Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் இராணுவத் தளங்கள் அழித்து ஒழிக்கப்படும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தேவைகளுக்கான சொத்துகள்,தளபாடங்கள் உட்பட புலிகளின் அனைத்து விதமான இராணுவக் கட்டமைப்புகளும் அழித்தொழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள புலிகளின் இராணுவ சொத்துகள் உட்பட கடற்புலித் தளங்களாகட்டும் ஆட்டிலறி தளங்களாகட்டும் அவை நாட்டின் வடக்கோ கிழக்கோ தெற்கோ எங்கிருப்பினும் முற்றாக அழிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறும் தனித் தமிழீழம் என்பது இப்பொழுது ஒரு நகைச்சுவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

    • 0 replies
    • 797 views
  2. கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு கிழக்கில் அண்மைக் காலமாக இடம் பெற்ற தமிழ் முஸ்லிம்களுக்கு இடையி லான அசம்பாவிதங்களை அடுத்து அங்கு நிரந்தர நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 52 நிறுவனங்களின் கூட்டமைப் பான முஸ்லிம் கவுன்ஸில் கடந்த திங்கட் கிழமை கருணா அணியினரைச் சந்தித்துப் பேசியுள்ளது இச்சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கருணா அணியினரின் அலுவல கத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இரு தரப்பினராலும் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், பொதுச் செய லாளர் எம்.டிஎம். ரிஷ்வி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. ம…

    • 3 replies
    • 1.2k views
  3. மன்னார் தாளுப்பாடு கடற்பரப்பில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விடுதலைப்புலிகள் கடற்படையினரின் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு படகுகளில் வந்த விடுதலை புலிகள் தாளுப்பாடு கடற் படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடற் படையினர் இத் தாக்குதலிற்கு பதில் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளதாகவும் இதில் ஒரு கடற்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

    • 0 replies
    • 816 views
  4. நேற்று மாலை 5.30 மணியளவில் ஜானகபுரத்திற்கும் கொக்குதொடுவாயிற்கும் இடைப்பட்ட காட்டுப்புறத்தில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் ஒருசிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தெரிவித்துள்ளது மணலாற்றுக்கும் திருகோணமலை வடக்கிற்கும் இடைப்பட்ட கரையோரப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வேலை தொடங்கி விட்டதுபோலுள்ளது.

    • 0 replies
    • 788 views
  5. வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 00:18 ஈழம்] [காவலூர் கவிதன்] விடுதலைப் புலிகள், 2002ல் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு கிழக்கை தமது ஆளகைக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத தளபாடங்களை சிறிலங்கா அரசு தாக்கியழித்து வருகிறது. கிழக்கில் மட்டுமல்லாது, வடக்கிலும் அவர்களது ஆயுத நிலைகள் தாக்கியளிக்கப்படும் என்று கோத்தபாய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம் ஆயதத் தளங்கள் இருக்கும்வரை, தாக்குதல் நடத்தவே முயற்சிப்பாhர்கள், கடற்படைத் தளங்கள் அவர்களிடம் இருந்தால், தாக்குதல்கள் தொடரும், அதனால் இலங்கையின் எந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளம் இருந்தாலும், அதன்மீது சிறீலங்கா படைகள் தாக்குத…

  6. வாகரையை அதியுயர் வலயமாக்க முயற்சி சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த செப்ரம்பர் மாதம் சம்பூர் உள்ளடங்கலான மூதூர் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்தமை போன்று தற்போது வாகரையையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வாகரையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணி இன்னமும் நிறைவுபெறாததால் உடனடியாக அங்கு பிரதேசவாசிகள் குடியமர்வது சாத்திமில்லை என சிறீலங்கா அரசஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக வாகரையில…

  7. இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் சந்திப்பு. திருகோணமலையில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த விடயத்தில் இந்தியா அவதானமாகவே செயற்படும் என இந்தியத்தூதுவர் அலோக் பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகளிடம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மிள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அவர் கூட்டமைப்பு எம்பிகளிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் இந்திய தூதுவர் அலோக் பிரசாத்தை கொழும்பிலுள்ள அவர் அது உத்தியோகப்பூர்வ இல்லட்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்ட…

  8. குடாநாட்டு பாடசாலைகளை புறக்கணிக்க முடிவு: தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு. கடத்தப்பட்ட வடமராட்சி மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி யாழ். குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் குதிக்கும் நிலை தோன்றியுள்ளதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கடத்தப்பட்ட க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி பாடசாலை மாணவர்களான ப.தனஞ்சயன், மு.பரமானந்தம் ஆகியோரை விடுவிக்கக் கோரி வடமராட்சி மாணவர்கள் இவ்வாரம் பாடசாலை செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு மதிப்பளித்து சாதகமான சமிக்ஞையினை படைத்தரப்பினர் தெரிவிக்காதததால் அடுத்த வாரம் முதல் யாழ். குடாநாட்டு மாணவர்கள் தங்கள் பாடசாலை செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி கடத்தப்பட்ட ச…

  9. மாத்தளைப்பகுதியில் 5 தமிழ்பொதுமக்கள் மீது தாக்குதல் அரசாங்கத்திற்கு சொந்தமான பேரூந்தல் பயணித்த ஐந்து மலையக மக்களை கடந்த திங்கட்கிழமை மாலை மாத்தளை உடத்தனாவ பகுதயில் வைத்து சிங்கள் காடையர்கள் தாக்கியள்ளார்கள். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் அப்பகுதியில் வாகரை படைநடவடிக்கையின்போது இறந்த இராணவத்தினரது இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் பேரூந்தை வழிமறித்த காடையர்கள் தமிழ் மக்களை பேரூந்தில் இருந்து இறங்கச்சொல்லிய பின் அவர்களை தடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளார்கள். இதேவேளை அதற்கு அண்மையில் சிறீலங்கா படையினர் காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதன்போது குறைந்தது இரு பெண் பயணிகளாவது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊட…

    • 0 replies
    • 768 views
  10. தெகிவளையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது நேற்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறீலங்கா காவல்துறையினரால் 11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள

    • 0 replies
    • 927 views
  11. பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் யாழில்? பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இருவர் நேற்று யாழ் குடாநாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் கடற்படை உயர்மட்ட குழுவினரும் நேற்று குடா நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் உலங்குவானூர்தி மூலம் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இக் குழுவினர் நேற்றும் இன்றும் காங்கேசன்துறைமுக கடற்படை தளத்தில் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டனா. இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களை கடலில் எவ்வாறு முறியடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு விளக்கப்பயிற்சிகளை வழங்கியதாக காங்கேசன்துறைமுக கடற…

    • 2 replies
    • 1.7k views
  12. யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…

    • 4 replies
    • 1.8k views
  13. கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…

  14. லிவர் பூல் கப்பலை தற்;போதைக்கு திருத்த முடியாது - நிபுணர்குழு தெரிவிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 25 January 2007 12:20 அண்மையில் சிறிலங்கா படையினருக்கான வழங்கல் பொருட்களை ஏற்றிச் சென்ற லிவர் பூல் கப்பல் வல்வெட்டித்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது. இத்தாக்குதலில் இவ் கப்பல் கடும்சேதத்திற்கு உள்;ளாகியமை படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இக் கப்பலில் படையினருக்கான உபகரணங்கள் எடுத்து வந்துள்ளமை குறித்து பருத்தித்துறை துறைமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இக்கப்பலில் 690 மெற்றிக் தொண் மா, 200 மெற்றிக் தொண் படையினருக்கான பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளன. இதில் படையினருக…

  15. அம்பாறை மாவட்ட ஆதரவாளர் ஒன்றியம் ஹக்கீமிடம் வலியுறுத்தல் பதவி ஆசை கொண்டு அலையும் சுயநல நோக்கம் கொண்டவர்களுக்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவருக்கும் அடகு வைக்க முற்பட வேண்டாமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒன்றியம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. வெளிச்சக்திகளதும் உட்சக்திகளதும் சவால்களுக்கு உறுதியுடன் நின்று தலைமைத்துவம் முகம் கொடுக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க அதன் ஆதரவாளர்களைக் கூட்ட தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியம் செவ்வாய்க்கிழமை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவற்றைக் குறிப்பிட்டிருக…

  16. எம்முடன் காதல் உறவாடி, ரணிலுடன் தேன்நிலவுக்கு சென்றுள்ள அரசாங்கமே இன்று நாட்டிலுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த கிண்டல் செய்தார். தங்காலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற `அரசு எங்கே செல்கிறது' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்று நாட்டில், நீலம், பச்சை கலந்த அரசாங்கமே வேரூன்றியிருக்கிறது. அதனால், இன்று ஆட்சியில் முற்போக்குச் சக்திகளுக்கு இடமேயில்லை. இப்போதுள்ள நிலை மிகப் பயங்கரமானது. ஜே.வி.பி.யும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் அரசுடன் இணையவிருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வர ஜே.வி.பி. திய…

  17. சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது. `காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான ப…

  18. இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சிங்களர் கட்சி மிரட்டல் கொழும்பு,ஜன.25- இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையில் ஆன சுதந்திரா கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ரனில் விக்கரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து கட்சி தாவி வரும் சில எம்.பி.க் களுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கவும் மந்திரி சபையை விரிவாக்கவும் அதிபர் ராஜபக்சே முடிவு செய்திருக்கிறார். இது ஆளும்சுதந்திரா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபர் சந்திரிகா, வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமரவீரா ஆகியோர் தலைமையில் ஆளும் கட்சியினர் தனி கோஷ்டியாக செயல் படுகிறார்கள். இந்த எதிர்ப்பு கோஷ்டியில் 20 எம்.பிக்கள் உள்ளனர். ஆளும் கட்சி உடைய…

  19. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மத்திய வங்கியில் புதிய புலனாய்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த புலனாய்வு பிரிவு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கான நிதி பெறப்படும் முறை மற்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றமை குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பிரிவு முதல் கட்டமாக 50 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  20. உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் உறுதி மொழிகள் எதனையும் இம்முறை வழங்கப்போவதில்லை என சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் நாள் காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மாநாடு தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். "மகிந்த சிந்தனையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனவும் தெரிவித்த ஜெயசுந்தர, "நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுதி மொழிகளை வழங்குவது இம்முறை இடம்பெறப் போவதில்லை…

  21. இருதரப்பினரும் உடன்பாட்டை ஏற்படுத்துங்கள்: நோர்வேயின் முன்னாள் தூதுவர் சிறிலங்கா அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமும் அது தொடர்பான பேச்சுக்களும் ஆக்கபூர்வமானவை, அது தொடர வேண்டும் என நோர்வேயின் சிறிலங்காவிற்கான தூதுவர் ஜோன் வெஸ்ற்பேர்க் கூறியுள்ளார். "இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க உதவும். அதுவே இனப்பிரச்சனைக்குரிய அரசியல் தீர்வுக்கான அடித்தளமாக அமையும். நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் அதாவது நாங்கள் தீர்வைக் கொண்டுவர முடியாது. "இருதரப்பையும் ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வரவே எங்களால் முடியும். தீர்வை எட்டுவது அவர்களைப் பொறுத்தது. சர்வதேசத்தின் கர…

  22. வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு

    • 3 replies
    • 1.5k views
  23. வியாழன் 25-01-2007 03:34 மணி தமிழீழம் [மயூரன்] மனித உரிமை மீறல் தொடர்பில் ஐனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கனடா கண்காணிக்கிறது இலங்கையில் இடம்பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான குழுவிற்கு கனடா தனது பிரதிநிதியை நியமித்துள்ளது கனடாவின் சார்பில் பேராசிரியர் மத்தியுஸ் என்பரை கண்காணிப்புக் குழுவிற்கு நியமித்துள்ளதாக கனடாவின் வெளிவிவாகர அமைச்சர் பீற்றர் மக்கே அறிவித்துள்ளார் இலங்கையின் முரண்பாடுகளில் மதம் மொழி இனங்களின் தாக்கம் குறித்து ஆய்வினை இவர் மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாக இலங்கை விவகாரம் குறித்து ஆழமான அறிவு பேராசிரியர் மத்தியுசிற்கு இருப்பதாக கனடாவின் வ…

    • 2 replies
    • 1.1k views
  24. பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள் [24 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாட…

  25. 29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.