Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் அராஜகங்கள் சர்வதேச மட்டத்தில் அம்பலம் தென்னிலங்கையிலும், அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் வகைதொகையின்றி இடம்பெறும் மனிதப் படுகொலைகள், கேட்டுக் கேள்வியின்றி நடைபெறும் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அரசுத் தரப்பில் ஒட்டிக்கொண்டிருந்தபோதிலும் மனச்சாட்சி காரணமாக, இந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியோர் மேலிட அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால் அமுக்கி வாசிக்க வேண்டியவர்களுமானார்கள். இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய வேறு சிலரோ மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். ரவிராஜ் எம். பி. போன்றோர்…

    • 1 reply
    • 879 views
  2. சிறிலங்கா உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான எஸ். எச். நிலாம், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கடந்த மாதம் 23ந் தேதியில் இருந்து இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ளனர்.. இவர் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இந்தோனேசிய உளவுத்துறை மூலம் பெற்று ஆயுதக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அழிக்கப்பட்டமைக்குக் காரணமாக இருந்தவர். அத்துடன் "மில்லேனியம் சிற்றி"யில் உளவுத்துறையினரின் பதுங்குவீட்டிற்குப் பொறுப்பாகவும் இருந்தவர்! Intelligence officer Nilam missing By Sunil Jayasiri A top intelligence officer of the Sri Lanka Army, Captain S.H. Nilam, who was the defence attaché at the Sri Lanka Embassy in Jakarta, has gone missing since last mo…

    • 16 replies
    • 4.7k views
  3. புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. …

  4. மீனவர்களைக் கடத்தியது புலிகள் தான் அடித்து கூறுகிறார் கருணாநிதி http://thatstamil.oneindia.in/news/2007/05/04/karuna.html புலனாய்வுப் பிரிவினர் விரித்த வலையில் கருணாநிதி ரொம்ப சுலபமாக விழுந்துவிட்டார்.சில வேளையில் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு கடத்தியிருக்கலாம்.அங்கு அகப்பட்ட 6 பேரும் ஒட்டுக் குழுவாகவும் இருக்கலாம்.மீனவர்களுக்கே மீன் கொடுக்கிறார்களாம்.

  5. கடற்படை கப்பல்களில் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும்: கொழும்பு ஊடகம் [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 17:28 ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகளை எதிர்கொள்ள சிறிலங்கா கடற்படை கப்பல்களிலும் வான் பாதுகாப்பு கருவிகளை பொருத்த வேண்டும் என்று கொழும்பு ஊடகம் யோசனை தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கட்டுரை: பலாலி கூட்டுப்படைத் தளத்தின் மீது வான்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் தொடர்பாக படையினர் ஆராய்ந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் மூன்றாவது வெற்றிகரமான தாக்குதலையும் நடத்தி முடித்துவிட்டனர். விடுதலைப் புலிகளின் ஒற்றை இயந்திரத்தைக் கொண்ட Zlin-143 அல்லது செஸ்னா வகை வானூர்திகள் மிகவும் முக்கியம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப…

  6. புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:44 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது: இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில்…

  7. மகிந்தவினால் தமிழகம் செல்ல முடியுமா?: ஐ.தே.க. [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழ்நாட்டின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்னணித் தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளதாவது: இலங்கை அமைதி முயற்சிகளில் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் பேற வேண்டும். தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் இதர நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் எதுவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசின் நிலைத்தன்மையானது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவும் அந்த மாநிலத்திலிருந்துதான்…

    • 8 replies
    • 2.1k views
  8. கடும் மழை காரணமாக கொழும்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்பு. பிரதி மேயர் இராஜேந்திரன் தகவல் கொழும்பிலும் அதனையண்டிய பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு மாநகரசபையை அண்டிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கிம்புலாகல, ரெட்பானா, கொட்டாஞ்சேனை, வனாத்தமுல்லை, மாளிகாவத்தை, கதிரான, களனி ஆகிய பகுதிகளிலேயே வெள்ள அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கொழும்பில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 16 பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வெசாக் பண்டிகைக்கென கட்டப்பட்டிருந்த அலங்கார தோரணங்க…

  9. பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது வீரகேசரி நாளேடு ஜே.வி.பி. தெரிவிப்பு; யோசனையையும் நிராகரிக்கவேண்டும் என்கிறது பிரித்தானியா தனது வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும். இலங்கை விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிரித்தானியா தற்போது உலக நாடுகளை ஆட்சிசெய்யும் நாடல்ல. உலக நாடுகளில் அந்த நாடும் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை மண்டியிடச்செய்யும் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் இலங்கைக்கான அக்கறையை நாங்கள் நோக்குகின்றோம். எமது நாட்டின் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா …

    • 3 replies
    • 2k views
  10. சு.கவுக்கு தமிழரின் நன்றி! தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான யோசனை என்ற பெயரில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்த திட்டம் தமிழர் தரப்பை மட்டுமல்ல, இலங்கை விவகாரத்தை ஆழ உற்றுநோக்கும் பக்கச்சார்பற்ற பார்வையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் கூட அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது. இராஜதந்திர வட்டாரங்கள் இவ்விவ காரம் குறித்து வெளிப்படுத்தும் பிரதிபலிப்புகள் இதனையே உணர்த்துகின்றன. நாட்டில் பெரும் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்த நிலை யில் தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் கட்டுமட்டில்லாமல் இடம்பெற அனுமதித்த சூழலில் சுமார் ஒருவருட காலம் இழுத்தடித்த பின்னர் "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' ஒன்றுக்குமே உதவாத, உருப் படியற்ற ஒரு திட்டத்தை தீர்வ…

  11. வெள்ளி 04-05-2007 07:07 மணி தமிழீழம் [தாயகன்] எரிக் சூல்கைய்ம் - ரணில் பெல்ஜியத்தில் சந்திப்பு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்கையுமும், சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பிறசல்சில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னரே திட்டமிடப்படாத நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை. சிறீலங்காவின் தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றி இருவரும் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், பேசப்பட்ட விடயங்களின் விபரங்களை வெளியிட அவை மறுத்துள்ளன. pathivu

  12. மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச சிறப்பு நிபுணர் குழு சிறீலங்கா பயணம் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்காணிப்பதற்கான சர்வதேச சிறப்பு நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவின் பிரதிநிதிகள் இம்மாத நடுப்பகுதியில் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். முக்கிய மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய்வதற்காக, சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிக் கண்காணிப்பதற்காகவே, இந்த நிபுணர்கள் சிறீலங்காவிற்குச் செல்லவுள்ளனர். சிறீலங்கா அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு, மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் படுகொலை தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்களைப் …

    • 1 reply
    • 898 views
  13. யாழ். குடாவிற்கான பாதைகள் முன்நிபந்தனைகள் இன்றி திறக்கப்பட வேண்டும்: பிரித்தானியா சிறிலங்காவில் தோன்றியுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்ததில் ஜெனீவாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது தொடர்பாகவும் அது தனது கவலையை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் அணிசேரா நாடுகளின் அமைச்சர் ஹிம் ஹாவல் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவில் மீண்டும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பிரித்…

  14. பத்திரிகை அறிக்கை இலங்கைத் தீவில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனப் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது. இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. …

  15. சிவஒளி எழுதும் கனவு மெய்ப்படும் காலம் கடந்த பெப்ரவரி 4ம் திகதி, காலை 8.45 மணியளவில் வெள்ளவத்தையில் காலி வீதியால் நடந்துகொண்டிருந்தேன். காதைப்பிளக்கும் வானுர்திகளின் சத்தம் வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தது. அப்போதுதான் புரிந்தது சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக கிபிர், மிக் விமானங்கள் இறுதிக்கட்ட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அந்தக் கணப்பொழுதில் சில எண்ணங்கள் என் மனதில் துளிர்விட்டன. இந்த விமானங்கள்தானே படுவான்கரையில், முன்னர் மூதூர் கிழக்கில், வள்ளிபுனம் செஞ்சோலையில், படகுத்துறையிலென பல்வேறு இடங்களிலும் குண்டுகளை வீசி எங்கள் உறவுகளை கொன்றுகுவிக்கின்றன. இவை மீது இடி கூட விழாதா என எண்ணி எண்ணி ஏங்கினேன். ஏன்னைப் போன்றவர்களின் ஆதங்கம் வற்றாப்பளை தாய்க…

    • 1 reply
    • 1.7k views
  16. வெள்ளி 04-05-2007 01:08 மணி தமிழீழம் [மயூரன்] சந்திரிக்காவின் சிறப்புச் சலுகைகளை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் சந்திரிக்கா குமாரதுங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை உச்ச நீதிமன்றம் பறித்துள்ளது. இதுதொடர்பில் விளக்கமளித்த சிறீலங்காவின் தலைமை நீதியாளர் சரத் நந்தன சில்வா சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் அதிபராக பதவி வகித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட 36 அரசாங்க வாகனங்களும் நியமிக்கப்பட்ட பணியாளர்களையும் மீளப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்க செலவில் மீளநிர்மாணம் செய்யப்பட்ட அதிபர் மாளிகையில் சந்திரிக்கா குமாரதுங்க தங்கியிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த …

    • 2 replies
    • 1.2k views
  17. கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையம் இரவில் முழுதாக மூடப்படுகிறது: சிறிலங்கா. சிறிலங்கா கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தினை இரவில் மூடும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வான்புலிகளின் தாக்குதலால் சிறிலங்காவுக்கான பல வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் பகல் சேவைகளை மட்டும் வானூர்தி சேவை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுநாயக்க வானூர்தி நிலையமானது எதிர்வரும் 10 ஆம் நாள் நாள் முதல் இரவில் மூடப்படவுள்ளது. வானூர்தி நிலையம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.30 மணிவரை முழுதாக மூடப்படும் என்று சிறிலங்கா வானூர்தி சேவைகள் பணிப்பாளர் பராக்கிரம திசநாயக்க தெரிவித்துள்ளார். -Puthinam-

  18. கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பு வானூர்திகள். சிறிலங்கா தலைநகர் கொழும்பு மீதான வான்புலிகளின் தாக்குதலை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு வானூர்திகள் பல கொழும்பு வான்பரப்பில் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவதாக சிறிலங்கா வான்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை அதிக செலவானது. ஆனால் செல்வந்த நாடுகள் பலவற்றில் இத்தகைய கண்காணிப்பு நடைபெறுகிறது. சந்தேகமான வானூர்திகள் தொடர்பாக தமக்கு கிடைக்கும் தகவல்களை இதன்மூலம் உறுதி செய்ய முடியும் என்றும் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு கடற்படையினரையும் கடல் தொழிலாளர்களையும் கேட்டுள்ளனர். -Puthinam-

  19. சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம் [வியாழக்கிழமை, 3 மே 2007, 16:24 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது: அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது. சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது. இதன் அடிப்படையில் …

  20. வவுனியாவில் இராணுவ முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 2 சடலங்கள் மீட்பு. வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பல்குழல் வெடிகணை மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் இராணுவத்தினர் முன்னேற முயற்சித்தனர். இந்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். இதில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரின் சடலங்களும் இராணுவத் தளபாடங்களும் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-

  21. கொழுப்பு: கொழுப்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க இலங்கை ராணுவம் போர் ஒத்திகை நடத்தியது. இதனால் தாக்குதல் தொடங்கிவிட்டதாக நினைத்து மக்கள் பீதியடைந்து ஓடினர். விடுதலைப் புலிகள் சமீபகாலமாக கொழும்பு, பலாலி விமான தங்களை விமானங்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தாக்குதலை புலிகள் விரிவுபடுத்தலாம், கொழும்பின் பிற பகுதிகளையும் தாக்கலாம் என்று அரசு கருதுகிறது. இதையடுத்து அப்படிப்பட்ட தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்கும் வகையில் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக இலங்கை ராணுவம் கொழும்பு துறைமுகம் அருகே போர் ஒத்திகை நடத்தியது. இதுகுறித்து பொது மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென துப்பாக்கி, பீரங்கிகள் வெடிக்கு…

    • 0 replies
    • 798 views
  22. கொழும்பு: இலங்கை ராணுவ விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஹரிகுணதிலகே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை விமானப்படையிடம் உள்ள கேபிர் ரக விமானங்களால் விடுதலைப்புலிகளின் விமானங்களை தாக்கி அழிக்க முடியாது. மரங்களை அடியோடு வெட்டித் தான் வீழ்த்த முடியும். அதுபோல் புலிகளன் விமானங்களை தரையில் வைத்துதான் அழிக்க முடியும். வானில் பறக்கும்போது அவற்றை அழிக்கும் திறமை இலங்கையிடம் இல்லை. கேபிர், மிக் ரக விமானங்கள் விடுதலைப்புலிகளின் விமானங்களை இடைமறிக்கும் ஆற்றலுடையவை. அதேசமயம் தாக்கி அழிக்க முடியாது. புலிகளின் விமானங்களை நிற்கும் இடத்தை கண்டுபிடித்து அங்கு குண்டு வீசவேண்டும். ஆனால் அவ…

    • 0 replies
    • 649 views
  23. பிரிட்டிஷ் துணைத் தூதுவரின் கிளிநொச்சி விஜயம் ஒத்திவைப்பு பாதுகாப்புக் காரணம் நிமித்தமாகவா? கொழும்பு,மே 3 இலங்கைக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் லெஸ்லி கிரேக் இன்று கிளிநொச்சிக்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் தூதரக வட்டா ரங்கள் தெரிவித்தன. துணைத் தூதர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் பிரதித் தூதுவரின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை தூதரக வட்டாரங்களால் தெரிவிக்கப்பட் டது. ஆனால் அதற்கான காரணம் வெளி யிடப்படவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக வன்னி செல்ல வேண்டாம் என …

  24. சு.கவின் தீர்வு யோசனை குறித்து புதுடில்லியின் பிரதிபலிப்பு விரைவில்! அதிருப்தி தெரிவிக்கும் கருத்து பெரும்பாலும் நாளை வரும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆளும் அரசுக் கூட்டமைப்பின் பிரதான கட்சி யான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருக்கும் யோசனை குறித்து புதுடில்லிபெரும் அதி ருப்தி கொண்டிருப்பதாக அறியவருகிறது. அது தொடர்பான தனது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் கருத்தை இந்திய அரசு பெரும்பாலும் நாளை பகிரங்கப்படுத்தும் என விடய மறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. இலங்கையில் ஆளும் கூட்டமைப்பின் பிரதான கட்சி ஸ்ரீல.சு.கவே. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் இயங்கும் கட்சி அது. எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அக்கட்சி முன்வைக்கும் யோசனை …

  25. சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிப்படுத்தும் உண்மைகள் இலங்கையின் அரை நூற்றாண்டு காலத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரை வேக்காட்டுத்திட்டம் ஒன்றை யோசனை ஒன்றை முன்வைத்திருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ""சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் மற்றோர் அங்கமே இந்த யோசனை. பரிசீலனைக்குக்கூடத் தமிழர்கள் தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது அது'' என அடியோடு அதனை நிராகரித்து இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் முதல் வீ.ஆனந்தசங்கரி வரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.