Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 12:58 PM (இராஜதுரை ஹஷான்) 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஞாயிறு (டிச.1) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தனியார் வருமான மாத வரி அறவிடல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது. மாதம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர் மாத வரி செலுத்த வேண்டும். இதற…

  2. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 03:56 PM (இராஜதுரை ஹஷான்) 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…

  3. முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு? முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார். அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக…

    • 7 replies
    • 765 views
  4. மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு! கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்…

    • 4 replies
    • 537 views
  5. ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன ! போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாது…

  6. அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் திட்டவரைபை சமர்பித்தவர்களை சந்திக்கிறார் அரசாங்க அதிபர் ! kugenDecember 31, 2022 (நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன்காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லைநிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய க…

  7. ”2023 புதிய தீர்க்கமான ஆண்டாக இருக்கும்” 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 என…

  8. திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு ! தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15 ஆம் திகதி எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார். கோண்டாவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற எக்காரிகையை அடுத்து 2 இலட்சம் ரூபாய் சரீர…

  9. 2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து …

  10. நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு : 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பி சென்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் தப்பி சென்றவருக்கு எ…

  11. பணவீக்கம் டிசம்பரில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கி By NANTHINI 31 DEC, 2022 | 04:55 PM (எம்.மனோசித்ரா) கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் இவ்வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக டிசம்பரிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய பணவீக்கம் 57.2 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 64.4 சதவீதமாகவும், உணவல்லாப் பணவீக்கம் 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. நவம்பரில் 61 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், டிசம்பரில் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு பணவீக்கம் 4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, உணவுப…

  12. தமிழ் மக்களின் அண்மைய அரசியல் நிலைமைகளை விளக்குகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்

  13. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட இடையில் சந்திப்பு! யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, வாள் வெட்டு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கின்ற காணிகளை விடு…

    • 2 replies
    • 281 views
  14. ஹிருணிகாவிடம் 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க! வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை கோரி ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அழைப்பாணை அனுப்பியுள்ளார். இதன்படி, ஆசு மாரசிங்க, ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 பில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நஷ்டஈடாக கோரியுள்ளார். ஆஸூ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா, ஆசு மாரசிங்க வளர்ப்பு நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட…

    • 12 replies
    • 864 views
  15. மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையட…

  16. தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்! பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருவதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்…

  17. உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது காங்கேசன்துறை துறைமுகம்! காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியு…

  18. 2023 ஆம் ஆண்டிலாவது பிச்சை எடுப்பதை நிறுத்துங்கள் – கொழும்பு பேராயர் ! 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய கட்டமைப்பை உருவாக்கத் தவறினால் நாடு அழிந்துவிடும் என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரித்துள்ளார். இலங்கையுடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ள போதும் இலங்கை ஒரு ஏழை நாடு என்ற பிம்பத்தைப் பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காலங்காலமாக தேசத்தை ஆட்சி செய…

    • 3 replies
    • 482 views
  19. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தமிழரசு கட்சியின் அரசியல் குழு நிராகரித்திருப்பதாக தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்தை தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான பங்காளி கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தனது பாரம்பரிய கூட்டாளிகளுக்கு மேல் அதிகமாக மற்ற தமிழ் கட்சிகளை சேர்த்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை…

    • 3 replies
    • 419 views
  20. மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் - எல்லே குணவங்க தேரர் பிரதமரிடம் வலியுறுத்தல் By VISHNU 30 DEC, 2022 | 12:45 PM (இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டு மக்களை வதைக்கும் வகையில் வரி அதிகரிப்பதை விடுத்து, மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குங்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார். மின்கட்டணத்தை அதிரகித்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.மக்கள் படும் துயரத்தை உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்ப…

  21. யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா! யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார். இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட…

  22. நிலக்கரி கொள்வனவில் மோசடி : எனது கூற்று உண்மையெனில் அமைச்சர் காஞ்சன பதவி விலக வேண்டும் - ஓமல்பே சோபித தேரர் By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 03:35 PM (இராஜதுரை ஹஷான்) நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் நான் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்றால் தண்டனை ஏற்க தயார். குற்றச்சாட்டு உண்மையாயின் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதவி விலக வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் உள்ள மக்கள் பேரவை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…

  23. வாகன இலக்கத் தகடுகளில் புதிய மாற்றம் Posted on December 30, 2022 by நிலையவள் 6 0 புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1ம் திகதி முதல் அகற்றப்படும் என மோட்டார் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும்,வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்ப…

    • 0 replies
    • 757 views
  24. மின்வெட்டு குறித்த அறிவிப்பு By T. SARANYA 30 DEC, 2022 | 04:41 PM நாளை (டிசம்பர் 31) மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு ஜனவரி 2 ஆம் திகதி 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவிததுள்ளது. https://www.virakesari.lk/article/144569

  25. மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல். kugenDecember 30, 2022 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (29) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலின்போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும்போது எற்படும் நிர்வாக எல்லை பிரிப்புக்கள் தொடர்பான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமுக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் முன் மொழியப்பட்டு அதன் சாத்திய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.