ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
யாழ்பாணத்தில் வாகன விபத்தில் இரு இராணுவம் பலி கடந்த சனிக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் குறும்பைசிட்டிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் தொடரணியின் ஒரு அங்கமாக பயணித்த வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிபதி திருமதி. சறோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டுள்ளார். இராணுவத் தொடரிணி கிளைமோர் அச்சத்தில் வேகமாக பயணித்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது நடைபெற்றுள்ளது. நீதிபதி உடலங்களை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் பிரேதபரிசோதனைக்காக கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subactio…
-
- 0 replies
- 970 views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 21:11 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: 27.01.07 இல் சிறிலங்கா கடற்பரப்பில் பல கடற்கலங்களை தாக்கியழித்த போது கடற் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கடற்கரும்புலி லெப். எழுகடல் என்று அழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மா.சந்தனம் 2 ஆம் சந்தி பாடசாலை அருகாமை கனகராயன்குளத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட கதிர்வேல் மகேந்திரன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர் என்று அழைக்கப்படும் முள்ளியான் இடைக்காடு வடமராட்சி கிழக்கு யா…
-
- 0 replies
- 845 views
-
-
-எஸ்.நயனகணேசன்- நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான `ஜனபதி ஹமுவ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ `புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை' என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள். ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும்…
-
- 5 replies
- 2k views
-
-
அன்று மகிந்தவின் முன்னோடிகளின் காலம்! இன்று மகிந்தவின் காலம் - சபேசன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மிக முக்கியமான அந்த அறிக்கையில் உள்ள சில விடயங்களைத் தர்க்கிப்பதன் மூலம், கருத்துக்கள் சிலவற்றை முன்வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! சிறிலங்காவின் அரசுகளுக்கும், தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றமை என்பதானது இதுதான் முதல் தடவையல்ல! இலங்கைத்தீவு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து, பல தடவைகள், இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இவ்வகையான பேச்சு வார்த்தைகள் …
-
- 0 replies
- 729 views
-
-
அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி" யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 736 views
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல் ஒளிப்படம்.(video) click
-
- 0 replies
- 1.4k views
-
-
''வெடிகுண்டு போலாகிய யுத்தநிறுத்த ஒப்பந்தம்'' மனோகரன் இலங்கை இனப்பிரச்சினையைச் சமாதான வழி முறைமூலம் தீர்ப்பதற்கான முதற்படியாக ஐந்து ஆண்டுகளின் முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இப்போது ஒரு வெடிகுண்டு போலாகியிருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி இலங்கைத் தீவு முழு அச்சத்தில் இருந்ததே இதற்குச் சான்று. உடன்படிக்கையின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி பெரும் தாக்குதல்களோ படை நடவடிக்கைகளோ நிகழலாம் என்ற அச்சத்தில் மக்கள் திகிலடைந்திருந்தனர். எல்லைக் கிராமங்களிலிருந்தும் படை நிலைகளுக்கு அண்மையிலிருந்தும் தமிழர்கள் இடம் பெயர்ந்திருந்தனர். தொண்டு நிறுவனங்கள் கூட பெரும் தாக்குதல்களை அல்லது முழு அளவிலான யுத்தத்தை …
-
- 0 replies
- 782 views
-
-
By: அருள் Courtesy: விடுதலைப் புலிகள் 11.08.2006 - வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணி. முகமாலையிலும், அதனை அண்டிய இடங்களிலும் உள்ள சிறிலங்கா இராணுவ முன்னரங்கக் காவலரண் பகுதிகளில் இருந்து இராணுவம் வன்னிப்பகுதியை நோக்கி வலிந்தவொரு தாக்குதலைத் தொடுத்தது. ஏற்கனவே அங்கு நிலைகொண்டுள்ள படையினருடன் மேலதிக படையினரையும் இணைத்து, இப்பகுதிக்கு நகர்த்தி, வழமையான பாணியில் இத் தாக்குதலை இராணுவம் ஆரம்பித்து, வழிநடாத்திக்கொண்டிருந்த போது வலிந்தெடுத்த களமுனைக்கு எத்தனையோ மைல்களுக்கு அப்பால், எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அல்லைப்பிட்டிக் குக்கிராமத்தினை ஆக்கிரமித்திருக்கும் கடற்படையினரும் தம்பாட்டிற்கு வன்னிப்பகுதியை நோக்கி எறிகணைகளை கண்டபடி ஏவிய வண்ணம் இருந்தனர். நேரஞ…
-
- 0 replies
- 755 views
-
-
http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 2.2k views
-
-
இலங்கை : இந்தியாவின் அணுகுமுறை மாறவேண்டும்! சனி, 3 மார்ச் 2007 (16:04 ஐளுகூ) இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசுடன் தாங்கள் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது! சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கூறியிருந்ததையடுத்து, சண்டை நிறுத்தம் மீது தங்களுடைய நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு சிறிலங்க அரசுடன் தாங்கள் ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://thatstamil.oneindia.in/news/2007/03/04/arrest.html தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைத்தீவின் கிழக்குப் பிராந்தியம் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது என்ற அரசின் தம்பட்டம் ஒருமாயை என்பதை சர்வதேச சமூகம் விளங்கத்தொடங்கிவிட்டது. அண்மையில் மட்டக்களப்பில் அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவிருந்த ‘புனர்வாழ்வு’ மாநாட்டில் பங்குபற்றச் சென்ற அனைத்துலக பிரதிநிதிகள் கிழக்கின் உண்மையான களயதார்த்தத்தை கண்கூடாக கண்டு திரும்பிய அதேசமயம் அரசின் ‘விடுவிக்கப்பட்ட கிழக்கு’ எனும் பரப்புரை பாழாய்போனது தென்னிலங்கையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சரின் கருத்துப்படி தலைநகரைவிட்டு வெளியே செல்லும் போது தமக்கு அறிவிக்கும் இராஜதந்திர வழமையை மேற்படி நாட்டு தூதர்கள் மீறியுள்ளனர…
-
- 0 replies
- 924 views
-
-
* இந்தோனேசியா அறிவிப்பு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள், இந்தோனேசியாவில் தங்க அனுமதிக்கப்படாது உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி அண்மையில் படகொன்றில் சென்ற 83 தமிழர்கள், கிறிஸ்மஸ் தீவுக்குச் சமீபமாக அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் அகதிகள் அந்தஸ்து வழங்கி அவுஸ்திரேலியாவினுள் தங்க அனுமதிக்குமாறு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் உட்பட பல சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் கோரிக்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைத் தனது ஆளுங்கட்சிக்குப் பெறுவதற்காகப் பயன்படுத்திய கிளை தாவல் உபாயங்கள் பற்றியும் அதற்குத் தூண்டுதலாக அமைச்சர் பதவிகளை மிட்டாய்கள் போல விநியோகித்தது பற்றியும் வேறு சிலர் விடயத்தில் அரசியற் பிரம்புகளைப் பயன்படுத்தியது பற்றியும் பலர் கவலை தெரிவித்துள்ளனர். எனினும் குறுகிய காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளின் தளங்களை அகற்றுவதிலும் பாராளுமன்றத்தில் ஆட்சிக்கு மிரட்டல் இல்லாமற் செய்வதிலும் நாட்டின் பாதுகாப்பைக் காரணங் காட்டித் தனியார் ஊடகங்களை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தி வைத்திருந்த போதிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.மலிவான வெற்றிகள் நிலையானவையாக இருப்பது அருமை. எனினும், ஆட்சி அதிகாரம் கைக்கு வந…
-
- 0 replies
- 779 views
-
-
பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சர்வதேச சூழ்ச்சித் திட்டமே தற்போது நாட்டில் அரசியல் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதென்றும் அவர்களே இன்று சில அரசியல்வாதிகளை ஆட்டுவிக்கின்றனரெனவும் குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளாரென சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாதென்றும் நிராகரித்தார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் தற்போது ஜனாதிபதி தொடர்பாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை பதவிகளை வகித்தபோதே முன்வைத்து வெளியேறியிருக்கலாம். ஆனால், பதவிகள் பறிபோன…
-
- 0 replies
- 857 views
-
-
தமிழர்களைப் பூண்டோடு அழிக்க இலங்கை அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களை வாரி வழங்குகிறது என்று பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்கள் என். ஸ்ரீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் புகார் கூறினர். "இவ்வாறு இலங்கை அரசுக்கு ஆயுதம் அளிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும்" என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். சென்னை வந்துள்ள அவர்கள் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது; இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தலையிட வேண்டும். இப்போதைய நிலையில் தமிழர்களின் ஒரே பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே இருக்கிறது. அதை நசுக்கிவிட்டால் தமிழர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டமும் தமிழர் வாழ்வும் சிதைந்துபோகும்.…
-
- 0 replies
- 687 views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அதிரடிப்படை அதிகாரி பலி [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:24 ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் படமஸாவ என்ற இடத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 9.35 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவத்தில் அதிகாரி கொல்லப்பட அதிரடிப்படையினர் அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டனர். http://www.eelampage.com/?cn=30972
-
- 0 replies
- 669 views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீதான எறிகணை வீச்சு: சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு ஜஞாயிற்றுக்கிழமைஇ 4 மார்ச் 2007இ 07:28 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ கடந்த மாதம் 27 ஆம் நாள் மட்டக்களப்பில் இடம்பெற்ற மோர்ட்டார் எறிகணைத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மயிரிழையில் உயிர்தப்பியது தொடர்பாக சிறிலங்கா அரசாங்க தரப்புக்களுக்கிடையில் பெரும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. பேரனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது ஆலோசனைகளை கேட்கவில்லை என பாதுகாப்பு அமைச்சும்இ வெளிவிவகார அமைச்சும் குற்றம் சுமத்தியிருக்கின்றன. எனினும் இராஜதந்திரிகளின் உயிருக்கு ஆபத்தான சம்பவத்துக்கு யார் பொறுப்பானவர்கள் என்பது தொடர்பாக வாக்குவாதங்கள் பல மட்டங்களில் எழுந்தியிருக்கின்றன. தாம் பயணத்திற்க…
-
- 0 replies
- 678 views
-
-
ஞாயிறு 04-03-2007 14:03 மணி தமிழீழம் ஜசிறீதரன்ஸ வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளை நோக்கி எறிகணை தாக்குதல் - மூன்று இராணுவம் காயம் இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளை நோக்கி விடுதலைப்புலிகளால் எறிகணைத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும். இதன்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரில் மூவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& « முன்னைய பக்கம்
-
- 0 replies
- 803 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பசில் ராஜபக்ச. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், சகோதரருமான பசில் ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பசில் ராஜபக்சவிற்காக தனது பதவி விலகலை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேர்வின் சில்வா அவரது மனைவியின் பதவி விலகலைத் தொடர்ந்து முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவினால் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். இந்த பதவி விலகலை தொடர்ந்து துறைமுகங்கள் அதிகார சபையில் தலைவர் பதவிக்கு மேர்வின் சில்வா சில்வா நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் தற்போது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் சீனாவிற்கு சென்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்த கட்டுரையை படியுங்கள் ... http://transcurrents.com/tamiliana/archives/291
-
- 2 replies
- 1.3k views
-
-
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவுடன் குவான்சூவில் உள்ள ஆறு ஆலமர ஆலயத்திற்கு வழிபடச் சென்றார். ...
-
- 5 replies
- 2.3k views
-
-
கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல திட்டம்? சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்திருக்கின்றது. கடற்படையில் இருந்து வெளியேறிய முன்னாள் வீரர்களை வைத்தே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான முழு விபரங்களும் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருப்பதாவது: புலனாய்வுத்துறையினர் இது தொடர்பாக எனக்கு விபரங்களை கடந்த வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இச்சதித்திட்டத்தில் அரசில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளன. விடுதலைப் புல…
-
- 5 replies
- 1.8k views
-
-
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானிய…
-
- 3 replies
- 2k views
-
-
தயா மாஸ்டருக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிக்கு வழங்காதது ஏன்? * ஐ.தே.க. எம்.பி. கயன்த கருணாதிலக கேள்வி விடுதலைப் புலிகளின் "தயா மாஸ்டரை" கொழும்பு அப்பலோ வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போது பலத்த பாதுகாப்பை வழங்கிய அரசாங்கம், இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உயர் பாதுகாப்பை வழங்காது மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றமை பிழையான செயலென குற்றம் சாட்டும் ஐ.தே.கட்சியின் எம்.பி.யும் ஊடகப் பேச்சாளருமான கயன்த கருணாதிலக இராஜதந்திரிகள் தாக்குதலுக்குள்ளான சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற…
-
- 2 replies
- 1.9k views
-