவ்வொரு முறை எமது மக்களின் மீது கொடூரமான விமானத் தாக்குதல்களை நடத்திய போதும், கொழும்புவில் இருக்கும் அவர்களது ‘கட…
-
- 3 replies
- 2.3k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் …
-
- 7 replies
- 1.5k views
-
-
அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…
-
- 4 replies
- 1.6k views
-
-
[Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com] பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார். புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநா…
-
- 7 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 03-04-2007 23:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த 3 மாதங்களில் 67 பேர் சுட்டுக்கொலை, 29 ஆட்கடத்தல், 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் யாழ்பாணத்தில் 67 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் கடத்தப்பட்டும் 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டும் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஜனவரி 20 பேரும் பெப்ரவரி காலப்பகுதியில் 8 பேரும் மார்ச் காலப்பகுதியில் 39 பேரும் மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் 67 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இனம் தெரியாத வெள்ளைவான்கள், சிறீலங்கா இராணுவத்தினர், சிறீலங்கா படைப்புலனாய்வாரள்கள் ஆகியோரால் ஜகவரி மாதம் 10 பொதுமக்களும் மார்ச் மாதம் 19 ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…
-
- 7 replies
- 1.4k views
-
-
கிழக்கு திமோர், நேபாளம் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேசம் தலையிட வேண்டும் பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பாக ஒரு தரப்பை குற்றஞ்சாட்டுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே கிழக்கு தீமோர் மற்றும் நேபா ளத்தில் செயற்பட்டதைப்போன்று சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்திலும் தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள், எறிகணை வீச்சுக்கள், பகடைக்காய்களாக பயன்படுத்தல் போன்ற அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற அனைத்து உரிமைகளைய…
-
- 0 replies
- 728 views
-
-
பஞ்சாயத்து முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு அபத்தம் ` தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்') மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார். அவர் களுள் ஒருவர் அவரது நெருங்கிய நண்பரும் பஞ் சாயத்துத் துறைக்கான இந்திய மத்திய அமைச்சரு மான மணிசங்கர ஐயர் என்று தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாக முறையை குறித்து இந்திய அமைச்சரிடம், இலங்கை ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் தேசியச் சிக்கலாக உருவெடுத் திருக்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான தெற்கின் முன் யோசனைகளை சிபாரிசு செய்யும் நோக்குடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒ…
-
- 5 replies
- 2k views
-
-
''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது'' -ச.சங்கரன்- விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஜி.சீ.ஈ. பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்ப்பதில் நெருக்கடி வேம்படி, யாழ். இந்து முன்னிலையில் யாழ்ப்பாணம்,ஏப்.4 கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சை முடிவுகள் இணைத்தளம் மூலம் திங்கள் இரவு வெளியாகின. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில், சாதாரண தர பரீட்சை முடிவுகளை திங்கள் இரவே பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நேற்றுக் காலையிலிருந்தே நகரப் பாடசாலைகள், தனிப்பட்ட மாணவர்கள் என்று எல்லோரும் பரீட்சை முடிவுகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி காரணமாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து காணப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளும், மாணவர்களும் பரீட்சை முடிவுகளை அறிவதற்காக இணையத்தளத்தைப் பார்க்க முண்டியடித்தமையும் அதன் வேகம் குறைந்ததற…
-
- 8 replies
- 1.7k views
-
-
[Wednesday April 04 2007 08:33:49 AM GMT] [யாழ் வாணன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து அரசு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் என வெளியான செய்தியில் உண்மையில்லை. அரசு இது குறித்து ஆராயவில்லை என்று பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான செய்தி யாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பு கிராமோதய நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தகவல் தருகை யில் கூறியதாவது: இந்தச் செய்தி எவ்வாறு வெளியிடப்பட் டது என்பது குறித்து அரசு விசாரணை நடத் தும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இச்செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார் செய்தியாள…
-
- 2 replies
- 724 views
-
-
வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை வடமராட்சி இன்பருட்டி கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடல் ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கடற்படையினர் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருவர் தாக்கவர மற்றவர்கள் அத்தாக்குதலை முறியடிப்பது போன்ற இவ் ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இன்றை ஒத்திகைப் பயிற்சியில் 3 உலங்கு வானூர்த்திகள், 16 டோரா பீரங்கிப் படகுகள், 20 நீருந்து விசைப் படகுகளும் ஈடுபட்டுள்ளன. pathivu.com
-
- 2 replies
- 1.1k views
-
-
திருமலையில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர் படையினரால் கைது திருமலை உப்புவெளியில் தன்னார்வப் பணியாளர்கள் இருவர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர். NPPF எனப்படும் தன்னார்வ நிறுவன பணியாளர்கள் இருவரும் தன்னார்வ நிறுவனத்தின் வாகனத்தில் சென்று கொண்டுடிருந்த போது அவர்களை வழமறித்து சோதனையிட்டனர். இன்று மதியம் 1.30 மணியளவில் உப்புவெளிச் சந்தியில் வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது அவர்கள் வானத்தில் கைக்குண்டு இருந்ததாகத் தெரிவித்து இவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தனபாலசிங்கம் சுவீந்திரன், முகதீன் சுகைதீன் ஆகியோரோ கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவருகின்றது. pathivu.com
-
- 0 replies
- 619 views
-
-
விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள் [04 - April - 2007] விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
எட்வேர்ட் குணசேகரவை தொடர்ந்து மீண்டும் ஐ.தே.க.வுக்கு சிலர் திரும்பிச்செல்லும் சாத்தியம் ஐ.தே.க.விலிருந்து விலகி ஆளும் தரப்பில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் மீண்டும் அக்கட்சியில் இணையவிருப்பதாக அறிய வருகிறது. ஐ.தே.க.விலிருந்து விலகி அர சாங்கத்தில் பிரதி ரயில்வே அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட எட்வேர்ட் குணசேகர நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இந்நிலையில் ஐ.தே.க. விலிருந்து விலகி ஆளும் தரப்புடன் இணைந்து கொண்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அக்கட்சியிலேயே இணையவுள்ளனர். தமக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், அவை பெயரளவில் மாத்திரமே…
-
- 0 replies
- 820 views
-
-
[சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…
-
- 11 replies
- 1.7k views
-
-
'மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்' -சபேசன் 'கடல்கள் தாண்டி, கண்டங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூரதேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் திரு ஜெயக்குமார் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். இந்த நல்ல மனிதரை இழந்து எமது தேசம் இன்று சோகக் கடலிலே மூழ்கிக் கிடக்கின்றது.' தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்: 'அடி தாங்கும் உள்ளம் இது இடிதாங்குமா?' என்று ஒரு பாடலின் வரிகள் கூறும். அடிகளை மட்டுமல்ல, இடிகளையும் தாங்கி நிமிர்ந்து நின்றவர்தான் எங்கள் மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக, அவுஸ்திரேலியாவில் பேரினவாதச் சார்புச் சக்திகள் கொடு…
-
- 0 replies
- 756 views
-
-
அம்பாறை கல்முனையில் படையினர் மீது தாக்குதல் : நான்கு பேர் பலி. அம்பாறை மாவட்டம் கல்முனையில் வீதிரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் அதிரடிப்படை சார்ஜண்ட் ஒருவர் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது வீதிரோந்தில் அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதினால் அதிரடிப் படையின் சார்ஜண்ட் உட்பட நான்கு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. . - சூரியன்
-
- 0 replies
- 837 views
-