Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு [புதன்கிழமை, 17 சனவரி 2007, 05:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பெரும் சம்பவங்கள் நடைபெறும் போது கிளிநொச்சி பதற்றமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் பெரும் சமர்கள் மூளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது தென்னிலங்கையில் ஏற்படும் முன்னேற்றகரமான சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என அது மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள கண்காணிப்புக்குழுவின் ப…

    • 35 replies
    • 6.8k views
  2. புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க. கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவிய…

  3. வவுனியாவில் அறுவர் பலி.... கடந்த இரவு நடந்ததாக கூறப்பட்டது. மிகுதி செய்தியினை அறிய முடியவில்லை அந்த தகவல்களை வழங்கியவர்களின் தொலைபேசி துண்டிக்கப் பட்டுவிட்டது... மேலதிக செய்திகள் எதுவும் தெரியவில்லை.... -வன்னி மைந்தன்.

  4. ரணில் கரு சந்திப்பு திங்களன்று இடம்பெறும் வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கட்சியின்தலைமையகமானஸ்ரீகொத

  5. இலங்கை அரசு தொடர்ச்சியாக அம்பாறை சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டி வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது அம்பாறையில்? ஏன் தமிழர் தரப்பு அம்பாறை சம்பந்தமாக ஒரு செய்திகளையும் வெளியிடவில்லை? தமிழ் இணையத்தளங்களும் ஏன் அம்பாறை சம்பந்தமாக இருட்டடிப்புச் செய்கிறது? அம்பாறை தமிழர் மாவட்டம் இல்லையா? எமக்கெதிராக ஐ.நா. செயலாளர் நாயகமும் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், ஏன் தமிழர் தரப்பு "5 வருடம் கட்டுப்பாடு" என்ற பொய்மையான சர்வதேச மாயையில் கட்டுப்பட்டிருக்கிறது? நாளுக்கு நாள் தமிழ் மக்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டும், கடத்தி காணாமல் போவதும் தொடரும் போது "கையைக் கட்டி வாயை மூடு செயலற்றவரர்களாக போய் விட்டோமா? நாளுக்கு நாள் எமது பிரதேசங்களை தொடர்ந்து சிங்களத்திடம் இழக்…

    • 24 replies
    • 7.4k views
  6. இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா பயணம் 18 ஜனவரி 2007 இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு வியாழனன்று பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது இலங்கை அமைதி முயற்சிகள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரம், போர் நிறுத்தத்தை கைவிட்டு அமைதி முயற்சிகளை தொடர்வது போன்றவை குறித்து தனது பயணத்தின்போது இந்திய தலைவர்களிடம் சமரவீர விளக்குவார் எனத் தெரிகிறது. டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் இலங்கை அமைச்சர் சமரவீர உரையாட்டுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொழும்புக்குச் சென்ற 2 வாரங்களில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த…

  7. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீதிமன்றத்திற்கு வருகிறது [புதன்கிழமை, 17 சனவரி 2007, 23:07 ஈழம்] [து.சங்கீத்] 2002ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி கையொப்பமிடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நாட்டின் அரச சாசனத்திற்கு முரணாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன், ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தொடுத்த வழக்கு, மார்ச் 6ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. சிறீலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமா என்பதற்கான தீர்வை, மார்ச் 6ம் திகதி தான் வழங்கவிருப்பதாக, மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தல…

  8. [17 - January - 2007] [Font Size - A - A - A] அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது மொழி தெரிந்திருப்பதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி சிங்கள அரச ஊழியர்கள் தமிழையும் தமிழ் ஊழியர்கள் சிங்களத்தையும் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும் உரிய சுற்று நிருபம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார். அமைச்சு விடுக்கவிருக்கும் இந்தச் சுற்று நிருபத்தின் பிரகாரம், அரச ஊழியர்களுக்காக இவ்வருடத்தில் நடத்தப்படவிருக்கும் மொழித் திறமைகாண் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிர…

    • 0 replies
    • 1.1k views
  9. வியாழன் 18-01-2007 22:32 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடக்கு - கிழக்கில் கண்காணிப்புக் குழுவின் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழவினர் வடகிழக்கில் தமது பணியை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இப்பகுதிகளில் இருந்து பயிற்சிப்பட்டறையைக் காரணம் காட்டி கொழும்பு வந்திருந்த இவர்கள் இன்று முதல் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதற்கென தமது 10 உறுபினர்கள் வடகிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளில் தமது பிரதிநிதிகள் இருந்ததாக தெரிவித்துள்ள பேச்சாளர் மட்டக்களப்பு திருகோணமலை, வவுணிய…

  10. வியாழன் 18-01-2007 22:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அம்பாறை விஜயம் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் நிமால் சிறீபாலடீசில்வா தலைமையிலான அரசின் உயர்மட்டக் குழு ஒன்று இன்று அம்பாறை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறைக் கச்சேரியில் இடம் பெற்ற மாவட்டத்தின் 167 கிராமசேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் பேரியல் அஸ்ரவ், அத்தாவுல்லா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். நன்றி-பதிவு

  11. வியாழன் 18-01-2007 22:31 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அம்பலாங்கொடையில் துப்பாக்கிப் பிரயோகம்: இரு காவல்துறைச் சிய்பாய்கள் பலி! அம்பலாங்கொடையில் இன்று 4 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவற்துறை சிப்பாய்களும் மரணமாகியுள்ளனர். முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர்; காயம் அடைந்துள்ளார். அம்பலாங்கொடை நகரப் பகுதியில் உள்ள ஆபரண நிலையம் ஒன்றைக் கொள்ளையிட முனைந்தவர்களை கைது செய்யும் நோக்கில் முச்சக்கர வண்டியில் சென்ற காவற்துறையினர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் பதில் தாக்குதல் நடத்திய பொழுதிலும் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களை க…

  12. இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…

  13. எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவ…

  14. ஐ.நாவின் சிறப்பாலோசகரும் சிறுவர் மற்றும் ஆயுதமோதலுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன்றொக் பத்துநாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையை சிறிலங்கா அரசிற்கு அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான கருணாகுழுவினர் தமது படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கு அரசபடைகள் உதவிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுண்டு எனவும் அலன்றொக் தெரிவித்திருந்தார். ஆனால் றொக்கின் அறிக்கையை அரசு நிராகரித்ததுடன் அவர் அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐ.நா பாதுகாப்புசபையின் சிறிலங்கா தொடர்பான அலன்றொக்கின் அறிக்கை உரியவேளையில்…

  15. 'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு' [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும்…

  16. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்குச் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இது சம்பந்தமாக ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு வடக்கையும், கிழக்கையும் பிரிக்கும் ஷ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கான இந்திய அரசின் சம்மதத்தையும் ஷ்ரீலங்கா அரசால் பெறமுடிந்தது. எவ்வாறாயினும் வடக்கையும், கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமல்ல. புலிகள் அமைப்பின் எதிரிகள் கூட வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களும் வடக்க…

  17. மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தரத்தில் தொங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலை அரசு ஊக்குவித்தால் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கேம்பிரிட்ச் றெரசில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ரணில், உறுப்பினர்களின் கட்சித்தாவல், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் உறுப்பினர்களின் கட்சித்தாவல் தொடர்பாக மகிந்தவுக்கு த…

  18. விஞ்ஞான ரீதியிலான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே விமானப் படையினர் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அஜந்த சில்வா தெரிவித்தார். கொழும்பு கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; "இராணுவத்தினருக்கு எதிராகவும் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராகவும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கும் புலிகளின் இலக்குகள் பல அண்மைக் காலமாக விமானப் படையினரின் குண்டு வீச்சுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அவர்களின் பயிற்சி முகாம்கள் கடற்புலிகளின் படகுத்தளங்கள் ஆகியனவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. …

  19. முப்படையினர், பொலிஸாரின் பிள்ளைகளுக்காக கொழும்பு கொம்பனித்தெருவில் தேசிய பாடசாலையொன்றை நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சிறாருடன் பாடசாலைக்குள் பிரவேசிப்பதை காண்கிறீர்கள். ... தினக்குரல்

  20. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், 70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன…

    • 0 replies
    • 820 views
  21. புதன் 17-01-2007 10:10 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு? சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்து கொள்ளவுள்ளது.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்வைத்த 9 கோரிக்கைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அமைச்சரவை அந்நதஸ்தற்ற இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படவுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் பொறுப்பேற்றபார் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியினை ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்…

  22. நாகர்கோவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதில் எறிகணை தாக்குதலில் சிப்பாய் பலி. நேற்று மாலை வடபோர் முனை நாகர்கோவில் பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏறிகணைத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சிங்களப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சையடுத்து படை நிலைகளை இலக்கு வைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போதே ஒரு சிப்பாய் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அறியவருகிறது. -Sankathi-

  23. அரசு - ஐ.தே.க. அதிருப்திக்குழு பேரப்பேச்சில் இழுபறி நிலை - அமைச்சரவை மாற்றம் தாமதமாகும் சாத்தியம் [18 - January - 2007] [Font Size - A - A - A] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரத்தில் அரசுடன் இணையலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த திங்கட்கிழமை இரவு அரசு தரப்புக்கும் கரு ஜயசூரிய அணியினருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பு ஆரோக்கியமானதாக அமையாததன் காரணத்தால் அரசுடன் இணைவதில் தயக்கம் காட்டுவதாக தெரிய வருகின்றது. ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கும் தற்போது அரசு தரப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டுக்கும் பெரும் முரண்பாடுகள் காணப்படுவதால் கரு ஜயசூரிய அணியினர் ஆத்திரமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.…

  24. எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி சுட்டுகொலை நிஷாந்தி கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் இன்று வியாழக்கிழமை காலை 7:55 மணியளவில் ஆட்டோ சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியின் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.. இன்று காலை மோதர எலி ஹவுஸ் லேனில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஜெகத் சுசந்த பெரேரா (36) என இனங்காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனதுபிள்ளைகளை பாடசாலையில் விட்டு திரும்பும் வழியில் இவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.. ஆட்டோ சாரதியான இவர் கிம்புலாவில் பகுதியில் வசித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாவட்ட நீதவான்…

  25. சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!? [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 08:21 ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் நாள் முழுமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையத் தயாராகியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியில் அதிருப்தியடைந்துள்ள சிலருடன் இணைந்து மீள் அரசியல் பிரவேசத்துக்கு சந்திரிகா குமாரதுங்க தயாராகி வருவதாகவும், அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. சந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.