ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
ஐ.நா. தலைமைக்கான போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகும் வாய்ப்பு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 21:35 ஈழம்] [காவலூர் கவிதன்] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர…
-
- 0 replies
- 822 views
-
-
வெள்ளி 15-09-2006 19:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தி பேச்சுக்கான சூழலை இல்லாது ஒழித்தது யார்? தமிழ்ச்செல்வன். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ்கோஹான் சொல்பேர்க் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.30 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலளார்களுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:- கேள்வி:- இன்றை சந்திப்பு தொடர்பாக? பதில்:- புதிய கண்காணிப்பு குழுத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினோம். தற்போதைய நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறி…
-
- 0 replies
- 773 views
-
-
செங்கலடியில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:08 ஈழம்] [ந.ரகுராம்] மட்டக்களப்பு செங்கலடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 828 views
-
-
யாழில் 24 மணிநேரத்தில் ஆறு பேர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறு பேர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியில் உள்ள மதுபானக் கடையில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலக்கத்தகடு அல்லாத வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் வலிகாமம் கிழக்கு ஆவரங்கால் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்றை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீசப்பட்ட இந்த இளைஞரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்நாடு செல்லவிருந்த மேலும் 70 அகதிகள் தலைமன்னாரில் கைது [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காப் படைகளின் அடாவடித்தனங்களிலிருந்தும் கொலை மிரட்டல்களிலிருந்தும் தப்பிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டிற்கு அகதிகளாச் செல்வதற்கு என தலைமன்னாரில் படகுக்காகக் காத்திருந்த 70 பேரை, சிறிலங்கா கடற்படை கைது செய்துள்ளது. 17 குடும்பங்களைச் சேர்ந்த, பெண்கள் குழந்தைகள் உட்பட மொத்தம் 70 பேர் கைதாகினர். 19 பெண்களும், 27 குழந்தைகளும் இதற்குள் அடங்குவர். இவர்களுடன், இரு படகோட்டிகளும் கைதாகினர். தலைமன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இவர்களை விசாரித்த மேலதிக…
-
- 0 replies
- 721 views
-
-
போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசிய தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 951 views
-
-
[வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [காவலூர் கவிதன்] மன்னாரில் சாந்திபுரம் மாதிரிக் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு இச்சம்வம் நடைபெற்றதாக மன்னார் சிறிலங்கா காவல்துறையிடம் ஆலய நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது. அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக ஒன்றிணைத்து தீயை அணைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆலயம் முழுமையாக எரிந்து போனதாகவும் பல்லாயிரம் பெறுமதியான பொருட்களும் கோயிலும் அழிந்து போயுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=28797
-
- 0 replies
- 880 views
-
-
போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியா தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 838 views
-
-
யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு http://www.youtounesco.underskrifter.dk/ இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தமிழ்மக்கள் http://www.youtounesco.underskrifter.dk/ http://www.youtounesco.underskrifter.dk/
-
- 34 replies
- 7.4k views
-
-
[வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 18:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லார்ஸ் சோல்வ்பேர்க் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள சமாதான செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.15 மணிவரை நடைபெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இச்சந்திப்பில் பங்கேற்றார். லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளதால் பொதுமக…
-
- 0 replies
- 783 views
-
-
கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…
-
- 5 replies
- 1.7k views
-
-
அல்வாயில் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 05:46 ஈழம்] [ந.ரகுராம்] வடமராட்சி அல்வாயில் இளைஞரொருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர் அல்வாய் தெற்கைச் சேர்ந்த சச்சிதானந்தம் சுஜிதரன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றி வந்த இவர், வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Ref : http://www.eelampage.com/?cn=28787
-
- 1 reply
- 1k views
-
-
நாகர்கோவிலில் படையினரின் ரோந்து அணி மீது தாக்குதல் இருவர் பலி! இருவர் காயம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறீலங்காப் படையினரின் ரோந்து அணி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது. இன்று அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை நேற்றிரவு 9.15 மணியளவில் வடபோர்முனையில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியினர் நடத்திய அச்சொட்டான எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் சேதங்களுக்கு உள்ளாகியது. இதன் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் பட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் சிறீலங்காவின் சமாதானத் தூதுக்குழுவின் தலைவர் நிமால் சிறீபால டி சில்வா தலைமையிலான குழுவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் ஒஸ்லோ நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நாள் மற்றும் இதர விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டுள்ளது. இதேநேரம் ஒஸ்லோப் பேச்சுப் பற்றி அரசிடம் கலந்தாலோசிக்காது இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் அறிவித்தமை தொடர்பில் கவலை ஹான்ஸ் பிரறஸ்கரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்முடன் கலந்தாலோசிகாவிட்டாலும் பேச்சுக்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தவறவிடல்லை எனவும் நிமால் சிறீபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&am…
-
- 0 replies
- 839 views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவது என்றால் விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்த முடியாது என்றும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்க எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் பொருட்டு சமாதானப் பேச்சுக்களை உடன் ஆரம்பிக்க வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். ஆயுதங்களை கீழே வைக்காமல் சமாதானப் பேச்சுவார்த்தை சாத்தியமாகாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்சமாதானம் என்ற சொல்லை நான் கூற மாட்டேன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் கடல், தரை, வான் வழிகளில் செல்கின்ற போது எமக்கு அச்சுறுத்தலோ இடையூறோ இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். எம்மை தாக்குகின்ற போது நாம் மீண்டும் தாக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த பூமியும் இல்லை நாடும் இல்லை. ஆனால் பல உயிர்களைப் பலி கொடுத்து நாம் அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோ…
-
- 5 replies
- 1.6k views
-
-
[வியாழக்கிழமை, 14 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [காவலூர் கவிதன்] 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சி…
-
- 0 replies
- 899 views
-
-
[color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…
-
- 3 replies
- 2.6k views
-
-
சங்கரி சடு குடு விளையாடடில் சாதனையாளனாய் தெரிவு.....!!!! இலங்கையில் வரலாறு காணத நிகழ்வொன்று அன்மையில் நடந்தேறியுள்ளது. . நினைப்பதற்க்கு கேலியாகவும் நகைப்புக்கு இடமான இவ் செயலை பற்றி அலசுவதே இந் ஆய்தலின் நோக்கமாகும்.. ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டனியின் செயல்பாடுகள் இருந்த நிலையும் பின்னாளில் அதன் நிலப்பாடும் பற்றி நாம் யாவரும் அறிந்ததே . தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடிவிற்காகவும் அயாராது உழைத்து அந்த தேசத்தில் அமைதி சாந்தி நிலவ வேண்டும் என்ற உயரிய பணியை ஆற்றியதற்காக இன்னாருக்கு இந்த யுனஸ்கோ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதாக ஜ.நா.மன்றம் கூறியுள்ளது . தமிழரின் விடுதலையை சுபிட்சத்தை அடக்கி ஒடுக்கும் இனத்தோடு கை கோர்த்து…
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ்.குடாவிலிருந்து 600 பயணிகளுடன் திருமலை நோக்கி கடற்படைக் கப்பல் யாழ்.குடாநாட்டிலிருந்து 600 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று வியாழக்கிழமை அதிகாலை திருகோணமலை நோக்கி கடற்படைக் கப்பலொன்று புறப்பட்டுள்ளது. கடந்த வாரம் இவ்வாறு கடற்படைக் கப்பல் மூலம் சுமார் 900 பயணிகள் திருமலை சென்ற நிலையில் இன்று அதிகாலை 600 பயணிகளுடன் கடற்படைக் கப்பலொன்று திருமலைக்கு புறப்பட்டுள்ளது. வானொலி மற்றும் பத்திரிகை மூலம் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து நேற்று அதிகாலை முதல் யாழ்.சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். யாழ்ப்பாணம் கச்சேரி மற்றும் பிரதேச செயலகங்களில், குடாநாட்டை விட்டு வெளியே செல்வதற்காக பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே கப்பல் பயணிகள் தெரிவு இடம்பெறு…
-
- 0 replies
- 1k views
-
-
இணைத்தலைமைகளின் அறிவிப்புக்கு அரச பேச்சாளரின் பதில் குழப்பமாக இருப்பதாக கூறுகிறார் பிரிட்டிஷ் தூதுவர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பேச்சு நடத்த அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இணங்கியுள்ளதாக இணைத்தலைமை நாடுகள் தெரிவித்திருப்பதும், அதற்கு அரசாங்கத்தின் இராணுவ விவகாரப் பேச்சாளர் அளித்துள்ள பதிலும் குழப்பமாக இருப்பதாக இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி கண்காணிப்பு அறிக்கை 2006 இணை வெளியிடும் நிகழ்வு கொழும்பு இலங்கை வெளிவிவகார உறவுகளுக்கான நிறுவகத்தில் இடம்பெற்றவேளை, அதில் கலந்துகொண்டு உரையாற்றி…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளுடன் இனிமேலும் பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஏற்க முடியாதென அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) புலிகளுடன் பேச்சுக்கு செல்வதென்றால் அவர்கள் "ஆயுதங்களை கீழே போட வேண்டும்" என்ற கடுமையான நிபந்தனையுடனேயே சம்மதம் தெரிவிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை ஜே.வி.பி.யினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பிரசாரச் செயலாளரான விமல் வீரவன்ச எம்.பி. இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்; இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் செவ்வாய்க்…
-
- 0 replies
- 983 views
-
-
இணைத் தலைமை நாடுகள் மற்றும் டோக்கியோ அறிக்கை ஜே.வி.பியால் நிராகரிப்பு.டோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை நிராகரிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இதனை தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளையும் இறையாண்மை உள்ள இலங்கை அரசாங்கத்தையும் சமனாக மதிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையானது இலங்கையின் இறையாண்மையில் இணைத்தலைமை நாடுகளின் வீணான தலையிடாகும் எனவும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளுக்கான திகதி நிர்ணயம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் இடங்களை தெரிவு செய்யும் அதிகாரம் எந்த நாடுகளுக்கு இல்லை. ஜே.வி.பி இந்த நடவடிக்கைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கையரச பயங்கரவாதத்திற்கு எதிராக லண்டனை முடக்கத் தயா இடைக்காடர் தலைமையில் கவன்சிலெஸ் அமைப்பு முடிவு. பிரித்தானியாவின் வரலாற்றில் முதல் தடவையாக பிரித்தானியாவின் லண்டன் பகுதியினை முற்று முழுதாக முடக்குவதற்குத் தயா இடைக்காடர் தலைமையிலான கவன்சிலெஸ் மற்றும் கவுன்சில் தேர்தலில் பங்கு பற்றியவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில் பிரித்தானியாவில் லண்டன் மாநகரம் சுமார் 32 உள்ளுராட்சி சபைகளால் இயக்கப்படுகிறது. இந்த 32 உள்ளுராட்சி சபைகளையும் முடக்குவதன் ஊடாக லண்டன் மாநகரத்தை ஸ்தம்பிதமடையச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 திகதி உலக ஜ.நா சமாதான தினமாக பிரகடனப்படுத்தபட்டுள்ளது. அன்றைய தினம் பிரித்தானியாவின் 32 உள்ளுராட்சி சபைகளுக்கு முன்பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.06) சந்திக்கவுள்ளனர். சந்திப்புக்கான அழைப்புக்கடிதம் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சென்னையில் தற்போது தங்கியிருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமையளவில் புதுடில்லிக்கு செல்லவுள்ளனர். புதுடில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. அதேவேளை…
-
- 0 replies
- 832 views
-