ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சுற்றுலாத்துறை, வெளிவிவகாரம் உட்பட ஐ.தே.கவுக்கு 14 அமைச்சுகளை அள்ளி வழங்குகிறார் ஜனாதிபதி கொழும்பு, ஒக்.20 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுக்கும் இடையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருப்பதை அடுத்து, ஏழு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் உட்பட பதினான்கு அமைச்சுப் பதவிகளையும், அந்த அமைச்சுகளின் பிரதி அமைச்சுப் பதவி களையும் ஐ.தே.கட்சிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகாரம், சுற்றுலாத்துறை போன்ற அமைச்சுகளும் பிரதிநிதி அமைச்சும் ஐ. தே.கட்சிக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அமைச்சுகளில் அடங்குகின்றன என்றும் தெரிகின்றது. ஆளும் ஸ்ரீல.சு.க. ஐ…
-
- 4 replies
- 2k views
-
-
முதல் முதல் இலங்கையின் ஜனாதிபதி தாம் அதர்மர்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ள முதல் தீபாவளி..... நிச்சயமாக இம்முறை தர்மர்கள் வெல்லுவார்கள் வெல்லுவோம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!![/ அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கட்டும்' [21 - October - 2006] [Font Size - A - A - A] அதர்மம் அழிந்து தர்மம் தலைதூக்கிய தீபத் திருநாளாம் இன்றைய நன்னாளில் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சமாதானம் மலர வேண்டுமென பிரார்த்திப்போமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியை வழங்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகள் வசமுள்ள 3 சிப்பாய்களை விடுவிக்க செஞ்சிலுவைக் குழு முயற்சி [saturday October 21 2006 07:17:39 AM GMT] [uthayan.com] தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய் கள் மூவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசு செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவிடம் கோரியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற மோதல் களில் இந்தச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டிருக்கின்றனர். கடந்த ஒக்ரோபர் 6, 11, 14 ஆகிய திகதி களில் வாகரை, மாங்கேணி, முகமாலை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த மூன்று படையினரும் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க அரசு செஞ்சிலு வைச் சர்வதேசக் குழுவிடம் விடுத்த கோ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்புள்ள அகாசி ஐயாவுக்கு! வணக்கம். நீண்ட அமைதிக்கு பின்னர் உங்கள் குரல் கேட்க முடிந்தமை மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தீவினுடைய இன மோதுகைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டுமென்பதில் முனைப்போடு செயற்படுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும். நான் சொல்ல முனைகின்ற விடயத்தை, மிக விரைவாகவும், சுருக்கமாகவும் அனேகமாக இறுதித்தடவையாகவும் கூறமுற்படுகின்றேன். ஏனெனில், எங்கள் சூழல் அத்தகையது. அத்தகைய சூழலுக்குள் எங்களை தள்ளியவர்களிற்கான பொறுப்பு உங்களுக்கும் உண்டு. நாங்கள் பொறுமையாக 4 ¾ வருடங்கள் கூறியது போதும் போதும் என்றாகி விட்டது. உங்களுடைய பொறுப்புணர்வையும் எங்களிற்கு புரிய முடிகிறது. எங்கள் கொல்லைப் புறத்திற்கு வர அச்சமுற்ற எதிரி…
-
- 2 replies
- 1.7k views
-
-
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பு எதிர்பாராதது: ரிச்சர்ட் பௌச்சர் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006, 08:16 ஈழம்] [ச.விமலராஜா] வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பு எதிர்பாராதது என்று இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார். தனது இருநாள் இலங்கை பயணத்தை நிறைவு செய்த பின்னர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரிச்சர்ட் பௌச்சர் கூறியதாவது: தமிழ் மக்களுக்கு நியாயப்பூர்வமான அபிலாசைகள் உண்டு. தமிழ் மக்களின் அபிலாசைகளை பேச்சுக்களை மூலமே தமிழீழ விடுதலைப் புலிகள் அடைய முடியும். வன்முறைச் செயற்பாடுகள் மூலம் அல்ல. வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பானத…
-
- 1 reply
- 935 views
-
-
கடற்படை அதிகாரிகள் சென்ற வான் விபத்தில் சிக்கியது- ஓட்டுநர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006, 06:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] தம்புள்ள-மாத்தளை பிரதான வீதியில் லொறியுடன் வான் மோதியதில் அதில் பயணம் செய்த சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் தப்பிய ஓட்டுநர் திடீரென தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். கடற்படை அதிகாரிகளுடன் கண்டியிலிருந்து திருமலை நோக்கி அந்த வான் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் பெய்து கொண்டிருந்த மழையால் வான் அதிக வேகத்தில் சென்ற போது நிலைதடுமாறி லொறியுடன் மோதியது. வானிலிருந்த அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேரும் தம்புள்ள மருத்துவமனையில் அனும…
-
- 0 replies
- 964 views
-
-
கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மகரகம பகுதியில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வந்த டேவிட் விக்னேஸ்வரன்(வயது 35) மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் காலை 6 மணியளவில் இருவரது உடல்களும் பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டன. மற்றொரு சம்பவத்தில் கொழும்பு அளுத்மாவத்த பகுதியில் ரெஜி பாலநாதன் (வயது 30) என்பவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டார். அவரது உடல் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ராகம-வல்பொல பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்டது. மக்கள் கண்காணி…
-
- 0 replies
- 838 views
-
-
'உன்னையும் எதிரியையும் நீ அறியாவிட்டால் ஒவ்வொரு சமரையும் நீ இழந்துவிடுவாய்" இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் பேச்சுக்கு சம்மதித்த அதே சமயம், போர்முனைப்பு கொண்டு அலையும் சிங்கள அரசையும் நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்துவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் தவறாகாது. இதைத்தான் ஒக்ரோபர் 11 ஆம் நாளுக்குப் பின்னர் நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. சேர்பிய அரசை பொஸ்னியாவுடன் பேசவைத்து அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக நேட்டோப் படைகள் எவ்வாறு தங்கள் படை நடவடிக்கைகளை தொடர்ந்தார்களோ, அதே போன்றதொரு நிலையில் தான் புலிகள் உள்ளார்கள். அதாவது அரசை பேச்சு மேசைக்கு கொண்டுவர மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய…
-
- 0 replies
- 931 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை அமெரிக்கா ஆதரித்து அதை அவசர அவசரமாக அமுலாகியபோது இலங்கையில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அது ஒரு முட்டுக்கட்டையாகவேதான் அமையும் என்பது அவ்வேளையில் அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கவில்லையா? என்ன இப்போது மட்டும் வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டுமென்ற தீர்ப்பு பேச்சுவார்த்தைக்கு சாதகமில்லை என்று கூறி அமெரிக்கா முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரிச்சர்ட் பவுச்சரின் இலங்கைப் பயணமும் அவர் சிங்கள இராணுவத்துடன் மேற்கொண்ட சந்திப்புகளும் ஒரு நடுநிலையான இராஜதந்திர நகர்வுகளாகக் கருதமுடியாது. http://nitharsanam.com/?art=21063
-
- 0 replies
- 1.4k views
-
-
வெள்ளி 20-10-2006 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் நேரடி கடற் சமரொன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் நாகர்கோவில் களமுனையில் பாரிய வெடியோசை செவிமடுக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து சில மணிநேர இடைவெளியில் கடற் சமர் வெடித்ததாகவும், தென்னிலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய கடற் சமரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னிரண்டு படகுகள் ஈடுபட்டதாக சிறீலங்கா கடற்படைப் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய கடற் சமரில், இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகம் மையம் தெரிவித்துள்ளது.எனினும் இது குறித்த அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஈழப் போராளிகளின் உயிர் சர்வசக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது: தமிழக மூத்த ஊடகவியலாளர் சோலை [வெள்ளிக்கிழமை, 20 ஒக்ரொபர் 2006, 19:17 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழப் போராளிகளின் உயிர் சர்வ சக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது என்று கட்டுரை ஒன்றில் தமிழக மூத்த ஊடகவியலாளரும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவருமான சோலை குறிப்பிட்டுள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை விவரம்: தெற்காசிய நாடுகளிலேயே தொடர்ந்து இராணுவ மயமாகி வரும் நாடு இலங்கை. இந்தியாவும் பாகிஸ்தானும்கூட, அந்த அளவிற்கு இராணுவ மயமாகவில்லை என்று மும்பையில் இயங்கும் யுக்திகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கிறது. இ…
-
- 0 replies
- 1k views
-
-
முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறானவையாகவும் இல்லை. இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார். மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு …
-
- 2 replies
- 1.9k views
-
-
படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவுத் து}பி திறந்து வைப்பு ஐஅயபநசிறிலங்கா படையினரின் விமானத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக விசுவமடு மாவித்தியாலயத்தில் நினைவுத் து}பி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00மணிக்கு பாடசாலை முதல்வர் தவரட்ணம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் பொதுச் சுடரினை முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நினைவுத் து}பியினை முல்லைவலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். விசுவமடு மகாவித்தியாலயத்திலிருந்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும் இருந்து 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் முழுமையாக களையபப்படவேண்டும். இதைக்கூறுவது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.8. இந்த உடன்படிக்கையின்படி கருணாகுழுவினதும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு (இலங்கையில் அப்போது இருந்த ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும்) 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் களையப்பட்டன.(?) அப்போது (உடன்படிக்கை ஏற்படும்போது) கருணாகுழு என்று ஒன்று இருந்ததில்லை. ஆகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கருணா விடையத்தில் கட்டுப்படுத்;தாது என்கின்றார் அரசதரப்பின் குணசேகர. சரி அரசாங்கம் கூறுவதுபோன்று புதிய ஆயுதக்குழுக்களை யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கட்டுப்படுத்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
சு.க.- ஐ.தே.க. ஒப்பந்தம்: மகாநாயக்கர்கள் வரவேற்பு [வெள்ளிக்கிழமை, 20 ஒக்ரொபர் 2006, 06:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகாநாயக்கர்கள் வரவேற்றுள்ளனர். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம சிறீ புத்தரகித தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மகாநாயக்க தேரருக்கு ரணில் விளக்கம் அளித்தார். சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தால்தான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்று மகாநாயகக் தேரர் தெரிவித்துள்ளார். http://www.eelampage…
-
- 0 replies
- 709 views
-
-
http://www.orupaper.com/issue56/pages_K___16.pdf
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!! விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும். இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான். ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எ…
-
- 9 replies
- 2.4k views
-
-
முகமாலை, காலியில் தாக்கியது விடுதலைப் புலிகளின் ஆவியா?: ரவி கருணாநாயக்க கேள்வி சம்பூரை கைப்பற்றி புலிகளை தோற்கடித்து விட்டதாக சில கட்சிகள் கடந்த காலங்களில் மார்தட்டிக் கொண்டன. அப்படியானால் முகமாலையிலும் காலியிலும் புலிகளின் ஆவிகளா தாக்குதலை மேற்கொண்டன? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினாக்களைத் தொடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய வெற்றிகளைப் பெற்றதாக சில கட்சிகள் கடந்த காலங்களில் முழக்கமிட்டன. இனவாதிகள் சுவரொட்டிகளை நாடு முழுவதும் ஒட்டினர். அப்படியானால், தற்போதை…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகமும் கிபீர் குண்டுவீச்சுத் தாக்குதலால் சேதம் கடந்த 16.10.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வேணாவில் என்னும் இடத்திலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதி மீது சிறிலங்கா “கிபீர்” குண்டுவீச்சு விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மாவட்ட அலுவலகமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குடியிருப்பிலுள்ள குடிமனைகள் சில சேதமடைந்துள்ளதுடன் மக்களில் ஒரு வயது சிறுமி உட்பட இரு பெண்கள் கொல்லப்பட்டும் பலர் காயங்களுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதற்கும் மத்தியில் அருகிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மாவட்டப் ப…
-
- 0 replies
- 865 views
-
-
மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு வருகிறது. வவுனியா மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுகுச் செல்லும் பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வவுனியாவிலவிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தேக்கவத்தை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், செட்டிக்குளம் உதவி பொலிஸ் அத்தியஸ்தகர் காரியாலயம், மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியவற்றில் இந்த தற்காலிக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா
-
- 0 replies
- 863 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்- போரைத் தொடருங்கள் என்று மகிந்தவின் கூட்டுக்கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவை வலியுறுத்தியுள்ளன. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு வர தயாராக இல்லை. பேச்சுக்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண அவர்கள் விரும்பவில்லை. அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் போரை விரும்புவதாக தெரிகிறது. இந்த வாரத்தில் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை. ஹபரணை மற்றும் காலி போன்ற இடங்களில்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்கிய இராணுவ நிலைகள் மற்றும் பொருளாதார மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கை: தமிழ்ச்செல்வன் - கான்சன் போவர் சந்திப்பு Print தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் கான்சன் போவர் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.40 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவகப் பணியகத்தில் இச்சந்திப்பு ஆரம்பமாகியது. தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஆகியொரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நோர்வே சிறப்புத் தூதுவருடன் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் கான்ஸ் பிரஸ்கரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்;. http://www.nerudal.com/content/view/3062/70/
-
- 0 replies
- 956 views
-
-
கொழும்பில் அடுத்த தாக்குதல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சிறிலங்கா விமானப்படை கட்டமைப்பு அல்லது பிரதான சர்வதேச நிலையம் அடுத்த தாக்குதல் இலக்காகக் இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதால் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நாட்டவர் மீள் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள சிறிலங்காவின் விமானப் படை கட்டமைப்புக்கள் அல்லது சிறிலங்காவின் பிரதான சர்வதேச விமான நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்படக் கூடும். தற்கொலைத்தாக்கு…
-
- 3 replies
- 1.7k views
-
-
பல்குழல் எறிகணையால் அரசுக்கு நிமிடத்துக்கு 7 கோடி ரூபா செலவு! அரசு மேற்கொண்டுவரும் பல்குழல் எறிகணை (மல்டிபரல்) தாக்குதல் மூலம் ஒரு நிமிடத்துக்கு 7 கோடி 20 லட்சம் ரூபாவை அது அநியாயமாகச் செலவிடுகிறது. இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கான நிதி அழிந்துபோவதற்கு இந்த நாட்டின் எதிர்காலமும் அழிந்துபோகிறது. இதை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ஐ.தே.கவின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற இலங்கை சர்வதேச நாடுகளிடம் பெறும் கடன் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் உரையாற்றும்போது கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசு கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக…
-
- 1 reply
- 1.7k views
-
-
மூன்று நிபந்தனைகளுக்கு புலிகளிடம் அரசாங்கம் இணக்கம் பெற்றதா? அத்துரலிய ரத்ன தேரர். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் 3 நிபந்தனைகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அரசாங்கம் இணக்கத்தை பெற்றுள்ளதா என ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கொலைகள் நிறுத்தப்படுதல் ,சிறுவர்களை படைக்கு சேர்த்தல் மற்றும் ஆயுத சேகரிப்பு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறினார். சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கம் என்ன செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் அரசாங்கத்திடம்…
-
- 2 replies
- 1.3k views
-