ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
துணை இராணுவக்குழுவின் தலங்கம சித்திரவதை முகாம்: கொழும்பு ஊடகம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தலங்கமவில் நடத்தப்பட்டு வரும் சித்திரவதை முகாம் குறித்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மட்டக்களப்பைச் சேர்ந்த பூபாலபிள்ளை கந்தராஜா (வயது 26) என்பவர் கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் தொடர்பாகவும் தலங்கமவில் கந்தராஜாவும் அவரது குழுவினரும் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியது தொடர்பாகவும் பலமுறை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே கந்தராஜா முன்னர் ஒருமுறை அத்துகிரிய காவல்துறையி…
-
- 1 reply
- 930 views
-
-
கொல்லப்பட்ட 50 இராணுவத்தினரில் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளோம்: சி.எழிலன் [சனிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2006, 08:05 ஈழம்] [திருமலை நிருபர்] வாகரை பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு சமரில் கொல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து "புதினம்" செய்தியாளருக்கு சி. எழிலன் அளித்த நேர்காணல்: சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் மற்றும் வான் படைகளின் தாக்குதல் துணையுடன் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களுடன் பெருமெடுப்பில் பனிச்சங்கேணியை நோக்கி வலிந்த தாக்குதல் நடவடிக்கையை…
-
- 24 replies
- 4k views
-
-
முகமாலை முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 5 இராணுவத்தினர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 8 ஒக்ரொபர் 2006, 19:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்புச் சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். முகமாலை முன்னரங்கப் பகுதி ஊடாக சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய அளவிலான இராணுவ நகர்வு முயற்சியை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் மேற்கொண்டனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்…
-
- 0 replies
- 993 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் பாரிய வலிந்த தாக்குதலுக்கு தயாராவது குறித்து கண்காணிப்புக் குழுவினர் நிலைமைகளை பார்வையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நெட் இணையத்தளத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த நேர்காணல்: சிறிலங்கா இராணுவத்தினர் யாழில் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். ஆகையால் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் முகமாலை முன்னரங்க பகுதிகளைப் பார்வையிட வேண்டும். ஆன…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறார் சேர்ப்பு விவகாரம்: துணை இராணுவக் குழு மீது குற்றச்சாட்டு [ஞாயிற்றுக்கிழமை, 8 ஒக்ரொபர் 2006, 06:45 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் சிறார் படை சேர்ப்பில் ஈடுபடுவதாக சிறார் படை சேர்ப்பு தடுப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் இயக்குநர் விக்ரோரியா போர்ப்ஸ் ஆதம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் 18 வயதுக்கு குறைந்தோர் கட்டாயமாக சேர்க்கப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்க வேண்டும். இலங்கையில் சிறார் படை சேர்ப்பு தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் கர…
-
- 0 replies
- 759 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நோர்வே சிறப்புத் தூதுவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்துக்கு நாம் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். எமது இராணுவ நடவடிக்கைக தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எந்த ஒரு தற்காப்புத் தாக்குதலையும் மேற்கொள்ள எமக்கு உரிமை உண்டு என்றார் அவர். puthinam
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம் http://tamil.sify.com/fullstory.php?id=14303546
-
- 39 replies
- 7.7k views
-
-
பனிச்சங்கேணியில் இராணுவம் ஊடுருவல்- தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்புச் சபை கூடுகிறது. என்ன முடிவு எடுப்பார்களோ? -> "- இனியும் எமது பிரதேசத்தை ஆக்கிரமிக்கிற யுத்தத்தை எம் மக்கள் மீது ஏவிவிடுவார்களேயானால் நாங்கள் நிரந்தரமாகவே இந்த சமரச முயற்சிகளிலிருந்து விலகிக் கொண்டு நாங்கள் எங்களுடைய தாயகப் பிரதேசத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவம் முழுமையாக வெளியேற்றப்படும் வரை நாங்கள் சமரச முயற்சிகளுக்கு போகக் கூடிய வாய்ப்பு இருக்காது என்பதையும் நாங்கள் இன்றைக்கு நோர்வே அனுசரணையாளர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறோம்." - சு.ப.தமிழ்ச்செல்வன்
-
- 5 replies
- 1.9k views
-
-
பனிச்சங்கேணி படைநகர்வு புலிகளால் முறியடிப்பு 50 படையினர் பலி! 5 போராளிகள் வீரச்சாவு. திருமலையில் வாகரை நோக்கிய சிறீலங்காப் படைகள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. இன்று அதிகலை 4.30 மணியளவில் மாங்கேணி படைமுகாமிலிருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. முப்படைகளின் சூட்டாதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் போராளிகள் போராடிவருகின்றனர். தற்பொழுது மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. இதேவேளை அரச ஆக்கிரமிப்புப் படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படை நடைவடிக்கையை மூடி மறைக்கும் நோக்குடன் மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா அணியினருக்கும் இடையே மோதல்கள் இடம்…
-
- 8 replies
- 2.5k views
-
-
இலங்கையின் முடிக்குரிய இளவரசனாக தன்னை அறிவிக்குமாறு மனுத் தாக்கல். இலங்ககையின் முடிக்குரிய இளவரசன் என தன்னை அறிவிக்க கோரி மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒன்றை நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தர்மபால திசாநாயக்க என்ற இந்த பாடசாலை அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரசியல் யாப்பு விவகார அமைச்சின் செயலாளர் , புத்தசான அமைச்சின் செயலாளர் மற்றும் அஸ்கிரி-மல்வத்து ,மாநாயக்க தேரர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். பழம் பெரும் வரலாற்று ரீதியான சன்னஸ் பத்திரத்திற்கு அமைய தான் இலங்கையின் முடிக்குரிய வம்சத்தை சேர்ந்தவர் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/ind…
-
- 14 replies
- 3.3k views
-
-
தற்காப்புச் செலவை 45% கூட்ட இலங்கை திட்டம். இலங்கை 2007ம் ஆண்டில் மொத்த தற்காப்புச் செலவை 45 விழுக்காடு அதிகரிக்கத் திட்டம் போடு கிறது. நாட்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் மோதல் ஏறுமுகமாக இருக்கும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. கொழும்பில் வெளியிடப்பட்ட புதிய வரவு செலவுத் திட்டத்தின் முன்னோட்டப் புள்ளி விவரங்கள் தற்காப்புச் செலவினம் அதிகமாவதைக் காட்டுகின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய வரவு செலவுதிட்ட மதிப்பீடுகளைப் பார்க்கையில் தற்காப்புச் செலவினம் 139,550 மில்லியன் ரூபாயாக (1390 மில்லியன் டாலர்) அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்தச் செலவு 2006ல் 9621 மில்லியன் ரூபாயாக (962ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: 50 இராணுவத்தினர் பலி- 5 போராளிகள் வீரச்சாவு- 2 பொதுமக்கள் பலி: சி.எழிலன் [வெள்ளிக்கிழமை, 6 ஒக்ரொபர் 2006, 18:46 ஈழம்] [திருமலை நிருபர்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பனிச்சங்கேணி பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டது. இச்சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் குறித்து "புதினம்" இணையத்தளத்தின் செய்தியாளருக்கு சி.எழிலன் கூறியதாவது: பனிச்சங்கேணி பகுதியை நோக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 3 ஒக்ரொபர் 2006, 15:54 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கை அரசின் மீது ஐ.நா நடவடிக்கை! http://www.tamilinsight.com/index.php?news=2592
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவச் செலவை அதிகரிக்கத் திட்டம் இலங்கை இராணுவத்தினர் இலங்கை அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான இராணுவச் செலவீனங்களை 40 வீதத்திலும் பார்க்க அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்காக 1.4 பில்லியன்கள் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படலாம். சமாதான முயற்சிகள் பற்றிப் பேசப்படுகின்ற போதிலும்இ இலங்கையில் அசாதாரண நிலைமைகள் தொடரலாம் என்ற நிலையையே இது காண்பிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 0 replies
- 789 views
-
-
அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.
-
- 0 replies
- 878 views
-
-
தமிழர்களின் பிரதேசங்களை விட்டு அரசாங்கம் வெளியேறிவிட வேண்டும்அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காட்டம் கொழும்பு,ஒக்ரோபர் 6 அரசாங்கத்தால் தமிழர்களைச் சரியான முறையில் கவனிக்க முடியாவிட்டால் எங்கள் பிரதேசங்களை விட்டு அரசு வெளியேறி விடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ் வாறு கூறினார். அவர் தொடர்ந்து தமது உரையில் கூறியதாவது: அரச படையினர் வடக்கு கிழக்கில் தமி ழர்கள் மீது மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்கள் அட்டூழியங்கள் போன்றவை அதிகரித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இடையில் இம்மாதம் 15ம் நாளுக்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இரு கட்சிகள் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், சிறந்த ஆட்சி முறை உட்பட ஆறு விடயங்களில் இரு தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 3 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு வள்ளிபுனம் வான்குண்டுத் தாக்குதலில் உயிர்பிழைத்து விசாரணை என்ற பெயரில் சிறிலங்காவால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமி தயாளினியின் உடலை அடக்கம் செய்ய வவுனியா நீதிபதி நேற்று உத்தரவிட்டார். முல்லைத்தீவு செஞ்சோலையில் ஓகஸ்ட் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட கொடூர வான் தாக்குதலில் தயாளினி உயிர் தப்பினார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி கொண்டு செல்லப்பட்ட போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்படாத நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். வவுனியா மருத்துவமனையில் இருந்த அந்த மாணவியின் உடலை எதுவித காரணமுமின்…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உத்திரவாதம் இல்லாமல் பேச்சுக்கள் நடத்தக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறைகளை நிறுத்துவதாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்காமல் பேச்சுக்களை மீளத் தொடங்கக்கூடாது. இத்தகைய உத்தரவாதம் இல்லாமல் பேச்சுக்களை நடத்துமாறு அரசாங்கத்துக்கு நோர்வே அழுத்தம் கொடுத்துள்ளது. நோர்வேயின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் இணங்கக்கூடாது. நோர்வே எப்போதுமே இரட்டை விளையாட்டுத்தான் விளையாடுகிறது. அமைதிப் பேச்சுக்களுக்கு என்று குறிப்பிட்ட தெளிவான கால வரையறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார் எல்லா…
-
- 0 replies
- 672 views
-
-
பேச்சுக்கள் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் நடத்துவதன் மூலமாக சிறிலங்கா இராணுவம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட மூலம் நீட்டிப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் சோமவன்ச அமரசிங்க இக்கோரிக்கையை முன்வைத்தார். சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சியில் சம்பூரையும் யாழ். குடா நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் முகமாலையையும் விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன் மூலமாக நிபந்தனையற்ற…
-
- 0 replies
- 694 views
-
-
சிறீலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 6,950 கோடியாக அதிகரிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் அடுத்த ஆண்டு 13,955 கோடி ரூபாக்களாக இரட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் பேச்சுவார்த்தை எனக் வெளிக்காட்டிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் யுத்த முன்னெடுப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நவீன போர் தளபாடங்களை கொள்வனவு செய்யவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தாயாராகி வருவதை சிறீலங்காவின் அடுத்தாண்டு பாதீடு சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 780 views
-
-
சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் நிறுவ முடிவு இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்து அமைச்சர் செனவிரத்ன தகவல் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலை யம் ஒன்றை நிறுவுவதற்கு வாய்ப்பான சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய நிபு ணர்கள் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல வுள்ளது. மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இத்தகவலை நேற்றுத் தெரிவித்திருக்கிறார். மின்சார சபையின் பொறியியல் வல்லு நர்கள் குழு அங்கு சென்று இடத்தைப் பார்வையிட்டு அனல் மின்நிலையம் நிறுவ அது பொருத்தமான இடமா என்பதை முடிவு செய்த பின்னர் அனல் மின் நிலையத்தை அங்கு நிறுவுவது தொடர்பாக இந்தியாவு டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் செனவிரத்ன கூறியிருக்கிறார். கேள்வி: அண்மையில்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தயாராகியுள்ளது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் தென்முனையில் உள்ள சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகள் ஊடான பெரும் படையெடுப்பை முன்னெடுக்க தாயாராகி வருவதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த இரு நாட்களாக பூநகரி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சிறீலங்காப் படையினரின் வலிந்த வான்வெளித் தாக்குதகள் மற்றும் எறிகணைத் தாக்குதகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றன. கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஊடாகவும் மும்முனை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ
-
- 3 replies
- 1.3k views
-