ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142759 topics in this forum
-
விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நிறுத்தினால் அரசும் தாக்குதல்களை நிறுத்தும். மட்டக்களப்பு வாகரையை கைப்பற்றியதும் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றப் போவதாக அரசு நேற்று திங்கட்கிழமை கூறியிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் சண்டையை நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பித்தால் அரசாங்கமும் சண்டையை நிறுத்தும். சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று திங்கட்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடல் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் நேற்று முன்தினம் வடமராட்சி கடல் பரப்பில் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேகலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது: தற்போது தொப்பிக்கலப் பகுதி தான் ஆ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றியது போர்நிறுத்த மீறலே: கண்காணிப்புக் குழு. விடுதலைப்புலிகளை கிழக்கில் இருந்து வெளியேற்றியது பெரும் போர்நிறுத்த மீறலாகும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இவ்வாறு தெரிவித்திருப்பதாகச் சர்வதேசச் செய்தி முகவர் நிறுவனம் ஒன்று கூறுகிறது. அரசாங்கம், விடுதலைப்புலிகள் ஆகிய இரண்டு தரப்புக்களும் பல தடவைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளன. கிழக்கில் இருந்து புலிகளை வெளி யேற்றியதும் அவற்றில் ஒன்றே. அந்த ஒப்பந்தம் காகிதத்தில் மட்டும் வெறுமனே உள்ளது எனவும் கண்காணிப்புக் குழு மேலும் தெரிவித்திருக்கிறது. பேச்சு மூலமான தீர்வுக்கு அரசு தனது பற்றுறுதியை நிரூபிக்க வேண்டும் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் பேச்சு மூலமான தீர்வில் அரசுக்குரிய…
-
- 0 replies
- 971 views
-
-
கிடைத்த ஒரு தகவலின்படி மட்டக்களப்பு கதிரவெளியையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து விட்டதாம்! ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை! நாம் யுத்த நிறுத்ததுக்கு முன் 70% நிலப்பரப்பை கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் இன்று யுத்த நிறுத்த காலத்தில் .....?????????? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கத்தான் விளிப்பதைப் போல, நாமும் கடைசியில் வன்னியை சிங்களவன் அடிக்கத்தான் நாம் போராட முற்படப் போகிறோம் போலிருக்குது!!! வன்னியும் ........???????????????????
-
- 25 replies
- 7k views
-
-
துணை இராணுவக் குழுவினரின் முகாமிலிருந்து 5 சிறார்கள் தப்பினர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக பயிற்சி கொடுக்கப்பட்ட 5 சிறார்கள் முகாமிலிருந்து தப்பி வந்துள்ளனர். முகாமிலிருந்து தப்பி வந்த இவர்கள், அனைத்துலக செஞ்சிலுவை சங்கக் குழுவினரால் சிறிலங்கா காவல்துறையிடனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலநறுவைப் பகுதியின் சிறிலங்கா உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க தெரிவிக்கையில், இந்த 5 சிறார்களும் அடையாளம் தெரியாத பிரதேசம் ஒன்றில் உள்ள பயிற்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தப்பிய சிறார்கள் வேறொருவரின் துணையுடன் அனைத்துலக செஞ்சிலுவை ச…
-
- 0 replies
- 670 views
-
-
[22 - January - 2007] [Font Size - A - A - A] உள்நாட்டுப் போரும் அரசியல் வன்முறைகளும் நிலவுகின்ற நாடுகளிலே தோன்றியிருக்கும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடிகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பணிகளைக் கூடுதலான அளவுக்கு வேண்டி நிற்கின்ற இன்றைய காலகட்டத்திலே, துரதிர்ஷ்டவசமாக அந்த நிறுவனங்கள் முன்னென்றும் இல்லாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் அந்நிறுவனங்களின் பணியாளர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் பலவித இடர்பாடுகளுக்கு மத்தியில் செயற்பட வேண்டியிருக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கெயர் இன்ரர் நாஷனல் (CARE Intern…
-
- 0 replies
- 777 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு யாழ். வலிகாமம் சுன்னாகத்தில் பலரும் பார்த்துக்கொண்டிருக்க பலாத்காரமாக சிறிலங்கா இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்ட அங்கவீனமுற்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டானியல் சாந்தரூபன் (வயது 30) என்ற இந்த இளைஞர், பொய்க்கால் பூட்டி நடக்கும் அங்கவீனமுற்ற ஒருவர். இவரை இராணுவத்தினர் கடத்திச் சென்றபோது, அவரது பொய்க்கால் மற்றும் சில பொருட்கள் கைவிடப்பட்டன. அவரைக் கடத்திய இடத்தில், கடும் வெட்டுக் காயங்கள் மற்றும் சித்திரவதைக்கான அறிகுறிகளுடன் இவரது சடலம் மீண்டும் வீசப்பட்டிருந்தது. இது தவிர, மேலும் இருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் ஊரட…
-
- 0 replies
- 683 views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு: 2 காவல்துறையினர் பலி- 2 பொதுமக்கள் பலி வவுனியா கல்முனை சந்தியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் கடமையிலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து காவல் கடமையிலிருந்த காவல்துறையினர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்துள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார். பிறிதொரு சம்பவத்தில் செட்டிக்குளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். -புதினம்
-
- 1 reply
- 681 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பில் 5 தமிழர்கள் கைது கொழும்பு, தெகிவளை மற்றும் அதனையண்டிய கடற்கரைப் பிரதேசங்களை கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இத்தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஐந்து தமிழர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை இவர்களது வீட்டார் விசாரித்தபோது, தங்களது இருப்புக்கான சரியான காரணத்தை கூறாததற்காக கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். எனினும், சரியான அடையாள அட்டைகள் காண்பிக்கப்பட்டதுடன், அவர்கள் ஏன் அங்கு தங்கியிருக்கின்றனர் என்பதற்கான சரியான ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட போதிலு…
-
- 0 replies
- 752 views
-
-
தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலாசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப் படலாம் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தியானது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அல்லது பரப்பப்படும் விதமானது தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச ஊடகங்களில் திருமதி அடேல் பாலசிங்கம் மறைந்த முன்னால் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளமையே…
-
- 9 replies
- 3k views
-
-
பொதுமக்களை பாதுகாக்கவும்: யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் மட்டக்களப்பு வாகரை மீதான சிறிலங்கா அரசின் படை நடவடிக்கைகளை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்குச் செல்லும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசையும் விடுதலைப் புலிகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பான யு.என்.எச்.சி.ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறியதாவது: சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக விதிகளை மதிப்பதுடன் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் அனுமதியளிக்க வேண்டும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடக்கும் போரில் 70,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் 465,000 மக…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயத்திலிருந்து விரட்டுவது - ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயகப் பகுதியில் இருந்து விரட்டியடித்து பல அவலங்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இந்த ஈனச் செயலுக்கு இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டுவருகின்றது. இந்நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பகுதியில் மக்கள் வாழ்க்கின்ற குடியிருப்புக்கள் மீது இராணுவம் தொடர்ந்து ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்லை மேற்கொண்டதன் விளைவாக அங்கியிருந்து பல்ல…
-
- 0 replies
- 854 views
-
-
திங்கள் 22-01-2007 13:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலாயம் அனைத்துலக நாடுகளை கோரியுள்ளது இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்வதற்கான சூழ்நிலை காணப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை சாதகமாக பரிசீலிக்குமாறு கோரிக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசு தீவின் கிழக்கு பகுதியில் போராளிகளின் பலமிக்க பிரதேசங்களை கைபற்றிய பின்னர் கடந்த திங்களன்று "புலிகளை காட்டுக்கு அடித்து விரட்டுவோம்" என்று சூழுரைத்துள்ளது. "ஆனால் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் மேற்கொண்டு யுத்தத்தை தவிர்க்கலாம்" என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தீர்கள், இனி அவர்கள் ஆடும் முறை. அதற்குள் என்ன அவசரம்!
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை இராணுவம் சமீபத்தில் தனக்கு கிடைத்துள்ள வெற்றிகளைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் அதேவேளை, விடுதலைப் புலிகள் தீவிரமான கெரில்லா தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தமது திறமையை தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சர்வதேச செய்தி ஸ்தாபனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வில், இலங்கை இராணுவம் பல வார கால தாக்குதலுக்குப் பின்னர் வாகரையை கைப்பற்றியுள்ளது. விடுதலைப் புலிகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தோல்வியை சந்தித்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ள மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய, இதன் காரணமாக இராணுவம் மேலும் பல தாக்குதல்களை மேற்கொள்ள முனைய…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தலையிட வேண்டும்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி உறுப்பினர். இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஷ் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயக கட்சி உறுப்பினரான பிராங் பலோன் பிரதிநிதிகள் சபையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் நிர்வாகம் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். ஜெனீவாவில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் பேச்சுக்கள் முறிவடைந்து விட்டன. அதன் பின்னர் பேச்சுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அங்குள்ள மக்கள் துன்பத்தில் வாழ்கின்றார்கள். 1983 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ விடு…
-
- 0 replies
- 675 views
-
-
இவர்கள் இணைந்தால் நாம் விலகுவோம்: ஜே.வி.பி. [திங்கட்கிழமை, 22 சனவரி 2007, 13:40 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட, ராஜித சேனாரட்ன ஆகியோர் அரசில் இணைந்தால் நாம் அரசிலிருந்து விலகுவது உறுதி என ஜே.வி.பி. அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினரான அனுர குமார திசநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது: நாம் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் இவை தவிர மேலும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டியுள்ளது. இந்த வாரம் கூடவுள்ள எமது மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எமது இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தா…
-
- 0 replies
- 749 views
-
-
லக்கிலேன்ட் தோட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் அட்டகாசம் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன, தொழிலாளர்கள் விரட்டியடிப்பு. இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்கிலேன்ட் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற இந்த சம்பவத்தினால் தோட்டத்தொழிலாளர்களின் ஆறு குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகத்தின் உதவியுடனேயே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, சம்பள உயர்வு கோரி தோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பலாலி வீதியில் மாணவிகள் மீது கெடு பிடி திருநெல்வேலி பலாலி வீதியில் பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கச் சென்று வரும் மாணவிகள் மீது திருநெல்வேலிச்சந்திக்கும் பல் கலைக்கழக சந்திக்கும் இடையே காவல் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் வேண்டும் என்று அவா்களை மறித்து வேண்டத்தகாத வார்ததைப் பிரயோகங்களில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இரண்டு மூன்ற மாணவிகள் ஒன்றாக வரும் வேளையில் இம் மாணவிகளை தடுத்து வைத்து தனித்தனியாக பிரிந்து செல்லும் படி கூறி நேரத்தை மினக்கடுத்தி செல்லவிடுவதும் மற்றும் கல்யாணம் சம்பந்தமாக கேள்விகளை கேட்பதும் என துன்புறுத்திவருகின்றார்கள் பல்கலைக்கழக சந்தியில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிசார் இந்த செயல்பாட்டில் மிகவும…
-
- 0 replies
- 775 views
-
-
சஙகதியை பாருங்கோ... http://sankathi.org/news/index.php?option=...35&Itemid=1
-
- 8 replies
- 2k views
-
-
சர்வதேச மனிதநேய சட்டங்களை மதித்து மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் நடக்கவேண்டும்: UNHCR. மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் பொதுமக்களைப் பாதுகாத்தல்,சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடமளித்தல் உட்பட சர்வதேச மனிதநேய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தா னிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) பேச்சா ளர் றொன் றெட்மொன்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறிய தாவது;கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வாகரையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். படையினர் தாக்குதல் நடத்தியவாறு முன்னேறுவதாக தெரிவ…
-
- 0 replies
- 639 views
-
-
கடல்கோளினால் பெரிதும் சேதமடைந்துள்ள காலி விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து காலிப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியதையடுத்து, இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு அவுஸ்திரேலியா 800 இலட்சம் ரூபாவை வழங்கியிருந்த போதிலும், இந்தப்பணம் புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இரு அதிகாரிகள் இந்த வேலைகள் நடைபெறாதது குறித்து ஆச்சரியப்பட்டதுடன், இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது எனவும் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காலி கச்சேரியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலும் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்ட போது விளையாட்டரங்கின் பொறு…
-
- 0 replies
- 635 views
-
-
அமைச்சரவை மாற்றம் இம்மாத இறுதிக்குள் இடம்பெறுமென தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 52 அமைச்சரவை அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் அங்கம் வகிப்பரெனவும் தெரிவித்தார். இதேவேளை ஐ.தே.க. மற்றும் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மாத்திரமே அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமென அமைச்சர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். அமைச்சர் ஜெயராஜ் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும். இதில் 52 அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பெறுவர். இதில் ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். இதேவேளை 2003 ஆம் ஆண்டு எனக்கு ம…
-
- 0 replies
- 531 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. மகிந்த அரசின் மீதான அதிருப்தியை அடுத்து அரசில் உள்ள பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்காவினதும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் தலைமையில் திரண்டுள்ளனர். பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமரவீரவை சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் தமது பொறுப்புக்களை மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க முயற்சிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினர். ம…
-
- 1 reply
- 934 views
-
-
தென் மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய நவீன விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் 1.9 மில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. "அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தங்காலைப் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கை புனரமைப்புச் செய்வதே எமது முக்கிய குறிக்கோள் என்று, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான மணிலால் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; "மேற்படி விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த விளையாட்ட…
-
- 1 reply
- 639 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒருவர் பலி. வவுனியா குழுமாட்டுச் சந்திப்பகுதி வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியொன்றில் இருந்த பொலிஸார் மீது நேற்று மாலை 6:30மணியளவில் இனந்தெரியாதோர் நடத்திய கைத்துப்பாக்கித் தாக்குதலின் போது பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 656 views
-