ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142722 topics in this forum
-
மதியுரைஞரின் மறைவையொட்டி நாளைய தினம் தமிழ் மக்களால் துக்கதினம் அனுஷ்டிப்பு. விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியரும் கலாநிதியுமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவடைந்ததை முன்னிட்டு தமிழீழ தாயகம் முதல் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மக்களால் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அத்துடன் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1k views
-
-
கடந்த 10.06.2006 அன்று சண்டை ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சர்ஜன்ற் ரத்நாயக்க என்ற படையினனை சிறிலங்கா படைகள் ஒரு அதிரடித் தாக்குதல் மூலம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மியாங்குளம் என்று இடத்தில் விடுதலைப்புலிகளின் அணிகளை தாக்கி தமது படையினனை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 2.3k views
-
-
காத்தான்குடியில் வன்முறை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் (படங்கள் உள்ளே) [Thursday December 14 2006 02:06:38 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு காத்தான்குடியில் எட்டாவது நாளாக தொடரும் வன்முறைகளால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சூபி முஸ்லிம் இயக்கம் மற்றும் அகில இலங்கை தாருகாதுல் முபிஹீம் இன் தலைவர் அப்துல் பயில்வானின் காத்தான்குடியில் புதைக்கப்பட்ட உடலை அகற்றி வேறு இடத்தில் புதைக்கக கோரி சூபி முஸ்லிம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் இன்று காத்தான்குடியில் பொலிஸ் சோதனைசாவடி. ஆட்டோ, வங்கிகளிற்கு தீ வைக்கமுற்பட்டனர். நிலமையை கட்டுப்படுத்துமுகமாக பொலிஸார் திறந்த துப்பாக்கி பிரயோகத்தையும், கண்ணீர் புகையையும் வீசியுள்ளன. தொடர்ந்து தற்போது பொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 14-12-2006 03:53 மணி தமிழீழம் [மோகன்] தென்மராச்சி பகுதியில் சிறீலங்கா படை போர் ஒத்திகை சிறீலங்கா இராணுவம் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக கடும் போர் ஒத்திகை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. நேற்று மாலை ஆரம்பமாகிய இவ் ஒத்திகை முயங்சி இன்று காலைவரை நீடித்திருந்தது, இதனால் உசன், படித்தமகளீர் குடியேற்றத் திட்டம் ஆகிய பகுதிகள் வெடியோசையால் அதிர்ந்த வண்ணமிருந்தன. இதேவேளை இப்பிரதேச வாழ் மக்களை வெளியிடங்களுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 822 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் உதவி நடவடிக்கைகள் குறித்து அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா அரசின் அண்மைய அறிக்கை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கிய பொருட்களை விடுதலைப் புலிகள் தமது பதுங்கு குழிகளை அமைப்பதற்கு பயன்படுத்தினர் என்றும் அவற்றை அரச படையினர் மீட்டுள்ளனர் என்றும் கடந்த 13 ஆம் நாள் சிறிலங்கா அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு, ஐ.நா.…
-
- 0 replies
- 881 views
-
-
சுப்பிரமிணிய பாரதியார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பார் - வைகோ சுப்பிரமணிய பாரதியார் இன்று இருந்திருப்பாராயின், ஈழத்தமிழர்களின் ஆதரவுக்குக் குரல் கொடுத்திருப்பார் என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.பாரதியாரின் 125 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது வைகோ இவ்வாறு கூறினார். கரிசல் காற்றின் கவிதைச்சோலை என்னும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, பாரதியார் தமிழின் மேல் கொண்ட பற்றுதல், எழுச்சிப் பாடல்கள், விடுதலை அமைப்புக்களுக்கு ஆதரவாக எழுதிய ஆக்கங்கள் மற்றும் பெண்களின் விடுதலை குறித்து வெளியிட்ட கருத்துக்களை கூட்டத்தில் பகிர்ந்துகொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாததத்தின் படுகொலைக்குள்ளும் பட்டினிச்சாவிற்குள்ளும் சிக்கித் தவிக்கும் வாகரை மக்களின் உணர்வுகளை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும் அங்கு தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்கு கைகொடுக்கும் வரலாற்றுப் பொறுப்பை வலுவுள்ள அனைவரும் ஏற்கவேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச இயந்திரம் வாகரையிலுள்ள முப்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்களை மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. தங்கள் அரசியல் இராணுவ நலன்களுக்காக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட 36000ற்கும் அதிகமானவர்களை வதைத்து வருகிறது. இந்த மக்களின் உணர்வுகள் எதனையும் அரச படைகள் மதிக்கவில்லை…
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை செய்கிறதா தமிழ்நாடு? - வெடிபொருள் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் பகீர் பேட்டி இலங்கை ராணுவத்திற்கு இந்திய வெடிபொருட்கள் சப்ளையாகி வருவதை, மேலூர் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி சென்ற இதழில் நாம் விரிவாகவே வெளியிட்டுள்ளோம். இதனை மையப்படுத்தி டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘இலங்கைக் கடற்படைக்கு வெடிபொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியளித்திருப்பது வேதனையளிக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத் தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்குப்பதில் அளிக்கும் விதமாக,டெல்லியில் இருந்து கருணானிதி பதில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் வெடி பொருள…
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கைப் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா மேலும் பாரிய பங்காற்ற வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 20:47 ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா மேலும் பாரிய பங்காற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்கு தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல. எனினும் தனிநாடே பிரச்சினைக்குத் தீர்வு என்பது மக்களது எண்ணமாக உள்ளது என்றார் அவர். இந்தியா பல முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்தும் உள்ளது என்ற போதும் இதற்கும் மேலதிகமாக இந்தியா பங்காற்ற வேண்டும் என்று அவர் கருத்துரைத்…
-
- 1 reply
- 809 views
-
-
பேச்சுவார்த்தை அர்த்தமற்றது, யுத்தத்தில் அரசு வெற்றிபெறும்: பாதுகாப்பு ஆலோசகர் கொட்டஹதெனிய கொழும்பில் வெளியாகும் இன்றைய மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு, சிறீலங்கா பாதுகாப்பு ஆலோசகர் எச்.எம்.ஜி.பி.கொட்டஹதெனிய வழங்கிய விரிவான நேர்காணலில், நோர்வே, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் போக்கை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் கீழே: கேள்வி: மிகமோசமான அழிவை இந்நாடு சந்திக்க நேரிடுமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடந்தகால தாக்குதல்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் எடுத்தால், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்நாடு தயாராக இருக்கிறதா? பதில்: நிட்சயமாக, நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு ஏன் தயாராக இருக்கக்கூடாது? ஆனால், எஸ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம் [Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk] சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 5 replies
- 1.8k views
-
-
கிழக்கில் அகதிகளைத் தங்க வைக்க சூனியப் பிரதேசம் நிறுவ அரசு யோசனை! புலிகளின் இணக்கத்தைப் பெற முயற்சி செஞ்சிலுவைக் குழுவிடம் உதவி கோரல் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீவிர மோதல்களால் இடம்பெயர்ந்து சிக்குண்டிருக்கும் சுமார் 35 ஆயிரம் சிவிலியன்களைத் தங்க வைப்பதற்காக யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசுத் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றை (குச்ஞூஞு ஏச்திஞுண) நிறுவுவதற்கு உதவுமாறும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து அதற்கான இணக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடமும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இப்படி ஒரு யோசனையை அரசு, பு…
-
- 1 reply
- 841 views
-
-
அகதிகளின் கூடாரங்களை, புலிகளின் பங்கராகப் பிரச்சாரப்படுத்தும் இராணுவம் காடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருந்த மக்கள், இராணுவத் தாக்குதலால் விட்டுச்சென்ற கூடாரங்களை, புலிகளின் பங்கர்களாக, சிறிலங்கா படையினர் விசமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வாகரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மிலேச்சத்தனமான கிபீர் தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் நடத்திவரும் சிறீலங்கா படையினரின் கோரத்தினால் இடம்பெயர்ந்து, காடுகளில் தங்கியிருந்த மக்களின் தற்காலிக கூடாரங்கள் மீதும் எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டதால், அந்த மக்களும் வேறு இடங்களுக்கு தப்பித்து சென்று வருகின்றனர். இவர்களது தற்காலிக கூடாரங்களை, விடுதலைப் புலிகளின் பங்கர்களாக படையினர் பொய்ப்பிரச்சார…
-
- 0 replies
- 791 views
-
-
செல்வீச்சிற்குள்ளான சேருநுவர பாடசாலைக்கு கண்காணிப்புக் குழுவினர் நேரில் சென்றனர் சேருநுவர பாடசாலை மீது செல் விழுந்து வெடித்ததால் ஆசிரியர் ஒருவர் பலியானதுடன், 15 மாணவர்கள் காயமடைந்திருந்தனர். கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்ற அப்பகுதிக்கு செல்ல யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவை படையினர் அனுமதிக்கவில்லை. சிறீலங்கா படையினர், கண்காணிப்புக் குழுவுக்கு அனுமதி மறுத்த அதேவேளை, கொழும்பில் கருத்து வெளியிட்ட அரச தரப்பினர், கண்காணிப்புக் குழுவினர் வேண்டுமென்றே அங்கு செல்லாது தவிர்ப்பதாக குற்றம் சுமத்தினர். இறுதியில் இன்று அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அந்தப் பாடசாலைக்குச் சென்ற கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள், நிலைமைகளை நேரில் அவதானித்தனர். இரு தரப்பினதும் கடுமைய…
-
- 0 replies
- 851 views
-
-
உதயனுக்கு சர்வதேச விருது:- இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை. உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன். மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
ஜனாதிபதியை சந்திக்க செல்வோர் கையடக்க தொலைபேசி எடுத்து செல்ல தடை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திக்கச் செல்லும் எவரும் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்லக் கூடாதென ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறான திடீர் முடிவொன்று மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 885 views
-
-
புலிகளுக்கு உதவிய 7 பேரது வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்கள் வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 7 பேரினது வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலிகளுக்கு இராணுவ புலனாய்வுத் தகவல்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 6 இராணுவ உத்தியோகத்தர்களையும் சட்ட விரோத வைத்தியர் ஒருவரையும் கைது செய்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே, நீதிமன்றம் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்குமாறு சம்பந்தப்பட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை கிழக்கிலிருந்து வெளியேற்றுவோம்: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 20:37 ஈழம்] [கொழும்பு நிருபர்] பாரிய தாக்குதல்களால் சீரழிந்திருக்கும் கிழக்குப் பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் விடுதலைப் புலிகளின் இரு முன்னரங்க எல்லைப் பகுதிகளை ஏற்கனவே இராணுவம் பிடித்துவிட்டது என கொழும்பு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். கிழக்கிலிருந்து விரைவில் விடுதலைப் புலிகள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் 350 முதல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் உண்மையான முகத்தை மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை: வைகோ [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 19:12 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவின் உண்மையான முகத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்: "இந்திய அரசாங்கம் சிறிலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துப் பொருட்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறதா?" "மன்மோகன்சிங் அவர்களின் தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் ஈழத் தமிழகர்களுக்கு எதிராக எடுக்கவிருந்த பல …
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பு பங்கு சந்தையில் நேற்று பாரிய வீழ்ச்சி உணரப்பட்டுள்ளது. கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து ஜே.வி.பி வெளியேறியமை ஆகியவற்றால் பங்கு பரிமாற்றங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இதுவரை இல்லாத அளவில் இலங்கை நாணயத்தின் மதிப்பு டொலர் பெறுமதிக்கு எதிராக கடுமையான வீழச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தல் - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 13 னுநஉநஅடிநச 2006 14:09 வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியல் தஞ்சம் கோரியவர்கள், போலி விசாக்கள் மூலம் நாடுகளுக்குள் ஊடுருவியவர்கள், சட்டவிரோத மார்க்கங்கள் ஊடாக சென்றவர்கள், குறிப்பிட்ட நாடுகளின் சட்ட திட்டங்களை மீறியவர்கள் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து 57 பேரும் ஜப்பானிலிருந்து 50 பேரும் சிங்கப்பூரிலிருந்து 42 பேரும் ஏனையோர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருமலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 40 பேர் கைது [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 17:29 ஈழம்] [தெ.சந்திரநாதன்] திருகோணமலை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடத்திய பாரிய சோதனை நடவடிக்கையில் 40 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 40 இளைஞர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று திருகோணமலை சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நடைபெற்ற பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான இவர்கள், திருகோ…
-
- 0 replies
- 786 views
-
-
ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் இரத்தினசபாபதி காலமானார் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:38 ஈழம்] [கி.தவசீலன்] 1988 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கங்ளில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் நிறுவனரான "இரட்ணா" என அழைக்கப்படும் இ.இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.06) காலை காலமானார். 1938 ஆம் ஆண்டு யாழ். இணுவில் கிராமத்தில் பிறந்த இவர் பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களில் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார். 1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசு மீது போர்நிறுத்த கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டு [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:51 ஈழம்] [கொழும்பு நிருபர்] தங்களது உரிமைக்குள் செயற்பட விடுவதில்லை, ஆயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள சண்டை நடைபெறும் கிழக்குப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு மீது இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது. கிழக்குப் பகுதியின் நிலைமையை தங்களால் கண்காணிக்க முடியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்குள் சிறிலங்கா இராணுவம் தங்களை அனுமதிப்பதில்லை என்றும் அது கூறியுள்ளது. எண்ணற்ற முறை வாகரைப் பகுதிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தோம். அண்மையில் கல்லாறு பகுதிக்கு செல்ல முயற்சி செய்தோம். சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டினால்…
-
- 0 replies
- 823 views
-
-
ஆய்வறிக்கையின் பின்னணியில் இந்தியா? [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:16 ஈழம்] [க.நித்தியா] அனைத்துக் கட்சி கூட்டத்துக்காக நிபுணர்கள் குழு தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தீர்வுத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வறிக்கையும் பரிந்துரையும் நிபுணர் குழுவினரால் கையளிக்கப்பட்ட மறுநாளே "ஹிந்து" நாளிதழில் (டிசம்பர் 7) அந்த அறிக்கை விவரங்கள் வெளிவந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஆய்வறிக்கை குறித்து இந்தியா ஏற்கனவே அறிந்துள்ளது என சிறிலங்கா அரசு சந்தேகப்படுகிறது. ஆய்வறிக்கையைக் கையளித்தவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்ப…
-
- 0 replies
- 795 views
-