ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
திங்கட்கிழமை 9 ஏப்ரல் 2007 05:34 சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள வத்தளை பேள்பார்க் அங்காடித் தொகுதியில் அண்மையில் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டுடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட 4 கிளைமோர் குண்டுகள் மாயமாக மறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுத் துறையினரும்இ காவற்துறையினரின் புலனாய்வுத்துறையினரும் முடுக்கி விட்டுள்ளனர். வத்தளை உள்ள கேபிள் தொலைக்காட்சி அலுவலகத்தில் அண்மையில் 12 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு கைப்பற்றியதைத் தொடர்ந்து மேலும் 4 குண்டுகள் அதனுடன் கொண்டு வரப்பட்டதாக புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 1 reply
- 1.1k views
-
-
சு.க. வின் அறிவிப்பும் ஜே.வி.பி. யின் சமிக்ஞையும் [09 - April - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை எதிர்வரும் மே தினத்தன்று சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் சமர்ப்பிக்கவிருக்கிறது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டில் கடந்த வாரம் இதைத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்ஷண யாப்பா, இந்த யோசனைகள் இறுதித் தீர்வாக அமையப்போவதில்லை. சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு யோசனைகள் வரையப்படும் என்று கூறியிருக்கிறார். இதே செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுதந்திரக்…
-
- 0 replies
- 882 views
-
-
`எயார் கனடா' சொர்ணலிங்கம் உருவாக்கிய புலிகளின் விமானங்கள் [09 - April - 2007] புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும். புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமான…
-
- 0 replies
- 2.1k views
-
-
33 குடும்பங்களை வெளியேற அறிவுறுத்து உடுப்பிட்டி,ஏப்.9 பருத்தித்துறை, வெளிச்சவீட் டுப் பகுதியில் வசித்துவந்த 33 குடும்பங்களையும் வெளியேறு மாறு படையினர் அறிவுறுத்தியுள் ளனர். அந்த மக்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் படையினர் அவர்களிடம் தெரிவித்துள்ள னர். ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட இம்மக்கள் தற்காலிக குடி யிருப்புக்களை அமைத்து வெளிச்ச வீட்டுப் பகுதியில் வசித்துவந்த னர். uthayan.com
-
- 1 reply
- 1.2k views
-
-
மனிதப் பேரவலங்களை உருவாக்கி தெற்குப் போதிக்கும் பாடம் ` "பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கிலங்கையை விடுவித்தல்' என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு ஆரம்பித்திருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் நாசங்களும் இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. கொடூர ஷெல், பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அஞ்சி இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்கள், தங்கள் வீடு, வாசல்கள் மற்றும் உடைமைகளைத் துறந்து அகதிகளாக அல்லற்படுகின்றனர். * மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்நாட்டுக்குள் அகதிகளாகியுள்ளனர். அவர்கள் 90 இடம் பெயர்ந்…
-
- 0 replies
- 729 views
-
-
சிவாஜிலிங்கம் மீதான விசாரணை கூட்டமைப்பின் வாயை மூடத் திட்டம்? -(அஜாதசத்ரு) மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களை அமைதி வழி மூலம் தீர்வு காண்பதை விடுத்து அதிகாரத்தை கொண்டு அடக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுபட்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. இனநெருக்கடித் தீர்வுக்கான சமாதான முயற்சிகள், உட்கட்சி அரசியல் முரண்பாடுகள், எதிரணிக் கட்சிகளுடனான அணுகுமுறைகள், தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட அனைத்து பிரதான விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள், அனைத்து தரப்பினராலும் வெறுத்தொதுக்கப்படும் நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 993 views
-
-
திருகோணமலை தம்பலகாமம் பகுதி யில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் வர்த் தகர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட் டார். நேற்றுப் பி.ப. 4 மணியளவில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத் தைச் சேர்ந்த பரமகுரு ரமேஸ்பாபு (வயது 35) என்பவரே சுடப்பட்டார் என்று அடை யாளம் காணப்பட்டது. ----uthayan------
-
- 0 replies
- 789 views
-
-
வான்படையின் பலத்தை உலகிற்கு காட்டிய பின்னர் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு தாம் விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு பின்னர் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். எனினும் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனையாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முழுமையா…
-
- 4 replies
- 1.8k views
-
-
[திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2007, 05:18 ஈழம்] [க.திருக்குமார்] எம்மிடம் இந்திரா - 2D ரக ராடார்கள் மூன்று உள்ளன. இந்த வகை ராடார்களையே இந்தியாவும் பயன்படுத்தி வருகின்றது. அவை முன்னேற்றகரமான வகையைச் சேர்ந்த ராடார்கள். எனினும் அவற்றைப் புறக்கணித்த பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு இந்தியாவின் ராடார்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர். கட்டுநாயக்கவில் வான் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையைக் காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை என நாடாளுமன்ற குழுக் கூட்டத…
-
- 10 replies
- 2.4k views
-
-
மட்டக்களப்பு அகதி முகாமில் 31 பேர் பொலீஸாரால் கைது அவர்களில் ஒன்பது பேர் விளக்கமறியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச்சூழல் காரண மாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட ஒன்பதுபேர் விடுதலைப் புலி களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவன்கேணியிலுள்ள அகதி முகாம்களில் நேற்று முன்தினம் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுத லின் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டு விசா ரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கூறப் பட்டது. தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட குறிப்பிட்ட 31 பேரில் இரு பெண்கள் உட்பட 9 பேர் புலிகளுடன் ஆ…
-
- 0 replies
- 563 views
-
-
இலங்கையில் இரத்தக் களரிக்கு முடிவு தேவை என்கிறார் புனித பாப்பரசர் இலங்கையில் மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் அதனைக் கைவிட்டு சமரச முயற்சியைக் முன்னெடுக்க வேண்டும் என்று புனித பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது இலங்கைக்குத் தேவைப்படுவது அமைதிதான் என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில், பெரும் இரத்தக் களரிக்கு வழிவகுத்த மோதல்களுக்கு முடிவு காண சமரசத் தீர்வு ஒன்றினால் மாத்திரமே முடியும் என்று புனித பாப்பரசர் தனது செய்தியில் கூறியுள்ளார். கிறித்தவ மக்களை அமைதிக்காக உழைக்கும் படியும் அவர் வேண்டியிருக்கிறார். வழக்கமாக பாப்பரசரால் வழங்படுகின்ற உயிர்த்த ஞாயிறு தினத்து உரையில் அவர் உல…
-
- 3 replies
- 975 views
-
-
[08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும். வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்றூ இராசையா Tகுர்ச்டய், 05 ஆப்ரில் 2007 கடந்த 2001 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் படையணிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீலங்கா விமானப்படைத் தளத்தாக்குதல் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் அடித்தளம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஆறு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப்புலிகளின் வானோடிகள் முதன்முதலாக மீண்டும் நீர்கொழும்பு - கட்டுநாயக்காவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் பிரதான தளத்திற்கு மூன்று குண்டுகளை விழுத்தியதன் மூலம் புதியதொரு செய்தியை ஸ்ரீலங்கா அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற ‘ஈழப்…
-
- 0 replies
- 871 views
-
-
: நந்தன குணதிலக்க [ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2007, 05:20 ஈழம்] [க.திருக்குமார்] ஜே.வி.பி கட்சியின் உண்மையான தலைவரான குமார மாத்தையா (குமார் ஐயா) என்று அழைக்கப்படும் கே.குணரட்ணத்தை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத் துறைக்கு காட்டிக்கொடுக்கவில்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "கட்சியில் குமார் ஐயாவின் உண்மையான அடையாளத்தை நான் காட்டிக் கொடுக்கவில்லை. நான் தான் காட்டிக் கொடுத்ததாக கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவே குற்றம் சாட்டியுள்ளார். எனக்கும் குமார் ஐயாவிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றியதுண்டு. எனினும் அவர் கட்சியி…
-
- 0 replies
- 908 views
-
-
திங்கள் 09-04-2007 03:07 மணி தமிழீழம் [மோகன்] கடவத்தை, பேலியகொட பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த புதன் கிழமை கடவத்தை மற்றும் பேலிய கொட பகுதிகளில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்குழியவை சேர்ந்த 23 அகவையுடைய பத்மநாதன் பிரதீபன், வத்தளையை சேர்ந்த 24 அகவையுடைய ராமையா ஜெயகுமார் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்திலும் காவல்நிலையத்திலும் முறையடப்பட்டுள்ளது. பிரதீபனின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில் இவரை கடத்துவதற்கு முதல்நாள் பெலியகொட காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் இவர்களது வீட்டுக்கு சென்று வியாழக்கிழமை க…
-
- 0 replies
- 700 views
-
-
இம்சை அரசன் பிரான்ஸ்ம் 14 ஆவது சார்க் மாநாடும் -சி.இதயச்சந்திரன்- இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையோடு காலூன்றியுள்ள பிராந்திய நலன் தேடும் சக்திகள் ஒன்றுகூடுமிடமாக சார்க் மாநாடு அமைந்துள்ளது. பார்வையாளராக சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஏற்கனவே சார்க் அமைப்பிலுள்ள பெரும் புள்ளிகளான இந்தியா, பாகிஸ்தானுடன் ஏனைய வல்லரசுகளும் குவிக்கப்படும் இடத்தில், பிராந்திய பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்து பேசப்பட்டது இலங்கை அரசின் அடுத்த நகர்விற்கு மூலப்பொருளாக அமையும். சர்வதேசம் திணிக்க முனையும் பேச்சுவார்த்தைப் பாதையைத் திசைமாற்ற, பயங்கரவாதத்திற்கெதிரான நகர்வினை முன்னிலைப்படுத்துவதை எவ…
-
- 2 replies
- 1k views
-
-
கொழும்பு இந்து காபோ.தா சாதாரணதரப்பரீட்சையில் 10A சித்திகளை 10 மாணவர்களும் 38 மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்தது இருகின்றனர்,ஒரு மாணவன் கூட அனைத்து பாடங்களிலும் சித்தியடையாமல் இல்லாமல் இருந்தது மற்றுமொரு சாதனை.கடந்த ஆண்டு 5 பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமிழ் மாணவர்களின் பெருமையை இலங்கையின் தலைநகரில் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழைய மாணவன் என்ற ரீதியில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 11 replies
- 3.1k views
-
-
இராணுவ ஆட்சிமுறைப் போக்கை தொடர விரும்பும் தென்னிலங்கை ` தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பெரும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடுத்து, அவர்களைப் பலவீனப்படுத்தி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமரச முயற்சிகளில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை உடைத்து நொறுக்கிய பின்னர், தான் விரும்பிய தீர்வு ஒன்றைத் தமிழர் மீது திணிப்பதே மஹிந்த அரசின் உபாயமாகத் தோன்றுகின்றது. குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுடன் இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள அரசின் மேலாண்மைப் பலத்தை நிலைநிறுத்தி, உறுதிப்படுத்தும் சிந்தனைப் போக்கில் அமைந்த இந்தப் பேரினவாதக் கருத்து நிலைப்பாடு யதார்த்தத்தில் சாத்தியமாகப்போவதில்லை என்பதைத் தென்னிலைங்கை அரசியல் பேராசிரியர் ஒருவர் "மௌபிம' சிங்களப் பத்திரிகையில் தான் வெளியிட்ட …
-
- 1 reply
- 911 views
-
-
பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (Social Indicator) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 17 மாவட்டங்களில் வட கிழக்கு மாவட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. (சேர்த்துக் கொள்ளப்பட்ட மாவட்டங்கள்: கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, பதுளை…
-
- 0 replies
- 916 views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - ஒரு இராணுவம் பலி – 6பேர் காயம் யாழ்நகருக்கு வடமேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் பண்டத்தரிப்பு வலிகாமம் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் ஆறு சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்த இராணுவத்தினருள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. அச் சம்பவம் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு அண்மையில் காலை 11.45மணியளவில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. pathivu.com
-
- 0 replies
- 881 views
-
-
பயங்கரவாதப் பாசறைகள்! 1986_ம் ஆண்டு பெங்களூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பங்கு கொண்டார். இலங்கை அதிபர் ஜெயவர்தனேயும் வந்திருந்தார். ஈழம் தனி நாடு ஆகிவிடுமோ என்ற அச்சம் அப்போது சிங்கள இனவாதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் கூட ஈழப் போராளிகளுக்குத் துப்பாக்கியாகப் பயன்பட்ட நேரம். ரத்தக் கறைகளோடு வந்த ஜெயவர்தனே, ராஜிவ் காந்தி அருகில் அமர்ந்தார். ‘தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு ஆபத்து’ என்றார். வஞ்சக வலையை விரித்தார். ‘‘எப்படி?’’ என்று ராஜிவ் கேட்டார். ‘தமிழ்நாடும் தனி நாடாகிவிடும். ஆகவே, ஈழப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவும் போர் தொடுக்க வேண்டும்!’ என்றார் ஜெயவர்தனே. அதனை உண்ம…
-
- 6 replies
- 2.7k views
-
-
ஈரம் கசியும் கண்களுடன் ஈழத்தமிழ் அகதிகள்... விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை சின்னா பின்னமாக்கியிருந்தாலும், எதிர்த் தாக்குதலால் பல தமிழ்க் குடும்பங்கள் பரிதாபகர மாகப் பாதிக்கப்பட்டிருப்பது மறக்கமுடியாத சோகம். ‘ஒண்ணு, சாகணும்; இல்ல, சாவோட பயமில்லாம வாழணும். அதுக்கு ஒரே வழி உயிரைப் பணயம் வைத்தாவது தமிழ் நாட்டுக்குப் போறதுதான்’னு பல இலங்கைத் தமிழ் குடும்பங்கள் கடந்த சில தினங்களாக வந்த வண்ணம் உள்ளனர். சாவின் விளிம்புவரை சென்று; உடன்வந்தவர்கள் ஒரு சிலரை காவு கொடுத்துக் கடைசியாக கரை சேர்ந்த அவர்களின் கதை கேட்கவே நடுக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் இரண்டு அகதிகளை நடுக்கடல் திட்டில் பார்த்த தமிழக மீனவர்கள், பரிதாபப்பட்டு படகில் ஏற்றிக்கொண்டு…
-
- 0 replies
- 852 views
-
-
சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும் கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும். இவ்வேளை, சா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழப் பிரச்சினையும் இந்தியாவும் இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர். எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொன்றொழிக்கப்படுகின்றார்கள
-
- 3 replies
- 1.4k views
-
-
மறுபக்கம் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் அதன் உண்மையான பெறுமதியை விட பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இன்னொரு தாக்குதலைக் குறுகிய காலத்தில் ஒரு முக்கிய இராணுவ இலக்கின் மீது தொடுக்க இயலுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. எனினும், அரசாங்கத்தின் தயார் நிலை பற்றிய கேள்விகளை அத் தாக்குதல் எழுப்பியுள்ளது. அரசாங்கத்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலவில்லை என்று யூ.என்.பி. தலைமை குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. மறுபுறம், யூ.என்.பி. செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளைவாகவே விடுதலைப்புலிகளால் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணிக்கவும் விமானங்களைக் கொள்வனவு செய்யவும் இயலுமாயிருந்தது என்று அரசாங்கத் தரப்பிலிருந்து குற்றஞ்சுமத்த…
-
- 1 reply
- 1k views
-