ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
யாழில் 4 மாதத்தில் 80 பேர் படுகொலை [வியாழக்கிழமை, 3 மே 2007, 09:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். குடாநாட்டில் கடந்த நான்கு மாத காலப் பகுதியில் 80 பேர் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயது தொடக்கம் 35 வயதுக்கு உட்பட்டோர் என்றும் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் இந்துமத குருவும் ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் மனித உரிமைகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதத்தில் 20 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 19 பேருமாக …
-
- 0 replies
- 674 views
-
-
குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்: சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வா…
-
- 6 replies
- 1.8k views
-
-
புலிகளின் வான் தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ளும்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இராணுவ மற்றும் பொருளாதார மையங்கள் மீதான விடுதலைப் புலிகளின் வான்படை நடத்திய அண்மைய தாக்குதல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய ஆங்கில நாளேடான 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரை: கொழும்பில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார மையங்களை அவதானித்தால் அது வெளிநாட்டு வர்த்தகம், உல்லாசப்பயணத்துறை போன்றவற்றில் தங்கியுள்ளது. எனவே தலைநகரத்தின் மீதான கடுமையான அச்சுறுத்தல் முழு நாட்டிலும் தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியது. கடந்த மார…
-
- 0 replies
- 715 views
-
-
பயங்கரவாதம் என்ற சொல்லின் மூலம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன: அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சொற்பதம் சமூகத்தின் வாழ்வை சீர்குலைக்கின்றது. பத்திரிகையாளர்கள், செய்தி சேகரிப்பவர்கள், புகைப்படவியலாளர்கள் போன்றோர்களை தமது பணிகளை செய்யவிடாது அரசுகள் தடுப்பதுடன் பாதுகாப்பு என்ற போர்வையில் இதற்கான காரணங்களை மக்களுக்கு விளக்க முற்படுகின்றன என அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுதந்திர ஊடகவியலாளர் நாளினை முன்னிட்டு அணிசேரா நாடுகளின் ஊடகவியலாளர் அமைப்பின் அனைத்துலக தலைவர் ஹசன் சகிஹார் தெரிவித்துள்ளதாவது: பயங்கரவாதம் என்ற சொல்லின் தாக்கம் மக்களுக்கு புரிவதில்லை. அந்த சொல்லின் மூலம் மக்களின் உரி…
-
- 0 replies
- 757 views
-
-
'வான் தாக்குதல்களின் போது தமிழர் பட்ட துன்பங்களை இன்று எங்களால் உணரமுடிகிறது': ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் "அரசாங்கப் படைகள் வடக்கு கிழக்கில் வான் தாக்குதல்களை மேற்கொண்ட போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை. யதார்த்தத்தை புரிந்துகொண்டு பௌத்த மத தர்மத்தின்படி இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்த…
-
- 10 replies
- 2.2k views
-
-
இந்தியாவை குழப்ப இலங்கை அரசு நடத்திய சதி நாடகம் : பலிகாட ஆக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடிக்க நமது மீனவர்கள் 12 பேர் மார்ச் 6---&ம் தேதி கடலுக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை . அதே கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த மார்ச் 29ம்தேதி நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டு நிகழ்வுகளுமே தமிழர்களை அதிர்ச்சியூட்டி யுள்ள செயல்தாம். 5 மீனவர்களை சுட்டதும், 12 மீனவர்களை கடத்தியதும் விடுதலை புலிகள்தான் என்பதை தமிழகத்தின் காவல்துறை தலைவரும் சட்ட மன்றத்தில் முதல்வரும் கூறுகின்றனர். இதில் நமக்கு எழும் சந்தேகங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். - 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களுடன் சென்று உயிருடன்…
-
- 0 replies
- 1k views
-
-
நல்ல வெற்றிச்செய்தியை விரைவில் கேட்கும் காலம் 'ஏற்படுத்தப்பட்டுள்ளது': சி.எழிலன் போர்க்களத்தில் தமிழ்மக்கள் வெற்றியை சந்திக்க காலம் நெருங்கிவிட்டது- நல்ல ஒரு வெற்றிச்செய்தியை நாங்கள் விரைவில் கேட்கும் காலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் முள்ளியவளை மாதாந்த முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை: வெற்றிச்செய்தியை தமிழ் மக்கள் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. ஆட்தேவை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காலம் காலமாக இருந்து வந்த ஒன்று. தமிழ் மக்களின் துயரங்களை இல்லாமல் செய்வதற்காக விரைவானதும் நிறைவானதுமான வெற்றிக்க…
-
- 3 replies
- 2.5k views
-
-
குமரி மீனவர்கள் படுகொலை விவகாரம்- தி.மு.க. அரசைக் கலைக்க நினைக்கும் சக்திகளின் சதி: தொல். திருமாவளவன் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்துவதில் தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சில சக்திகளின் சதியும் நிர்ப்பதங்களும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் சாடியுள்ளார். சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "மீனவ தமிழர் பாதுகாப்பு" மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது: இலங்கையில் வான்வழியாக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி உலக சாதனை படைத்துள்ளனர். இஸ்ரேல் விமானத்தையும் அவர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எந்த இயக்கமும்…
-
- 0 replies
- 738 views
-
-
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பிரிட்டன் தயாராகவுள்ளது; புலிகளை சந்திக்கவும் விருப்பம் வீரகேசரி நாளேடு இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு தயாராகவுள்ளது. இதற்காக அந்நாட்டிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு இராணுவ வழிமுறை உகந்ததல்ல என்பதை நாம் நம்புகின்றோம் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்ளாது. இதற்கு சட்டபூர்வமான நியாயத் தன்மையை வழங்க நாம் தயாரில்லை என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்
-
- 6 replies
- 2k views
-
-
5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 2 மே 2007, 21:20 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நேரடி மோதலின் போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் அபிநயன் என்று அழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும், றாச்குமார் அன்புபுரம் முழங்காவில் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும், உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வேற்று முகவரியாகவும் கொண்ட பாலசிங்கம் உதயகுமார் மேஜர் ஈழமாறன் அல்லது கடலருவி என்று அழைக்கப்படும் மட்டக்க…
-
- 13 replies
- 2.8k views
-
-
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய போர் ஒத்திகை [புதன்கிழமை, 2 மே 2007, 21:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் போர் ஒத்திகையால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் துறைமுகப் பகுதியில் துப்பாக்கி சத்தங்கள், பீரங்கி வேட்டொலிகள் அதிகளவில் எழுந்தன. இதனால் கொழும்பில் மக்கள் பெரிதும் பதற்றமடைந்து சிதறி ஓடினர். இதன் பின்னர் ஊடகங்கள் ஊடாக தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் தாக்குதல் ஒத்திகையே நடைபெற்றது என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்தனர். இந்த ஒத்திகை இன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை நடைபெற்றது. நன்றி - புதினம்
-
- 1 reply
- 1.3k views
-
-
சிலாபத்தில் வட்டமிட்ட இரு வானூர்திகள்: பொதுமக்கள் பீதி. வெசாக் பண்டிகையையொட்டி சிலாபம் வான்பரப்பில் பாதுகாப்புக்காக சிறிலங்கா வான்படையின் இரு ரிரி-6 ரக வானூர்திகள் நேற்று செவ்வாய்க்கிழமை பறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இரு வானூர்திகள் பறப்பதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவசர தொலைபேசி எண் 116 க்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த தொலைபேசி சேவை செயற்படவில்லை. பொதுமக்களுக்கு எதுவித முன்னறிவித்தல்களும் கொடுக்கப்படாமல் இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடத்திலேயே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதான வான்புலிகளின் தாக்குதலின் போது படைத்தரப்பின் அனைத்துப் பிரிவினரும் கண்ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாகர்கோவிலுக்கு பெருமளவில் யுத்ததளபாடங்களை நகர்த்தும் படையினர். Written by Ellalan - May 02, 2007 at 03:12 PM பலாலியில் இருந்து கடந்த இரு தினங்களில் இரவு வேளைகளில் நாகர்கோயில் படைத்தளங்களுக்கு பருத்தித்துறை, மந்திகை ஊடாக பெருமளவில் இரும்புக்கேடர்கள் இரும்புக்கம்பிகள், சிலுப்பர்கட்டைகள், சீமெண்ட், யுத்ததளபாங்கள், போன்றன கனரகவாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்தில் 24 ஆம், 25ஆம் திகதிகளிலும் இதேபோன்ற பொருட்கள் அடங்கிய படையினரின் வாகனத்தொடரணி ஒன்றும் நாகர்கோயில் தளங்களுக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் இவற்றில் பெருமளவில் இரும்புக் கேடர்கள் காணப்பட்டதாகவும் இப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். குடாநாட்டில் சிற…
-
- 3 replies
- 2.5k views
-
-
படையினரின் தென்மராட்சி ஆட்லெறி தளம் புலிகளின் தாக்குதலில் சேதம். Written by Ellalan - May 02, 2007 at 03:14 PM யாழ். தென்மராட்சிக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படைகளின் ஆட்லறி எறிகணைத் தளங்கள் பல கடுமையாகச் சேதமுற்று இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினரின் முன்னரங்க நிலைகளை பாதுகாக்கவும் பொது மக்கள் பிரதேசங்களை சிதைக்கவும் படையினர் நிலைகளுக்கு அண்மித்த பகுதியில் இருந்த படையினரின் எறிகணைத் தளங்கள் பல விடுதலைப் புலிகளின் துல்லியமான பதில் எறிகணை வீச்சில் சிக்கி சிதைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுது மட்டுவால் சிவன்கோயிலடி பகுதியில் அமைந்திருந்த படையினரின் ஆட்லெறி எறிகணைத் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதில…
-
- 0 replies
- 1.7k views
-
-
அணிதிரண்டு எதிர்ப்பதை தவிர மாற்று வழியில்லை [02 - May - 2007] * முஸ்லிம் கட்சிகள் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இனநெருக்கடிக்குத் தீர்வு யோசனையாக ஒற்றையாட்சியின் கீழ் மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை தெரிவித்தன. சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் வருமாறு: மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைவர்- உலமாக் கட்சி சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை குறித்து கவலைப்படுகிறோம். அதில் எமக்கு திருப்தி இல்லை. பழையதொன்றை புதுப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போதிய அதிகாரப் பகிர்வு கிடைக்காத…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கம் தற்போது தேவையா? [02 - May - 2007] * கேள்வி எழுப்புகிறது ஜே.வி.பி. ப. பன்னீர்செல்வம் விடுதலைப் புலிகள் தமது இறுதி துருப்புச் சீட்டான விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையா? எனக் கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்த யோசனைகளை ஜே.வி.பி. எதிர்க்கின்றது. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்தார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாராளுமன…
-
- 0 replies
- 905 views
-
-
பழைய மொந்தையில் புளித்த கள் [02 - May - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த யோசனைகளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பு மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வாசித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி அதன் வேட்பாளருக்கு ஆ…
-
- 0 replies
- 918 views
-
-
சிங்கள பேரினவாதத்தை எதிர் கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் [02 - May - 2007] * சிங்கள பேரினவாத முனைப்பானது உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்குமே குந்தகமானதென்பதே யதார்த்தமாயுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மு.கா.தலைமைகளும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரசில் இணைந்திருக்கின்ற போதும் நில அபகரிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலை மிக அபாயகரமானது எனும் விழிப்புணர்வு பரந்து விரிந்து வீரியம் பெறுவதற்கு முதலாவதாக தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதுதான் மிக அவசியமும் மிக அவசரமுமானதாகும். தலைமைகள் காத்திரமானதொரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடும் பட்சத்தில்தான் மக்கள் சக்தியை வெளிக…
-
- 0 replies
- 837 views
-
-
விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி புலிகள் கேட்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது: மைத்திரிபால. விடுதலைப்புலிகள் விமான குண்டு தாக்குதலை நடத்துவதனால் அவர்கள் கேட்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்காது, அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதற்கும் , மரணத்திற்கும் இந்நாட்டு மக்கள் பயப்படப்போவதில்லை. என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்வு திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்க அனுமதிக்கமாட்டோம் பாதுகாப்பு அமைச்சர் அன்ரனி திருவனந்தபுரம், மே 2 தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்திய மண்ணை தளமாக பாவிக்க எந்த பயங்கர அமைப்புக்கும் இடமளிக்கமாட்டோம். இவ்வாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி கூறினார். விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் பின் இலங்கை நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளக் கரையோரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கரையோரங்களில் பொலிஸ் நிலையங்களை அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதியில் கூடுதலான …
-
- 23 replies
- 4.4k views
-
-
ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது! அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, மே 2 தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது. இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
திசை திருப்பப்படும் விமானங்களைச் சமாளிக்க சென்னை விமான நிலையம் தயார் நிலையில் சென்னை, மே 2 கொழும்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்கள் நீடிப்பதால் அங்கிருந்து திசை திருப்பி விடப்படும் சர்வதேச பயணிகள் விமானங்களைச் சமாளிப்பதற்கான முழு ஏற்பாடுகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானங்களையும், பயணிகளையும் சமாளித்துப் பராமரிப்பதற்குத் தயாரான நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரே தடவையில் திசை திருப்பி விடப்படும் பல விமானங்களைச் சமாளிக்கும் வகையிலான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டால் அங்கிருந்து திருப்பி விடப்படும்…
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கையின் படைச் சமநிலை வான் புலிகளால் மாறிவிட்டது! முன்னாள் இந்திய இராணுவ ஜெனரல் மேத்தா கொழும்பு, மே 2 இலங்கையின் யுத்த நிலைமை ஆபத்தான ஒரு திருப்பு முனையை எட்டியிருக்கின்றது. சரித்திரத்தில் முதல் தடவையாக அரசு அல்லாத ஓர் அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் ஒழுங்கான விமானப்படையைத் தான் தொடங்கியிருப்பதை வெளிக்காட்டியிருக்கின்றது. இந்த 24வருட காலப் பிணக்கில் படைச் சமநிலை மாறியிருக்கின்றது என்பது உண்மை. இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் அசோக் கே.மேத்தா மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் அமைதிப்படை அதிகாரியாகப் பணியாற்றிய இவர் "த வோல் ஸ்ரீட் ஜேனல்' என்ற பாதுகாப்புத்துறைச் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இப்படிக் கூறியுள்ளார். "பறக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாதிப்புறும் விமான சேவைகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது 2001 ஜூலையில் புலிகள் நடத்திய தரைவழித் தாக்குதலினால் ஏற்பட்ட நேரடி சேதங்களைப் போன்று பாரிய நேரடி அழிவை, இப்போது விடுதலைப்புலிகளின் வான் புலிகள் நடத்தியிருக்கும் மூன்று விமானத்தாக்குதல்களும் ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உயர் பாதுகாப்பு மிக்க தலைநகரின் வான் பிரதேசத்துக்குள், அரசுப் படைகளின் தீவிர கண்காணிப்புக் ஏற்பாடுகளையும் மீறி, வெற்றிகரமாகப் புலிகளின் விமானங்கள் பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, பாதுகாப்பாகத் தமது தளங்களுக்குத் திரும்புகின்றமை மறைமுக வழியில் பெரும் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும், இழப்புகளையும் அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி வருவது கண்…
-
- 1 reply
- 648 views
-
-
ஜனாதிபதி மஹிந்த பார்படோஸ் இல் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படோஸ் நாட்டில் நடைபெற்ற கிரிக் கெட் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இன்னமும் நாடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் கொழும் பில் நடைபெற்ற ஆளும் பொதுஜன ஐக்கிய முன் னணியின் மேதினப் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை. இந்த மேதின நிகழ்வுகள் தொடர்பாக நேற்றைய "சுடர்ஒளி" யின் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், ஜனாதிபதி நாடு திரும்பி, மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் தவறானதாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மே தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொ…
-
- 17 replies
- 2.9k views
-