Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…

    • 7 replies
    • 1.4k views
  2. ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் ஏ-9 பாதையைத் திறக்க வழிசெய்யவும் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு மனு. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் ஏ9 தரைவழிப் பாதையைத் திறப்பதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் அந்தப் பாதையைத் திறப்பதற்கு வழி செய்யுமாறு வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில் இலங்கைத்தீவின் சமாதான நடவடிக்கைகள் பல காரணங்களுக்காகத் தடைப்பட்டுள்ளமையால் எழுந்துள்ள அவல நிலை குறித்து எமது செயலகம் தனது ஆழ்ந்த கரிசனையைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. இச்…

  3. கோட்டாபய ராஜபக்ஷ மீதான தாக்குதல்: வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ்ப்பெண் கைதானார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவைக் கொலைசெய்யும் நோக்கோடு நடத்தப் பட்ட தாகக் கூறப்படும் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சத்தியவாணி என்ற தமிழ்ப்பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கிய சமயம் இவர் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றார். இத்தகவலை பயங்கரவாதச் செயல்களை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. மேற்படி தற்கொலைத் தாக்குதலை…

    • 1 reply
    • 1.2k views
  4. கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 07:06 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அவர்கள் சிறியரக பல்குழல் எறிகணை செலுத்திகளை பயன்படுத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முறக்கொட்டாஞ்சேனைஇ மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள காவல்நிலையங்கள் மீதும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன்இ செங்கலடி மற்றும் கறுத்தப்பாலம் பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன…

  5. எண்ணெய்வள அகழ்வில் பரிந்துரைகள் இல்லை: சிறிலங்கா அரசாங்கம் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 05:59 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மன்னாரில் நோர்வேயின் எண்ணெய்வள அகழ்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் கேள்விப்பத்திரங்கள் கோரல் முறையில் பரிந்துரைகள் இடம்பெறவில்லை என பெற்றோலியத்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஏ குணசேகர தெரிவித்ததாவது: இது முற்றிலும் தவறானதுஇ புவியியல் ஆய்வுத் தகவல்களின் படி 1.0 பில்லியன் பரல்கள் அளவான எண்ணெய்ப்படிவுகள் மன்னாரில் உள்ள காவிரிப் படுக்கைக்கு அருகிலான வடமேற்கு கரையில் உள்ளது. அமைச்சரவை குழுவின் பெற்றோலிய வளத்தின் மாதிரி வடிவ…

    • 2 replies
    • 1.1k views
  6. கிழக்கில் யு.என்.எச்.சி.ஆரின் மீள்குடியேற்றப் பணி இடைநிறுத்தம் இடம்பெயர்ந்த மக்களை பலவந்தமாக மீளக்குடியேற்றுவதில்லை என சிறீலங்கா அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை கிழக்கில் அரசு உதாசீனம் செய்ததை தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் தனது மீளக்குடியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதன் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புவதானது அந்த பிரதேசங்களின் பாதுகாப்பு, அமைதி ஆகியன தொடர்பான சில விதிமுறைகளின் படியே சாத்தியமாகும். யு.என்.எச்.சி.ஆர் அல்லது வேறு அமைப்புக்களோ வாகரைப் பகுதியின் நிலைமை தொடர்பாக தமது ஆய்வுகளை மேற்கொள…

    • 0 replies
    • 661 views
  7. யாழ்பாணத்தில் சிறீலங்கா மினிமுகாமில் தீ யாழ்பாணம் வலிகாமம் சுழிபுரம் பகுதியில் புதன்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் மினி முகாம் ஒன்றை அவர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றபின் இனம்தெரியாத நபர்களால் தீயிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மேலதிக படையினரை அவ்இடத்துக்கு அனுப்பியுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் பொதுமக்களை அடித்தும் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/

  8. பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? அமைச்சர் நிமலுக்கு எழுந்த சந்தேகம் பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்று சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமையினால் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியினர் சபையில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையின்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சிங்கள புலிகள் செயற்படுகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி ப…

    • 0 replies
    • 878 views
  9. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் மக்கள் பயப்பீதியில் வாழ்கின்றனர் - த.தே.கூ சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்கள் மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்கு கல்விசார் சமூகம் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள், விமானக் குண்டுத் தாக்குதலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுதல் போன்ற விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழீழ கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் சஞ்சீவி, யாழ் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி…

    • 0 replies
    • 673 views
  10. சிறீலங்கா இராணுவத்தின் புதிய பாஸ் நடைமுறை யாழ்பாணத்தை விட்டு வெளிமாவட்டத்திற்கு செல்லும் யாழ் மக்கள் அனைவரும் சிறீலங்கா யாழ் கட்டளை மையத்தில் யாழ்பாணத்திற்கு திரும்பி வருவோம் என்ற உத்தரவாதம் வழங்கிய பின்னரே வெளிசெல்வதற்குரிய அனுமதியை பெறக்கூடியதாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிமக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளதாகவும் சுதந்திரமாக யாரும் எங்கும் செல்லமுடியாதுள்ளதாலும் ஏற்கனவே கொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வன்புணர்வுகள், உணவுப்பற்றாக்குறை போன்ற பலவேறு இன்னல்களை அனுபவித்துவரும் மக்கள்களை பெரும் இக்கட்டுக்குள் உட்படுத்தியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. கடந்த 2006 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 40000 பொதுமக்கள் கப்பல் மூலமாகவும்,…

  11. புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள் -பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி 01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள். - சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன். 02. களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும். - பனிச்சங்கேணி, முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்து ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ். 03. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள் புலிகள். வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமா…

  12. சர்வதேசமும் மகளிர் தினமும் - தமிழர் அவலம்

  13. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தனியான பிரிவை இலங்கையில் அமைக்க அனுமதிக்கமுடியாது மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தனியான பிரிவை இலங்கையில் அமைப்பதற்கு அனுமதிக்கமுடியாது என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 0 replies
    • 908 views
  14. இந்தியஇலங்கை உடன்படிக்கை அன்று உரியமுறையில் அமுலாகியிருந்தால் இன்றைய பிரச்சினை எழுந்திருக்காது இனப்பிரச்சினையை யுத்தத்தினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன செயற்பட்டார். அந்தவகையில் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்தியஇலங்கை உடன்படிக்கையை இந்தியாவின் உதவியுடன் அவர் உருவாக்கினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் ரணில் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: முன்னாள் …

    • 1 reply
    • 818 views
  15. : கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 20 மார்ச் 2007இ 12:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஜோர்தானிய கப்பலான பாராஃ - 03 தொடர்பாக மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த முடிவுகளும் எடுக்ப்படவில்லை எனவும்இ ஜோர்தானிய அதிகாரிகளுடன் விவாதங்கள் தொடர்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோர்தானிய அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம்இ அதன்பின்னர் கப்பல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் தீர்மானிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக கலந்துரையாடுவதற…

    • 3 replies
    • 1.6k views
  16. பிரான்ஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாயகம் சென்றவர், யாழில் சிறிலங்காப்படையினரால் கொல்லப்பட்டுள்ளார். ஜ புதன்கிழமைஇ 21 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ பிரான்ஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தாயகம் சென்றவர், பெப்ரவரி 28ல் சிறிலங்காப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2002 மேல் பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய ராஜேந்திரம் இளஞ்செல்வன் (30) என்பவரே யாழில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இவரது கொலை பற்றி யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் இலங்கையிலுள்ள பிரான்;ஸ் தூதரகத்திற்கு கடித மூலம் அறிவித்துள்ளார். நுணாவில், சாவகச்சேரியைச் சேர்ந்த இளஞ்செல்வன் சம்பவதினம் காலை 5:30 மணியளவில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக …

  17. வவுணதீவு தெற்குப் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் மட்டக்களப்பு வவுணத்தீவில் விடுதலைப்புலிகலின் இணங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த படை நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டடையடுத்து பின் வாங்கிய புலிகள் வவுணைத்தீவு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதால் விமானப்படையினர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.. எனினும் இத்தாக்குதலில் போதான சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  18. ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனிசாமி பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரமேஸ்வரி தாக்கதல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த சட்டமா அதிபர் குழு, பரமேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாததைக் கருத்திற்கொண்டே, பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி கூறி தீர்ப்பளித்தது. பரமேஸ்வரி நேற்றைய தினம் விடுதலை செய்யப்படவிருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சூழ நிரம்பியிருந்தமையினால், பொலிஸார் அவரை நீதிமன்றுக்கு அழைத்து வரவில்லை.எனவே, ஊடகவியலாளர் பரமேஸ்வரி இன்று நீதிமன்றுக்கு அழ…

  19. சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவுக்கு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் நேற்று நியூயோர்க்கில், ஐ.நாவில் வைத்து வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றன. சிறுபான்மையினர் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பே உலகில் சிறுபான்மையினர் நிலைமை பற்றிய தனது வருடாந்த ஆய்வறிக்கையை நேற்று வெளி யிட்டது. அதன்படி கடந்த ஆண்டில் சிறுபான்மை யினரின் நிலைமை மிகமிக மோசமாக சீர்கெட்டுப்போன உலக நாடுகளின் பட்டி யலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன முன்னணி இடம் வகிக்கின்றன. அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மக் களின…

  20. புத்தாண்டுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற போகின்றாராம் மஹிந்த ராஜபக்ஷ, - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 21 ஆயசஉh 2007 16:59 சித்திரை புது வருடப்பிறப்பிற்கு முன்னர் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெறியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஜாதிக ஹெல உறுமயவின் குழுவினரை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடியபோதே ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரில் தலைமையிலான குழுவினரே மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். http://sankathi.org/news/index.php?option=...60&Itemid=1 இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கூடுதலான பௌத்…

    • 9 replies
    • 2.6k views
  21. ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக நடப்போருக்கு எச்சரிக்கை-வேலவன்- அரச வாகனம் ஒன்றைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் அதிருப்தியாளர்களில் மிகவும் முக்கியமானவருமான சிறீபதி சூரியாராய்ச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு உயர் பதவி வகித்த ஒருவர் இவ்வாறானதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது என்பது நிச்சயமாக அரசியல் ரீதியானது என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இதன்பொருள் சிறீபதி சூரியாராய்ச்சி குற்றமேயற்ற நேர்மையான அரசியல்வாதி என்பதல்ல இவ்வாறான குற்றங்களைப் புரிபவர்கள் மீது மட்டுமல்ல இதனைவிடப் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் மீதும் கூட நடவடிக்கை எடுக்கப்படுவத…

  22. பொதுத் தேர்தலுக்கு கட்சிகள் தயாராகின்றன? [21 - March - 2007] அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியால் நடத்தப்பட்ட பேரணியின் போது இன்னும் 90 நாட்களுக்குள் ஐ.தே.கட்சி அரசை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அல்லது புரட்சிச் சதி ஒன்றின் மூலம் மட்டுமே ஐ.தே.கட்சி அரசை அமைக்க முடியும். ஐ.தே.கட்சியின் புனரமைப்பு மற்றும் அவர்களது நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியனவற்றை அவதானிக்கும் போது ஐ.தே.கட்சி ஒரு புரட்சிச் சதி மூலம் அரசாங்கத்தை வீழ்த்தத் தயாராகி வருவதாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்கட்சியினர் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க …

  23. மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு, செங்கலடி, சித்தாண்டி மற்றும் கும்புறுமுல்லைப் பகுதிகளில் உள்ள தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து புலிகள் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதனை தாம் முறியடித்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புலிகளின் கிழக்குத் தளபதிகளான ரமேஸ், நாகேஸ் சாந்தன் ஆகியோரின் வழிநடத்தலில் 300 பேர் இத்தாக்குதலில் பங்கு பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. படையினரின் அறிக்கைகளின் படி நான்கு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாகவும் மேலும் 11பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு புலிகளின் இழப்பு விபரம் உறுதிப்படுத்தப்படவில்லையென

  24. இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பானது வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 155,000 மக்களுக்கும் உடனடியான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு மேலதிக நிதியுதவி கிடைக்காது போனால் எமது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத முடிவில் தீர்ந்து போகும் என்று உலக உணவுத் திட்டத்தின் ஆசியப் பிராந்திய தலைவர் ரொனி பான்பெறி தாய்லாந்தின் தலைநகரான பாங்ஹொக்கில் தெ…

  25. மட்டக்களப்பு மாவட்டத்தின் செல்லிடப்பேசிகள் செயலிழப்பு. மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளின் எதிரொலியாக மாவட்டத்தின் செல்லிடப்பேசி தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது அந்த பிரதேசத்தில் பணியாற்றும் தமது உறுப்பினர்களுடனான தொடர்புகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என உதவி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. வடக்கு - கிழக்கில் உள்ள பெரும்பாலான ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரிகள் செய்மதி தொலைத் தொடர்பு வசதிகளை கொண்டுள்ளதாகவும் ஆனால் பெரும்பாலான வெளிநாட்டு மற்றும் உள்ளுர் அதிகாரிகள் தமக்கிடையிலான தொடர்புகளுக்கு சாதாரணமான செல்லிடப்பேசிகளையே பயன்படுத்துவதாகவும் தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.