Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை, 19ஆம் திகதி கையளிக்கப்படும் – எதிர்க் கட்சி. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் 19ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்தப் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார். தவறினால் புதன் கிழமை பிரேரணையை கையளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்ற வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் அது கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ந…

  2. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேராவும், முஜிபுர் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தினர். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். லக்ஷ்மன் கிரி…

  3. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் – எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279402

  4. அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கொலை செய்து தப்பித்துச் செல்லக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அதிகளவில் படுகொலைகள் இடம்பெற்ற நகரமாக அமெரிக்காவின் சிக்காகோ காணப்பட்டது எனவும், தற்போது அந்த பெருமை இலங்கையின் தங்காலை நகரிற்கு கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்காலை பஸ் நிலையமென்பது அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஓர் இடமாகும் எனவும், அந்த இடத்தில் ஒருவரை கொலை செய்து தப்பிச் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்து…

  5. ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணிகளை நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பத்றகு இரண்டு குழுக்கள் நாட்டில் செயற்படுகின்றன. ஒன்று ஊடகங்கள் மற்றையது ஆளும் கட்சியின் ஒரு சில குழுக்கள். புத்தி கூர்மையுடன் அரசாங்கதை வழிநடத்தும் எதிர்க்கட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் குழப்பங்களை செய்யும் தரப்பாக ஆளும் கட்சியின் ஓர் தரப்பினர் செயற்படுகின்றனர். இதன் ஓர் கட்டமே அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையின் தலையில் உள்ள நுளம்பை பெரிய பந்து ஒன்றினால் தாக்கிய மகன் பற்றி கிராமத்து கதைகளில…

  6. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அரசு வேலை இல்லை? அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. அத்தகையவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://a…

  7. பொருளாதாரத்தை மீட்டு விட்டோம் என பொய் கூறும் அரசாங்கத்திற்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் பேரிடியாக மாறியுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றையதினம் (13.07.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் கூறுகையில், "நாட்டில் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன. இதனை உரிய முறையில் எதிர் கொள்ள அரசு தயாராக இல்லை. காரணம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் துளியளவு கூட மீள எழவில்லை. பொருளாதார முன்னேற்றம் மாறாக மக்கள் மீ…

  8. அரசாங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார் அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு வெற்றி பெறுவோம் என்ற தைரியம் இருந்தால் மூன்று மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்துமாறு ரத்தினபுரியில் வைத்து அவர் சவால் விடுத்துள்ளார். தேர்தல்களில் வெற்றியீட்ட முடியும் என அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவ்வாறு என்றால் ஏன் அரசாங்கத்தினால் தேர்தல்களை நடத்த முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள மகிந்த பல்வேறு காரணங்களை காண்பித்து அரசாங்கம் மாகாணசபைத் தேர்த…

  9. திறைசேரி முறிமோசடி தொடர்பான சர்ச்சையில் சிக்குண்டுள்ள அரசாங்கத்திற்கு மேலும் அவப்பெயரை உருவாக்க கூடிய இன்னொரு விவகாரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களிற்கு முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்த சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர தொடர்பானதே இந்த சர்ச்சை நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தனது சொந்த நிறுவனத்திற்கு வரி தொடர்பான சலுகைகளை அளிக்குமாறு சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை கேட்டுள்ளார்.எனினும் இவ்வாறு வரிச்சலுகை அளித்தால் நாடு பல மில்லியன்களை இழக்க வேண்டிவரலாம் என்பதை காரணம்காட்டி அந்த அதிகாரி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய…

    • 0 replies
    • 460 views
  10. அரசாங்கத்திற்கு விட்டு கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன். தமிழ்மக்கள் எவற்றினை எதிர்பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அவைகள் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ளத்தொடங்கியிருக்கின்றது.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் …

  11. அரசாங்கத்திற்கு... அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) என்ற அமைப்பு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான …

  12. அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்! தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இந்தபின்னணியில் ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்ப…

    • 1 reply
    • 395 views
  13. அரசாங்கத்திற்கு... அதிகரிக்கும், நெருக்கடி – சுயாதீனமாக செயற்பட தயார் என அறிவித்தது வாசுதேவ தரப்பு! நாடாளுமன்றில் எதிர்வரும் 5ஆம் திகதி தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் ஆளும் அரசின் பெரும்பான்மையை இல்லாமல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இதுதொடர்பாக கொழும்பில் உள்ள மூன்று இடங்களில் பேச்சுவார்த…

  14. அரசாங்கத்திற்கு... எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்... ஆதரவு வழங்குவார்களா? அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1278115

  15. அரசாங்கத்திற்கு... எதிர்ப்புத் தெரிவித்து, நாளை... பொது வேலைநிறுத்தம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம்(வியாழக்கிழமை) ´ பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டின் உழைக்கும் மக்களாகிய நாங்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்திடம் கூறுகின்றோம். …

  16. அரசாங்கத்திற்கு... ஐக்கிய நாடுகள் சபை, கடும் அழுத்தம்! அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிகஃபாவும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன பிறப்பிக்கப்பட்டமை மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிக்காட்டுவதற்கான உரிமை என்பன மக்களின் அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் கருத்துச்…

  17. இந்த மண்ணில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடியும்போது, கண்ணீரும் கம்பலையுமாகத் திரியும் போது பார்த்தவர்கள் நீங்கள், அனுபவித்தவர்கள் நீங்கள். அரசாங்கத்திற்குப் பின்னாற் செல்லுகின்ற பாரிய தவறை நீங்கள் விடலாமா?” கிழக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேள்வி. - : http://www.thinakkathir.com/?p=52527#sthash.ho2mJQAj.dpuf

  18. அரசாங்கத்திற்கும் TMVP க்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் -UNP: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளல் முகாம்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு வன்முறைச் செயல்களை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியு…

  19. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. உயர்மட்ட தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு; செல்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் குறித்த பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இந்த விஜயம் டிசம்பர் மாத ஆரம்பப் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீளத் தொடர வேண்டுமேன தென் ஆ…

  20. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான சீற்றம் தீவிரமடைவதால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்கும் அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள்- இலங்கையின் பொருளாதார குழப்பநிலை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயங்குவதால் நிதியமைச்சர் பதவி தொடர்ந்து காலியாக உள்ளது. நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை 24 மணிநேரத்திற்குள் இராஜினாமா செய்ததை தொடர்ந்தே இந்த நிலை நீடிக்கின்றது. ஜனாதிபதி தேசிய பட்டியல் மூலம் சுயாதீன நிபுணர் ஒருவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கு உதவும் விதத்திலேயே அலிசப்ரி நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதன்பி…

  21. 23 ஜூன் 2011 அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். TNA யு…

    • 1 reply
    • 710 views
  22. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை 16 செப்டம்பர் 2011 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று ஆரம்பிக்கப்படும் பேச்சுவார்த்தையின் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கெனவே கையளித்திருந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகள், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஆகியோருடைய காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்ட ஆலோசனைகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் ஆலோசனைகள் என்பவற்றை ஆய்வுக்கெடுத்து அதனூடாக ஒரு தீர்வைக்காணலாம் என்ற புரிந்துணர்வின…

  23. அரசாங்கத்திற்கும் பங்காளிகளுக்கும், இடையில் மீண்டும் பனிப்போர் ஆரம்பம்! September 21, 2021 கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் ஒரு பகுதியை – 40 சதவீதத்தை, அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்க்கு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகள், தமது கடும் எதிர்ப்பை அரசிடம் வெளியிட்டுள்ளனர். எனினும் ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் முன்பாக இதற்கான ஒப்பந்தம் முழுமையாக கை்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2021/166283

  24. அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அரசாங்க அமைச்சர் ஒருவர் லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிக முக்கியமான புலம் பெயர் அமைப்புக்களுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நல்லிணக்க முனைப்புக்களை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் யோசனைகளையும் அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்த…

    • 17 replies
    • 1k views
  25. அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிரான.... நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி முக்கிய தீர்மானம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது. அதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.