Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்க அலுவலகத்தை உடைத்தமைக்கு எதிராக போராட்டம் By Vishnu 30 Dec, 2022 | 01:51 PM கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்றையதினம் (30) வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான் நகரில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த இரண்டு மடிக்கணினிகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களும் ஆவணங்களும் திருடப்பட…

  2. கட்சிகளின் இணைவுகள் அர்த்தபூர்வமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை - சந்திரகுமார் By Digital Desk 2 30 Dec, 2022 | 02:42 PM கட்சிகளின் இணைவு என்பது முக்கியமல்ல அது ஒரு அர்த்தபூர்வமாக இருக்க வேண்டும். தமிழ் கட்சிகளுக்குள் நான் பெரிய கட்சி நீ பெரிய கட்சி என்ற நிலைப்பாடு மாறும் வரை ஒற்றுமையும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடுதலையும் இல்லை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலக திறப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவி…

  3. கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே க. அகரன் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி …

  4. கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கடலட்டை பண்ணைகள் வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும…

    • 28 replies
    • 2k views
  5. வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்! நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாயாகும். இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள். ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்…

  6. மதமாற்ற கொள்கை உடைய அரச அதிபர் வேண்டாம் – யாழில் போராட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்ல இருக்கின்றார். இந்நிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக, மதமாற்ற கொள்கை உடையவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிவித்து, அவரை யாழ். மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டாம் என தெரிவித்து சிவசேனை அமைப்பினரால் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சிவத் துரோகிகள் தமிழ் இனத் துரோகிகள்” உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப…

    • 3 replies
    • 676 views
  7. அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை – குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு! வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வருகை அட்டைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் புறப்பாடு அட்டைகள் புதிய முறையின் மூலம் சரிபார்க்கப்படும். எனவே, இரண்டு விமானப் பயணிகளும் தங்கள் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தங்கள் அட்டைகளை ஒன்லைனில் நிரப்ப முடியும். திணைக்களம் பயணிகளை www.immigration.gov.lk அல்லது https://eservices.immigration.gov.lk என்ற திணைக்கள…

  8. போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலால் நிராகரிப்பு! போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவ…

  9. இலங்கையில் 50 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : 40 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் ! By VISHNU 29 DEC, 2022 | 05:17 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் சுமார் 50 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துவதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்…

  10. 30 ஆயிரத்துக்கும் அதிக அரசாங்க ஊழியர்கள் ஓய்வு - அரசாங்கம் By VISHNU 29 DEC, 2022 | 07:34 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என பொது நிர்வாக,மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். 60 வயது பூரணமான அதிகமான அரச ஊழியர்கள் ஒரே தடவையில் ஓய்வுபெற்றுச் செல்வதால் அந்த வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரி…

  11. இந்திய உதவியில் கிடைத்த பாவனைக்குதவாத அரிசி மீட்பு By VISHNU 29 DEC, 2022 | 08:14 PM வவுனியாவில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய உதவியில் கிடைத்த அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் இன்று(29) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள்…

  12. மாலைதீவு ஜனாதிபதி இலங்கையில் By RAJEEBAN 29 DEC, 2022 | 05:35 PM மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமட் சொலி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். மாலைதீவு பொருளாதாரம் வெற்றிகரமாக கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவித்த மறுதினம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த வருடம் மாலைதீவின் பொருளாதார வளர்ச்சி 12.3 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இது 7.6 வீதமாக காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/144477

  13. மட்டக்களப்பில் 2 வயதும் 8 மாதமுமான பெண் குழந்தைக்கு ஆபாசப்படங்களைக் காட்டி துஷ்பிரயோக முயற்சி: உறவினரான இளைஞர் கைது! By T. SARANYA 29 DEC, 2022 | 05:00 PM மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தங்கை முறை உறவுக்கார குழந்தைக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை (டிச 28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார். குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வ…

  14. எமக்கானவற்றை நாமே உற்பத்தி செய்வோம் - வவுனியாவில் ஓர் விவசாயப் புரட்சி By VISHNU 29 DEC, 2022 | 08:09 PM இன்று நம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் கிராமபுறங்களில் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வை இழந்துவருகின்றனர். மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு அரசாலும் அரசசார்பற்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை உரியவாறு மக்களை சென்றடைவதில்லை என்பதுடன் அத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. இருப்பினும் ஒரு சில நிறுவனங்களின் செயற்பாடு இன்றளவும் மக்கள் மத்தியில் வெற்றிக…

  15. பணவீக்கம், பொருளாதார ஸ்திரமின்மையால் இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன - கேப்ரியல் கிரா By DIGITAL DESK 2 29 DEC, 2022 | 05:31 PM “சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெர…

  16. ரொய்ட்டரின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆர்ப்பாட்ட படங்களில் மூன்று அரகலய படங்கள் By RAJEEBAN 29 DEC, 2022 | 04:24 PM ரொய்ட்டர் செய்திச்சேவையின் இந்த வருடத்திற்கான புகைப்படங்களில் கொழும்பில் அரகலய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. மே 19 ஜூலை 9 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட மூன்று படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. 2022 உலகின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 48 புகைப்படங்களை ரொய்ட்டர் தெரிவு செய்துள்ளது. …

  17. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு! அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் …

  18. ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி நின்று ஆட எவரையும் அனுமதியேன் – அமைச்சர் டக்ளஸ் சூளுரை என்னுடன் பழகிய பல அற்புதமான நெருக்கமான தலைவர்கள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராளிகளை கொலை செய்தவர்களை – அவர்களுக்கு தலைமை வகித்தவர்களை எவ்வாறு ஏற்கமுடியும் என கேள்வியெழுப்பிய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்.மாநகரசபையின் பாதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஹையா ஹையா என ஆடவும் விட முடியாது என்றார். நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாவீரர் தினம் மற்றும் திலீ…

  19. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதி குறித்த அறிவிப்பு இன்று? உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துர…

  20. அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று! 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் கோரி சுமார் 112 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக அல்லாத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயர் பெற்ற, சிறந்த மற்றும் நேர்மையான …

    • 1 reply
    • 196 views
  21. தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் – நிதி அமைச்சு அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது, பணம் ஒதுக்க வேண்டுமானால் கடந்த…

  22. மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் வலியுறுத்தல் 28 DEC, 2022 | 06:58 PM ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக…

  23. மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் போராட்டம் வெடிக்கும் - மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கம் எச்சரிக்கை By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 07:00 PM (இராஜதுரை ஹஷான்) மின்கட்டணத்தை 4 ஆம் திகதி அதிகரித்தால் அரசாங்கத்திற்கு எதிராக பல இலட்ச மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறக்குவோம். மின்கட்டணத்தை செலுத்த முடியாதவர்களின் மின்விநியோகத்தை துண்டிக்கும் சேவையில் இருந்து விலகியுள்ளோம். இராணுவத்தை கொண்டு அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்துக் கொள்ளட்டும் என மின்சாரத்துறை ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். மின்கட்டண உயர்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற…

  24. சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம் By VISHNU 28 DEC, 2022 | 07:06 PM யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். …

  25. 75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப…

    • 14 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.