ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ரிக்கட்பெற நின்ற மக்கள் கலகம் விமான சேவை அலுவலகம் தாக்கப்பட்டது. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:45 யாழ் குடாநாட்டிலுள்ள தனியார் விமானசேவை அலுவலகத்தில் ரிக்கட் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கலகத்தில் ஈடுபட்டதில் அந்த அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்காக விமான டிக்கட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நேற்று அதிகாலை 4.00 மணிமுதல் அந்த விமானசேவை அலுவலகத்துக்கு முன்னால் 2 ஆயிரத்தக்கும் அதிகமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்களில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் ‘டோக்கன்’ வழங்கப்பட்டதால் ஆத்திரமுற்றவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் அலுவல…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெளிநாட்டு கடன்களைப் பெறுவது அரசாங்கத்திற்கு கடினமாகத்தான் இருக்கும். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:52 இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வருமானத்தைப் பெறுவதோ, வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு கடினமானதாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்படாவிட்டால் முதலீடுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதில் எதிர்மறையான விளைவையே அரசாங்கம் எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. …
-
- 5 replies
- 1.7k views
-
-
இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் விமானத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. சேதவிபரம் கிடைக்கப்பெறவில்லை.அங்காலே அப்பா பிச்சையெடுப்பு இங்காலே பிள்ளைகள் இனஒழிப்பு
-
- 0 replies
- 970 views
-
-
செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு? இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாக…
-
- 7 replies
- 2.3k views
-
-
அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை செவ்வாய் 30-01-2007 13:54 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அழித்து கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. வாகரை பிரதேசத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
2006 தைமாதம் கடத்தப்பட்ட ஏழு த.பு.க.பணியாளர்களை விடுவிக்க ஒத்துழைக்குமாறு கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 30 January 2007 15:27 கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் ஏழு நிலமை என்னஎன்பதை இன்னமும் அறியமுடியாமல் இருக்கின்றது. சர்வதேச மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் வடிவம் வருமாறு- கடந்த ஆண்டு முற்பகுதியில் 29-01-2006, 30-01-2006 ஆகிய இருதினங்களில் பொலநறுவை மாவட்ட எல்லைப்பகுதியான வெலிக்கந்தை இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகாமையில் …
-
- 0 replies
- 735 views
-
-
செவ்வாய் 30-01-2007 14:08 மணி தமிழீழம் [மகான்] சாம்பல்தீவு தமிழ் விவசாயி சுட்டுக்கொலை இன்று காலை இனம்தெரியாத ஆயுததாரிகளால் 50 அகவையுடைய தமிழ் விவசாயி ஒருவர் சாம்பல்தீவு கிராமத்தின் அயல்கிராமமான ஆத்திமோட்டையில் சுட்டுக்கnhல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் சாம்பல்தீவை சேர்ந்த தர்மன் என இனம்காணப்பட்டுள்ளார். இவரது உடலமானது உப்புவெளி காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 857 views
-
-
புலிகளுக்கு நிதியுதவிகள் சென்றடைவதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது: றொபேட் ஒ பிளேக். அபிவிருத்திப்பணிகளுக்கு சமாதானம் முக்கிய காரணமென அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக் தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற உதவி வழங்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சமாதானம் முக்கியமாகவுள்ளது. அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைமூலமே இது சாத்தியமாகும். இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் திருப்தியான அரசியல் தீர்வை காண்பதற்கான அதிகாரப்பகிர்விற்கான தீர்வுத்திட்டம் குறித்து அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருவது க…
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி கண்டனம் - ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றே தீருவோம் மஹிந்த சபதம். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. பல முறை இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு நடந்தும் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதனால் உள்நாட்டுப் போர் நீறு பூத்த நெருப்பாக கனன்று வருவதுடன், அவ்வப்போது இந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி ஆகியவை அதிக அளவில…
-
- 3 replies
- 1.7k views
-
-
செவ்வாய் 30-01-2007 13:48 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர் இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார் ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகம…
-
- 5 replies
- 2.1k views
-
-
மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஜப்பான் உதவி. மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஐப்பான் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பணஉதவியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இப்பணத்தின் உதவியுடன் பழைய பாலத்திற்குப்பதிலாக 157 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமுமான புதிய பாலமொன்று அமைக்கப்பட உள்ளது. இது மட்டும் அன்றி மதாவாச்சியிலிருந்து மன்னார், தலைமன்னார் ஊடாக செல்லும் கடல்பாதையை (CAUSE WAY) அபிவிருத்தி செய்யவும் ஐப்பான் உதவ உள்ளது. தற்போது பாவனையிலுள்ள பாலம் 1930 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும். இப்பாலம் 1990 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் சேதப்படுத்தப்பட்டது. இது பின்னர் தற்காலிகமாக மீண்டும் திருத்தப்பட்டது. பாலம் தவிர கடற்பாதையும் கடல்மட்டம் உயரும் போத…
-
- 0 replies
- 819 views
-
-
காலியில் நடைபெற்ற அபிவிருத்தி சபை 2007 ஆண்டிற்கான இன்றைய மூன்றாவது அமர்வில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது. மகிந்த சிந்தனையின் கீழ் வரும் பத்து ஆண்டுகளுக்கான அபிவிருத்திக்கான 09 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 4.5 பில்லியன் டொலர்களை வழங்க உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது. இந் நிதி பெருந் தெருக்கள்,அனல் மின் நிலையம், துறைமுகம் போன்றவற்றின் அபிவிருத்திகளுக்கு செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பேசிய கலாநிதி சரத் அமுனுகம இலங்கையல் சமாதானம் வரும் வரை அபிவிருதிகளை தள்ளிப் போட முடியதெனவும், அபிவிருத்திகள் மிக விரைவில் செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகளையும் உலக நாடுகளையும் சேர்ந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார். சிறீலங்காவில் இனப்போர் உக்கிரமடையத் தொடங்கிய 1981 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையான காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள உயர்ந்த படையதிகாரி என்ற பெயரை சிறீலங்காக கடற்படையின் தென்பகுதிக் கட்டளைத்தளபதி பெற்றுள்ளார் http://www.eelampage.com/?cn=30658 அவன் என்னப்பா செய்வான் புலிகள் ஊடுறுவியதுக்கு அவன் காப்பெடுத்து பதுங்கியது தப்பா ஏன் மகிந்தவின் ஊரை தாண்டியெல்லோ வந்து சாத்தி இருகிறாங்கள் அதுதான் …
-
- 0 replies
- 982 views
-
-
*ஆராய 5 சட்டத்தரணிகளை கொண்ட குழு - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - சட்டக் கல்லூரி அனுமதியில் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகளுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 5 சிரேஷ்ட சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்க பேரவையின் கூட்டம், சங்கத்தின் அலுவலகத்தில் அதன் தலைவர் நிஹால் ஜயமான தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்க முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் தெரிவு செய்யப்படுவது குறித்து மூத்த சட்டத் தரணி நீலகண்டன் சட்டத் தரணிகள் சங்க பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். …
-
- 0 replies
- 879 views
-
-
* 600 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து விடும் அபாயம் மூதூர் கிழக்கில் அனல்மின் நிலையத்தை அமைப்பதற்காக அரசு தமிழர்களுக்கு சொந்தமான சுமார் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. மூதூர் கிழக்கில் சம்பூர் பகுதியில் மிக விரைவில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையால் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் கிழக்கில் 12 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது சம்பூர் பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மூதூர் கிழக்கு மக்கள் தற்போது…
-
- 0 replies
- 624 views
-
-
வாகரைப் பகுதியில், 17 கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்றை படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 17 கிளேமோர்களை விட சுமார் 30 கிலோ ரி.என்.ரி. ரக வெடி மருந்தும் அந்தப் படகினுள் வைக்கப்பட்டிருந்ததாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேற்படி 17 கிளேமோர்களும் 30 கிலோ வெடி மருந்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதத்தில் வயர்கள் மூலம் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய தாக்குதலொன்றுக்காக கடற்கரும்புலிகள் இந்தப் படகைத் தயார் நிலையில் வைத்திருந்த போதே படையினர் வாகரையை கைப்பற்றியதன் மூலம் அங்கிருந்து இந்தப் படகையும் கைப்பற்ற முடிந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகரைப் …
-
- 0 replies
- 991 views
-
-
மூவர் பொலிஸாரால் கைது - கே.பி. மோகன் - கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து சட்ட விரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களென சந்தேகிக்கப்படும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். டோர்ச்லைட்டுகள், பற்றறிகள், இறுவெட்டுகள், கையடக்க தொலைபேசிகள், பெற்றோல், மருந்து வகைகள், பன்டேஜ் ஆகியனவே பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து இரகசியங்களை பெற்றுக் கொள்ள தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் …
-
- 0 replies
- 774 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க உடன்படிக்கையின் நகலை கிழித்தெறிந்ததோடு இனிமேல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதுவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காதென்றும் அறிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், கட்சி எதுவிதமான அறிவித்தலையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை …
-
- 0 replies
- 834 views
-
-
பிரிந்து சென்றோரின் கட்சி அங்கத்துவத்தை பறிப்பதற்கு ஐ.தே.கட்சி சட்ட நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் கட்சி அங்கத்துவத்தைப் பறிப்பதற்கும் அவர்களின் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கட்சியைவிட்டு பலர் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக கட்சி பலமிழந்து விட்டது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலமிழக்கச் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தகர்த்தெறியும் மாற்றுத் திட்டம் எம்மிடம் உள்ளது. எமது பலம், கட்சி உறுப்பினர்கள் அல்லர்; கட்சிக்கு வாக்களித்த மக்கள்தான். கட்சிய…
-
- 0 replies
- 645 views
-
-
இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்: தமிழ்ச்செல்வன். எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். இந்தியாவின் "தெல்கா டொட்கொம்' இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார். சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார். அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு: கேள்வி…
-
- 6 replies
- 2.4k views
-
-
அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம். அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறுவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்துவரும் ஜாதிக ஹெல உறுமய, அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில், ''ஐ.தே.க. அரசாங்கத்தில் இணையவும், அமைச்சர்களின் தொகை அதிகரிக்கவும் வழிவகுத்த பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிசாந்த சிறீ வர்ணசிங்க தகவல் தருகையில் மேலும் கூறியதாவது: ''அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது தொட…
-
- 1 reply
- 898 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா பயணம். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பயணமாகியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய சூழ்நிலை உட்பட, பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், தங்களது முன்னைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், இந்திய தலைவர்களுடன் இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர். ஏற்கனவே டில்லி சென்று இந்தியப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணா…
-
- 1 reply
- 983 views
-
-
(தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து சில பகுதிகள் - நன்றி: பெரியார் முழக்கம் வார ஏடு) விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த…
-
- 0 replies
- 1k views
-
-
உதவி வழங்கும் சமூகம் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 08:06 ஈழம்] [கொழும்பு நிருபர்] இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது. மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும்…
-
- 0 replies
- 619 views
-