Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள் * பாப்பரசரிடம் கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக அரசாங்கமும் அதனோடு சேர்ந்தியங்கும் குழுக்களும் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுமாறு புனித பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக புனித பாப்பரசருக்கு கஜேந்திரன் எம்.பி. அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்காக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் …

  2. மோட்டார் சைக்கிள்கள் பறிக்கப்படுவதால் பாவனையாளர்கள் கடும் விசனம் அம்பாறை மத்திய முகாம் பகுதியில் விஷேட அதிரடிப் படையினரால் பொதுமக்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய முகாம் பகுதியில் அதிரடிப்படையினர் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரை வழிமறித்து மோட்டார் சைக்கிளை பறித்து தமது தேவைகளுக்கு கொண்டு செல்வதனால் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளில் பயணிப்போரை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிள்கள…

  3. யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தல். யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா உந்துருளி படையினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் சரசாலைப்பகுதியில் இரு இளைஞர்களை துரத்திச் சென்ற நான்கு உந்துருளிப்படையினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. -Pathivu-

    • 7 replies
    • 2.2k views
  4. வெலிக்கந்தை கண்ணிவெடித் தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலி. வெலிக்கந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வெலிக்கந்தை திருகோணமடுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் உழவூர்தியில் சென்று கொண்டிந்த இராணுவத்தினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். -Puthinam-

  5. காணாமல்போனோரை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் விளம்பரத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு [21 - April - 2007] *ஷ்ரீதுங்க ஜெயசூரிய தெரிவிப்பு -த.தர்மேந்திரா- தமிழ் மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் "புனித போர்" என்ற போர்வையில் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான ஷ்ரீதுங்க ஜயசூரிய காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை பயங்கரவாதிகளாக சித்திரித்து "டெய்லி நியூஸ்" ஆங்கில பத்திரிகையில் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய சோசலிச கட்சியி…

  6. இரட்டைச் சுமையுடன் மக்கள் [21 - April - 2007] [Font Size * மனித உரிமைகள் சிக்கலில் அரசு கடந்த வாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறந்தது. பெரிய இடங்களின் மனிதர்கள் எனப்படுவோருக்கும் வசதிகள் வாய்ப்புகள் உடையோருக்கும் புத்தாண்டு அர்த்தமுடையதாகவும் முழுமை கொண்டதாகவும் அமைந்திருந்தது. ஆனால், வாழ்க்கை நெருக்கடிகளையும் துன்பங்களையும் சோகங்களாகவும் சுமைகளாகவும் தாங்கி நிற்கும் ஏகப்பெருவாரியான மக்களுக்கு புத்தாண்டு வெறுமை கொண்டதாகவே அமைந்திருந்தது. ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சொற்சிலம்பம் நிறைந்த வாழ்த்துச் செய்திகள் வெளியிட்டிருந்தனர். புத்தாண்டில் மக்களுக்கு புதிய ஒளி பிறக்கட்டும் சமாதானம் மலரட்டும். மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும் என்றெல்…

  7. ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய மகிந்த முயற்சி. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 7 முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்ய மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் சி.ஆர்.டீ சில்வா மற்றும் சிறிலங்கா காவல்துறைத் தலைவர் விக்ரர் பெரேரா ஆகியோரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய எந்த ஒரு நடவடிக்கையும் ஜனநாயகத்தன்மையற்று- சட்டவிரோதமானது. மனித உரிமை மீறலானது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பணிகளை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொ…

    • 2 replies
    • 1.5k views
  8. இன்று காலையில் இருந்து பிபிசி செய்திச் சேவையில் பிரதான செய்தியாக கிரடிட் காட் மோசடி பற்றியும் இந்தக் குற்றச்செயலுக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்களைச் சம்பந்தப்படுத்தியும் சிறிலங்கா தூதுவராலயத்தாதின் அனுசரனையுடன் செய்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதன் பிரதான நோக்கம் புலிகளின் நிதி சேகரிப்பை முடகுவதாகப்படுகிறது. சிறிலங்கா அரசின் தூதுவராலய பரப்புரை அதிகாரி மக்ஸ்வல் என்பவரின் கூற்றின் படி பிரித்தானிய அதிகாரிகள் புலிகளின் முக்கிய பிரித்தானிய நிதி சேகரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதன் மூலம் பிரான்சில் தொடங்கியது இப்போது பிரித்தானியாவிலும் அரங்கேற உள்ளதாகப்படுகிறது. ஆகவே பிபிசிக்கு இந்தச் செய்தி பற்றிய கண்டனக்களை உடன் அனுப்புங்…

    • 55 replies
    • 10.4k views
  9. அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்…

  10. இராணுவத் தீர்விலேயே அரசுக்கு அதிக கவனம் பேச்சு சாத்தியமில்லை என்கிறார் இளந்திரையன் கிளிநொச்சி, ஏப். 21 ஸ்ரீலங்கா அரசு இராணுவத் தீர்வில் அதிக கவனம் செலுத்தும்போது சமாதானப் பேச் சுகள் என்பது சாத்தியமற்றது என விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ""பேச்சுக்கள் மூலம் சமாதான ரீதியில் தீர்வை எட்டக்கூடிய நிலையில் ஸ்ரீலங்கா அரசு இராணுவத் தீர்விலேயே அதிக அக்கறை காட்டி தமது நடவடிக்கைகளைத் தொடர்கின்றது'' என்று கூறினார். ""அரசு யுத்த அணுகுமுறையில் நாட்டம் கொண்டுள்ளபோது உடனடியான பேச் சுக்கள் மூலம் தீர்வு எட்டுவது சாத்தியமற்றது'' எனவும் இளந…

  11. சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா? ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான். இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான். இலங்கையில் அரசின் பின்புல நடவடிக்கைகளாக அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்கள…

  12. கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அண்டிய பகுதியில் பதுங்குகுழி. தமிழருக்கு சொந்தமான நீர்கொழும்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் பாதுகாப்பான பதுங்குகுழி ஒன்று இரகசியமாக அமைக்கப்பட்டு வந்ததை நீர்கொழும்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அயலவர்களின் தகவலை அடுத்து, கந்தானைப் பிரிவில் உள்ள டெல்கசன்டியாப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டின் அறை ஒன்றினுள் பதுங்குகுழி அமைக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் எனவும், அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் காவல்துறை…

  13. சனி 21-04-2007 03:07 மணி தமிழீழம் [தாயகன்] நோர்வேத் தூதுவர் - நிமால் சந்திப்பு விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்க அரசாங்கத்துக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் நோர்வேத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக சிறீலங்காவிற்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், அரசாங்க சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது பற்றி நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை கிளிநொச்சி செல்லவிருக்கும் ஹான்ஸ் பிரட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் ச…

  14. வெள்ளி 20-04-2007 20:12 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு அலையும் இளைஞர் யுவதிகள் யாழ் மாவட்ட ஈ,பி.டி.பி அலுவலகத்திற்கு யாழ் குடாநாட்டின் இளைஞர் யுவதிகள் அலைந்து திரியும் நிலமை கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் தென்றல் ஒலிபரப்பில் இடம்பெறும் இதயைவீனை நிகழ்ச்சி மூலம் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களின் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த இளைஞர், யுவதிகள் நாளாந்தம் அலைந்து திரியும் நிலமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே குறிப்பிட்ட நியமனங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி கிராம மட்டத்தில் சிலரிடம் ஈ.பி.டி.பியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில ஆதரவாளர்களும் பலஆயிரம் ரூபாக்களை லஞ்சமாகப் பெற்றுள்ள…

  15. வெள்ளி 20-04-2007 20:08 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் புத்தாண்டு பலகாரம் கொடுத்து படம் எடுக்கும் இராணுவம். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் அரச அலுவலகங்கள் மற்றும் வீதியால் செல்லும் பொது மக்களுக்கு புத்தாண்டையொட்டி பலகாரங்கள் கொடுத்து புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அரச அலுவலகங்களுக்குச் செல்லும் இராணுவ உயர் அதிகாரிகள் பலகாரங்கள் மற்றும் உணவுப் பாசல்களைக் கொடுத்து உண்ணச் செய்து புகைப்படங்களை எடுத்து வருகின்றார்கள். அரச அதிகாரிகளும் தற்போதைய யாழ் குடா நாட்டின் நிலமையைக் கருத்தில் கொண்டு இதனை மறுக்க முடியாது ஏற்று வருகின்ற நிலமை காணப்படுகின்றது. …

  16. Pope Benedict XVI மேலே மகிந்துவுடன் படங்களில் காணப்படுகின்றார். படங்கள் மூலம்: Reuters, நன்றி!

    • 14 replies
    • 2.7k views
  17. சிறீலங்காவின் இராணுவ நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறுதெரிவு எதுவும் இல்லை - இளந்திரையன். சிறீலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதிக கவனம் செலுத்தும் போது சமாதான பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியமற்றது என விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அமெரிக்க செய்தி நிறுவனமான ஒன்றுக்கு விடுத்த நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேச்சுக்கள் மூலம் சமாதான ரீதியில் தீர்வை எட்டக்கூடிய நிலையில் சிறீலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விலேயே அதிக அக்கறை காட்டி தமது நடவடிக்கைகளைத் தொடர்கின்றது என்றார் இளந்திரையன். சிறீலங்கா அரசாங்கம் யுத்த அணுகுமுறையில் நாட்டமுள்ளபோது உடன…

  18. விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்க கிறீஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை. கிறீஸ் நாட்டுக்கு சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, கடந்த புதன்கிழமை கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் அனைத்துலக நாடுகள் தமது மக்களுக்கு சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கைகளை விடுக்கும் போது வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதுகாப்பானவை என சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், ரோகித போகல்லாகம இந்த சந்திப்பின் போது கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கிறீஸ் வெளிவிவகார அமைச்சர் மடம் டோரா போகயானீஸ் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் முழு அளவில் ஒத்துழைப்பத…

  19. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது [வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2007, 15:13 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது. சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது. முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு …

  20. வன்னி மீது தொடர்ந்து விமானத் தாக்குதல் வன்னியில் கடந்த சிலதினங்களாக இரவு-பகலாக குண்டு வீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. நேற்றுக் காலை வன்னியில் மூன்று இடங்களில் இரு விமானங்கள் அடுத்தடுத்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரு விமானங்கள் ஆறிற்கும் மேற்பட்ட தடவைகள் குண்டுகளை வீசியுள்ளன. இதனைத் தொடர்ந்து முகமாலைக்கு கிழக்கே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் ஆட்லறி நிலைகள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இங்கும் பல தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதன் பின் காலை 10.45 மணிய…

  21. இலங்கை அகதிகள் முகாம் மீது தாக்குதல் இருவர் காயம், வீடுகள் பொருட்கள் சேதம் தர்மபுரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் புகுந்த சிலர் தாக்குதல் நடத்தியதில் தாயும் மகனும் காயமடைந்ததுடன் பொருட்களும் வீடுகளும் சேதமாக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ளது தும்பல அள்ளி அணைக்கட்டு. இங்கு கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. 184 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேர் இங்கு வசித்து வருகிறார்கள். இவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜாமணிக்கும் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்,ஆத்திரம் அடைந்த அந்தப் பகுத…

  22. சாய்ந்தமருதில் நேற்றிரவு துவக்கு சூடு இரு இளைஞர்கள் பலி; மூவர் படுகாயம் சாய்ந்தமருது, அல்- ஜலால் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 8.30 மணியளவில் கமநல மத்திய நிலையத்துக்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு கூடி நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின் நிலைமை ஆபத்தாக இருந்…

  23. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயக் குருக்களின் வீட்டில் கொள்ளை பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயப் பிரதம குருக்களின் வீட்டில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் மேற்படி குருக்களின் வீட்டிற்குள் புதன்கிழமை இரவுவேளை நுழைந்த 4 நபர்களே இத்துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளனர். வீட்டு பிரதான கதவு மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த நபர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம், சங்கிலிகள், காப்புகள், அட்டியல், மோதிரங்கள் மற்றும் கைச்சங்கிலி உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குருக்களின்…

  24. செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…

  25. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான `பதில்' `இராஜதந்திரிகளை வெளியேற்றுவது அல்ல' [20 - April - 2007] -அருளாநந்தம் அருண்- இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான நம்பகரமான பதில் இராஜதந்திரிகளை வெளியேற்றுவது அல்ல என்று சுட்டிக்காட்டும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, நம்பிக்கையூட்டும் விதத்தில் குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் இடம்பெற்று வருவதாக பொய்ப்பிரசாரங்களில் சில இராஜதந்திரிகள் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு, உண்மைக்கு மாறான பிரசாரங்கள் மூலம் நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.